http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



முதல் பருவம்

1. இந்திர விழா

     பூம்புகார் நகரம் புது விழாக் கோலம் பூண்டு எழிலுடன் விளங்கிய சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழு நிலா விரித்துக் கொண்டிருந்தது. 'இந்திர விழா தொடங்குகிறது' என்று வச்சிரக் கோட்டத்து முரசம் ஒலி பரப்பிய போதே அந்தப் பேரூர் விழாவுக்கான புதுமையழகுகளைப் புனைந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விழாவுக்கான புத்துணர்வும் புது மகிழ்வும் பெற்று விட்டது.

     அடடா! அதோ, காவிரி கடலோடு கலக்கும் காவிரி வாயிற் சங்கமத் துறையில் தான் எவ்வளவு பெருங்கூட்டம். கடலுக்கு அது கரை. ஆனால் அந்தக் கரைக்குக் கரையே இல்லாதது போல் மக்கள் திரண்டிருந்தனர். ஆடவரும், பெண்டிரும், இளைஞரும், முதியவரும், சிறுவரும், சிறுமியருமாக அழகாகவும் நன்றாகவும் அணிந்தும், புனைந்தும், உடுத்தும் வந்திருந்தனர். நோக்குமிடம் எங்கும் நிருத்த கீத வாத்தியங்களின் இனிமை திகழ்ந்தது. இந்திர விழாவுக்காக எத்தனை விதமான கடைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டோ, அவ்வளவும் கடற்கரைக்கு வந்திருந்தன. இன்ன இன்ன கடையில் விற்கப்படும் பொருள்கள் இவையிவை என்பதை அறிவிக்க ஏற்றிய பல நிறக் கொடிகள் வீசிப் பறந்து கொண்டிருந்தன. பூவும் சந்தனமும் கூவிக் கூவி விற்கும் மணம் நிறைந்த பகுதி, பொன்னும் மணியும் முத்தும் பவழமும் மின்னும் ஒளி மிகுந்த கடைகள், பிட்டு விற்கும் காழியர்களின் உணவுக்கடைகள், பட்டுந் துகிலும் பகர்ந்து விற்கும் கடைகள், வெற்றிலை விற்கும் பாசவர்களின் கடைகள், கற்பூரம் முதலிய ஐந்து வாசனைப் பொருள்களை விற்கும் வாசவர் கடைகள் - எல்லாம் நிறைந்து கொடுப்போர் குரலும், கொள்வோர் குரலுமாகப் பேராவாரம் மிகுந்து கடற்கரை கடைக்கரையாகவே மாறியிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க பட்டினப்பாக்கத்து மக்களும், மருவூர்ப்பாக்கத்து மக்களும் கழிக்கரைகளில் வசித்து வந்த யவனர்களும், எல்லோரும் கடற்கரையிலே கூடிவிட்டதனால் நகரமே வறுமையடைந்து விட்டாற் போல் வெறுமை பெற்றிருந்தது. நாளங்காடித் தெருவிலுள்ள பூத சதுக்கத்துக் காவற் பீடிகையில் மட்டும் பொங்கலிடுவோர் கூட்டம் ஓரளவு கூடியிருந்தது. அது தவிர, மற்றெல்லாக் கூட்டமும் கடற்கரையில்தான்!

     அவ்வழகிய கடற்கரையின் ஒரு கோடியில் மற்போர் நடந்து கொண்டிருந்த இடத்தில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கூத்து, இசை, சமய வாதம் முதலியனவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த அரங்கங்களை விட மற்போர் அரங்கத்தில், ஆர்வம் காரணமாக ஆண்களும் பெண்களுமான இளவயதினர் மிகுந்து கூடியிருந்தனர். முழுமதியின் ஒளி பரவும் வெண்மணற் பரப்பில் பலவகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து நின்றிருந்த பட்டினப் பாக்கத்துச் செல்வ நங்கையர் கந்தருவருலகத்து அரம்பையர் போல் காட்சியளித்தனர். எட்டி, காவிதி போன்ற பெரும்பட்டங்கள் பெற்ற மிக்க செல்வக் குடும்பத்து இளநங்கையர் சிலர் பல்லக்குகளில் அமர்ந்தவாறே திரையை விலக்கி மற்போர் காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர். அவர்கள் செவ்விதழ்களில் இளநகை அரும்பிய போதெல்லாம், எதிர்ப்புறம் நின்றிருந்த பூம்புகார் இளைஞர் உள்ளங்களில் உவகை மலர்ந்தது. பொன்னிறத்துப் பூங்கரங்களில் வளைகள் ஒலித்த போதெல்லாம் அங்கே கூடியிருந்த இளைஞர் நினைவுகளிலும் அவ்வொலி எதிரொலித்தது. அவர்கள் மென்பாதங்களில் மாணிக்கப்பரல் பொதித்த சிலம்பு குலுங்கின போதெல்லாம் இளைஞர் தம் தோள்கள் பூரித்தன. அல்லிப் பூவின் வெள்ளை இதழில் கருநாவற்கனி உருண்டாற் போல் அவர்கள் விழிகள் சுழன்ற போதெல்லாம் இளைஞர் எண்ணங்களும் சுழன்றன. மற்போரும் களத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/manipallavam/manipallavam1-1.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs