http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




14

     ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசைதான். ஏனென்றால் அந்த எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை.

     எதிரே சுவரில் காலஞ்சென்ற மகாதேவன் நேருவுடன் சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்த புகைப்படம் முன்பு எப்போதோ எடுத்து மாட்டப்பட்டிருந்தது. டைம்ஸ் காரியாலயத்துக்கு ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயா வந்திருந்த போது எடுத்திருந்த புகைப்படம் ஒன்றும் அருகில் மாட்டியிருந்தது. இவ்வளவு பெரிய தலைவர்களுடனும், கவிஞர்களுடனும், கலைஞர்களுடனும் பழக்கமுள்ள ஒரு உண்மைத் தேசியவாதி நிறுவிய நல்ல பத்திரிகையே சரியாக நடக்க முடியாத இந்தத் தேசத்தில் மிட்டாய்க் கடை வைத்துப் பணக்காரர்களாகியவர்களும், சணல் ஆலை வைத்துச் செல்வம் குவித்தவர்களும், முதல் போட்டு நடத்துகிற ஏழாந்தர, எட்டாந்தரப் பத்திரிகைகள் கூட அற்புதமாகச் செலாவணியாவதை நினைக்கத் தொடங்கிய போது எதிரே ஒன்றையுமே பார்க்காமல் தளர்ச்சியோடு தளர்ச்சியாகக் கண்களை அப்படியே இறுக்கி மூடிக் கொண்டு விடவேண்டும் போல் தோன்றியது சுகுணனுக்கு. அந்தப் படங்களையும், சுவர்களையும் அப்பால் கவலையோடு தெரியும் கமலத்தின் முகத்தையும் பத்திரிகைக் காகிதப் பற்றாக்குறையை நினைவுறுத்தும் கேள்விக் குறி போல் நிற்கும் அச்சக ஃபோர்மெனையும் எதிர்கொண்டு பார்க்கவே கூசியவனாகக் கண்களை மூடினான் அவன். பத்து நிமிடங்கள் இப்படிக் கழிந்திருக்கும். சிந்தனையில் ஒன்றுமே வழி பிறவாத தளர்ச்சியில் கரைந்த விநாடிகள் அவை.

     யாரோ படியேறி நடந்து வரும் காலடியோசை கேட்டது. தொலைவிலிருந்து நெருங்கி வரும் அநுராகத்தின் மெல்லிய சங்கீதம் போல் மெட்டி ஒலி தாளமிட நடந்து வரும் மங்கலமான திருமகளின் காலடி ஓசையா அது? தரித்திரமும் தளர்ச்சியும், துயரமும் தற்காலிகத் தோல்விகளும், நிறைந்துவிட்ட டைம்ஸ் காரியாலயத்திற்குள் எங்கிருந்து வருகிறது இந்த இலட்சுமீகரமான இங்கித நாதம்? இந்த நாதத்தைத் தொடர்ந்து கொல்லென்று சுற்றிலும் மல்லிகை பூத்துக் குலுங்குவது போல் நறுமணமும் விரைந்து வந்தது. ஓசையும் வாசனையும் நெருங்கின. காதில் கேட்பதும், கருத்தில் உணர்வதும், உண்மையா சொப்பனமா என்ற தயக்கத்தோடும் இந்த உலகம் என்ற பிடிவாதமான புறக்கணிப்பாகிய நெற்றிக் கண்ணின் வெப்பத்தில் வாடிய வாட்டத்தின் சோர்வோடும் மெல்லக் கண்களைத் திறந்து எதிரே பார்த்தான் சுகுணன்.

     சித்திரம் போல் எதிரே நின்று கண்களில் நீர் அரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி. எதிரே அவன் பார்வையில் பாதாதிகேச பரியந்தம் அவள் தென்பட்டபோது - தரையில் பதித்த தாமரைகளைப் போல் தெரிந்த அவள் பாதங்களில் 'இந்தக் கால்கள் இன்னும் உங்களருகில் நெருங்கி வந்து நிற்க முடியாமல் பெரியோர்கள் நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நிச்சயித்து இப்படித் தடையும் போட்டு விட்டார்கள்' - என்பது போல் அப்படிப்போட்ட அழகிய தடைகளாக மெட்டிகள் வெளேரென்று மின்னிக் கொண்டிருந்தன. பவழமாய்ச் சாயமிட்டிருந்த அளவான அழகான நகங்களோடு தயங்கிய அந்தப் பாதங்களில் அவன் பார்வை நிலைத்தது. அவள் முகத்தைத் தொடர்ந்து ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. மனமும் இல்லை.

     "இதெல்லாம் என்ன? உடம்பு சரியில்லை என்றால் அதை அறிந்து கொள்ளக் கூடத் தகுதியில்லாத பாவியாகி விட்டேனா நான்?"

     - அவள் குரலில் தயங்கிய பின் நிதானமாகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அவன் அவளுக்குப் பதில் கூறினான்:

     "இவை என்னுடைய சொந்த சிரமங்கள். நான் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ இன்று காரணமாயிருப்பவை இவை தான். இவற்றை பங்கிட்டுக் கொள்ள நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வறுமையின் துன்பங்களில் அவற்றைக் காண்பதற்காக என்னை விட வசதியுள்ளவர்கள் எதிரே வந்து நிற்பதை நான் விரும்பவும் முடியாது - இரசிக்கவும் வழியில்லை."

     - அவனுடைய வாய் சொந்தத் தளர்ச்சியினாலும், ஆற்றாமையினாலும், எழுந்த கோபத்தில் இப்படிப்பட்ட சொற்களை உதிர்த்தாலும், மனம் - தான் அவளை நோக்கி நியமித்து அனுப்பும் இந்தச் சொற்கள் மிகக் கடுமையானவை என்பதை உணர்ந்தே இருந்தன.

     அவளோ இந்த வார்த்தைகளில் சீற்றமடையாமல் கண்களில் நீர் நெகிழ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு ஒவ்வொரு வார்த்தையாக எண்ணித் தேர்ந்தெடுத்துத் தொடுத்து வாக்கியம் அமைத்துப் பேசுபவள் போல அவள் அவனை நோக்கிப் பேசினாள்:-



நெற்றிக் கண் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/nettrikkann/nettrikkann14.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs