இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Suresh Nagarajan (11-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 292
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!3

     அந்த ஊரும், ஊர் மக்களும் மேலானவையாகவும், மேலானவர்களாகவும் மதித்த எல்லாவற்றையும், எல்லோரையும் தான் கீழானவையாகவும், கீழானவர்களாகவும் கருதித் துணிந்து எதிர்க்கப் போகிறோம், விரோதித்துக் கொள்ளப் போகிறோம் என்ற உணர்வே கள்குடித்துவிட்டு நடப்பது போன்றதொரு பெரிய தைரிய போதையை அவனுக்கு அளித்திருந்தது.

     எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற முறையில் தான் திருமலை, இங்கர்சால் மருந்தக உரிமையாளர் பொன்னுச்சாமியை அணுகியிருந்தான். பொன்னுச்சாமியின் உருவத்தையும், செம்மறியாட்டுக் கடாக் கொம்புகள் போன்ற அவரது மிடுக்கான மீசையையும் பார்த்தே மிரண்டவர்கள் பலர். உள் பட்டணவாசிகளையும், உடையார்களையும் அவர்களை ஆதரித்த மேட்டுக்குடி மக்களையும் பொன்னுச்சாமியும் அவருடைய சுயமரியாதை இயக்க ஆட்களும் முழு மூச்சாக எதிர்த்தனர். பொன்னுச்சாமியும் அவரது இயக்கமும் திருமலையைக் கவர்ந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான். அவன் யாரை எதிர்க்க விரும்பினானோ அவனை மேற்படியார்கள் அவனுக்கு முன்பிருந்தே எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் அந்த ஊரில் தனக்கு நிரந்தர அரணாக இருக்க முடியும் என்று திருமலை நம்பினான்.

     நந்தவனத்துப் பண்டாரமும் அவன் மேல் இரக்கப்பட்டுச் சின்ன உடையார் அவனைத் திட்டிய மோசமான ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிய பள்ளிக்கூட ஆசிரியரும் வெறும் நல்லவர்கள் மட்டும் தான். இனி மேலும் அவன் அந்த ஊரில் காலந்தள்ள வேண்டுமானால் அதற்கு நல்லவர்கள் தயவு மட்டும் போதாது, வல்லவர்களின் பாதுகாப்பும் வேண்டும் என்பதைத் திருமலை தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த மலைப் பிரதேசத்திலும், சுற்றுப்புறத்து ஊர்களிலும் பொன்னுச்சாமியின் இனத்து மக்கள் தொகை அதிகமாயிருந்தது. உள்பட்டணத்து உடையார்கள் எப்போதுமே பொன்னுச்சாமியின் இன மக்களை விரோதித்துக் கொள்ளத் தயங்குவார்கள். ஆள் கட்டுள்ளவர்களின் விரோதத்தை எப்போதுமே தவிர்த்து விடுவது உடையார்களின் வழக்கம்.

     தேரடியில் கடை போடுவதற்கு முன் திருமலை தானே பொன்னுச்சாமியைப் போய்ச் சந்தித்து எல்லா விவரமும் சொன்னான். உள்பட்டணத்துவாசிகள் அடியாட்கள் மூலம் தன்னைப் பழி வாங்கியதையும், பண்டாரம் தன்னைத் தூக்கிப் போய்ப் பல மாதங்கள் தலைமறைவாக வைத்துக் காப்பாற்றியதையும் கூடச் சொன்னான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “பயப்படாதீங்க தம்பீ! தனி மனிதனை அவசியமற்ற பயங்களிலிருந்து விடுவிப்பது தான் எங்க சுயமரியாதை இயக்கத்தின் தலையாய கடமை! எங்களைத் தேடி வந்திருக்கீங்க... இனிமே கவலையை விடுங்க...” - என்றார் பொன்னுச்சாமி. அந்த ஆதரவும், அரவணைப்புமே அவனை அவர்களோடு சேர்த்தன. மிகவும் இளைஞனான தன்னைக் கூட அவர் மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசியது திருமலையைக் கவர்ந்தது.

     “நீங்க வந்து கடையைத் தொடங்கி வைக்கணும்.”

     “கண்டிப்பா வாரேன் தம்பீ!”

     வாக்குக் கொடுத்தபடி தம் ஆட்களோடு வந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஒரே ஓர் இளநீர் மட்டும் வாங்கிக் குடித்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்திருந்தார் பொன்னுச்சாமி. அவரும் அவரது ஆட்களும் வந்திருந்து கடையைத் தொடங்கியதால் திருமலைக்கு உடனேயோ, சில நாட்கள் கழித்தோ, உபத்திரவங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்துக் காத்திருந்த உள்பட்டணத்துக் கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை போல் அமைந்து விட்டது. திருமலையின் மேல் கை வைத்தால் பொன்னுச்சாமியின் வகையறாவின் விரோதத்தை உடனே விலைக்கு வாங்க வேண்டி நேரிடும் என்பது எல்லோருக்கும் அவனைப் பற்றிய ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவித்திருந்தது.

     ஜமீன் பெரிய உடையார் காலமான பின் ஏழெட்டு மாத காலம் உள்பட்டணத்தில் அவன் சோதனைகளை அநுபவித்தான். கடைசியில் அவனுக்கும் சின்னக்கிருஷ்ணனுக்கும் மோதல் வந்து இரவோடிரவாகக் கடத்தி வந்து அவனை அடித்துப் போட்டார்கள். தொடர்ந்து பல மாதங்கள் பண்டாரத்தின் நந்தவனம் அவனுக்குப் புகலிடம் அளித்திருந்தது. தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமானால் அவன் ஊரை விட்டு வெளியேறி விடுவதுதான் நல்லது என்று பண்டாரம் அறிவுரை கூறினார். அதை அவன் ஏற்கவில்லை. விரக்தியும், ஆத்திரமும் கலந்த ஒரு வகை முரட்டுத்தனத்தை அந்த நந்தவனத்து அஞ்ஞாத வாசம் அவனுள் மூட்டிவிட்டிருந்தது. பொன்னுச்சாமியும், அவரது சுயமரியாதை இயக்கமும் அவனது இந்த முரட்டுத்தைரியத்தை ஒரு மதமாகவே ஏற்று அங்கீகரித்து அரவணைக்கத் தயாராயிருந்தது நல்லதாயிற்று. அவனுள் முறுகி வெறியேறியிருந்த பழிவாங்கும் உணர்ச்சிக்கு நாகரிகக் கலப்பற்ற ஒரு முரட்டு வீரம் உரமாகத் தேவைப்பட்டது. நாசூக்கோ, மென்மையோ, இல்லாத அத்தகைய முரட்டு அஞ்சாமையை அடையப் பொன்னுச்சாமி அவனுக்கு உதவினார்.

     தேரோட்டத்துக்கு முதல் வடம் பிடிக்கவோ, அநுமாருக்கு மாவிளக்குப் போடவோ ஜமீன் குடும்பத்தினர் வெளிப்பட்டணத்துக்கு வந்தால், பண்டாரமும் மற்றவர்களும் இடுப்பில் மேல் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு அவர்களை விழுந்து வணங்கத் தயாராயிருந்த அதே சமயத்தில், “வடம் பிடிக்கும் உடையாரே! கடன் அடைக்க வழி உண்டா?” என்றும், “அரை வேளைச் சோற்றுக்கு வழியில்லை - திருநாளைக் கொண்டாடிப் பயன் என்ன?” என்றும் பெரிது பெரிதாகத் தேரடி மண்டபத்தின் சுவரில் எழுதும் அளவுக்குப் பொன்னுச்சாமியும் அவரது ஆட்களும் துணிந்து தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டினார்கள்.

     நாடு சுதந்திரம் அடைந்து விட்டால் கதர், காந்தி, காங்கிரஸ் எல்லாம் தான் இனி முன்னணியில் இருக்கும் என்று கெட்டிக்காரத்தனமாக முன் கூட்டியே அனுமானித்து உள்பட்டணவாசிகள் கதர் கட்ட ஆரம்பித்தனர். அவசர அவசரமாகச் சுதேசி உணர்வைப் போற்ற ஆரம்பித்தனர். அரண்மனைச் சுவர்களில் திலகர், காந்தி படங்கள் இடம்பெறலாயின. வசதியுள்ளவர்களும் செல்வந்தர்களும் நாளைக்குச் செல்வாக்குப் பெறப் போகிறவர்களை இன்றே முந்திக் கொண்டு ஆதரிக்கும் இயல்பான முன் ஜாக்கிரதை உள்ளவர்கள் என்பதை எழிலிருப்பு ஜமீனும் நிரூபித்தது. இப்போது உள்பட்டணத்தின் போக்கிற்கு எதிரான போக்குள்ள அணி எதுவோ அதில் இருந்தே ஆக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் திருமலைக்கு இருந்தது. எனவே அவன் சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என்று பொன்னுசாமியின் போக்கிலேயே தானும் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அதே பாதையில் மேலும் சென்றான் அவன். பூரணச் சுதந்திரக் கோரிக்கையை காங்கிரஸும் பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லிம் லீக்கும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது பொன்னுசாமி வகையறாவினர்,

     ‘மைசூர், கொச்சி, திருவிதாங்கூர், ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களைத் தவிர எஞ்சிய ஆந்திர, கேரள, கன்னட, தமிழ்ப் பகுதிகளடங்கிய தென்னாட்டைத் திராவிட நாடாகத் தனியே பிரித்துத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதற்குத்’ தீர்மானம் நிறைவேற்றினர்.

     திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைய இது உதவும் என்று தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக இருந்த நீதிக் கட்சி தீர்மானம் கொண்டு வந்த 15-வது மாநில மகா நாட்டுக்குப் பொன்னுச்சாமியோடும் மற்ற ஊர் ஆட்களோடும் தானும் போய் வந்தான் திருமலை.

     அவனுடைய போக்கைப் பார்த்துப் பயந்த பண்டாரம் மெல்ல ஒதுங்கி விட்டார். ஆனாலும் தன்னைக் காப்பாற்றியவர் என்ற முறையில் திருமலைக்குப் பண்டாரத்தின் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் ஒருவகை மரியாதையும் அன்பும் நீடித்தன.

     பொன்னுச்சாமியைப் போலவே வெட்டரிவாள் மீசையும் உயரமும், பருமனுமாகத் திருமலை பார்க்கிறவர்களுடைய மிரட்சியைச் சம்பாதிக்கும் ஓர் ஆகிருதியை அடைந்திருந்தான். பொன்னுச்சாமி சொல்லித் தூண்டியதன் பேரில் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட உள்பட்டணத்துக்காரர்கள் நிறுத்தியிருந்த மலையப்பன் என்ற வேட்பாளரை எதிர்த்து திருமலை போட்டியிட்டான். தோற்றுவிட்டான். ஆனாலும் அவன் நம்பிக்கையிழந்து விடவில்லை. தேரடி மண்டபத்தை ஒட்டி ஒரு தங்குமிடம் சிறிய வாசகசாலை எல்லாம் கூட ஏற்படுத்திக் கொண்டாயிற்று. இப்போதெல்லாம் முழு நேரமும் அவனால் கடையில் இருக்க முடிவதில்லை. சாதிக்காய்ப் பெட்டியைக் குப்புறக் கவிழ்த்து எளிதாகவும், சிறியதாகவும் ஆரம்பிக்கப்பட்ட கடை மேலும் வளர்ந்து பெரிதாகிப் பெட்டிக் கடையாக மாறியிருந்தது. இரண்டு பையன்கள் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சர்பத் கலக்க, இளநீர் வெட்டித் தர என்று உதவிக்கு ஆள் வேண்டியிருந்தது.

     ஒருநாள் மாலை பொன்னுச்சாமி அண்ணன் ஏதோ வேலையாக இன்னொரு தொண்டருடன் - அவரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் - மோட்டார் சைக்கிளில் திருமலையைத் தேடித் தேரடிக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். மாலை வேலையாகையினால் கோயில்களுக்குப் போகும் பெண்களின் கூட்டம் அதிகமாகி இருந்தது. நல்ல வியாபார நேரம். அன்று ஏதோ விசேஷ நாள் வேறு. வழக்கத்தை விட அதிகக் கூட்டமாயிருந்தது அன்று.

     அப்போது கடையருகே சண்பகம் வந்து கூசினாற் போல் ஒதுங்கித் தயங்கி நிற்பதைத் திருமலைதான் முதலில் பார்த்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியும் அவளைப் பார்த்து விட்டார். “இந்தா திரு! முதல்லே தங்கச்சிக்கு என்ன வேணும்னு கேளு! நாம் அப்புறம் பேசிக்கலாம்” - பொன்னுச்சாமி அண்ணன் செல்லமாக அவனைத் ‘திரு’ என்று மட்டுமே கூப்பிடுவது வழக்கமாகியிருந்தது.

     சண்பகத்துக்கு அவள் எதிர்பார்த்த தனிமை கிடைக்காததால் பொன்னுசாமியும், அவரோடு வந்திருக்கும் ஆளும் பேசிவிட்டுப் போகட்டும் என்று அவள் தயங்கினாற் போலத் தோன்றியது. திருமலை விடவில்லை. கடையிலிருந்து இறங்கி வந்து அவளை மலர்ந்த முகத்தோடு எதிர் கொண்டான்.

     “என்ன சண்பகம்? உன்னைப் பார்த்து மாசக் கணக்கில் ஆகுதே? என்ன காரியமா வந்தே?”

     “உங்ககிட்டத் தனியாக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. அந்த அண்ணன் போன பெறவு மறுபடி வந்து பார்க்கிறேன்.”

     “அண்ணன் இருந்தா உனக்கென்னா வந்திச்சு? நீ சொல்ல வந்ததைச் சொல்லேன்...”

     “இல்லே! நான் கோயில் பக்கமாகப் போயிட்டு மறுபடி வரேன்” என்று வெட்கத்தோடு நழுவி ஒதுங்கி நகர்ந்து விட்டாள் சண்பகம்.

     அவள் ஏதோ ஒரு முக்கிய வேலையாக வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் திருமலைக்குத் தோன்றியது. அது என்ன வேலையாக இருக்குமென்று தான் புரியவில்லை.


மூலக் கனல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.195.00சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
இருப்பு உள்ளது
ரூ.405.00அள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்
இருப்பு உள்ளது
ரூ.180.00மருந்தில்லா மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00நேசமணி தத்துவங்கள்
இருப்பு உள்ளது
ரூ.95.00முசோலினி
இருப்பு உள்ளது
ரூ.110.00பெரு வாழ்வு
இருப்பு உள்ளது
ரூ.180.00அள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்
இருப்பு உள்ளது
ரூ.155.00தொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்
இருப்பு உள்ளது
ரூ.70.00அள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.145.00நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.110.00மர்லின் மன்றோ
இருப்பு உள்ளது
ரூ.150.00தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
இருப்பு உள்ளது
ரூ.180.00உச்சம் தொட
இருப்பு உள்ளது
ரூ.180.00ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.110.00அலெக்சாண்டர்
இருப்பு உள்ளது
ரூ.250.00குறிஞ்சி மலர்
இருப்பு உள்ளது
ரூ.200.00கரிப்பு மணிகள்
இருப்பு உள்ளது
ரூ.110.00தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு
இருப்பு உள்ளது
ரூ.225.00முடிசூடா மன்னர்
இருப்பு உள்ளது
ரூ.195.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)