7

     எதிரே வந்து உட்கார்ந்து பேசுகிறவனின் அதிகப் பணிவும், குழைவும், தன்னை எந்த நஷ்டத்துக்கும் ஆளாக்கலாம் என்று முன்னதாகவே எடைபோட்டு நிறுத்து நிர்ணயிப்பதில் ஒவ்வொரு வியாபாரியும் கெட்டிக்காரனாகத் தான் இருப்பான். கமலக்கண்ணனோ பிறவி வியாபாரி. கலைச்செழியன் தன்னோடு உடனழைத்து வந்திருந்த 'பிரகாஷ் பப்ளிஸிட்டி' பிரகாசத்தைப் பளிச் பளிச் சென்று புகழ்ந்து அறிமுகப்படுத்தியபோதே, 'என்ன காரியத்துக்கு அடிபோடுகிறார்களோ?' - என்று மெல்லச் சந்தேகம் தட்டியது அவருக்கு.

     "பிரகாஷ் பப்ளிஸிட்டியைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா வந்து..." என்று தயங்கினாற் போல் இழுத்தார் கமலக்கண்ணன்.


தீட்டும் புனிதமும்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

தாண்டவராயன் கதை
இருப்பு உள்ளது
ரூ.1260.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

வேழாம்பல் குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நான்காவது சினிமா
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

சாயாவனம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

மோனேயின் மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

உங்களால் முடியும்!
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

எழுத்தே வாழ்க்கை
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

தலித்துகள் - நேற்று இன்று நாளை
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

கதை To திரைக்கதை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மொபைல் ஜர்னலிசம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

வானம் வசப்படும்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

முடிசூடா மன்னர்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

சக்தி வழிபாடு
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
     படத் தயாரிப்பாளர்களுக்கு நியாயமான வட்டியிலே ஃபைனான்ஷியர்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்ரதோட-பப்ளிஸிட்டி இன்சார்ஜ் ஆகவும் இருக்கோம். உங்க கம்பெனி விளம்பரங்களை எல்லாம் கூட எங்க மூலமாகவே செய்ணும்னு ரொம்ப நாளா எங்களுக்கு ஒரு ஆசை இருந்தது. ஏன் விளம்பரம் செய்யணும்கிறதைவிட-எதுக்காக விளம்பரம் செய்யணும்கிறதை-எதிர் பார்த்து அதுக்கேற்ற முறையிலே செயல்படற ஒரே 'அட்வர்டைஸிங் மீடியா' - எங்களோடதுதான். அதிலே உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே. எங்களைப் பற்றி நாங்களே ரொம்பவும் சொல்லிக் கொள்ளக் கூடாது பாருங்க..." என்று ஓயாமல் அடுக்கியபின் கடைசியில் உபகார அடக்கமாகவும் போனால் போகிறதென்று ஒரு வார்த்தை சொல்லி முடித்தார் பிரகாசம்.

     "மாயாதேவீன்னு ஒரு புது ஹீரோயின் வந்திருக்குப் பாருங்க... இப்பத்தான் எங்க பார்த்தாலும் அதைப்பத்தியே பேச்சாயிருக்குங்களே...? அதை இந்த 'லயன்'லே கொண்டாந்து விட்டதே நம்ம பிரகாசம் சார்தான்..." என்றான் கலைச்செழியன்.

     "இந்த 'லயன்'லேன்னா... எந்த லயன்லே..." என்று கமலக்கண்ணனும் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டுக் கேட்ட போது அந்தச் சிரிப்பிலேயே அவரைக் குறிப்பறிந்து விட்டார் பிரகாசம். உடனே மெல்லத் தொற்றினார்.

     "மாயாவுக்குக் கூட உங்களைப் போலொத்தவங்களை அறிமுகப்படுத்திக்கிடணும்னு... ரொம்ப ஆசை தானுங்க."

     "ரியலி-ஷி இஸ் சார்மிங்-ப்யூட்டிஃபுல்..." என்று கமலக்கண்ணனும் நெகிழ்ந்தார்.

     "ஷி இஸ் வெரி ஈகர் டு ஸீ யூ ஸார்..."

     "பார்த்தாப் போச்சு..."

