இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!முதல் பாகம் - அடையாளம்

13. நதியும் நாகரிகமும்

     இளையநம்பி கழற்சிங்கனை ஏறிட்டு நோக்கி மறுமொழி கூறினான்: “கழற்சிங்கா! உன் ஒருவனுடைய வில் மட்டுமில்லை, இன்னும் பல்லாயிரம் வில்கள் நாணேற்றப்பட்ட பின்னே நீ நினைக்கிற போர்க்களம் உருவாகும். அது வரை நிதானமும் அடக்கமுமே நமக்கு வேண்டும்; போர்க்களத்தை உருவாக்கி விடுவது சுலபம். ஆனால் தன்னைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொள்ளாத பகுதியிலிருந்து, போர்க்களத்தை உருவாக்கச் சொல்லி, வேண்டும் குரல் முதலில் எழக்கூடாது. நாம் இன்னும் அஞ்சாத வாசத்தில் தான் இருக்கிறோம் என்பதையும் நீ மறந்துவிடாதே.”

     “மறந்து விடவில்லை! என்றாலும் அஞ்சாத வாசமே நம்முடைய முடிவான குறிக்கோளும் பயனுமில்லை. எதிரிகள் நம் கண்காண வளர்ந்து வருகிறார்கள்; உயர்ந்து வருகிறார்கள்.”

     “நம்முடைய எதிரிகள் வளர்வதும் உயர்வதும் கூட நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் தோல்வியடைந்து கீழே விழும் போது குறைந்த உயரத்திலிருந்து விழக்கூடாது. இறுதியில் தோற்றுக் கீழே விழும் போது நிர்மூலமாகி விடுகிற அளவு பெரிய உயரத்திலிருந்து விழுவதற்கு ஏற்ற அத்துணை உயரத்திற்கு அவர்களை விட்டுவிடுவதும் அரச தந்திரங்களில் ஒன்று தான். அடிப்படை இல்லாத வளர்ச்சிகளையும் உயரங்களையும் அவை தாமாகவே விழுகிறவரை காத்திருந்து பார்ப்பதற்கு நமக்குத்தான் ஓரளவு பொறுமை வேண்டும். ‘இந்த உயரத்திற்கு அடிப்படை இல்லை போலிருக்கிறதே’ - என்று நம் எதிரிகளே புரிந்து கொண்டு அடிப்படையை பலப்படுத்தித் திருத்திக் கொள்ள முடிகிறாற் போல் அது குறைவான உயரத்தில் இருக்கும் போது நாம் குறுக்கிட்டு அவர்களை எதிர்த்து விடக்கூடாது.”

     “மிகவும் பல்லாண்டு காலமாக அடிமைப்பட்டு விட்டோம் நாம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு...”

     “நியாயம் தான். அதை நம்மை விட நம்முடைய வழிகாட்டியான பெரியவர் மதுராபதி வித்தகர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரே அடக்கமாகவும், பொறுமையாகவும் இருப்பதிலிருந்து தான் இப்படியும் ஒரு தந்திரம் இருக்கிறது என்பதையே நான் உணர முடிந்தது. காலம் கனிகிற வரை நமது விருப்புக்களை விட வெறுப்புக்களைத் தான் அதிகம் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.”

     இப்படி இளையநம்பி கூறிய விளக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்ததன் காரணமாக அவர்களும் மன அமைதி அடைந்தனர். அதன் பின் மூன்று நான்கு நாழிகை வரை, தான் அறிய வேண்டிய பல செய்திகளை அவர்களிடமிருந்து விளக்கமாகவும் முழுமையாகவும் அறிந்து கொண்டான் அவன். அந்த வேளையில் அழகன் பெருமாள் அவர்களோடு இல்லை. பின்புறம் வையைப் படித்துறையில் நீராடுவதற்குப் போய்விட்டான். அவன் திரும்பி வந்த பின்பு அவனிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்புறம் தான் நீராடச் செல்ல வேண்டும் என்று காத்திருந்தான் இளையநம்பி. அவ்வாறு காத்திருந்த சமயத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பற்றி அவனால் நன்றாக அறிய முடிந்தது.

     யாழுக்கு நரம்பு பின்னிக் கொண்டிருந்தவன் பெயர் காரி என்றும், அவன் யாழ்வல்லுநனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகின்றான் என்றும் தெரிந்தது.

     வாளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தவன் தேனூர் மாந்திரீகன் செங்கணான் என்றும் அவன் மாந்திரீகனாக நகரில் கலந்து பழகி ஒற்றறிகிறான் என்றும் பூத்தொடுத்துக் கொண்டிருந்தவன் பெயர் சாத்தன் என்றும் அவன் மாலை தொடுப்பவனாக அகநகரில் கலந்து ஊடுருவியிருக்கிறான் என்றும் அறிய முடிந்தது. செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தவனை அவனுடைய உருவத்தின் காரணமாகவோ என்னவோ குறளன் என்று அழைத்தார்கள் அங்கிருந்தவர்கள். அவன் சந்தனம் அறைப்பவனாக நகரில் கலந்திருந்தான். நகரில் இருக்கும் பாண்டிய நாட்டு மக்களின் கருத்தைக் களப்பிரர்களுக்கு எதிராகத் திருப்புவதில் கழற்சிங்கன் உட்பட இவர்கள் ஐவரும் நாளுக்கு நாள் வெற்றியடைந்து வருவதாகத் தெரிந்தது.

     மதுரை மாநகர மக்களுக்கு களப்பிரர் ஆட்சியில் வெறுப்பு வளர வளர இவர்கள் செயல்களும் வளர்ந்து கொண்டிருந்தன. களப்பிரர்களிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற உணர்வு நெருப்பாய்க் கனிந்து கொண்டிருந்தது என்பதை இந்த நண்பர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. உபவனத்திலிருந்து அகநகரில் வெள்ளியம்பலத்திற்கு இரகசியமான நிலவறை வழி ஒன்று இருப்பதை இவர்கள் வேண்டும் போதெல்லாம் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும், நகருக்கு உள்ளேயும் புறநகரிலும் சுற்றுப்புறத்துச் சிற்றூர்களிலும் தங்கள் காரியங்களுக்குப் பயன்படும் நண்பர்களைப் பெருக்கியிருந்தார்கள் என்பதையும் கூட இளையநம்பி அறிந்து கொண்டான். கோநகருக்கும் பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையும் ஆசியும் பெற்ற சிலர் இப்படி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கழற்சிங்கன் சொன்னான்.

     அழகன் பெருமாள் நீராடி விட்டு வந்ததும் பொதுவாக இளையநம்பிக்கு அவன் ஓர் எச்சரிக்கை செய்தான்:

     “ஐயா! வழக்கமாக இந்த உபவனப் பகுதிக்குக் களப்பிரர்களின் பூதபயங்கரப் படையினரோ, பிறரோ சோதனைக்கு வருவதில்லை. எதற்கும் புதியவராகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் பாண்டிய நாட்டின் தொலை தூரத்து ஊரிலிருந்து வரும் ஒருவருடைய சாயல் உங்களிடம் தென்படுகிறது. யாராவது ஐயப்பாட்டோடு வினவினால், ‘நான் அழகன் பெருமாள் மாறனின் உறவினன். அவிட்ட நாள் விழாப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொள்ளுவது உங்களுக்கு நல்லது.”

     “அப்படியே சொல்லிக் கொள்வேன்! இந்தச் சூழ்நிலை பழகுகிற வரை சில நாட்களுக்கு அப்படிக் கூறிக் கொள்ள வேண்டியது அவசியம் தான் அழகன் பெருமாள்” என்று இளையநம்பியும் அவன் கூறியதில் இருந்த நல்லெண்ணத்தை ஒப்புக் கொண்டு இணங்கினான். நீராடச் செல்லுவதற்கு முன் இளையநம்பி அழகன் பெருமாளிடம் கேட்டான்:

     “கொற்கைத் துறைமுகத்துக்கு வரவேண்டிய சோனகர் நாட்டுக் குதிரைக் கப்பல் என்று கரையடையப் போகிறது? கப்பலில் இருந்து குதிரைகளைத் தலைநகருக்குக் கொண்டு வர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்? எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள்?”

     அழகன் பெருமாள் இதற்கு உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் பின், “நீங்களும் நீராடிப் பசியாறிய பின் அவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம். இரவெல்லாம் வெள்ளியம்பலத்தில் காத்துக் கிடந்தும், நிலவறையில் நடந்தும் களைத்திருக்கிறீர்கள். முதலில் நீராடிப் பசியாறுங்கள்” என்றான் அவன்.

     இளையநம்பி அந்த மண்டபத்தின் பின் பகுதிக்குச் சென்று வையைப் படித்துறையில் இறங்கிய போது மண்டபப் புறக்கடையில் இருந்த தாழம்புதரை ஒட்டிச் சிறிய படகு ஒன்று கட்டப்பட்டிருந்ததைக் கண்டான்.

     அந்த அதிகாலை வேளையில் வையை மிக அழகாகத் தோன்றினாள். நீர் பாயும் ஓசை நல்ல குடிப் பிறப்புள்ள பெண் ஒருத்தி அடக்கம் மீறாமல் நாணி நகைப்பது போல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் மறு கரைவரை தெரிந்த அந்த நீர்ப்பரப்பைக் காண்பதில் அளவற்ற ஆனந்தத்தை உணர முடிந்தது. மதுரை மாநகரில் புகழ்பெற்ற திருமருத முன் துறை அருகில் இருந்ததாலோ என்னவோ அந்தப் பகுதியின் வையைக் கரை சொல்ல முடியாத வசீகரமும் வனப்பும் நிறைந்து காட்சியளித்தது.

     ‘பாண்டிய மரபின் கீர்த்தி மிக்க பல அரசர்களின் காலத்தை எல்லாம் இதன் கரைகள் கண்டிருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நின்று மணக்கும் தமிழ்ப் புலவர்களின் சங்கங்களை இதன் கரைகள் பெற்றிருந்தன. ஓர் இணையற்ற நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கு இந்த நதியும் ஒரு சாட்சி’ என்று நெஞ்சுருக நினைத்த போது அந்த நாகரிகத்தை இன்று அந்நியர்களாகிய களப்பிரர்கள் அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்னும் நிகழ்கால உண்மையும் சேர்ந்தே இளையநம்பிக்கு நினைவு வந்தது. அந்த விநாடிகளில் மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்கப் பாதாதி கேச பரியந்தம் ஒரு புனிதமான சிலிர்ப்பை உணர்ந்தான் அவன். நெஞ்சில் மூல நெருப்பாக ஏதோ ஒரு கனல் சூடேறினாற் போலிருந்தது.

     தனி மண் மட்டுமே ஒரு நாகரிகத்தையோ வரலாற்றையோ படைத்து விட முடியாது. அந்த மண்ணில் ஓடும் நதியும் விளையும் பொருள்களும், அந்த மண்ணையும் நீரையும் கலந்து வளரும் பயிர்களும், அவற்றால் உயிர் வாழும் மக்களும் சேர்ந்தே ஒரு நாகரிகத்தைப் படைக்கிறார்கள்.

     நீரில்லாத மண்ணுக்கு மணமில்லை. நாகரிகமில்லை. அந்த வகையில் பல்லாயிரங்காலமாகப் பாண்டிய நாட்டு நாகரிகத்தை செவிலித் தாயாக இருந்து புரந்து வரும் இந்த நதியை மார்பளவு நீரில் நின்று கைகூப்பித் தொழ வேண்டும் போல் ஒரு பக்தி உணர்வு அவனுள் சுரந்தது. அவன் தொழுதான், போற்றினான்.

     ‘சேரர் நாகரிகத்தைப் பேரியாறும்*, (* இன்று பெரியாறு) சோழர் நாகரிகத்தைக் காவிரியும் உருவாக்கியது போல் எங்கள் தமிழகப் பாண்டி நாகரிகத்தின் தாயாகிய வையையே! உன் அலைக்கரங்களால் நீ என்னைத் தழுவும் போது தாயின் மடியில் குழந்தை போல் நான் தனியானதோர் இன்பத்தை அடைகிறேன்’ - என்று நினைத்தான் அவன்.

     நீராடி வந்த இளைய நம்பிக்கு மாற்றுடையாக மதுரையின் கைவினைத் திறம் வாய்ந்த காருகவினைஞர்* (* நெசவாளிகள்) நெய்த ஆடைகளை அளித்தான் அழகன் பெருமாள். பாண்டி நாட்டின் புகழ் பெற்ற உணவாகிய ஆவியில் வெந்த தீஞ்சுவைப் பிட்டும், உறைந்த நெய் போல் சுவையுடையதாகிய திருநெய்க்கதலி என்னும் வாழை விசேடத்தைச் சேர்ந்த கதலிக்கனிகளையும் உண்ணக் கொடுத்து அழகன் பெருமாளும் நண்பர்களும் இளையநம்பியை உபசரித்தனர். அவன் பசியாறிய பின் அவர்களும் பசியாறினர். சிறிது நேரத்தில் அழகன் பெருமாளையும், செம்பஞ்சுக் குழம்பு குழைக்கும் குறளனையும் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு நகருக்குள் புறப்பட்டுப் போய்விட்டனர்.

     அழகன் பெருமாளிடம் மீண்டும் குதிரைக் கப்பல் துறையடைவது பற்றிய விவரங்களைக் கேட்டான் இளையநம்பி.

     “போகலாம்! அதைத் தெரிந்து கொள்ளவே இப்போது நாம் புறப்படுகிறோம்” என்று கூறித் தோளில் பூக்குடலையோடும் கையில் செம்பஞ்சுக் குழம்பு நிரம்பிய ஒரு பேழையோடும் ஆயத்தமாக இருந்த குறளனையும் உடன் அழைத்துக் கொண்டு எழுந்தான் அழகன் பெருமாள்.

     “இப்போது நாம் எங்கே போகிறோம் அழகன் பெருமாள்?”

     “கணிகை மாளிகைக்கு...”

     அவர்களோடு இளையநம்பியும் உடனெழுந்து புறப்பட்டான் என்றாலும் ‘ஓர் அரசியல் அந்தரங்கம் பற்றிய செய்திகளை அழகின் மயக்க உலகமாகிய கணிகையர் மாளிகையில் இருந்து எப்படி அறியப் போகிறான் இவன்?’ - என்ற வினாவே இளையநம்பியின் உள்ளத்தில் நிறைந்திருந்தது அப்போது.


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழக மகளிர்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

அள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

தமிழகக் கோயில்கள் - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

குறிஞ்சி மலர்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

இலக்குகள்!
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

தனிமனித வளர்ச்சி விதிகள் 15
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

டேவிட்டும் கோலியாத்தும்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

ஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பயண சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

மொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

புண்ணியம் தேடுவோமே..!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)