16 பரஸ்பரம் ஒருவர் இரகசியத்தை மற்றவர் காப்பது என்ற அடிப்படையில் அந்த அழகிய இளம் நடிகையும் அவளது தந்தை வயதுள்ள திருமலையும் ஒருவரையொருவர் மணந்து கொண்டனர். சண்பகம் இறந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளது வருமானத்துக்கும் அவனே அதிபதியானான். மார்க்கெட்டில் புகழும் செல்வாக்கும் உள்ள ஒரு பெரிய நடிகைக்கு அவனே உரிமையாளனானான். அவளைப் படத்துக்குப் புக் செய்கிறவர்கள், பிளாக்கிலும், ஒயிட்டிலும் பணம் கொடுக்கிறவர்கள் எல்லோருமே திருமலையை முதலில் சந்தித்தாக வேண்டியிருந்தது. திருமலை அவளுக்கும் அவள் செல்வத்துக்கும், அழகிற்கும் சேர்த்தே எஜமானன் ஆனான். அவனுடைய இந்தப் புதிய பதவிகள் கட்சியில் அவன் செல்வாக்கை அதிகமாக்கின. இயக்க மூலவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடமாக அவள் வீட்டுத் தோட்டமும், ஏ.சி. அறையும் பயன்பட்டன. அடிக்கடி அங்கே நல்ல விருந்து சமைத்துப் போடப்பட்டது. தலைவருக்கும், மற்றப் பிரமுகர்களுக்கும் தேவையானபோது கார்கள் உபயோகத்துக்குத் தரப்பட்டன. திருவின் செல்வாக்கு மட்டுமின்றிக் கவர்ச்சியும் அதிகமாயிருந்தது. இன்ன நடிகையின் புதுக்கணவர் என்று பெயர் பரவி அதனாலும் அவனைப் பார்ப்பதற்கு எங்கும் ஒரு கூட்டம் கூடியது. அதனால் அவனுக்கே ஒரு நட்சத்திர அந்தஸ்து வந்திருந்தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் கணவன் என்றால் சும்மாவா? அவன் சில்க் ஜிப்பா, பட்டு வேட்டி, வைர மோதிரம், இண்டிமேட் செண்ட் வாசனை எல்லாம் சூழ வந்தாலே ஒரு களை கட்டியது. சினிமாப் பத்திரிகைகளில் எல்லாம் அவனைப் பற்றிய கிசுகிசு, தகவல் செய்தி, துணுக்குகள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. முன்பு இருந்தது போல் இயக்கத்தில் இதையெல்லாம் எதிர்க்கவோ தடுக்கவோ ஆட்கள் யாருமில்லை. கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட பெருவாரியான ஆட்களே இப்போது அவனால்தான் ஈர்க்கப்பட்டனர். சினிமாவுக்குக் கதை எழுத, வசனம் எழுத, பாடல் எழுத, நடிக்க, ஏரியா விநியோக உரிமையைப் பெற என்று விதம் விதமானவர்கள் இவன் சிபாரிசை நாடி வந்தனர். அவனை மதித்துக் கைகட்டி நின்றனர்.
தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தனர். சில கல்லூரிகளின் வளாகத்திற்குள் அரசியல் சட்டத்தையே தீயிட்டுக் கொளுத்துகிற அளவு மாணவர்கள் வெறியோடிருந்தனர். மாநிலத்தின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் கார்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பெட்ரோல் சேகரித்து அதைக் கொண்டு எரியூட்டல்களில் ஈடுபட்டனர். ரயில்களும், பஸ்களும் எரிக்கப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன. வாகனங்களையும் ரயில்களையும் நிறுத்தி ‘இந்தி அரக்கி ஒழிக’, ‘லம்பரடி இந்தி ஒழிக’ என்றெல்லாம் தாரினால் எழுதினார்கள், வாழ்க்கையே ஸ்தம்பித்தது. கல்வி நிலையங்கள் கலவர நிலையங்களாயின. துப்பாக்கிப் பிரயோகங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதற்கு முன்பு ஆச்சாரியார் ஆட்சியில் இருந்த காலத்தில் தாரினால் இந்திப் பெயர்ப் பலகையை அழித்தபோது வன்முறைகள் நிகழ வாய்ப்பின்றி அதை அவர் சமாளித்தார். இப்போதோ இரண்டு தரப்பிலும் வன்முறைகள் நிகழ்ந்தன. கை மீறிப் போன நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் ஆட்சி திணறியது. தொடங்கி வைத்தவர்களே எதிர்பாராத அளவு நாட்டில் தீப்பற்றி இருத்தது. மொழிப்பற்று மட்டும் இன்றி, விலைவாசி எதிர்ப்பு, சுதந்திரம் பெற்றதிலிருந்து விடாமல் ஆட்சியை நடத்தி வந்த ஒரு கட்சியின் மேல் ஏற்பட்ட சலிப்பு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டன. இந்தி எதிர்ப்புப் போரின் போது அவன் பம்பரமாக அலைய வேண்டி இருந்தது. பல இளைஞர்கள் தீக்குளித்தார்கள். ஒருநாள் மாலை பள்ளி ஒன்றின் முகப்பில் பஸ்ஸுக்குப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்று கொண்டிருந்த மாணவர் கும்பலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பக்கத்துக் குப்பத்தைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாட்டிக் கொண்டு இறந்து போனான். அவன் இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்துச் சிறுவனா, படிக்கிற பையனா, போராட்டத்தில் ஈடுபட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டானா, கலவரத்தை வேடிக்கை பார்க்க வந்து நடுவில் சிக்கிக் கொண்டு மாண்டானா, என்றெல்லாம் விவரங்கள் தெரியாவிட்டாலும் அந்த இளம் சாவை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் திருமலை. “புறநானூற்றுத் தாய் போருக்கு அனுப்பிய சிறுவனை அன்று கண்டோம். இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்தான் இவன்” என்று எழுதி இயக்கத் தினசரிகளில் சிறுவனின் படத்தைப் பிரசுரித்து வெளிவரச் செய்தான் திருமலை. இயக்கத்தைச் சாராத தினசரிகளும் பத்திரிகைகளும் கூட இந்தச் செய்தியைப் பற்றி மிகவும் அக்கறை காட்டி வெளியிட்டன. ‘மூளை சிதறி மாண்ட பச்சிளம் பாலகன்’ என்று கூட மிகவும் சென்சேஷனலாக இதை ஒரு பத்திரிகை வெளியிட்டது. சிறுவனின் மரணம் அதை வெளியிட்ட முறை எல்லாமாகச் சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போரை நடத்திக் கொண்டிருந்த இளந்தலை முறையினர் மேல் பொது மக்களின் அனுதாபம் திரும்பத் துணை செய்தது. ஓர் இரண்டாயிரம் ரூபாய் ரொக்கத்தையும் எடுத்துக் கொண்டு, உதவியாளன் கன்னையாவையும் துணைக்கு. அழைத்துக்கொண்டு காரில் அவன் அந்தக் குப்பத்துக்குப் போனான். இறந்துபோன சிறுவனுடைய பெற்றோரின் குடிசை குப்பத்தின் உள்ளே நடுப் பகுதியில் இருந்தது. உள்ளே போவதற்குச் சேறும் சகதியும் மேடும் பள்ளமுமான ஒற்றையடிப்பாதைத் தான் இருந்தது. காரை வெளியே சாலையிலேயே விட்டு அவனும் கன்னையாவும் இறங்கி நடந்தார்கள். சில்க் ஜிப்பாவும் சரிகை வேட்டியும், செண்ட் வாசனையும் கமகமக்க ஒரு புதிய ஆளும் கையில் தோல் பையுடன் அவனைப் பின் தொடர்ந்து மற்றொருவனும் போவதைப் பார்த்துக் குப்பத்து வாசிகள் கொஞ்சம் வெறிப்பதுபோல் இருந்தது. தாங்கள் போக வேண்டிய குடிசையைப் பற்றி விசாரித்தபோது, “சின்னப் பையன் துப்பாக்கிக் குண்டு பட்டுச் செத்தானே அவங்க குடிசையைத்தானே கேட்கிறீங்க?” என்று அங்கிருந்தவர்களே பதிலுக்கு விசாரித்தனர். அப்படி விசாரித்த ஒரு கிழவனிடமே அந்தக் குடும்பம் பற்றி மேல் விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டான் திருமலை,. ‘அந்தக் குடும்பம் நாலைந்து மாடுகள் வைத்துக் கறந்து பால் விற்பனை செய்கிற குடும்பம், பாண்டிச்சேரி அருகில் உள்ள மரக்காணத்திலிருந்து சென்னைக்குக் குடியேறிய குடும்பம் பெற்றோருக்கு அவன் ஒரே சிறுவன். டிக்கடைக்குப் பால் வாடிக்கை ஊற்றப் போய் விட்டுத் திரும்புகிறபோது பையன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக நேர்ந்து விட்டது. அரசியலுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.’ இவ்வளவு விவரங்களும் தெரிந்தவுடனே “பேசாம இப்படியே திரும்பிடலாங்க... சூழ்நிலை சரியா படலீங்க. நாமாகத் தேடிப் போய் அரசியல் பண்ணி வம்பிலே மாட்டிக்க வேண்டாங்க” என்று கன்னையா திருவை எச்சரித்தான், திரு கேட்கவில்லை. “நீ சும்மா இரப்பா! உனக்கு அரசியலும் தெரியாது ஒரு இழவும் தெரியாது, இத்தினி பெரிய விஷயத்தைப்‘பொலிடிகலா கேபிடலைஸ்’ பண்ணத் தெரியாட்டி நாம அரசியலுக்கே லாயக்கில்லேன்னு அர்த்தம். அவங்க ஏற்கெனவே வேறெந்தக் கட்சியிலாவது இருந்தாத்தான் நமக்குச் சங்கடம். ஒரு கட்சியிலேயும் இல்லேங்கறது நமக்குப் பெரிய வசதி. சுலபமாகக் காரியத்தை முடிச்சிடலாம்” என்று கன்னையாவைக் கண்டித்து விட்டுப் பிடிவாதமாக மேலே சென்றான் திருமலை. பையன் குண்டடிபட்டுச் செத்தது பற்றிய அநுதாபமும், வேதனையும் எல்லாரிடமும் தெரிந்தன. ஆனால் அது பற்றி அரசியல் ரீதியான பிரக்ஞை யாரிடமுமே இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை கொடுத்த பண உதவிக்கு ஆசைப்பட்டுப் பையனின் தத்தை சில நாட்களுக்கு முன்பு தான் ‘வாலெக்டமி’ செய்து கொண்ட விவரத்தையும் சிலர் சொல்லிப் பரிதாபப்பட்டார்கள். யாரோ பண்ணிய கலகத்தில் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகன் ஒருவன் பலியாகிவிட்டானே என்ற பச்சாதாபம்தான் எல்லாத் தரப்பிலும் நிரம்பியிருந்தது. “பொல்லாத இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்து விட்டான் ஒரு பைந்தமிழ்ச் சிறுவன்” என்பது போல் எதுவும் இல்லை. திருமலையும் அவனைச் சேர்ந்த வர்களும் ஏடுகளும் அப்படி ஒரு பிரசாரத்தைச் செய்திருந்தார்களே ஒழிய உண்மை இப்படிக் கசப்பானதாக மட்டுமே இருந்தது. கன்னையா எவ்வளவோ தடுத்தும் திருமலை கேட்கவில்லை. அந்தக் குடிசைக்குள் அவர்கள் நுழைந்த போதே கொந்தளிப்பாக இருந்தது. திருமலை கையில் இருபது நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அழுது அழுது முகம் வீங்கித் தலைவிரி கோலமாய் இருந்த சிறுவனின் தாய் ஹிஸ்டீரியா வந்தவள்போல் கத்தியபடியே “பாவிகளா என் செல்வத்தைக் கொன்னுப்புட்டீங்களே” என்று கட்டை விளக்குமாற்றை எடுத்துகொண்டு அவர்கள் மேல் பாய்ந்து விட்டாள். பையனின் தந்தை வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். காரண காரியங்களை விளக்கி, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்குத் திருமலைக்கோ கன்னையாவுக்கோ அவகாசமில்லை. இவர்கள் பஸ்ஸை எரித்ததனால் தான் ஒரு பாவமும் அறியாத தங்கள் பையன் குண்டடிபட்டுச் செத்தான் என்ற உணர்வே அங்கு போலோங்கியிருந்தது. விளக்குமாற்றுப் பூசையுடனும் தோளிலும் முதுகிலும் சிறுசிறு வெட்டுக் காயங்களுடனும் அவர்கள் அங்கிருந்து தப்புவது பெரும்பாடு ஆகிவிட்டது. கார் மேலும் சரமாரியான கல்லெறி. இரண்டு நாள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும்படி ஆயிற்று. ஆனால் இயக்க ஏடுகளில் மட்டும், ‘சிறுவனை இழந்த பெற்றோர்க்கு உதவி புரியச் சென்றவர்கள் மீது காங்கிரசார் கொலை ஆவேசம்’ என்று தான் செய்திகள் வந்தன. போராட்டம் முடிந்தும் கூட ‘மொழிப் போரில் உயிர் நீத்த முத்தமிழ்ச்சிறுவன் தியாகி முருகன்’ என்றே அச்சிறுவனை இயக்க ஏடுகள் அழைத்து வந்தன. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தினால் அது விரைவில் உண்மையாகி விடும்’ என்பதில் அபார நம்பிக்கையோடு செயல்பட்டான் திருமலை. மொழிப் போரில் கிடைத்த வெற்றி அவர்கள் பலத்தை அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. மூதறிஞரின் புதிய கூட்டணி ஒரு வகை அரசியல் மரியாதையையும் அங்கீகாரத்தையும் மக்களிடம் அவர்களுக்குத் தேடித்தர ஆரம்பித்திருந்தது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் மொழிபெயர்ப்பாளர்: செ. நடேசன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2017 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : அரசியல் ISBN: 978-81-93395-51-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 480.00 தள்ளுபடி விலை: ரூ. 445.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது. இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது. பனிப்போர் முடிந்து, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர். இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|