இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Suresh Nagarajan (11-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 292
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!10

     மேடை நாடகங்களுக்கும் இயக்கம் தொடர்புடைய இருபொருள்படும் வசனங்களுக்கும், பாடல்களுக்கும், திருமலை பெற்ற பாராட்டும், கை தட்டுக்களும், ஒரு சினிமா கம்பெனி அதிபரைப் பெரிதும் கவர்ந்தன. அவர் தாம் தயாரிக்க இருந்த ஒரு படத்திற்குச் சென்னையில் வந்து தங்கி வசனம் எழுதிக் கொடுக்கும்படி திருமலையை கேட்டார். ஒருபுறம் அவனுக்கு மலைப்பாயிருந்தாலும் மறுபுறம் அதில் ஈடுபட வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. பெருவாரியான மக்களைக் கவர்ந்து தன்பக்கம் இழுக்க அது ஒரு சாதனம் என்று அவனுக்குப் புரிந்திருந்தது. இயக்கமே அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தது.

     இதற்கிடையில் பதவியிலிருக்கும் அமைச்சராக எழிலிருப்புக்கு விஜயம் செய்த சின்னக் கிருஷ்ணராஜனுக்கு எதிராக அவனும் இயக்கத் தோழர்களும் கறுப்புக் கொடி காட்டினார்கள். காங்கிரஸ் அமைச்சராகப் பதவியிலிருந்த சின்ன உடையார் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதைக் காட்டவும் மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாகிய உடையார் எழிலிருப்புத் தேரோட்டத்தில் முதல் வடம் பிடிக்க வருவதைக் கண்டித்தும் கறுப்புக்கொடி பிடிக்கப்பட்டது. கறுப்புக் கொடி காட்டுவதற்கான இரண்டாவது காரணம் ஊரில் யாருக்கும் பிடிக்கவில்லை. சின்ன உடையாருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தேருக்கு முதல் வடம் பிடிப்பது என்பது வழக்கமாகியிருந்தது. ஒரு வம்புக்காக அதை எதிர்ப்பது என்பது யாருக்கும் திருப்தி தரவில்லை. திருமலைக்கு இரகசியமாகத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த வேணுகோபால் சர்மா கூட அதை அவனிடமே கண்டித்தார். மதச்சார்பற்ற என்பதற்கு அர்த்தம் எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கிறது என்பது தானே ஒழிய, இந்து மதத்தை மட்டும் ஒழிக்கிறதுங்கறதில்லே. ஒரு கிறிஸ்தவ அமைச்சரே இஸ்லாமிய அமைச்சரோ இப்படித் தங்கள் மத சம்பந்தமான விழாவுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்குக் கறுப்புக் கொடி பிடிக்கிற துணிச்சல் உங்களுக்கு உண்டா? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல் நடந்து கொள்கிறீர்களே!”

     “சாமி இதெல்லாம் அரசியல்! உங்களுக்குப் புரியாது. நீங்க கண்டுக்காம ஒதுங்கிக்குங்க! எங்களுக்கு உடையாரை எதிர்க்கணும், அதுக்கு என்ன வேணாச் செய்வோம்” என்று அவருக்குப் பதில் சொல்லிச் சமாளித்தான் திருமலை. சர்மா எத்தனையோ தடவை திருப்பித் திருப்பிக் கண்டித்தும் அவன் அவரைச் சாமி என்று தான் விளித்தான்.

     அவன் சினிமாக் கம்பெனிக்கு வசனம் எழுதுவதற்காகச் சென்னைக்குப் புறப்பட வேண்டிய சமயத்தில் இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டம் வந்ததால் பயணம் தடைப்பட்டது. திருவிழாவில் தேரோட்டத்துக்கு இடையூறாகக் கலவரம் மூளுமோ என்று பயந்தனர் போலீஸார், கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு அநுமதி தரப்படவில்லை. தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

     துணிந்து தடையை மீறிக் கறுப்புக்கொடி காட்டியதால் கைதாகி ஒரு வாரம் கழித்துத்தான் வெளியிலே வர முடிந்தது. உடையார் எதை செய்தாலும் எதிர்க்கவேண்டுமென்ற திருமலையின் போக்கு ஊராருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தக் கறுப்புக்கொடிப் போராட்டம் ஆதரவற்றுப் பிசுபிசுத்துப் போயிற்று. விடுதலையானதும் அவன் சென்னைக்குப் புறப்பட வேண்டியிருந்ததனால் போராட்டத்தின் தோல்வியை அவன் பொருட்படுத்தவில்லை ஆனால் கறுப்புக்கொடிப் போராட்டத்தைத் தவிர வேறொரு தோல்வியும் அவனுக்கு ஏற்பட்டது.

     தனக்கு முதல் முதலில் ஒர் இரவுப் பறவையாகப் பழக்கமாகிப் பின்பு தன் நாடகங்களில் நடிக்கும் நடிகையாகிவிட்ட பெண்ணைத் தவிர எழிலிருப்பிலேயே அவனோடு இன்னொரு வீட்டில் ஏறக்குறைய மனைவியாக வாழ்ந்த மற்றொரு பெண்ணைத்தான் அவன் தன்னோடு சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போவதாக முடிவு செய்திருந்தான். சண்பகத்தைப் போன்ற அதிகப் படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணை அவன் சென்னைக்கு அழைத்துப் போவதில்லை என்றே முடிவு செய்துவிட்டான். நீண்ட காலமாகச் சண்பகத்தைப் பார்க்காமலே இருந்துவிட்ட அவன் ஊருக்குப் போவதற்கு முன் சொல்லிக் கொண்டு போகலாம் என்று அவளிடம் போனான். இவன் போவதற்கு முன்பே ‘சக்களத்தியைத் தான் சென்னைக்கு அழைத்துப் போகிறான்’ என்கிற தகவல் சண்பகத்துக்கு எப்படியோ எட்டியிருந்தது. இதற்கு நடுவில் ஒருநாள் வெட்கத்தை விட்டு நந்தவனத்துக்குத் தேடிப் போய்த் தன் சகோதரனைச் சந்தித்துத் தன்னுடைய சிரமங்களை எல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தாள் அவள். அவனும் அவள்மேல் அநுதாபத்தோடு எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டிருந்தான். “கஷ்டகாலத்தில் நம்ம உடன்பிறப்புத்தான் நமக்கு உதவுவாங்க. எதுக்கும் உன் கூடப் பிறந்தவனைப் பார்த்து எல்லாம் சொல்லி வையி” - என்று இந்த விஷயத்தில் பக்கத்து வீட்டு ஆச்சிதான் சண்பகத்துக்கு யோசனை சொல்லியிருந்தாள். இப்போது, புருஷன் தன்னிடம் சொல்லிக் கொண்டு போக வரப் போவதை அறிந்ததும் சண்பகம் அவசர அவசரமாக ஆச்சிமூலமே சகோதரனுக்குத் தகவல் அனுப்பினாள். அவனும் உடனே வந்தான், தொடர்ந்த நரக வாழ்க்கையாகப் பட்டியில் அடைப்பட்ட மாடு போல் வாழ்வதைவிட இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சண்பமுகம் இப்போது துணிந்திருந்தாள்.

     “முதல்லியே நீ இங்கே இருக்கவேணாம் ஆச்சி வீட்டிலே இரு. கொஞ்ச நேரம் நான் பேசிச் சமாளிக்கிறேன். அப்புறம் திடீர்ன்னு தற்செயலா வர்ற மாதிரி நீயும் ஆச்சியும் உள்ளே வாங்க” என்று சொல்லிச் சகோதரனை ஆச்சி வீட்டில் வந்து மறைந்திருக்கச் செய்தாள் சண்பகம்.

     எதிர்பார்த்தபடி திருமலை வந்தான். அவசர அவசரமாக இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்பும் வேகத்தில், “இந்தா சண்பகம் இப்போ உட்கார நேரமில்லே. எனக்கு அவசரம், மெட்ராஸ் புறப்பட்டுப் போறேன். சினிமாவுக்கு வசனம் எழுதற சான்ஸ் வந்திருக்கு. மாசா மாசம் பணம் வந்து சேரும், வீட்டையும், பயலையும் கவனிச்சிக்கோ...?” - என்று ஆரம்பித்தான்.

     “நீங்க மட்டும்தான் தனியாப் போறியளா?”

     “ஆமாம்... அதுக்கென்ன...?”

     “பொய் சொல்லாதீங்க... அந்த வடக்குத் தெருக்காரி உங்களோட வர்றதாக் கேள்விப் பட்டேனே? உள்ளதைச் சொல்லுங்க?”

     “அப்படித்தான் வச்சுக்கயேன், அவளை எங்கூட இட்டுக்கிட்டு போறதுக்கு உன் பெர்மிஷன் எனக்கு தேவையில்லை.”

     “உங்களுக்கு எதுக்குத்தான் என் பர்மிஷன் தேவை? நீங்கதான் எல்லாப் பாவத்துக்கும் துணிஞ்ச மனுஷனாச்சே...?”

     “ஆங்... போடீ உங்கிட்டப் பெரிசா அட்வைஸ் கேக்க நான் இங்கே வரலே, பாவ புண்ணியத்துக்கு நீதான் ஹோல்சேல் ஏஜென்ஸி எடுத்திருக்கியோ...?”

     இந்தச் சமயத்திலே சண்பகத்தின் சகோதரனும் ஆச்சியும் உள்ளே நுழைந்தனர்.

     “வாப்பா மச்சான்! நீ எப்ப வந்தே?” - என்று அவனை எகத்தாளமாக வரவேற்றான் திருமலை.

     “நீங்க மெட்ராஸ் போறதா இருந்தா அக்காவையும் ராஜாவையும் தான் உங்க கூடக் கூட்டிக்கிட்டுப் போகணும். அதுதான் முறை.”

     “முறை என்னடா பெரிய முறை? நான் எதைச் செய்யறேனோ அதுதாண்ட முறை.”

     “இப்படி முரட்டடியாப் பேசினா எப்பிடித் தம்பி? சண்பகத்துக்கும் உங்களை விட்டா வேற யார் இருக்காங்க நீங்கதானே எல்லாம்?” - என்று ஆச்சியும் இதமாக எடுத்துச் சொன்னாள். அவனே என்ன பேசுகிறோம் என்ற சுய நினைவே இன்றி, “ஏன்? வேற யார் இருக்காங்கன்னு குறைப்பட்டுக்க வேண்டாமே, யாரையாவது நல்ல ஆளாப் பார்த்துத் தேடிக்கிறதுதானே?” - என்று சொல்லியதும், “டேய் நாக்கை அளந்து பேசு” - என்று சண்பகத்தின் தம்பி கையை ஓங்கிக்கொண்டு திருமலை மேல் பாய ஆச்சி அவனைத் தடுத்தாள். அவன் கூறிய வார்த்தைகள் சண்பகத்தின் ரோஷத்தைக் கிளறிவிட... அவள் எரிமலையாகச் சீறி வெடித்தாள்.

     “உன் புத்திதானே உனக்குத் தோணும். நாய் எச்சிக் கலையிலே வாய் வைக்கிற மாதிரி நீ ஊர் ஊராப் பொம்பிளைப் பித்துப்பிடித்து அலையிறியே, அது மாதிரி என்னையும் நினைச்சியா? நான் நல்ல வமிசத்திலே நல்ல அப்பனுக்குப் பொறந்தவடா” - என்று சண்பகம் கூறியதும் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது போல அவள் மேல் விருட்டென்று பாய்ந்தான் திருமலை. அவனு டைய மிகவும் பலவீனமான பகுதியை அவள் சொற்கள் சீண்டிவிட்டன. ஆச்சியும். சண்பகத்தின் தம்பியும் அக்கம் பக்கத்தாரும் ஓடி வந்து விலக்கியிராவிட்டால் திருமலை சண்பகத்தைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான் அப்போது.

     “அறுத்தெரியறதுக்கு நீ எங்கழுத்திலே தாலி கூடக் கட்டலே... இன்னியிலேருந்து உனக்கும் எனக்கும் இனிமேப் பேச்சு வார்த்தையே கிடையாது. உன் முஞ்சியிலேயே இனிமே முழிக்க மாட்டேன்” என்று குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறித் தம்பியோடு மறுபடி நந்தவனத்துக்கே போய்விட்டாள் சண்பகம். எந்த ஒரு பலவீனமான பகுதியைச் சீண்டியதற்காக அவன் உள் பட்டணத்தின் மீது ஜன்ம விரோதியாக மாறினானோ அதே பகுதியை இப்போது கீறி ரணப் படுத்தி விட்டாள் சண்பகம். எல்லாவற்றையும் மறக்க மறைக்க அவன் வடக்குத் தெரு ஆசைநாயகியோடு பட்டினம் புறப்பட்டான். சினிமா உலகம் அவனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அவனது வாழ்க்கையில் மற்றோர் அத்தியாயம் புதிதாக ஆரம்பமாகியது. முதல் படம் அமோகமான வெற்றியை அடைந்தது. நூறு நாளையும் கடந்து பல ஊர்களில் படம் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆக ஒடவே ஒரே சமயத்தில் பல படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுத வேண்டிய சான்ஸ்கள் அவனைத் தேடி வந்தன. ஓர் உதவியாளர் நம்பிக்கையானவராக வேண்டி யிருந்தது. எழிலிருப்புப் புலவர் வேணுகோபால் சர்மா வுக்குத் தந்தி கொடுத்தான். சர்மா உடனே அடுத்த ரயிலிலேயே சென்னைக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார்.


மூலக் கனல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


எம்.கே. தியாகராஜ பாகவதர்
இருப்பு உள்ளது
ரூ.90.00குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
இருப்பு உள்ளது
ரூ.195.00நேசமணி தத்துவங்கள்
இருப்பு உள்ளது
ரூ.95.00நந்திகேஸ்வரரின் காமசூத்ரா
இருப்பு உள்ளது
ரூ.135.00மண்ட பத்திரம்
இருப்பு உள்ளது
ரூ.70.00ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.300.00என்.எஸ்.கே : கலைவாணரின் கதை
இருப்பு உள்ளது
ரூ.120.00தொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்
இருப்பு உள்ளது
ரூ.70.00உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00மருந்தில்லா மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00அரசு கட்டில்
இருப்பு உள்ளது
ரூ.180.00பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்
இருப்பு உள்ளது
ரூ.135.00உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.195.00மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.195.00தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.450.00ஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.360.00தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு
இருப்பு உள்ளது
ரூ.225.00நேர் நேர் தேமா
இருப்பு உள்ளது
ரூ.170.00பண்டிகை கால சமையல்
இருப்பு உள்ளது
ரூ.155.00ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.315.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)