     "வீட்டுக்கே அழச்சிட்டு வரட்டுமா...சார்.... இல்லே...?"

     "இங்கேயா...வாணாம்... நான் அப்புறம் சொல்றேனே?" - என்று சிரித்து மழுப்பினார் கமலக்கண்ணன்.

     "உங்களைப் போல கலை ரசிகர்களிட்ட ரொம்ப தொடர்பு வச்சிக்கணும்னு மாயாவுக்கு ஆசை உண்டுங்க..." என்று வேறு விதமாகச் சொல்ல முடியாத விஷயத்தை ரசிகத் தன்மை என்ற தோரணையில் அழகாக விவரித்தார் அட்வர்டைஸிங் அண்ட் ஸேல்ஸ் ப்ரமோஷன்ஸ் பிரகாசம். அது அவருக்கும் புரியும். கமலக்கண்ணனுக்கும் புரியும். அப்புறம் என்ன?

     "நீங்க தொடங்கப் போற புது டெய்லிக்கு - 'விளம்பர பட்ஜெட்' எவ்வளவு போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா... சார்!"

     "இன்னும் 'பட்ஜெட்' எதுவும் போடலே! நீங்களே ஒரு 'ஸ்கீம்' கொடுங்களேன். முதல்லே பத்திரிகைக்குப் பேர் செலக்ட் பண்ணனும். அப்புறம் வால்போஸ்டர், மற்ற நியூஸ் பேப்பரிலே விளம்பரம், தியேட்டர்களிலே சிலைடு, எல்லாமே கொடுத்துடலாம்னு நினைச்சிருக்கேன்..."

     "ஓ! பேஷா செய்யலாங்க..."

     "தினமுழக்கம்'னு வைச்சிடுங்களேன்..." என்றான் கலைச்செழியன்.

     "சே! சே! அது நல்லாயில்லே... ரொம்ப 'சீப்பா' இருக்கு! 'தினக்குரல்'னு வைக்கலாம்..." என்று திருத்தினார் பிரகாசம்.

     "பேப்பர்லே போட்ட விளம்பரத்தைப் பார்த்து நெறையப் பேர் எழுதியனுப்பிச்சிருக்காங்க. அதையும் பார்த்துத்தான் முடிவு பண்ணுவமே...?" என்றார் கமலக்கண்ணன்.

     சிறிது நேரத்திற்குப் பின் பத்திரிகையைப் பற்றிய பேச்சை விட்டு மறுபடியும் மாயாதேவியைப் பற்றிய பேச்சுக்குக் கமலக்கண்ணனே வந்தார்.

     "இப்ப எல்லாருமே அந்தப் பெண்ணைத்தான் ஹீரோயினாப் போடறாங்க இல்லே...? வந்த கொஞ்ச நாளிலேயே ஃபீல்டைப் பிடிச்சுக்கிட்டா. கெட்டிக்காரியாகத்தான் இருக்கணும்."

     "பின்னே சும்மாவா சொல்றேன் நான்... பழகினா நீங்களே கூட அதுங்குணத்தைப் புரிஞ்சுக்குவீங்க... அப்புறம் நான் சொல்ல வேணாம்..." என்று மறுபடி ஒத்துப் பாடினார் பிரகாசம். உலகில் மாயா உட்பட சகல விஷயங்களையும் விளம்பரம் செய்வதும் விற்பனையை வளர்ப்பதும்தான் அவருடைய இலட்சியங்களாயிற்றே.

     பப்ளிஸிட்டி சம்பந்தமாக க்ளையண்ட்களை-வாடிக்கைகாரர்களை-இப்படி 'மாயா' விநோதங்கள் மூலமாக வலை விரித்துப் பிடிப்பதுதான் பெரும்பாலும் அவர் வழக்கம். இந்த வலைகளுக்குத் தப்பியவர்கள் பெரும்பாலும் எந்த வலையிலுமே சிக்க முடியாதவர்களாகத் தான் இருப்பார்கள் என்பதும் அவருடைய திடசித்தாந்தமாக இருந்தது.

     சிறிது நேரம் கமலக்கண்ணனிடம் புது நடிகை மாயாவைப்பற்றிப் பேசி அவருக்குச் சரியானபடி மயக்கமூட்டி விட்ட பின் பிரகாசமும், கலைச்செழியனும் விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உடை மாற்றிக் கொண்டு கமலக்கண்ணனும் கிளப்புக்குப் புறப்பட்டு விட்டார். புறப்படுமுன் மறக்காமல் அலுவலகத்திற்குப் போன் செய்து பத்திரிகைக்குப் பெயர் வைப்பது சம்பந்தமாக யோசனை கூறி வந்திருந்த கடிதங்களைக் கிளப்பிற்கு எடுத்து வருமாறு தன் காரியதரிசிக்குத் தெரிவிதிருந்தார் அவர். கிளப்பில் எட்டரை மணிவரை சீட்டாடியபின் நண்பர்களில் முக்கியமானவர்களோடு பத்திரிகைப் பெயர் சம்பந்தமான ஆலோசனை தொடங்கப்பட்டது. கடிதங்களில் வந்திருந்த பெயர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.

     "சாயங்காலம் வீட்டுக்கு - பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசம்னு ஒரு ஆளு வந்திருந்தார். 'தினக்குரல்'னு பேர் வைக்கலாமின்னு அந்த ஆள் சொன்னாரு" என்று கமலக்கண்ணன் தற்செயலாகக் கூறியபோது அந்தப்பெயரை எல்லா நண்பர்களுமே சொல்லி வைத்தாற்போல் ஏகமனதாக ஆதரித்தார்கள். அந்தப் பெயரையே வைப்பதென்று கமலக்கண்ணனும் முடிவு செய்தார்.

     "பத்திரிகையிலேயே விளம்பரம் செய்தபடி ஐநூறு ரூபாய் பரிசு கொடுக்கணுமே! இல்லாட்டி ஏமாத்திப் பிட்டதாகப் பேசுவார்களே?" என்றார் ஒருவர்.

     "அதுக்கென்ன? பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசமும் போட்டியில் கலந்துகொண்டு 'தினக்குரல்'ங்கிற பேரை எழுதி அனுப்பினதாகவே சொல்லி அவருக்கு ஐநூறு ரூபாய் பரிசையும் கொடுத்தாப் போச்சு..." என்று அந்தப் பிரச்சனைக்குச் சுலபமாக முடிவு சொல்லிவிட்டார் கமலக்கண்ணன். உடனே-அப்போதே-கலைச்செழியனைப் போனில் பிடித்து அந்தச் செய்தியையும் தெரிவித்து விட்டார். மறுநாள் காலையிலேயே பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசத்தை அழைத்துக்கொண்டு மறுபடி கமலக்கண்ணனைத் தேடி வந்து விட்டான் கலைச்செழியன். இன்று பிரகாசம் வெறுங்கையோடு வராமல் கமலக்கண்ணனுக்குப் போடுவதற்கு ஒரு மாலையோடு வேறு வந்திருந்தார்.

     "இதெல்லாம் எதுக்குங்க..? இந்த 'பார்மாலிடீஸே' எனக்குப் பிடிக்கிறதில்லே?" என்று கமலக்கண்ணன் அந்த மாலை மரியாதைக்கு நாணி ஒதுங்குவது போல் நடித்தாலும் பிரகாசம் அப்படிச் செய்ததை அவர் மனம் கொண்டாடி வரவேற்கவே செய்தது. சொல்லப்போனால் இப்படி மாலைகளுக்கும் மரியாதைகளுக்கும் தான் அவர் மனம் ஏங்கிக் கிடந்தது. பிரகாசாம் அதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார்.

     பிரகாசம் மாலையைத் தன் கழுத்தில் போட்டு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்த பத்தாவது நிமிடமே அந்தப் பரிசுத் தொகை ஐநூறு ரூபாயை ஒரு கவரில் போட்டுக் கொடுத்துவிட்டார் கமலக்கண்ணன். மாலையைக் கழுத்தில் போட்டதும் எலுமிச்சம்பழத்தையும் கையில் கொடுக்கிற வழக்கம் எதற்காக ஏற்பட்டதோ-ஆனால் பொருத்தம் மிக நன்றாக அமைகிறது. எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மாலை கழுத்தில் விழுந்ததும் ஒரு கிறு கிறுப்பு-தலை சுற்றல்-வருகிறதே-அதைக் கருதித்தான் எலுமிச்சம்பழத்தையும் உடன் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.

     "என்னங்க இந்த வாரத்திலே ஒரு நாள் மாயா வீட்டிலே தலையைக் காட்டிட்டு வரச் சௌகரியப் படுமா?" என்று சமயமறிந்து அடுத்த வலையையும் விரித்தார் பிரகாசம்.

     "யோசிச்சுச் சொல்றேன். இந்த வாரம் 'சாமிகள் நம்ம வீட்டுக்கு வாராரு. பாத பூஜை எல்லாம் இருக்கு' ஏதோ என் சம்சாரத்துக்கு இதிலே கொஞ்சம் கிறுக்கு..." என்று மனைவியின் தலையில் பக்திப் பழியைப் போட்டார் கமலக்கண்ணன்.

     "ஆமாங்க! இந்த 'சாமி'யைப் பத்தி எல்லாருமே நல்லபடியாச் சொல்றாங்க... இவர் சொன்னது அப்படியே பலிக்குதாம்..." என்று உடன் ஒத்துப் பாடினார் பிரகாசம். பெரிய மனிதர்களிடம் பழகி வெல்வதற்கு அநுசரித்துப் பேசுவதும் ஒரு சாதனம் என்று கருதியவராகத் தோன்றினார் அவர்.

     "டெய்லி நடத்தப் போறதைச் சாமிகிட்டேயே சொல்லி ஆசிர்வாதம் வாங்கிடலாம்" என்று கலைச்செழியனும் இழைந்து பேசிச் சமாளித்தான்.

     "இந்தச் சாமி எதை வாழ்த்தினாலும் அது பொன்னாக் கொழிக்குதூங்கிறாங்க..." என்றார் பிரகாசம்.

     "சாமி வரன்னிக்கு எல்லாப் போட்டோவும் நீங்க தான் எடுக்கணும்..." என்று கலைச்செழியனிடம் கூறினார் கமலக்கண்ணன்.

     "ஆகா! நீங்க சொல்லுணுங்களா? உங்க ஆஸ்தான் போட்டோகிராபரா உத்தரவே வாங்கிக்கிட்டப்புறம்?" என்று கலைச்செழியன் வாயெல்லாம் பல்லாகத் தெரிய இளித்து அதை அங்கீகரித்தான்.

     உடனே ஒரு இருபது முப்பது நண்பர்களுக்கும் பிரமுகர்களுக்கும் போன் செய்து மடாதிபதி வரப்போகிற செய்தியைத் தெரிவித்தார் கமலக்கண்ணன். ஒரு வார்த்தை கூட வித்தியாசமில்லாமல் ஒரே செய்தியை இருபது பேருக்கு கிராமபோன் பிளேட் மாதிரி கூறியதில் அவருக்கு அலுப்போ சலிப்போ சிறிதும் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. பத்துப் பேருக்கு, 'நான் பக்தி செய்கிறேன்' - என்று விளம்பரப் படுத்திவிட்டுப் பக்தி செய்தால் தான் இந்தக் காலத்தில் மதிப்பு என்பதைப் புரிந்து கொண்டவர் கமலக்கண்ணன்.

     மடாதிபதி விஜயம் அவருடைய பங்களாவில் திருவிழாவாக வந்து போயிற்று. போட்டோக்கள், பந்திபந்தியாய் அன்னதானம், வாசலில் பந்தல் என்று தடபுடல் பட்டது. சுவாமிகள் கமலக்கண்ணனின் பங்களா காம்பவுண்டில் மண், பொன், பெண் ஆகியவற்றின் நிலையமைகளைப் பற்றிப் பிரசங்கங்கள் செய்தார். தினம் ஐநூறு பேர் கூடிக் கேட்டார்கள். மூன்று நாள் இப்படி நடந்தது. நாலாவது நாள் வேறொரு பெரிய மனிதர் வீட்டுக்குப் போய்விட்டார் சுவாமிகள். கமலக்கண்ணனுடைய பங்களா முகப்பில் பந்தல், வாழைமர அலங்காரங்களைப் பிரிக்க வேண்டியதாயிற்று.

     ஆதினத்துச் சாமிகள் விஜயம் செய்து முடித்த பின் பிரகாசமும், கலைச்செழியனும் மறுபடி வந்து மாயா தேவியைப் பற்றி நினைவூட்டினர்.

     "இப்பவே மாயாவைப் பார்த்து வச்சால் அப்புறம் ஒரு சௌகரியம் இருக்குங்க. நம்ம 'தினக்குரல்' - தொடக்க விழாவில் முதல் நாள் பேப்பர் முதல் பிரதியை வெளியிட ஒரு விழா ஏற்பாடு செய்து மாயாவையே முதல் பிரதியை வாங்கச் சொல்லலாம். அப்படிச் செய்தால் நல்ல 'பப்ளிஸிடி' ஆகும். முதல் பிரதியை மாயா வாங்கின செய்தி ஊரெல்லாம் பரபரப்பாகப் பரவும். அது பத்திரிகை விற்பனைக்குத் துணை செய்யக் கூடியது" - என்று பிரகாசம் யோசனை கூறிய போது, "நல்ல ஐடியாங்க - இவுரு சொல்றது" - எனக் கலைச்செழியனும் சேர்ந்து கொண்டான்.

     "டெய்லி பேப்பருக்கு இப்படி ஒரு விழா எல்லாம் அவசியமில்லேன்னு நினைக்கிறேன்" -

     "அப்படிச் சொல்லாதீங்க! டெய்லிக்குத் தான் இது ரொம்ப அவசியம்..." என்று கமலக்கண்ணனிடம் மேலும் வற்புறுத்தினார் பிரகாசம்.

     மறுநாள் அவரை எப்படியோ சம்மதிக்கச் செய்து மாயா தேவியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். மாயாதேவிக்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்தார் கமலக்கண்ணன். கமலக்கண்ணனிடம் சிரித்துச் சிரித்துப் பேசினாள் மாயா; அவளுடைய சிரிப்பின் ஒய்யாரத்திலும், பழகிய தளுக்கிலும் கமலக்கண்ணன் சொக்கிப் போனார். இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது - கமலக்கண்னன் எவ்வளவு மறுத்துச் சொல்லியும் கேட்காமல் கலைச்செழியன் ஒரு படம் பிடித்துக் கொண்டான்.

     "உங்களைப் போலக் கலைகளை ஆதரிக்கிற ரசிகர் என் வீடு தேடி வந்தது நான் செய்த பாக்கியம்" என்றாள் மாயா. அந்தப் பேச்சிலிருந்த மழலைத்தன்மை போன்ற ஒரு போதை கமலக்கண்ணனைக் கிறங்கச் செய்தது.

     "உங்களைப் பத்திப் பேசாத ரசிகனே இன்னிக்கித் தமிழ்நாட்டிலே கிடையாது. நான் என்ன? சாதாரண வியாபாரி..." என்று கீழே இறங்கினாற் போல் பணிந்து பேசினார் அவர்.

     "எனக்கென்னவோ உங்களை ரொம்பப்பிடிச்சிருக்கு" என்று முகம் மலர்ந்தாள் மாயா.

     அதுதான் சமயமென்று தினசரியின் வெளியீட்டு விழாவில் முதல் நாள் பேப்பர் முதல் பிரதியை விலைக்கு வாங்க 'மாயா' தான் வரவேண்டுமென்று கமலக்கண்ணன் ஆசைப்படுவதாகக் கலைச்செழியன் பேச்சைத் தொடங்கி வைத்தான்.

     "நான் எதுக்குங்க... சினிமாப் பத்திரிகையா இருந்தாலும் பொருத்தமா இருக்கும். இதுவோ... டெய்லி நியூஸ் பேப்பர்.. இதுக்குப் போயி என்னை விழாவுக்குக் கூப்பிடறீங்களே..." என்று மாயாவும் மறுப்பது போல் விநயமாகக் குழைந்தாள்.

     "அதென்னம்மா அப்படிச் சொல்லிட்டே? சினிமாப் பத்திரிகையின்னாத்தான் நீ வரணுமா? எதுன்னாலும் இன்னிக்கி அதிலே சினிமா உண்டு, சினிமா இல்லாம எதுவும் இல்லே. எந்தப் பத்திரிகையின்னாலும் அது இன்னிக்கு நிலைமையிலே ஏதாவாது ஒரு நாள் சினிமாப் பத்திரிகையாகத்தான் ஆகணும்! சினிமா இல்லாட்டி டெய்லிதான் ஏது...? என்றார் பிரகாசம்.

     "அதுக்கில்லை... வந்து நான் என்ன அவ்வளவு பெருமைக்குத் தகுதியா?" என்று கிளுகிளுத்தாள் மாயா.

     "இப்படிச் சொல்றதே உங்களுக்குத் தகுதிதான்" என்றார் கமலக்கண்ணன்.

     கமலக்கண்ணன் வைர நெக்லஸ்ஸைக் கொடுத்த போது மாயா மறுப்பது போல் பாசாங்கு செய்தாள்.

     "சும்மா வாங்கிக்கம்மா! சார் பிரியப்பட்டுக் குடுக்கிறப்ப நீ மறுக்கிறது கொஞ்சங்கூட நல்லா இல்லை" என்று பிரகாசம் கூறிய பின்பே அவள் அதை வாங்கிக் கொண்டாள். கமலக்கண்ணனுக்கும், கலைச்செழியன், பிரகாசம் ஆகியோருக்கும் ஆப்பிள் ஜூஸ் ஐஸ் போட்டுக் கொடுத்தாள் மாயா.

     "உங்க கையாலே கொடுத்ததிலே ஆப்பிள் ஜூஸ் வழக்கத்தைவிடப் பிரமாதமாயிருக்கு..." என்று கமலக்கண்ணனும் கடைசி கடைசியாகப் பேச்சில் அசடு வழியத் தொடங்கினார். அழகிய பெண்ணிடம் அசடு வழியாத சராசரி ஆண்மகனே இருக்கலாகாது என்பது கடவுளின் சூழ்ச்சியோ என்னவோ?

     அங்கிருந்து திரும்பி வெளியேரும் போது காரில் "நான் இங்கே வந்து போனதைப் பற்றி எங்க வீட்டிலே வச்சுப் பிரஸ்தாபிக்க வேண்டாம்... தெரியுதா?" என்று கலைச்செழியனிடமும், பிரகாசத்திடமும் வேண்டிக்கொண்டார் கமலக்கண்ணன்.

     "அடடே! என்னங்க நீங்க? இது கூடத் தெரியாதுங்களா எங்களுக்கு...? விடிஞ்சி எந்திரிச்சா எத்தினி பெரிய ஆளுங்க கூடப் பழகறோம்?" என்று ஏககாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு இருவரும் ஒரே வார்த்தைகளில் அவருக்குப் பதில் சொன்னார்கள். கமலக்கண்ணனும் உடனே அவர்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்.

     "மிஸ்டர் கலை! மாயா வீட்டிலே எடுத்தீங்களே படம்! அதைப் பத்திரிகையிலே கித்திரிகையிலே போட்டுத் தொலைச்சிராதியும்..."

     "நீங்க ஒண்ணு! அவங்க பக்கத்திலே நீங்க கம்பீரமா உக்காந்திருந்த போஸ் ரொம்ப 'மேட்ச்' ஆறமாதிரி இருந்திச்சு! அதான் ஒண்ணு தட்டி வச்சேன். இதைப்போயிப் பத்திரிகையிலே போடுவாங்களா, என்ன? அவ்வளவுக்கு விவரம் தெரியாதவனில்லீங்க... நான்"

     "உங்களுக்குத் தெரியும்! இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்காகச் சொல்லி வைக்கிறேன் ஞாபகமிருக்கட்டும்..."

     பத்துப் பதினைந்து நாட்களில் முதலமைச்சர் தலைமையில் முதல் பிரதியை கவர்ச்சி நடிகை மாயா தேவி வாங்க 'தினக்குரல்' நாளிதழ் வெளியீட்டு விழா அமோகமாக நடைபெற்றது. அதைப்பற்றிய செய்திகளும், படங்களும் வேறு தினசரிகளிலும் தாராளமாக வந்திருந்தன. தினப்பத்திரிகைக்கு உதவியாசிரியர்கள், ஒரு நியூஸ் எடிட்டர், நிருபர்கள் மட்டும் போட்டுவிட்டுத் தம் பெயரையே ஆசிரியர் என்ற பதவிக்கு நேரே போட்டுக் கொண்டிருந்தார் கமலக்கண்ணன். கீழே அச்சகமும் மாடியில் அலுவலகமுமாக அவருடைய கம்பெனி காரியாலயத்திற்கு அருகிலேயே ஒரு கட்டிடம் பத்திரிகைக்குக் கிடைத்திருந்தது. டெய்லியில் வியாழக்கிழமை சோதிடப் பகுதியைக் கமலக்கண்ணனுக்கு ஏற்கெனவே அறிமுகமான சர்மாவும், ஞாயிறு சினிமா மலரை வேறொரு புனைப்பெயரில் கலைச்செழியனும், கவனித்துக் கொண்டார்கள். நியூயார்க்கிலும், லண்டனிலும், ஜர்னலிஸம் படித்த நாதனைப் போன்றவர்களை அருகில் வரவும் விடவில்லை. பணமும், பத்திரிகைப் பிரசாரமும் அவர் எதிர்பார்த்ததை அவருக்கு மெல்ல மெல்லத் தரலாயின. அப்போது பதவியிலிருந்த-அரசியல் கட்சியில்-அவரும் ஒரு தீவிர உறுப்பினராக வாய்ப்பு வந்தது. அந்தக் கட்சியின் தேசியத் தன்மைகளுக்கும், காந்தீய நெறிகளுக்கும் எதிரான வழிகளில் ஒரு காலத்தில் சென்ற குடும்பமே அவருடையது. என்றாலும் அவரிடமிருந்த பணம்-பத்திரிகை இரண்டாலுமே... அதை அவர் இன்று அடைய முடிந்தது. கட்சியில் புதிதாக நுழைந்திருந்தாலும் வசதியுள்ளவர் என்ற காரணத்தால் அவர் சொல்லியதை எல்லாரும் கேட்டார்கள். அதே சமயம் கட்சிக்காக உயிரை விட்டுச் சிறை சென்று, தனி நபர் சத்தியாக்கிரகங்கள் செய்து, அந்நியத் துணி பகிஷ்கரிப்புச் செய்து பாடுபட்ட ஏழைத் தியாகிகள் பலரைக் கட்சி இலட்சியமே செய்யவில்லை. கமலக்கண்ணன் ஒரு நோக்கத்தோடு கட்சியில் தீவிர உறுப்பினரானார். அந்த நோக்கம் நிறைவேறுகிற காலமும் வந்தது. கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தகுதியாக சட்டத்தில் இருந்தது 'மதுவிலக்கை ஒப்புக் கொண்டாக வேண்டும்' என்ற பிரிவு. அந்தப் பிரிவை ஒப்புக்கொண்டு அதன் கீழ்க் கையெழுத்திட்டு உறுப்பினராகியும் கமலக்கண்ணனால் குடிப்பதை நிறுத்த முடியவில்லை.

     "கட்சி இலட்சியங்களில் நம்பிக்கை இன்றி ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று அவரை எதிர்த்துக் கேட்கவும் அந்தப் புராதனமான தேசிய இயக்கத்தில் யாரும் துணியவுமில்லை. அந்த நிலை கமலக்கண்ணனுக்கு வசதியை அளித்தது. மெல்ல மெல்லக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர்களும், உண்மை ஊழியர்களுமான தியாகிகள் பலர் அவருக்குச் சலாம் போடும் நிலைக்கு ஒடுக்கப்பட்டனர். கட்சி அலைச்சல்களுக்கு கார், கட்சி நிதிக்குப் பணம், கட்சிப் பத்திரிகைகளுக்கு ஆதரவு எல்லாம் அவர் தந்தார். கட்சி தன் இலட்சியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே விற்று விட்டது. இந்த நிலையைத் தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் திடீரென்று ஒரு சிறு சலசலப்பும் கட்சியில் அவருக்கெதிராக முளைத்தது.


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி - PDF
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்