இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Suresh Nagarajan (11-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 292
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

6. கடுங்கோன் ஆகுக!

     இளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஓலை கோபத்தோடும் தாபத் தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும் தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும் கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில் அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரியமுடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின.

     “திருக்கானப்பேர் நம்பிக்கு அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள் இந்தப் பேதையை நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும் நிரந்தரமாகவும் நினைவு வைத்துப் போற்றுவது இப் பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப்பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு நாளைக் காலையில் பிரம்மமுகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும் தாயும் அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனிமேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று தங்களைப்பற்றிப்பேச முடியாது. தாயிடம் பேசினால் அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால் நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகிவிட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால் வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப்பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால் வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக்கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்துவிட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும் கோபமுமே என்னைக் கொல்கின்றன.

     என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள் தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமை யாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப்பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடிசூடி அரியணை ஏறும் காலத்தில் இந்தச் சிறப்புப்பெயர்களும் குடிப்பெயர்களும் அவர்கள் இயற்பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும் கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடிசூட்டு விழாக்காலத்துப் பெயர் மங்கலமாக எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால் ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே இப்படிச் சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா?’ என்பதாக உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும்போது அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில் இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால் அதில் பிழை என்ன? எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது? என்னைப் போல் ஏழைகளும், பேதைகளும் அன்பைப் பெறுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களா?

     நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர்தான் மென்மையான உணர்வுகளே நெகிழாத கருங்கல்லைப் போன்றவர் என்றால் தாங்களுமா அப்படி இருக்க வேண்டும்? அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய்விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்தவரை தங்கள் அன்பும், பிரியமும்கூட இப்படி வாடிப் புலர்ந்து போய்விடுமோ என்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லாவிதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற்படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா! இங்கே இந்தக் காராளர் பெருமாளிகையில் தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால் அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ அப்படிக் கவனித்துக் கொள்கிற வர்களோடு அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்’ - என்பதாகக் கொல்லன் என்னிடம் சொல்லியபோது, கோநகரத்தில் உங்களை அப்படி அருகிருந்து பேணி உபசரிப்பவர்கள் யாரோ அவர்கள் மேல் எனக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உடனே, நான் பொறுக்க முடியாத கோபத்தோடு,

     ‘இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே! இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பதுபோல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன் ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை மிக மிகத் தவறானது’ - என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள்? மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா? இங்கு ஒருத்தி தங்களை நினைத்துத் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதாவது தங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா?

     தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு எப்போது மீண்டும் திருமோகூர் திரும்புவோம் என்பதைத் தந்தையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் தொழ வேண்டிய தெய்வம் மதுரையில் இருக்கிறது. என் பெற்றோர் வேறு எங்கேயோ இருக்கும் பலப்பல தெய்வங்களைத் தொழுவதற்காக என்னை அழைத்துப் போகிறார்கள். என்னுடைய தெய்வத்தின் கடுங்கோன்மை தவிர்த்து அதன் அருளை என்றைக்கு நான் அடையப்போகிறேனோ தெரிய வில்லை. தங்களைக் கடுங்கோன் என்று கூறியதற்காகப் பெருந்தன்மையோடு இந்த எளியவளைப் பொறுத்தருள வேண்டும். அப்படி ஒரு சாபமே கொடுக்கிற அளவிற்குத் தாங்கள் என்னைத் தவிக்க விட்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் தங்களுக்கு இந்தப் பேதை சூட்டியிருக்கும் மென்மையும் இங்கிதமில்லாத புதிய பெயர் குறிப்பிடுமே ஒழிய அகங்காரத்தைக் குறிப்பிடாது. என் அகங்காரங்களை நான் உங்களிடம் பறிகொடுத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள். இவ்வளவில் இப்போது தங்கள் பாதாரவிந்தங்களில் மானசீகமாக வீழ்ந்து வணங்கி இந்த மடலை முடிக்கிறேன். முடிவாக ஒரு வார்த்தை-நானும் பெற்றோர்களும் தீர்த்த யாத்திரை முடித்து திரும்பும்போது நீங்கள் வெற்றிவாகை சூடி நிற்கப் போகிறீர்கள்! நாங்கள் திரும்பி வந்து அதைக் காணத்தான் போகிறோம்.”

     - என்பதாக முடிந்திருந்தது அவள் மடல். பல ஓலைகளில் எழுதி இணைத்து சிறிய சுவடியாகவே ஆக்கி அனுப்பியிருந்தாள் செல்வப் பூங்கோதை, இந்த மடல் இளையநம்பியின் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்திருந்தது.

     ‘பெண்ணே நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப்போல் என்மேல் அன்பு செய்யும் பெண்களிடம் நான் ஒருபோதும் கடுங்கோனாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளமாட்டேன்’ என்று அந்த ஓலையைப் படித்த உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.

     ஓலையைப் படித்து முடித்த இன்பக் கிளர்ச்சி களிலிருந்து அவன் முழுமையாக விடுபடுவதற்குள் கொல்லன் விரைந்து வந்து மேலும் ஒரு செய்தியைக் கூறினான்:

     “ஐயா மற்றொரு நல்ல செய்தியைத் தூதன் இப்போதுதான் கொண்டு வந்தான். நம்முடைய இந்த அணிவகுப்புக்கும், ஏற்பாட்டிற்கும் சாதகமான ஒரு செயல் வட திசையில் இப்போது நடந்திருக்கிறது.”


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.200.00வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00பெரு வாழ்வு
இருப்பு உள்ளது
ரூ.180.00நாட்டுக் கணக்கு – 2
இருப்பு உள்ளது
ரூ.260.00மருந்தில்லா மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00பண்டிகை கால சமையல்
இருப்பு உள்ளது
ரூ.155.00ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00வெட்கம் விட்டுப் பேசலாம்
இருப்பு உள்ளது
ரூ.130.00என்.எஸ்.கே : கலைவாணரின் கதை
இருப்பு உள்ளது
ரூ.120.00சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.225.00எளிய தமிழில் எக்ஸெல்
இருப்பு உள்ளது
ரூ.100.00நேர் நேர் தேமா
இருப்பு உள்ளது
ரூ.170.00எலான் மஸ்க்
இருப்பு உள்ளது
ரூ.140.00கற்சுவர்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00ஜூலியஸ் சீஸர்
இருப்பு உள்ளது
ரூ.200.00யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்?
இருப்பு உள்ளது
ரூ.160.00முசோலினி
இருப்பு உள்ளது
ரூ.110.00பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.135.00உச்சம் தொட
இருப்பு உள்ளது
ரூ.180.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)