http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



வாய்த் திறக்க மாட்டேன்

     "நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?" என்று திகைப்போடு கேட்டான் அவன்.

     "இப்படித்தான், உன்னைப் போல்தான்" என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன்.

     "என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?" என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம் என்று எண்ணினேன்.

     "நீ யார் தெரியவில்லை, அப்பா" என்றேன்.

     "என்ன சாமி! இப்படிச் சொல்கிறீர்களே! நான் உங்கள் பக்கத்து வீட்டிலே..." என்றான். எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது. பக்கத்து பங்களாவிலே அவனை அடிக்கடி பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்த வியாபாரியின் வீட்டிலே அவன் சில மாதங்களுக்கு முன்னே வேலைக்காரனாக இருந்தது நினைவுக்கு வந்தது. "ஓ! நீயா அப்பா! செ.ப.அய்யர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேயே! சரிதான்; மறந்துவிட்டேன், அப்பா! பட்டணத்திலே எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். மறந்து விடுகிறோம்" என்று நீட்டினேன்.

     "என்ன சாமி; எத்தனை நாள் என்னோடு பேசியிருக்கிறீர்கள்!"

     "ஆமாம் அப்பா! நான் தான் சொன்னேனே! மறந்து விட்டேன்" என்று குரலாலே சரிப்படுத்தினேன்.

     "ஆமாம் சாமி! நீங்கள் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்? மறுபடியும் ஏதாவது காந்தி சண்டையா?" என்று அவன் பழைய கேள்வியைப் புதிய வடிவத்தில் கேட்டான்.

     "காந்தி சண்டை எல்லாம் முடிந்து போய் விட்டது. இப்போது ஏதப்பா" என்று பதில் சொல்லாமலே மறைக்கப் பார்த்தேன். அவனோ விடவில்லை.

     "நேற்றுக்கூட யாரோ சொன்னார்களே. பட்டணம் தமிழருக்குச் சொந்தம் என்று காந்தி புதுச் சண்டை போடப் போகிறாராம். வேறு நாட்டார் யாரோ அவர்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார்களாம்" என்று அவன் அறிந்த அரசியலை என்னிடம் கொட்டினான்.

     "அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா. அப்படிப் பேச்சு இருக்கிறது. அவ்வளவுதான். நம்ம பட்டணத்துக்கு யாராவது சண்டை போடுவார்களா? கட்டின பெண்டாட்டியை யாராவது கேட்டால் விட முடியுமா? கலியாணம் ஆன பிறகு என் பெண்டாட்டியா, உன் பெண்டாட்டியா என்று சண்டை போடுவது வெட்கம் அல்லவா?" என்று பழைய கேள்வியை மறைப்பதற்காக முயன்றேன்.

     "சரி, அது போகட்டும் சாமி. நீங்கள் இங்கே வந்தது தானே எனக்கு எப்படியோ இருக்கிறது" என்றான்.

     இனிமேல் மறைக்கக் கூடாது என்று அப்போதுதான் உண்மையைச் சொல்லத் தொடங்கினேன். அந்தச் சிறைக்குப் போய் சேர்ந்த மூன்றாம் நாள் நடந்தது இது. சிறைக்குப் போய் ஒரு மாதம் ஆகிவிட்டபடியால் அவன் பழைய கைதியாக இருந்தான். எனக்கு அந்த இடத்தில் பழக்கம் மூன்றாம் நாள் ஆனபடியால் கொஞ்சம் புதியவனாக இருந்தேன். அதனால் தான் அவன் என்னை உற்றுப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு கேட்டான்.



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muvaa/story/vaaiththirakkamaatten.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs