http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



எதையோ பேசினார்

     வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். 'இன்று சமய உலகிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட முடியும்' என்ற நம்பிக்கையோடு தெருவில் நடந்தேன். என் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் வந்திருக்கும் என்றும் தற்பெருமையாக எண்ணிக் கொண்டே பஸ் நிலையத்தை அடைந்தேன்.

     "உனக்கு வாழ்க்கைப்பட்டு" என்று தொடங்கி விம்மிய குரலைக் கேட்டுத் திரும்பினேன். குழிந்த கன்னங்களையும் அழுக்கேறிய ஆடையையும் கண்டேன். பளபள என்று மின்னும் கற்களோ உலோகமோ காதிலும் இல்லை; கழுத்திலும் இல்லை, கையிலும் இல்லை. அந்தப் பெண்ணுருவைப் பார்த்ததும் பார்க்காததுமாய் நின்றிருந்த ஒருவர் காக்கி உடை உடுத்திருந்தார். அவருடைய கண்களிலும் வறுமை இருந்தது; பேச்சிலும் அந்த வறுமை இருந்தது.

     பேச்சில் வறுமை என்றால் குறைந்த அளவான பேச்சு என்று எண்ண வேண்டா. வறுமையால் தாழ்வுற்றுப் பிறரையும் தாழ்வுறச் செய்யும் போக்கு அந்தப் பேச்சில் இருந்தது; அநாகரிகம் அந்தப் பேச்சில் இருந்தது; ஒருவகைப் போக்கிரித்தன்மை அந்தப் பேச்சில் இருந்தது; இவை எல்லாம் வறுமையின் விளைவுகள் அல்லவா? இப்படிப்பட்ட வறுமை அவருடைய பேச்சில் இருந்தது.

     ஐந்து வயதுள்ள பையன் அந்தத் தாயின் முன்தானையைப் பற்றிக் கொண்டே நின்றான்; அவனுடைய பார்வை தாயின் முகத்துக்கும் தந்தையின் முகத்துக்கும் தாவிப் பறந்து கொண்டிருந்தது. தாய்க்கும் தந்தைக்கும் இடையே மூன்று வயது உள்ள பெண் குழந்தை இங்கும் அங்கும் திரும்பிக் கொண்டிருந்தது.

     "இங்கே யார் உன்னை வரச் சொன்னது?" "எனக்கு வருவதற்கு வழி தெரியும்." "உன் துன்பம் உனக்கு. என் தொல்லை எனக்கு. நான் நூறு நூறாகச் சம்பாதிக்கிறேனா? நானே வேலைக்குக் காப்பி இல்லாமல், காப்பிக்குக் காசு இல்லாமல் அலைகிறேன்." "என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?" "இங்கெல்லாம் வரக் கூடாது வாய்திறக்கவும் கூடாது" - இந்த வாக்கியங்களே நான் அவருடைய பேச்சிலிருந்து நாகரிகமாகப் பொறுக்கி எடுக்கக் கூடிய வாக்கியங்கள்.

     இவற்றைத் தொலைவிலிருந்து கேட்ட போதே என் மனம் இளகிவிட்டது. கசிந்து உருகத் தொடங்கிவிட்டது.

     இவர்களின் பேச்சைக் கேட்டு நின்றால், மானம் என்ற ஒன்று இவர்களின் நெஞ்சைப் பிளக்குமே என்று அஞ்சி அப்பால் நகர்ந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தேன். அவர்கள் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன். இருவரும் பேசியது கேட்கவில்லை. கை நீட்டி நீட்டி அசைத்த அசைவிலிருந்து பேச்சில் வேகம் மிகுந்துவிட்டதோ என்று எண்ணினேன்.

     பஸ் புறப்படுவதற்கான வீளை ஊதப்பட்டது. அதைக் கேட்டதும், அந்த ஆள் அங்கிருந்து மடமட என்று நடந்து வரத் தொடங்கினார். தலை மட்டும் குனிந்தபடியே நடந்து வந்தார்.

     "அப்பா அப்பா" என்ற குரல் என் காதுவரை எட்டியது. பையனோ பெண்ணோ என்று உற்றுக் கேட்டேன். பையன் சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்து திரும்பிவிட்டான். தாயை நெருங்கி முன்தானையைப் பிடிக்க முயன்றான்; ஆனால் என்ன காரணத்தாலோ அந்தத் தாய் அவனுடைய கன்னத்தில் இடித்தாள்; தலையைத் தட்டினாள். பையன் அழுது கொண்டே நின்றான்.

     அந்த ஆளோ பஸ்ஸை நெருங்கி வந்துவிட்டார். அந்தச் சிறு பெண் குறுகுறு என்று தொடர்ந்து ஓடி வந்து கொண்டே இருந்தாள். "போ, வராதே. அம்மா கிட்டே போ, அடிப்பேன். போ" என்றார் அவர். அந்த இளம் பெண்ணோ, "அப்பா காலணா அப்பா, காலணா" என்று விடாமல் கேட்டுக் கெஞ்சினாள். அவர் தயங்காமல் பஸ்ஸின் முன்புறக் கதவைத் திறந்தபோதுதான், நான் ஏறிய வண்டியின் டிரைவரே அவர் என்பதை அறிந்தேன்.

     சிறுமி - மூன்று வயதுள்ள குழந்தை - இளங் கைகளை நீட்டிக் கேட்டுக் கொண்டே நின்றாள். பஸ் புறப்படுவதற்கு முன்னே அவளுடைய கையில் ஒரு காலணா விழுந்தது. அதைப் பெற்றுக் கொண்டதும் அவள் துள்ளித் துள்ளி அசைந்து ஓடுவதைக் கண்டேன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muvaa/story/ethaiyopesinaar.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs