http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




15

     மாலையில் பயமுறுத்தக்கூடிய வேறொரு செய்தியும் கமலக்கண்ணனுக்கு நம்பிக்கைக்குரிய வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த அசெம்பிளிக் கூட்டத்தின் போது அவர் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரலாம் என்று தெரிந்த போது நிலைமை இன்னும் தீவிரமாகிறது, இராஜிநாமா செய்து வெளியேறி விட வேண்டுமென்ற பதற்றமும், பரபரப்பும், அவர் மனத்தில் அதிகமாயின. அவமானப்பட்டு, மரியாதைக்குறைவாகிப் பத்திரிகைகளில் சந்தி சிரிக்குமுன் தப்பிவிடவே விரும்பினார் அவர். தன் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்து நிறைவேறுவதற்கு முன் தானே பதவியிலிருந்து விலகிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கமலக்கண்ணன்.

     அவர் இப்படி மனங்குழம்பிப் பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் பிரகாசம் அவரைத் தேடி வந்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. 'தினக்குரல்' - கணக்கு வழக்குகளைத் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விவரங்களைத் தெரிவித்துச் சுருக்கமாகவும் அளவாகவும் கண்டிப்பாகவும் பேசினார். 'செக்'கும் எழுதிக் கொடுத்தார். அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசுவதாலோ, எதிர்த்து விவாதிப்பதாலோ பயன் இல்லை என்பதைப் பிரகாசமும் புரிந்து கொண்டுவிட்டான். ஆகவே அவன் 'செக்'கை வாங்கிக்கொண்டு புறப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

     அவன் புறப்பட்டுப் போன பின்பு - சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பியிருந்தார் அவர். பிறகு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக முதலமைச்சருக்குத் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை எழுதுவதற்கு உட்கார்ந்தார். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று சிறிது நேரம் தயக்கமேற்பட்டது. நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் தமிழில் எழுதத் தன்னால் முடியுமோ முடியாதோ, என்ற பயத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதலானார். எழுத எழுதக் கடிதம் நீண்டு கொண்டே போயிற்று. கடைசிப் 'பாரா'வில் இராஜிநாமா செய்வதைப் பற்றித் தனியாக சில வாக்கியங்கள் எழுதித் தன்னுடைய பதவி விலகலை ஏற்குமாறு முதலமைச்சரை வேண்டிக் கையொப்பமிட்டுக் கடிதத்தை முடித்தார் கமலக்கண்ணன். மாலை ஆறுமணிக்கு முதலமைச்சருக்கு ஃபோன் செய்து, "நேரில் ஒரு கடிதம் கொடுக்க வேண்டும்! இப்போது உங்களைப் பார்க்க வரலாமா?" - என்று கேட்டார். வரச்சொல்லி முதலமைச்சரிடமிருந்து பதில் கிடைத்தது. ஃபோனில் தான் பேசியபோது, "என்ன கடிதம். இப்போதே அதை என்னிடம் கொடுப்பதற்கு என்ன அவசரம்?" - என்று முதலமைச்சர் ஒப்புக்குக் கேட்டிருந்தாலாவது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அப்படி எல்லாம் கேட்கவோ தயங்கவோ செய்யாமல் உடனே வரச்சொல்லி முதலமைச்சர் பதில் கூறியதிலிருந்து 'தன்னுடைய பதவி விலகலை... அவர் எதிர்பார்க்கிறார்' என்ற அநுமானம் கமலக்கண்ணனுக்குள்ளே உறுதிப்பட்டது. இந்த சூழ்நிலை அவருடைய மனத்துக்கு அதிர்ச்சியை அளித்தாலும் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டார்.

     "நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்" - என்று கட்சியிலிருந்தோ, மந்திரி சபையிலிருந்தோ யாராவது ஒருவர் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடுமென்று கூட அவரால் எதிர்பார்க்க முடியவில்லை. பணமும், காரும், பங்களாவும், வீடும், வேண்டிய போதெல்லாம் தன்னைத் தேடித் தேடிக் கும்பிடு போட்ட கட்சி ஆட்களும், காரியக்கமிட்டி உறுப்பினர்களும் - இப்போது ஏன் அறவே தன்னை ஒதுக்கியும், விலக்கியும் ஓடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வேதனைப்பட்டார் கமலக்கண்ணன்.

     மாலை ஆறே முக்கால் மணிக்கு அவர் முதலமைச்சர் வீட்டுக்குப் புறப்பட்டார். முதலமைச்சர் வீட்டு வராந்தாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

     கமலக்கண்ணன் கையில் முதலமைச்சரிடம் கொடுப்பதற்கான கடிதத்தோடு போர்டிகோவில் காரைவிட்டு இறங்கிய போது - வராந்தாவில் வட்டம் போட்டுக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருடைய கண்களும் திரும்பிப் பார்த்தன. கமலக்கண்ணன் அவர்களுடைய வணக்கங்களையோ, கைகூப்புதல்களையோ, பொருட்படுத்தாமல் படியேறி உள்ளே நுழைந்தார்.

     முதலமைச்சர் தமது அறையில் தயாராகக் காத்திருந்தார். கமலக்கண்ணன் உள்ளே நுழைந்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார். ஆனால் கமலக்கண்ணன் உட்காரவில்லை.

     "திஸ் இஸ் மை ரெஸிக்னேஷன் லெட்டர்..."



நெஞ்சக்கனல் : கொடி ஏற்றம் காப்பு  1  2  3  4  5
6  7  8  9  10  11  12  13  14   15


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/nenjakkanal/nenjakkanal15.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs