|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
31. உழைப்பு! உழைப்பு!
உழுது பழகாத கைகள் தொடக்கத்தில் வருந்தின. மலைப்பு அடைந்தன. அதைரியமோ, சோர்வோ அடைந்து விடாமல், பொறுமையாக வேலை செய்தான் அழகியநம்பி. ஆற்றுப் படுகையாதலால் தரை அதிகமாக இறுகியிருக்கவில்லை. கலப்பையின் கொழு நுனி சுலபமாகவே மண்ணில் நுழைந்து கீறிக்கொண்டு போயிற்று. நிலா நாட்களில் இரவிலும் ஏர் பூட்டி உழுதான். மேழியைப் பிடித்து அவன் கைகள் சிவந்து கன்றின. கால்கள் நடந்து அலுத்தன.
ஊரை மறந்து, வீட்டை மறந்து, தன்னையே மறந்து அந்த நிலமே கதியென்று கிடந்தான். கண்ணை இமைகாப்பது போல் அந்த நிலத்தைக் காத்து வந்தான். இந்த ஒன்றரை மாதத்திற்குள் அவன் உடல் கறுத்து அழகிழந்து போயிருந்தது. தசைகள் இறுகி உழைப்புக்கே உரிய முரட்டுத் தன்மை ஏறியிருந்தன. சட்டை, பனியன், போட்டுக் கொண்டு சுற்றியது மறந்தே போய்விட்டது அவனுக்கு. அரையில் அழுக்கடைந்த நாலுமுழம் வேட்டியோடும், திறந்த மார்போடும், வெயிலென்றும், பனியென்றும் பாராமல் காத்துக் கொண்டு கிடந்தான் அவன். மாடு கட்டிக் கொள்வதற்கும், வண்டி நிறுத்திக் கொள்வதற்கும், விவசாயக் கருவிகளை வைத்துக் கொள்வதற்கும், - அந்த அருவிக் கரையில் ஒரு கீற்றுக் குடிசை வேய்ந்து கொண்டான். நாள் செல்லச் செல்ல அவன் ஊருக்குள் வருவதே குறைந்து விட்டது. தென்காசியில் வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததை அப்படியே வீட்டில் கொடுத்து விட்டான். வேளாவேளைக்குப் படுகை நிலத்தைத் தேடிக் கொண்டு உணவு வந்தது அவனுக்கு. வள்ளியம்மை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள். கிழக்கு வெளுக்கும் நேரத்தில் நிலத்தின் நடுவிலிருக்கும் பரண் மேல் ஏறி நின்று கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நான்கு புறமும் ஒரே பசுமைப் பரப்பாகத் தெரிந்த தனது படுகையைப் பார்க்கும் போதெல்லாம் அவன் உள்ளம் பூரிக்கும். நம்பிக்கை பொங்கும். உழைத்த தோள்கள் உயர்ந்து விம்மும். எத்தனையோ காலமாக ஆற்று வணடலைத் தேக்கிப் படியவைத்துக் கொண்டு மேடாகியிருந்த அந்தக் குறிஞ்சியாற்றுப் படுகை தன் நிலவளத்தையெல்லாம் அவன் உழைப்போடு சேர்த்து ஒத்துழைக்கச் செய்திருந்தது. பயிர்களின் எழுச்சியில், புடைத்து மேலெழும் பசுமையின் கொழிப்பில், அந்த ஒத்துழைப்பைக் காண முடிந்தது. ஒருநாள் அருணோதயத்தில் அவன் அப்படிப் பரண் மேல் நின்று கொண்டிருந்த போது வட்டிக் கடைப் பன்னீர்ச்செல்வமும் அவருடைய ஆட்களும் அந்தப் பாதையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மலையில் விறகு வெட்டி கரி மூட்டைக்காகத் தீ மூட்டம் போடுவதற்கு அவர் போய்க் கொண்டிருக்கிறாரென்று அவன் நினைத்துக் கொண்டான். வழக்கமாக ஒன்றரை மாதம், இரண்டு மாதங்களுக்கொரு முறை அந்த வழியாக அவர் மலைக்குப் போவதுண்டு. இந்த முறை இதுவரை காணாத புதுமை அந்தப் படுகைப் பரப்பில் தெரிவதைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கல்லும் முள்ளும் சிதறிக் கிடந்த மேடு பள்ளமான தரை வளமான காய்கறித் தோட்டமாக மாறியிருப்பதைப் பார்த்து வியந்தார். "அந்தக் கொழும்புப் பிள்ளையாண்டான் இராப்பகலாக உழைத்து மண்ணைப் பொன்னாக்கி விட்டாருங்க..." என்று அவரோடு வந்திருந்த கூலியாட்களில் ஒருவன் கூறினான். சாம்பல் நிறத்தில் 'கொழுகொழு'வென்று வளர்ந்த முட்டைக்கோஸ் செடிகள், பூவும், பலனுமாகத் தக்காளிச் செடிகள், வளமாக வளர்ந்த சீமை வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, - எல்லாப் பயிர்களையும் பார்த்த போது பன்னீர்ச்செல்வத்தின் மனத்தில் பேராசை எழுந்தது. மனத்தையும், கண்களையும் அடக்க முடியாமல் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் தெரியும் அந்தப் பசுமையை மீண்டும் பார்த்துக் கொண்டே மேலே நடந்து செல்லத் தோன்றாது தயங்கி நின்றார் அவர். பரண்மேல் அழகியநம்பி நின்று கொண்டிருப்பதையும் அவர் கண்டார். மனத்திற்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக, நின்று கொண்டிருந்த வரப்பின் புல் தரையின் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார். "அதோ பரண்மேல் நிற்கிறான் அந்தப் பையன்; போய் நான் கூப்பிடுகிறேனென்று கூப்பிட்டுக் கொண்டு வா." - என்று தம் ஆட்களில் ஒருவனைத் துரத்தினார். அழகியநம்பி தக்காளிச் செடிகளுக்குக் கொத்தி விடுவதற்காக அப்போதுதான் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பரணிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். பன்னீர்ச்செல்வம் அனுப்பிய ஆள், "இந்தாங்க; தம்பீ! உங்களை ஐயா கூப்பிடுகிறார்." - என்று அவனருகே வந்து சொன்னான். "வருகிறேன் போ." - என்று சொல்லிவிட்டு மண்வெட்டியோடு அவனுக்குப் பின்னால் நடந்தான் அழகியநம்பி. "வா தம்பீ! உன் திறமையைப் பார்த்தேன். எனக்கு கண் கூசுகிறது. இரண்டரை மாதத்துக்கு முன்னாலே வெட்ட வெளியாய்க் கிடந்த இடத்தை இப்படிப் பசுமை குலுங்கச் செய்துவிட்டாயே; நீ சாமர்த்தியக்காரன் தான் அப்பா. நான் கூட ஆரம்பத்திலே ஏதோ மட்டமாக நினைத்தேன். பைத்தியகாரத்தனமாக நீ வீணுக்கு உழைக்கிறாய் என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது உன் உழைப்பின் அருமை." "முகஸ்துதி, புகழ்ச்சி, இவையெல்லாம் இப்போது எனக்குத் தேவை இல்லை. கூப்பிட்டனுப்பிய காரியத்தை முதலில் சொல்லுங்கள். எனக்கு உங்களோடு நின்று பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. வேலை இருக்கிறது." - என்று அவரை இடைமறித்தான் அழகியநம்பி. "ஆளே மாறிப் போய்விட்டாய்! உன்னைப் பார்த்தால் பழைய அழகியநம்பி மாதிரியே தெரியவில்லையே?" - அவன் இடைமறித்துக் கூறியதையும் அவனுடைய ஆத்திரத்தையும் அவசரத்தையும் பொருட்படுத்தாதவர் போலப் பேசிக் கொண்டே அவன் தோற்றத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டுச் சிரித்தார் அவர். அழகியநம்பி முகத்தைச் சுளித்தான். பன்னீர்ச்செல்வம் தம் பக்கத்தில் இருந்த ஆட்களுக்கு ஏதோ ஜாடை காட்டினார். உடனே அவர்கள் தூரத்தில் விலகிப் போய் நின்று கொண்டார்கள். "உட்கார் தம்பீ!" அவர் அவனிடம் ஏதோ அந்தரங்க விஷயம் பேசப் போகிறவரைப் போல் பக்கத்தில் உட்காரச் சொல்லி உபசரித்தார். "சும்மா சொல்லுங்கள். எனக்கு உட்கார நேரமில்லை" - "சொன்னால் உனக்குக் கோபம் வராதே?" "சுற்றி வளைக்காதீர்கள். எனக்கு நேரம் வீணாகிறது. நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்" - அவனுடைய குரலில் ஆத்திரம் ஏறியிருந்தது. அவர் கூறியதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு இரத்தம் கொதித்தது. "என்ன சொன்னீர்?" - என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு மண்வெட்டியை ஓங்கிவிட்டான். பன்னீர்ச்செல்வம் அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே எழுந்து விலகி நின்றார். "புத்திகெட்ட மனிதரே! உம்மிடம் கடன் வாங்கிவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா? வாய் கூசாமல் எப்படி ஐயா கேட்டீர்?" - என்று கூச்சலிட்டான் அவன். "கடன்காரப் பயலுக்கு ரோஷத்தைப் பார்!" - என்று அடிபட்ட நாய் போல் முணுமுணுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார் பன்னீர்ச்செல்வம். "அயோக்கியன்! விறகுக்கும், கரிக்குமாக மலையை மொட்டையடிப்பது போல் மனிதர்களையும் மொட்டையடிக்கப் பார்க்கிறான்." - என்று அவர் காதில் கேட்கும்படி இரைந்தே சொன்னான் அழகியநம்பி. அவர் போன மறுகணமே ஒரு திருஷ்டிப் பொம்மை கட்டி வயலுக்கு நடுவே நிறுத்தினான். இன்னொரு நாள் மணியக்கார நாராயணபிள்ளை, புலவர் ஆறுமுகம், முன்சீப் புன்னைவனம், கந்தப்பன், - எல்லோரும் அருவியில் குளிப்பதற்காக மலையடிவாரத்துக்கு வந்திருந்தார்கள். குளித்துவிட்டுத் திரும்பிப் போவதற்கு முன் அழகியநம்பியின் காய்கறித் தோட்டத்தைப் பார்க்க வந்தனர். "என்ன ஐயா புன்னைவனம்? ஏன் இப்படி மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறீர்? அன்றைக்கு உம்மிடமும், என்னிடமும் வந்து யோசனை கேட்டபோது கேலி செய்தோமே? இன்றைக்குப் பார்த்தீரா? புழுதி மண்ணாய்க் கிடந்த ஆற்றுப்படுகையைப் பொன் விளையும் பூமியாக்கி விட்டானே?" - என்று புன்னைவனத்தை நோக்கிக் கூறினார் நாராயணபிள்ளை. "என்ன இருந்தாலும் படித்தவன் மூளையே தனி. எவ்வளவு அருமையாக யோசித்துத் திட்டமாக வேலை செய்திருக்கிறான் பார்த்தீர்களா. இத்தனை வருஷமாக இந்த ஆற்றுப் படுகையை நாம் பார்த்துக் கொண்டு தானே இருந்தோம்? நம்மில் ஒருத்தனுக்காவது இப்படிச் செய்ய வேண்டுமென்று புத்தியில் பட்டதா?" - என்றார் புலவர் ஆறுமுகம். "பையன் கூடிய சீக்கிரம் இதில் முன்னுக்கு வந்துவிடுவான் போலிருக்கிறதே!" - என்றார் புன்னைவனம். கந்தப்பன் அந்தப் பசுமை வளத்தைப் பார்த்துப் பேச வாயின்றி நடந்து வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பாய்கிற வாய்க்காலில் மண் சரியாமல் செப்பனிட்டுக் கொண்டிருந்த அழகியநம்பி வயலுக்குள் கூட்டமாகப் பேச்சுக்குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தான். அவர்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் எதிர்கொண்டு வரவேற்று, "வாருங்கள்." - என்று கூறிப் புன்னகை செய்தான். "என்னப்பா; அழகியநம்பீ! பெரிய பண்ணைக்கு முதலாளியாக மாறிவிட்டாற் போல் இருக்கிறதே?" - என்று புலவர் ஆறுமுகம் சிரித்துக் கொண்டே கேட்டார். "நீங்கள் சொல்வது தவறு! இன்றும், நாளையும், என்றுமே ஒரு சாதாரண உழைப்பாளிதான் நான். எனக்கென்று தனிப் பெருமை எதுவும் இல்லை. எல்லாம் இந்த மண்ணின் பெருமை!" என்று விநயமாக அவர்களுக்கு அவன் பதில் சொன்னான். "அப்படிச் சொல்லிவிட முடியுமா அப்பா? ஊரெல்லாம் உன்னைக் கிறுக்கனாக நினைத்துக் கேலி செய்தபோது அலுக்காமல் சலிக்காமல் இந்த மண்ணில் நீதானே உழைத்தாய்?" "எனக்கு நம்பிக்கை இருந்தது. வைராக்கியம் இருந்தது. உழைத்தேன்." - என்று பெருமையாகச் சொன்னான் அவன். சிறிது நேரம் அவனோடு அளவளாவிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். |
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
நான்மணிமாலை நூல்கள் :
திருவாரூர் நான்மணிமாலை |
தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|
© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் |