11 மன்றக்குடி மகபதி அடிகளார் - பள்ளியின் இலக்கிய மன்றக் கூட்டத்தில் - முதல் வரிசையில் மேடைக்கு எதிராக அமர்ந்திருக்கும் ஆசிரியர்களிடையே தன்னைத் தேடக் கூடும் என்று தோன்றியது சுதர்சனனுக்கு. பழகிய தன் முகத்தை ஒவ்வொரு கணமும் அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தின் இடையே துழாவிக் கொண்டிருக்கும் என்பது வக்கீல் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் அவனுக்குக் குறிப்பாக ஞாபகம் இருந்தது.
“நீரும் நாயுடு! ஸ்கூல் நடத்தறவாளும் நாயுடு. அப்படியிருந்தும் உங்களுக்குள்ளே எப்பிடி இந்தத் தகராறெல்லாம் வந்தது?” “தகராறு வர்ரதுக்குக் காரணமான எந்தத் தப்பையும் நான் பண்ணலே சார்! இது அதிகார ஆணவத்துக்கும், ஒரு தனிமனிதனின் சுயமரியாதைக்கும் நடக்கிற யுத்தம். இதிலே என்னை அறவே நசுக்கப் பார்க்கிறாங்க.” “இதுக்குப் போயி அதிகார ஆணவம் - சுயமரியாதை அது இதுன்னு என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றேளே?” அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு வக்கீல் மிரளுவது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதாரணமாக எல்லாரும் கேட்கிற - பேசுகிற வழக்கமான நூறு இருநூறு வார்த்தைகளை அசட்டுச் சிரிப்போடு உபயோகிக்கிற வரை ஒருவனைப் பற்றிப் பேசாமல் விட்டு விடுவதும், அசாதாரணமான வார்த்தைகளை உபயோகிக்கிறவனிடம் பயமும் சந்தேகமும் கொள்வதும் இந்திய மத்தியதர வர்க்கத்தில் இயல்பாக இருந்து வருகிறது என்பது அவனுக்குப் புரிந்த விஷயம்தான். ராமாநுஜாச்சாரி ஒரு மத்தியதரவர்க்கத்து வக்கீல். நல்லது, கெட்டது என்று முன்னோர்கள் நியமித்தவற்றை அப்படியே தொடர்ந்து நல்லது, கெட்டதாக ஏற்றுக் கொள்வதும், விதி, அதிர்ஷ்டம், கடவுள், தெய்வா தினம் எல்லாவற்றையும் கண்ணைமூடிக் கொண்டு நம்புவ துமாக உள்ள ஒரு மனிதர் அவர் என்ப்து சுதர்சனனுக்குப் புரிந்தது. காரண காரியங்களோடு சிந்தித்து நியாயங்களை முடிவு செய்வதை விட ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்ட நியாயங்களை அப்படியே ஏற்கிறவராக ராமாநுஜாச்சாரி இருந்தார். அவருடைய அலுவலக அறையில் தடிமன் தடிமனான சட்டப்புத்தகங்கள், லா ஜர்னல் பைண்டிங்குகள், சுவரை மறைக்கும் புத்தக அலமாரிகள் தவிர வேங்கடாசலபதி படம் சாயிபாபா படம், நன்றிமலை நாகானந்த சுவாமிகள் படம், என்று நிறையச் சாமியார்கள் படங்கள் வேறு இருந்தன. “தெய்வாநுக்கிரஹம் இருந்தாலொழிய, இந்தக் கேஸிலே நீர் ஜெயிக்க முடியாது. நமக்கு நல்ல வேளை லபிச்சிருந்தா எல்லாம் நன்னா முடியும்! எல்லாம் உம்ம ராசியைப் பொறுத்த விஷயம்.” சுதர்சனன் உள்ளூறச் சிசித்துக் கொண்டான். தன்னம்பிக்கையிலும், உழைப்பிலும், முயற்சியிலும் அறவே பற்று இல்லாமல் வேளை, ராசி, தெய்வாநுக்ரஹம் என்று அடிக்கடி சொல்லும் படித்த வக்கீல் ஆயிரம் வருஷம் பின் தங்கி வாழ்வதாக அவனுக்குத் தோன்றியது. படித்தவர்கள் எல்லாம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் நெட்டுருச் செய்தவர்களாக இருப்பதுதான் நாட்டின் அபாய நிலை என்று எண்ணினான் அவன். அப்போது அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு இழையோடுவதைப் பார்த்து விட்ட வக்கீல் ராமாநுஜாச்சாரி, “என்ன சிரிக்கிறேள்? மனசிலே படறதைச் சொல்லுங்கோ. நான் சொன்னது சரிதானே? கேஸ் ஜெயிக்கிறதும் ஜெயிக்காததும் உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம்தான்” -என்று மறுபடியும் சொன்னார். “யாருங்க? தெரியாதே?” “ஆதர்சபுரம் வட்டச் செயலாளரைத் தெரியாமலா இங்கே இத்தனை நாளா இருக்கேள்?” “என்ன செய்யிறது? தெரிஞ்சுக்காமலே இத்தினிநாள் இருந்துட்டேனுங்களே...” “அதனாலே பரவாயில்லே, இனிமேலாவது தெரிஞ்சுக் குங்கோ! அவர் பெரிய உபகாரி. பார்த்துப் பண்ணிக்குடுப்பார். லாஸ்ட் இயர் இப்பிடித்தான் என் டாட்டருக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரொம்ப சிரமப்பட்டுது. மலரெழிலன் சார் இல்லேன்னா அது நடந்தே இருக்காது.” “இப்போ நான் வந்திருக்கிற காரியத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? கல்வி இலாகா சட்டம் கோர்ட் முறைகள் எல்லாம் தெரிந்த ஒருத்தர் கிட்டத்தான் இதைப் பற்றி நான் விசாரிக்க முடியும். எனக்கு வேறே இடத்திலே வேலை கிடைக்காதுங்கிறது இல்லே. இந்த ஊர்லே இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து வேலையை விட்டிட்டுப் போறதுக்காக நான் கவலைப்படவும் இல்லே. அநாவசியமா என் பேரைக் கெடுக்கணும்கிற நோக்கத்திலே, ஏதோ ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்டினாலே’ என்னை இந்த ஸ்கூலை விட்டுத் துரத்தறதாச் சொல்றாங்க. அதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன். ‘காண்டக்ட்’னாலே என்னன்னு தெரியாதவங்க தான் என்மேலே இந்தக் குற்றத்தைச் சுமத்தறாங்க.” “அதைத்தான் நீங்க இங்கே வந்ததிலேருந்து திரும்பத் திரும்பச் சொல்றேளே! எனக்குப் புரியாம இல்லே - நன்னாப் புரியறது, மலரெழிலன் மனசு வச்சார்னா எல்லாத்தையும் கமுக்கமா செட்ரைட் பண்ணிடுவார். அவரை இப்பவே இங்கே வரச் சொல்லட்டுமா? மூணாவது வீட்டிலேதான் குடியிருக்கார்.” “நீங்க சொல்றதே எனக்கொண்ணும் புரியலே. ஆனா நான் யாரிட்டவும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க விரும்பலே.” “நீங்க ஒண்ணும் பண்ணிக்க வேண்டாம். எல்லாம் தானே சரியாகும். மலரெழிலன்தான் எஜுகேஷன் டிபார்ட் மெண்ட்லே ஆல் இன் ஆல்! இதோ நானே அவரைக் கூப்பிட்டனுப்பறேனே?” வக்கீல் ராமாநுஜாச்சாரி உடனே யாரிடமோ சொல்லி அனுப்பினார். பரமபக்தரான வக்கீல் ராமாநுஜாச்சாரிக்கும் பகுத்தறிவுவாதியான வட்டச் செயலாளர் மணவை மலரெழிலனுக்கும் எப்படி எதனால் நட்பு இருக்கமுடியும் என்பதைச் சுதர்சனனால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. கொள்கைகளுக்கும் நட்புக்கும் தொடர்பு வைத்து விருப்பு வெறுப்புக் காட்டாத நாகரிக நட்பாகவும் அது தெரியவில்லை. பக்தியின் பெயராலும் பரமார்த்திக் நிலைகளின் பெயராலும் உருவான பழைய வர்க்கங்களும், பேதங்களும் மறைவதற்குப் பதிலாகப் போலியான - கொள்கை பலமில்லாத ஓர் அசட்டுப் பகுத்தறிவு மாயையினால் புதிய வர்க்க பேதங்கள் கிளைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. புதிய பேதங்களிலும் பண ஆதிக்கமும் செல்வாக்கு ஆதிக்கமுமே பின்னணியாக நின்றன. பத்து நிமிஷத்தில் மணவை மலரெழிலன் வந்து சேர்ந்தார். செண்ட் வாசனை அவரை முந்திக் கொண்டு வந்தது. டெரி காட்டனில் ஒரு முழுக்கைச் சட்டையும் அதற்குமேல் கைத்தறியில் இருவண்ணக் கரையிட்ட துண்டுமாக அவர் தோன்றினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் வக்கீல் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. இப்படி அரசியல்வாதிகளுக்கு ஒரு வசதி. அவசர அவசரமாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்றால் கூட உடனிருக்கும் இந்தப் பத்துப் பன்னிரண்டு பேரையே உட்கார வைத்து அவர்களையே கை, தட்டச் சொல்லி விடலாம். கையோடு ஹாண்டியாக ஒரு செட் ஆடியன்ஸையே கூட வைத்துக் கொள்ளும் வசதி திறமை எல்லாம் மணவை மலரெழிலன் போன்ற பேர்வழிகளுக்கு இருந்தது. மிட்டா, மிராசுகள், ஜமீன்தார், நிலச்சுவான்தார்கள் எல்லாம் கொள்கை அளவில் மேலோட்டமாக ஒழிக்கப்பட்டு விட்டது போல் தோன்றினாலும், புதிய பெயர்களில் புதிய நடை உடைகளில் அவர்கள் நாட்டில் தோன்றி உலாவிக் கொண்டிருப்பது எதிரில் கண்கூடாகத் தெரிந்தது. “வாங்கோ! வாங்கோ!” - என்று வாயெல்லாம் பல்லாக மலர்ந்து எழுந்து நின்று மலரெழிலனை வரவேற்றார் ராமாநுஜாச்சாரியார். சுதர்சனனையும் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் அவனை பேசவிடவில்லை. அவரே முந்திக்கொண்டு, “சாருக்கு ஒரு ப்ராப்ளம்! உங்களைத் தவிர வேறு யாராலேயும் அதைத் தீர்த்து வைக்க முடியாது. நீங்கதான் இதை முடிச்சுத் தரணும்” - என்று ஆரம்பித்து விட்டார். மலரெழிலன் மேலே கடைசி இரண்டு பித்தான்கள் போடாமலிருந்த தன் நெஞ்சைத் தானே பார்த்துக் கொண்டு முகம் மலர்ந்தார். “என்னன்னு சொல்லுங்க! பார்த்து முடிச்சுப் போடுவோம். நாமே செய்ய முடியாட்டி வேறே யாரு இதெல்லாம் செய்யப் போறாங்க? செய்யறதுக்கு முன்னாடி ‘என்னென்ன விவரம்னு’ எல்லாம் இந்த சார் கிட்டச் சொல்லிட்டீங்கள்ளே? அப்புறம் பின்னாடி வீண் தகராறு கூடாது. முதல்லியே கறாராப் பேசிக்கிட்டா வம்பில்லாம இருக்கும் என்ன? நான் சொல்றது சரிதானே?” - என்றார் மணவை மலரெழிலன். இந்த வார்த்தைகளின் மூலம் ஏதோ பேரம் பேசப் படுகிறது என்பது சுதர்சனனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2011 பக்கங்கள்: 268 எடை: 300 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-232-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல் 4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல் 5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் 6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|