|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
11
நண்பனைச் சந்தித்த பின்பும், முத்துராமலிங்கத்தின் மனம் நடந்து முடிந்த நிகழ்ச்சியிலேயே இருந்தது. நண்பன் தன்னுடைய விடுதி அறைக்குப் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றான்.
சென்னைக்குப் புறப்பட்ட சூழ்நிலையையும், வந்து சேர்ந்த பின் நடந்தவற்றையும் அவனிடம் விவரித்த பின் அவனைத் தேடி வந்து காணமுடியாமல் போய் விடுதி அறை பூட்டப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டான். நண்பன் அதிகமாகப் பதில் பேசவில்லை. தொடர்ந்து முத்துராமலிங்கம் தான் பேசிக் கொண்டிருந்தான். நண்பன் மட்டும் படாமலும் ஒப்புக்கு ஏதோ மறுமொழி கூறிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. ‘வந்திருப்பவன் எங்கே தன்னோடு உடன் தங்கித் தனக்குச் செலவு வைத்து விடுவானோ?’ என்ற பயத்தோடும், அதிகச் சுயநலமான தற்காப்பு உணர்வோடும் அவன் பழகுவது தெரிந்தது. சென்னைக்கு வந்த பின் நண்பன் கருங்கல் பாறையாகி இருப்பது புரிந்தது. பிற்பகலுக்கு மேல் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மீண்டும் கிருஷ்ணாம்பேட்டைக்குச் சென்றான் அவன். கிருஷ்ணாம்பேட்டையில் இப்போது நிலைமையின் வேகம் குறைந்து தணிந்திருந்தது. சுடுகாட்டு வாட்ச்மேன் முத்துராமலிங்கத்தின் கைப் பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சொன்னான்: “எதிர்த்தரப்பு ஆளுங்க காமிச்சுக் கொடுத்துட்டாங்க. இங்கே போலீஸ் ரெய்டு... ஒரே ரகளையாப் போச்சு... சின்னி இதை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு... அது வெளியே வர ரெண்டு மூணு நாளாவும்... அதுங்காட்டியும் உன்னை அந்தக் கொலைகாரன்பேட்டை வூட்லே தங்கிக்கச் சொல்லிச்சு... எங்ககூட வந்தீன்னா இட்டுக்கினு போய் வுட்டுடுவேன், கிளம்பு...” “அங்கே எனக்கு யாரையும் தெரியாதே...” “அதுக்குத் தான் நா கூட வரேனில்ல...?” முத்துராமலிங்கம் அந்த ஆளோடு புறப்பட்டுச் சென்றான். கலகம் மூண்டு போலீசில் பிடிபடும் அந்தப் பதற்றமானதும் பரபரப்பானதுமாகிய சூழ்நிலையிலும் கூடச் சின்னி தான் தெருவில் நின்றுவிடக் கூடாதே என்று அக்கறையோடு தனக்குத் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதை எண்ணி முத்துராமலிங்கத்துக்கு மனம் சிலிர்த்தது. தன் தந்தையோடு நெருங்கிப் பழகியவருக்கு இல்லாத அந்த அக்கறை - தன்னோடு நெருங்கிப் பழகிய நண்பனுக்குக் கூட இல்லாத அந்த அக்கறை - எங்கோ தெருவில் சந்தித்த ஒரு கீழ் மட்டத்தைச் சேர்ந்த மனிதனுக்கு இருப்பதை எண்ணி எண்ணி வியந்தது அவன் மனம். சின்னி பணம் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொல்லி முத்துராமலிங்கத்தை அப்போது ரிக்ஷாவிலேயே கூட்டிச் சென்றான் அந்த ஆள். ‘சின்ன் என்றைக்கு விடுதலையாகி வெளியே வருவான்’ என்று கேட்ட போது, ‘அவனுக்கு வேண்டிய மேலிடத்து அரசியல் ஆட்கள் தலையிட்டு விரைவிலேயே அவன் விடுதலைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்’ - என்று பதில் கிடைத்தது. யாரோ மேல் மட்டத்து மனிதர்களின் கொள்ளை லாப ஆசையைப் பூர்த்திச் செய்வதற்காகச் சாராயப் பானையை அது என்ன என்றே தெரியாமல் வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் மாடு போலக் கர்மயோகிகளை ஒப்ப அவர்கள் உழைத்துக் கொண்டிருப்பதாகவே அப்போது முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது. தென் மாநிலங்களின் பல இனங்களைச் சேர்ந்த அழகிய உடல்வாகு மிக்க பெண்களின் காட்சிப்பட்டறையான அந்த வீட்டில் வாசலில் இருந்த காவற்காரனிடமும், நம்பகமான நாயிடமும் தான் எல்லாப் பொறுப்புக்களும் விடப்பட்டிருந்தன. அந்த முரட்டுக் காவற்காரன் முத்துராமலிங்கத்திடம் மிக மரியாதையாகப் பழகினான். சின்னியோடு சேர்த்து முந்திய இரவு அவனைப் பார்த்திருந்தது ஒரு காரணம். “சின்னிக்கு மிகவும் வேண்டியவர் இவர். சின்னி விடுதலையாகி வருகிறவரை இங்கே இவரைத் தங்க வைத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்” - என்று உடன் வந்திருந்த கிருஷ்ணாம்பேட்டை ஆள் காவற்காரனிடம் வற்புறுத்தித் தெரிவித்தது மற்றொரு காரணமாயிருக்க வேண்டும். அவனை அங்கே ஒப்படைத்து விட்டு உடன் வந்த சுடுகாட்டு வாட்ச்மேன் திரும்பிப் போய்விட்டான். உற்சாகமும், கலகலப்பும் நிறைந்த இரவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது அந்த விடுதி. முகப்பவுடர், ஸ்நோ, வாசனைத் தைலங்கள், காலமைன் எல்லாம் கலந்த கூட்டான நறுமணம் கூடத்திலிருந்து கிளர்ந்து கொண்டிருந்தது. வளையல் ஒலிகள், இனிய பெண்களின் குரல்கள், கலீர் கலீர் என்று சிரிப்பு ஊற்றுக்கள் - எல்லாம் காதில் விழுந்தன. “ஐயோ என்னை விட்டுவிடு! கொன்னுடாதே” - என்று கதறியபடி தெருவில் பைத்தியமாக ஓடிய அந்தப் பெண்ணின் நினைவும் முத்துராமலிங்கத்தின் மனத்தில் வந்தது. மனத்தை விற்றுவிட்டவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் விடுதியில் உடலை விற்றுக் கொண்டிருக்கும் அவர்களை எண்ணியபோது அவன் மனம் இருண்டது. பொழுது சாய்ந்து ஒளி மங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்க விரும்பாமல் மொட்டை மாடிக்குச் செல்ல விரும்பினான் அவன். உள்ளே தங்கியிருந்த பெண்களுக்கு எல்லாம் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் ஆளை அவனருகே கூப்பிட்டுக் கொண்டு வந்து அவனுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான் சின்னியின் காவற்காரன். தேநீரைப் பருகிவிட்டு முத்துராமலிங்கம் மொட்டை மாடிக்குப் போனான். அவனது கையில் பாரதியார் கவிதைத் தொகுதி இருந்தது. பெட்டியில் இருந்ததை எடுத்துக் கொண்டிருந்தான். அந்த வீட்டில் தங்குவதற்கு அவன் அருவருப்பு அடையவில்லை. அழுக்கு மயமான குப்பைமேட்டில் கூச்சப்படாமல் அமர்ந்து எதிரே தேடி வந்து நின்ற அரசனிடம், “யாம் இருக்க நீர் நிற்க” - என்று சொல்லிய ஞானியைப் போல் அருவருப்பின்றி இருந்தான் அவன். எங்கே இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று எண்ணினான் அவன். அந்த இனிய குரலாலும், அதில் கூப்பியிருந்த சோகச் சாயலாலும் முத்துராமலிங்கம் மிகமிகக் கவரப்பட்டான். வெறுங்குரலால் மட்டும் அவள் பாடுவதாகத் தோன்றவில்லை. மனத்தாலும் சேர்ந்து இசைப்பது போல் இருந்தது. கீழே இறங்கிச் சென்று அத்தனை அழகாகப் பாடுவது யார் என்று பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அந்த ஆவலை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பாரதியார் கவிதைப் புத்தகத்தைத் தான் படிப்பதற்குப் பிரித்தவுடன் உடனிகச்சியாக அந்தக் குரல் கேட்கவே அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அந்தக் கவிதைகளை அவன் ஊக்கத்துக்காகவும், மன உயர்வுக்காகவும் அடிக்கடி படிப்பது உண்டு. அக்கவிதைகள் அவனுடைய வாழ்வின் வழிகாட்டியாகவும், வேதபுத்தகமாகவும் அமைந்திருந்தன. அவன் அந்தப் புத்தகத்துடன் அப்படியே கீழே படியிறங்கி வந்தான். கூடத்துக்குள் நுழைகிற கதவருகே ஆயாக் கிழவி பிரம்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தாள். அவள் வாய் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தது. முத்துராமலிங்கத்தைப் பார்த்ததும் கிழவி மரியாதையாக எழுந்து நின்றாள். “இப்பப் பாடினது யாரு?” “அதுவா அந்தச் சேலத்துப் பொண்ணு... புதுசா வந்திருக்குது... எப்பப் பார்த்தாலும் புஸ்தகமும் கையுமாத் திரியும். கஸ்டமருங்க வந்தாக் கூடப் புஸ்தகத்தைப் பிடுங்கி வச்சுப் போட்டு நாமதான் அதை உள்ளாரத் துரத்தணும்.” “நல்லாப் பாடுது...” “உள்ளாரப் போயி மறுபடி பாடச் சொல்லிக் கேளு தம்பீ! உனக்கில்லாததா!” என்று கூறியபடி கண்களைச் சிமிட்டினாள் கிழவி. அவள் கண்களைச் சிமிட்டிய விதம் முத்துராமலிங்கத்துக்குப் பிடிக்கவில்லையானாலும் அவன் அந்தப் பாடலைக் கேட்க விரும்பினான். கிழவியைப் பொருட்படுத்தாமல் மேலே நடந்து உள்ளே சென்றான் முத்துராமலிங்கம். அவன் அருகில் சென்றதும் தலை சீவிக் கொண்டிருந்த அந்தப் பெண் பயத்தினாலோ கூச்சத்தினாலோ பாடுவதை நிறுத்திவிட்டாள். அவளுடைய கண்களும் முகமும் பார்வையும் துறுதுறு என்று இருந்தன. கொஞ்சம் சுட்டித் தனமும் குறும்பும் கூடத் தெரிந்தன. அவன் அருகே சென்று கேட்டான்: “யார் பாடினது?” “ஏன்? நான் தான்! பாடக்கூடாதா? அல்லது பாடறதுக்கு இங்கே சுதந்திரம் கிடையாதா?” “பாடியது நன்றாயிருந்தது என்று தான் தேடி வந்தேன்.” “இங்கே இனிய குரலையோ இசையையோ பாராட்டவும் கேட்கவும் பொறுமையுள்ள மனிதர்கள் வருவது வழக்கமில்லை.” “நான் குரலையும் இசையையுமே பாராட்ட மட்டும் தான் வந்திருக்கிறேன்.” அவன் இப்படி அவளிடம் கூறிக் கொண்டிருந்த போதே இவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பதாகப் புரிந்து கொண்ட ஆயாக்கிழவி அருகே வந்து சேர்ந்தாள். “அடியே பைத்தியக்காரி! எதிர்த்துப் பேசி வாயாலே சீரழியாதே... ஐயாவுக்கு ரொம்ப வேண்டியவருடி?... பார்த்துப் பதனமா நடந்துக்கோ” என்று அந்த இளம் பெண்ணை எச்சரித்துவிட்டுப் போனாள் கிழவி. கிழவி தொலைவுக்குப் போனது உறுதியானதும், முத்துராமலிங்கத்தைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்ட அவள், “என் உடம்பை எத்தனை மணி நேரத்துக்கு வாடகை பேசி வந்திருக்கிறீர்கள்?” - என்று கடுகடுப்பாக அவனிடம் கேட்டாள். முதலில் முத்துராமலிங்கம் திகைத்தான். தன்னைப் பற்றி அவளுக்கு எப்படி விளக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவாறு தட்டுத் தடுமாறி அவளுக்குத் தன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லி விவரித்தான். முதலில் குறுக்கிட்டுக் குறுக்கிட்டுப் பேசிய அவள் அப்புறம் மெல்ல மெல்ல அவன் கூறத் தொடங்கியவற்றில் நம்பிக்கை ஏற்பட்டுப் பொறுமையோடு கேட்கலானாள். அவன் தன்னை முற்றிலும் அறிமுகப்படுத்திக் கூறியதும் அவள் கேட்டாள்: “யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்திற்குள் வரமாட்டார்களே?” “நான் வந்திருக்கிறேன். இன்னும் யோக்கியனாகத்தான் இருக்கிறேன்.” “தொடர்ந்து யோக்கியனாக இருக்க விரும்பினால் தயவு செய்து உடனே இங்கிருந்து போய்விடுங்கள்.” அவள் நிர்த்தாட்சண்யமாகவும், கடுமையாகவும் பேசுவதைப் பார்த்து அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்தப் பாடலை மறுபடி ஒரு தடவை பாடுமாறு அவளை வேண்டினான் அவன். மறுநாள் காலை சொன்னபடியே, ‘நல்லதோர் வீணை’ பாட்டை முழுவதும் அவனுக்காகவே அமுத மழையாகப் பாடிக் காட்டினாள் நளினி. அவனிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசவும் செய்தாள். பேச்சில் விரக்தி தான் தொனித்தது. முத்துராமலிங்கத்தைத் தொடர்ந்து அங்கே தங்க வேண்டாம் என்றும் எச்சரித்தாள் அவள். பதிலுக்கு அவன் சிரித்தான். சின்னி அன்று மாலை வரை விடுதலையாகி வரவே இல்லை. ஆனால் முத்துராமலிங்கத்தின் உணவு உறையுள் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன. இரண்டாம் நாள் நள்ளிரவு கூச்சலும், கூப்பாடுமாகச் சத்தம் கேட்டு அவன் கண் விழித்த போது வாசலில் நான் குரைத்தது. ஒரு பெரிய போலீஸ் வேன் வந்து நின்று கொண்டிருந்தது. கீழ் வீட்டில் போலீஸ் ரெய்டு நடப்பதாகவும், அவன் மாடியிலேயே பதுங்கிக் கொள்ள வேண்டும், என்றும் ஒரு சிறுவன் அவசர அவசரமாக மூச்சிரைக்க மாடிக்கு ஓடி வந்து அவனை எச்சரித்து விட்டுப் போனான். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
தூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|
© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் |