http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



கட்டாயம் வேண்டும்

     ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான். அவன் வயது பன்னிரண்டு இருக்கும். மேலே கிழியாத சட்டை; கீழே கிழிந்த துண்டு; இரண்டும் அவ்வளவாக அழுக்குப் படவில்லை. மெலிந்த உடல்; ஆனாலும் நலம் கெடவில்லை; முகத்தில் ஒருவகை மலர்ச்சி; கண்களில் கரவற்ற நல்ல பார்வை; கண்டவர் எல்லோரையும் கவர்ச்சி செய்யும் தோற்றம்; இவை அவனிடம் கண்டவை. அவனுடைய வாய்ச்சொல்லைக் கேளாமல், தோற்றத்தை மட்டும் கண்டிருப்பேனானால், நான் இந்த நாட்டைப் பற்றிப் பெருமை கொண்டு, 'இவன் ஓர் இளஞாயிறு' என்று எண்ணிச் சென்றிருப்பேன். "அய்யா" என்று மெல்லிய குரலில் விளித்து, அவன் கை நீட்டிய போதுதான் எனக்கு இரக்கம் பிறந்தது. ஆயினும், அந்த இரக்கம் உடனே மாறியது.

     சென்னையில் உண்மையான பிச்சைக்காரர் யார் உலகை ஏமாற்றும் சோம்பேறிகள் யார் என்று பிரித்தறிய முடியவில்லை. பஸ் நிற்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாக ஏழை மக்கள் நிற்கிறார்கள். அந்தக் கூட்டங்களை நாள்தோறும் பலமுறை கண்டு, இரப்புரையை அடுத்தடுத்து கேட்டுக் கேட்டுப் பழகிய என் மனம் எப்படி இருக்கும்? கொடுங்கோல் மன்னனாய் மாக்பெத் என்னும் கொடியோன் ஆண்ட நாட்டில், சாவுமணி ஒலித்தால் செத்தவன் யார் என்று கேட்பார் ஒருவரும் இல்லை என்று ஷேக்ஸ்பியர் தம் நாடகத்தில் எழுதியுள்ளார். ஏழை மக்கள் ஆக்கமும் அறிவும் உணவும் உடையும் இல்லாதவர்களாய் விலங்கினங்களாய் வாழ்ந்துவரும் இந்த நாட்டில் அவர்களுடன் நன்றாகப் பழகினவர்களுக்கு இரக்கம் உண்டாகுமா? அதிலும், இரப்பவர் மிகுந்த சென்னையில் அவர்களுடைய வறுமைக்கே காரணமாக இருந்து மனம் மரத்துப்போன தமிழருக்கு இரக்கம் தோன்றினாலும் உடனே மறைந்து விடும் அல்லவா?

     அந்த ஏழைச் சிறுவன் நீட்டிய கையைப் பார்த்து "இந்த வயதில் உனக்கு இந்த வேலை ஏன் அப்பா? மீன்குஞ்சுக்கு நீந்தத் தெரிவதுபோல் தமிழ்ப் பையனுக்குப் பிச்சை எடுப்பது இயற்கையாய்விட்டதே! போய் மூட்டை தூக்கிப் பிழை அப்பா!" என்றேன்.

     "எல்லாரும் இப்படித்தான் சொல்கிறார்கள். நீ என்ன கூனா, குருடா என்று கேட்கிறார்கள். என் பசிக்கு வழி காட்டினவர்கள் யாரும் இல்லை. ஒரு காலணா கொடுங்கள் அய்யா" என்றான்.

     "காலணா அல்ல; கட்டாயம் ஓரணா கிடைக்கும். இந்தப் பட்டணத்தில் மூட்டை தூக்கும் வேலைக்குப் பஞ்சம் இல்லை. நான் ஒன்றும் கொடுக்கமாட்டேன். வழக்கம் இல்லை. வீட்டுக்கு வந்தால், சோறு இருந்தால், போடச் சொல்லுவேன்" என்றேன்.

     "உங்கள் கையில் இருக்கும் இரண்டு புத்தகங்களைக் கொடுங்களேன். நான் சுமந்துகொண்டு வருகிறேன். அதற்குக் கூலியாகக் கொடுங்கள். காலணா கொடுங்கள் போதும்" என்றான்.

     "எப்படியாவது என்னிடம் காலணா வாங்கவேண்டும் என்று பார்க்கிறாய். பிச்சைக்காரர்க்குக் கொடுப்பதில்லை என்று விரதம், தெரியுமா? உன்னைப் போன்ற சோம்பேறியிடம் நான் ஏமாற மாட்டேன்" என்றேன்.

     "அய்யா! நான் சோம்பேறி அல்ல. கோபித்துக் கொள்ள வேண்டா. வேலைதான் வேண்டும்; கட்டாயம் வேண்டும். வேலை கொடுத்தால் கட்டாயம் செய்வேன். இந்தப் பட்டணத்திற்கு வந்த நாளாக அலைகிறேன். முந்தா நேற்றெல்லாம் சென்ட்ரல் நிலையத்தில் இருந்தேன். கூலி வேலை கிடைக்கும் என்று காத்திருந்தேன். அங்கே இருக்கும் மூட்டை தூக்கிகளிடம் நான் பட்டபாடு போதும். அவர்கள் எல்லாரும் ஒரே கட்சி. என்னை அங்கே நிற்கவும் விடாமல் துரத்தினார்கள். ஆனால் எல்லாரையும் பழிக்க வில்லை. நல்லவன் ஒருவன் எனக்கு இரண்டு ஆப்பம் வாங்கிக் கொடுத்தான். அதனால் தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்" என்று சொன்னான்.



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muvaa/story/kattayamvendum.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs