http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



விடுதலையா?

     காலை எட்டு மணிக்கு முன்னமே தலைமையாசிரியர் வந்து பள்ளிக்கூட வாயிலில் நின்று கொண்டிருந்தார். வேலையாட்கள் அவருக்கு முன்னே வந்து காகிதத் துண்டெல்லாம் பொறுக்கித் தூசெல்லாம் துடைத்துக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் காகிதமும் நீலக் காகிதமும் கத்தரித்துச் செய்த காகிதத் தோரணங்களைத் தலைமை ஆசிரியர் வேலையாட்களின் உதவிகொண்டு கட்ட முயன்றார். அதற்குள் பள்ளிக்கூடச் சிறுவர்களில் பெரியவர்கள் - வளர்ந்த பிள்ளைகள் சிலர் - முன் வந்து வேலையாட்களின் கையிலிருந்து அந்தத் தோரணங்களை வாங்கிக் கொண்டார்கள். தங்கள் கை உழைப்பால் கத்தரித்து ஒட்டிச் செய்த விலைமதிப்பற்ற அந்தத் தோரணங்களை தங்கள் கையாலேயே கட்ட வேண்டும் என்பது அந்தப் பெருஞ் சிறுவர்களின் ஆவல். "பள்ளிக்கூட வேலையில் இவ்வளவு அக்கறை! படிப்பில் இவ்வளவு அக்கறை இல்லையே!" என்று தலைமையாசிரியர் முணுமுணுத்தார். சிறுவர்கள், இதைக் கேட்டதும் திரும்பித் திரும்பி அவருடைய முகத்தைக் கண்டு புன்முறுவலை உணர்ந்து ஊக்கமே கொண்டார்கள். "இன்றைக்குக் கூடவா படிப்பு!" என்று ஒருவன் அவருடைய செவியில் விழுமாறு சொல்லிவிட்டுத் தலை குனிந்தான்.

     தலைமையாசிரியர் அன்று அழகாக உடுத்திருந்தார். சலவை செய்த கருப்புக் கோட்டு அவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது. தூய்மையான வெள்ளாடையைக் கீழ்ப் பாய்ச்சலாகக் கட்டியிருந்தார். அவருடைய தலைப்பாகையும் புதிதாக இருந்தது. அதன் ஓரங்களில் அழுக்குக் கறை அமையவில்லை. இன்னும் இரண்டு வார காலம் அவருடைய தலை மேல் இருந்து வியர்வை ஊறினால் தான் அந்த அழுக்கு ஓரங்களில் கரை போல் அமையும்.

     அவருடைய கையில் இருந்த பிரம்பில் மட்டும் புதுமைத் தோற்றம் இல்லை. அது ஒடிந்து மொக்கையாய் நின்ற பழைய பிரம்பே. அதற்கு ஒன்றும் வேலை இல்லாமையால் கோட்டுக்கும் தலைப்பாகைக்கும் வந்த வாழ்வு அதற்கு வரவில்லை. மற்ற நாட்களில் பள்ளிக்கூட ஒழுங்கு முறைக்குக் காரணமாக இருந்த அந்த பிரம்பு இன்று ஒரு நாள் மட்டும் கோட்டுக்கும் தலைப்பாகைக்கும் செல்வாக்கைக் கொடுத்துவிட்டுத் தான் இருக்குமிடம் தெரியாமல் இருந்தது. அந்த ஊர் நகர மன்றத்தின் பழைய தலைவர், தேர்தலில் தோற்றுவிட்ட மறு நாள் மானம் காத்து மறைந்து வாழ்ந்ததுபோல், அன்று காலையில் அந்தப் பிரம்பு அவர் கையில் இருந்தது. அவர் அந்தப் பிரம்பை ஆட்டவுமில்லை; ஓச்சவுமில்லை. வாளா வைத்திருந்தார். அது அசைவின்றிக் கிடந்தது. ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்தில் பிரம்பின் பதவிக்குத் தேர்தல் ஒன்று நடந்ததாகவோ, நடந்தாலும் பிரம்புக்குப் போட்டி ஒன்று இருந்ததாகவோ தெரியவில்லை. எப்படியோ, பிரம்பு செல்வாக்கு இழந்திருந்தது.

     பிரம்பின் செல்வாக்கற்ற நிலைக்காகச் சிறுவர்கள் ஒருவரும் வருந்தியதாகத் தெரியவில்லை. ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரையில் உள்ள சிறுவர்களே அந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள். அது தொடக்கப்பள்ளி ஆதலால், காலை எட்டரை மணி முதல் பதினொன்றரை மணி வரையில் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அன்று காலை மட்டும் எட்டேகால் மணிக்கெல்லாம் சிறுவர்கள் பெரும்பாலோர் வந்து திரண்டுவிட்டார்கள். பள்ளிக்கூடம் திறந்திருந்தும் அதனுள்ளே புகாமல் வெளியே விளையாடுமிடத்தில் நின்று ஆடியும் ஓடியும் துள்ளிக் கொண்டிருந்தார்கள் அந்த இளங்கன்றுகள். தலைமையாசிரியர் அத்தனைக்கும் இடம் கொடுத்தார். அவர் அவ்வாறு பொறுமையாக விட்டுவிட்டதைக் கண்ட மற்ற ஆசிரியர்களும் இடம் கொடுத்தார்கள். அவர்களுடைய மகிழ்ச்சிப் பெருக்கு பலர்முகத்தில் நகையொளியாய் வீசிற்று. மாசற்ற இளங் குமுத வாய்கள் - பொய் அறியாத திருவாய்கள் - குறுநகை அரும்பிப் பெரு நகையாய் மலர்ந்தன. அந்தத் திருவாய் மலர்களில் வெண் முத்துக்களாய்த் தூய பற்கள் ஒளிவீசின. இந்த அழகொளியே அந்தக் காலைப் பொழுதில் முத்துக்காரத் தெருவைச் சிறப்பித்தது.

     "டே, இன்றைக்கு இன்ஸ்பெக்டர் தானே வருகிறார்?" என்று கேட்டான் ஒருவன்.

     "போடா, போ. இன்ஸ்பெக்டர் வந்தால் காகிதத் தோரணம் கட்டுவார்களா?" என்றான் மற்றொருவன்.

     "நேற்று ஆசிரியர் சொன்னாரே, கேட்கவில்லையா?" என்றான் ஒரு சிறுவன்.

     "இன்றைக்குச் சுகாதாரக் கொண்டாட்டம்; எனக்குத் தெரியும்" என்றான் மூன்றாம் வகுப்புச் சிறுவன் ஒருவன்.

     "சுகாதாரம் என்றால் என்ன? யானையா? அது எங்கே இருக்கிறது?" என்று கேட்டான் முதல் வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவன்.



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/muvaa/story/viduthalaiyaa.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs