14 ஆதர்சபுரத்திலிருந்து பக்கத்து நகரத்திற்குப் பஸ் பிரயாணம் செய்து அன்றைய மாலை இரயிலையே பிடிப்பது சற்றுச் சிரமமாகத் தான் இருந்தது. ஆனாலும் இரயிலைப் பிடித்து இடமும் கிடைத்து விட்டது. சுதர்சனன் மறுநாள் காலை சென்னை எழும்பூரில் இறங்கியபோது நன்றாக விடியக்கூட இல்லை. சட்டைப் பையிலிருந்து நண்பனுடைய டூட்டோரியல் கல்லூரி விலாசத்தை எடுத்துப் பார்த்தபோது பெல்ஸ் ரோடு - திருவல்லிக்கேணி என்று இருந்தது. போர்ட்டர் வைத்துக் கொள்ளாததனால் கையில் பெட்டி படுக்கையோடு மியூஸிகல் சேர் விளையாட்டுக்கு ஓடுகிற மாதிரி இங்கும் அங்கும் ஓடி ஓர் ஆட்டோ ரிக்ஷா பிடித்தபின் அவன் சுதர்சனனிடம் மீட்டருக்கு மேல் இரண்டு ரூபாய் கூடக் கொடுத்தால்தான் திருவல்லிக்கேணிக்கு வரமுடியுமென்று நிபந்தனை போட்டான். நம்பிக்கையோடு பெட்டி படுக்கையை ஆட்டோவுக்குள் வைத்திருந்த சுதர்சனனுக்கு இந்த நிபந்தனை எரிச்சலூட்டியது. மறுபடியும் பெட்டி படுக்கையோடு தெருவில் நின்று வாகனம் தேட முடியாததால் சுதர்சனனே ஆட்டோ டிரைவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாக வேண்டியிருந்தது. கையாலாகாத நிலைமையோடு இணைந்த கோபத்துடன் சுதர்சனன் பெட்டி படுக்கையுடன் ஆட்டோவில் அமர்ந்தான். டிரைவரோ பிரயாணியின் மெளனமே சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டு விடவில்லை, அதிகப்படியாக 2 ரூபாய் போட்டுத் தரச் சம்மதம் என்று பிரயாணியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தாலொழிய அவன் விடமாட்டான் போலிருந்தது.
பெல்ஸ் ரோடில் தன் நண்பனுடைய டூட்டோரியல் காலேஜ் வாசலில் போய் இறங்கினபோது நண்பனும் இன்னும் சுதர்சனனுக்குப் பெயர் தெரியாத புதியவர்கள் இரண்டு மூன்று பேருமாகக் கையில் பெரிய பெரிய ரோஜாப்பூ மாலைகளோடு எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பன் ரகுராஜன் சுதர்சனனை முகமலர்ந்து வரவேற்றான். “என்னப்பா ரகு! விடிஞ்சதும் விடியாததுமா மாலையும் கையுமா எங்கேயோ கிளம்பிக்கிட்டிருக் கியே? என்ன விசேஷம்?” “பேசிக்கிட்டு நிற்க நேரமில்லை. பெட்டி படுக்கையை உள்ளாரப் போட்டுட்டு உடனே நீயும் புறப்படு! இன்னிக்கி தம்ம தலைவர் கலம்பகச் செல்வருக்குப் பிறந்தநாள்...” “நீ போயிட்டுவா போதும்! நான் வரலே, ரயில் பிரயாணம் ஆளை அசத்திவிட்டது. ஒரே களைப்பா இருக்கு! உடம்பை அடிச்சிப் போட்ட மாதிரி வலி.” “அதெல்லாம் முடியாது! நீயும் கண்டிப்பா வந்தாகணும், போற வழியிலே ஜாம்பஜார் முனையிலே நீயும் ஒரு மாலையை வாங்கிக்கலாம். தலைவரை இப்பவே பார்க்கிறது உன் ஃப்யூச்சருக்கு நல்லது.” நண்பன் இவ்வளவு வற்புறுத்தியபின் சுதர்சனனால் மறுக்க முடியவில்லை. ‘கலம்பகம் டூட்டோரியல் காலேஜ்’ என்ற பெரிய விளம்பரப் பலகையோடு கூடிய அந்த மாடிக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதி மூன்று நான்கு வகுப்பறைகளாகத் தடுக்கப்பட்டிருந்தது. மாடியில் கல்லூரி பிரின்ஸிபால் ரகுராஜனின் குடியிருப்புப் பகுதி இருந்தது, ஆட்டோவை டிஸ்போஸ் செய்துவிட்டுப் பெட்டி படுக்கையை மாடியில் போட்டுக் கதவை அடைத்துக் கொண்டு சுதர்சனனும் அவர்களோடு புறப்பட்டான். முகம் கழுவி உடைமாற்றிக் கொள்ளக் கூட நண்பன் ரகு அவகாசமளிக்கவில்லை. அவசரப்படுத்தினான். “இன்னிக்கு நீ வந்ததிலே ரொம்பச் சந்தோஷம், சும்மா வாப்பா! நம் தலைவரே ஏழை எளியவர்களோட பிரதிநிதிதான். தளுக்கு மினுக்கெல்லாம் அவருக்கே பிடிக்காது. போற போக்கிலேயே ரத்னா கேஃப்லே ஒரு காப்பியைக் குடிச்சிட்டுப் போயிடலாம்...” “தலைவர் கேக் வெட்டறத்துக்குள்ளாரப் போய்ச் சேரணும். தலைவர் கையாலே முதல் கேக் துண்டு நம்ம ரகுராஜனுக்குத்தான்னு நேத்தே சொல்லிப் போட்டாரு. நாம லேட்டாப் போய்ச் சேர்ந்தா அது நம்ம குத்தம் தான்...” என்று உடனிருந்த மற்றொருவர் துரிதப்படுத்தினார். “இவர் சிந்தாதரிப்பேட்டைச் செயல்வீரர் பொன் மணி. அவர் புதுப்பேட்டை சொன்ராஜு. அந்தத் தோழர் கூடுவாஞ்சேரி மணி. எல்லாம் ஐயாவோட் பரம சிஷ்யங்க” - என்பதாக அவர்களைச் சுதர்சனனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரகுராஜன். அவர்கள் வணங்கியதால் சுதர்சனனும் அவர்களைப் பார்த்துப் பதிலுக்குக் கைகூப்பினான். சிறிது நேர இடைவெளிக்குப் பின் ரகுராஜனே சுதர்சனனைப் பதிலுக்குக் கேட்டான். “பின்னென்ன? கேக் வெட்டாமே கடா வெட்டிப் பொங்கல் வச்சுக் கறிசோறு போடச் சொல்றியா? அதெல்லாம் நாகரீகமா இருக்காதுப்பா! தலைவரோட சிஷ்யன் - ஒருத்தன் அமானுல்லான்னு இங்கே ரொட்டிக் கடை வச்சிருக்கான். கேக் அவனோட இலவசத் தயாரிப்பு. வெட்டறது தலைவரோட வேலை. இதைக் கேட்டுச் சுதர்சனன் புன்முறுவல் பூத்தான். ‘வெட்டறது தலைவரோட வேலை’ - என்ற நண்பனின் இறுதி வாக்கியம்தான் அவனைச் சிரிக்க வைத்திருந்தது. அது இரட்டுற மொழிதலாயிருந்தது. தெருவில் இரட்டை நாடி உடலமைப்போடு இன்னொருவர் கையில் இதேபோல் மாலையுடன் எதிர்பட்டார். பார்ப்பதற்குச் சிற்றானைக்குட்டி ஒன்று ஆடி அசைந்து வருவது போல் தோற்றமளித்தார் அந்த ஆள். “சார் தான் கெளவை கஜராஜன். சென்னை நகரக் கசாப்பு - மீன்கடை உரிமையாளர் சங்கத் தலைவர். அதோட வள்ளலார் விழாக்குழுச் செயலாளர். வள்ளுவர் மன்றப் புரவலர். அஹிம்சா ஃபோரம் செயற்குழு உறுப்பினர்...” “இந்தாங்க ரகுராஜன்... எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்துச் சொல்லாதீங்கன்னு உங்களுக்கு எத்தினிவாட்டி சொல்றது? பெரிய வம்புக்கார ஆளா இருப்பீர் போலிருக்கே?...” என்று கஜராஜன் குறுக்கிட்டுக் கடிந்து கொள்கிற தொணியில் ரகுவைக் கோபித்தார். “எங்கே? ஐயா பொறந்த நாளைக்கி மாலை போடத்தானே போறீங்க! நானும் அங்கேதான் போயிட்டிருக்கேன். வாங்க சேர்ந்து போகலாம்...” “அது சரி? சார் யாருன்னு இன்னும் சொல்லவே இல்லியே?” “சார் சுதர்சனம். தமிழ்ப்புலவர். நம்ப நண்பர் இன்னிக்கித்தான் மெட்ராஸ் வந்திருக்காரு. ரயில்லேருந்து இறங்கி வந்தவரை அப்படியே நீங்களும் கூட வாங்கன்னு கூட்டிக்கிட்டு வந்து ட்டேன்.” “ரொம்ப நல்ல நாளாப் பார்த்துத்தான் வந்திருக்காரு. ஐயா பெர்த்டே நாளாச்சே?” என்று சிரித்தார் கெளவை கஜராஜன். அவரால் உடலின் ஊளைச்சதை குலுங்காமல் சிரிக்க முடியவில்லை என்பதைச் சுதர்சனன் கவனித்தான். எல்லாருமாக ரத்னா கேஃபில் காபிக்கு நுழைந்தார்கள். காபிக்குக் காத்திருந்த நேரத்தில் ரகுராஜன் வெளியே போய் இன்னொரு பெரிய ரோஜரப்பூ மாலை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சுதர்சனன் ரகுவைப் பார்த்துக் கேட்டான். “இன்னொரு மாலை யாருக்கு?” “யாருக்கா? அதென்ன கேள்வி ஒண்ணுமே தெரியாதது போலே? உனக்குத் தான்ம்ப்பா - நீ தலைவருக்கு மாலை போடலியா? பின்னே நீ எதுக்கா எங்க கூட வர்ரியாம்?” “நீ கூப்பிட்டே, வரேன். நான் ஒண்ணும் மாலை போடப் போறதில்லே... அவருக்கும் எனக்கும் அறிமுகம் கூடக் கிடையாது. நான், யாருன்னே அவருக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லே.” “அவருக்கு உன்னைத் தெரிஞ்சிருக்கணும்னு அவசிய மில்லே. உனக்கு அவரைத் தெரிஞ்சிருந்தாலே போதும். பக்தனுக்குத்தான் சாமியைக் கும்பிடத் தெரியணும். சாமிக்குப் பக்தனை யாருன்னே தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமில்லே.” “அதான் நான் சாமியே கும்பிடறதே இல்லை.” “சாமியைக் கும்பிடாட்டிப் பரவாயில்லே, தலைவரைக் கும்பிட்டு ஒரு மாலையைக் கழுத்திலே போட்டுவை. பின்னாலே பிரயோஜனப்படும். வீண் போயிடாது. மாலையை நான் வாங்கிட்டேன். உனக்குச் செலவில்லே. சும்மா கழுத்திலே போடறதுக்குக் கூடவா சோம்பல்?” “அட சர்த்தான் பெரிசா ‘பிலாஸபி’ - பேசாதேப்பா வான்னாக் கூட வா. நீ மாலை போடாட்டி உன் பேரைச் சொல்லி, ‘ஆதர்சபுரம் தமிழாசிரியர் புலவர் சுதர்சனனார் சார்பில் தலைவர் கலம்பகச் செல்வருக்கு மாலை அணிவிக்கப்படுகிறது’ன்னு நாங்களே மாலையைத் தலைவர் கழுத்திலே போட்டிட்டுப் போறோம், மாலை எண்ணிக்கைக் கூடனும்கிறதுதான் எங்க கணக்கு” என்றான் ரகு. அந்த டேபிளுக்குக் காபி கொண்டு வந்த சர்வர் கெளவை கஜராஜனைப் பார்த்து, “சார்! போன வாரம் நம்ப பேட்டையிலே பட்டிமன்றத்துக்கு வந்திருந்தீங்களே. நாங்கூடக் கேட்டேன் சார். ‘ஜீவகாருண்யமே சாலச் சிறந்தது’ங்கிற கட்சியிலே சிரிக்கச் சிரிக்கப் பேசினீங்க சார்” என்றான். கஜராஜன், “நீ வந்திருந்தியா அங்கே?” என்று செர்வரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே காபியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார். “ஏன் சார் கஜராஜன்! இப்பவெல்லாம் தலைமை வகிக்கிறதைத் தவிர வேறெதுக்கும் போறதில்லேன்னு எங்கிட்ட பிரமாதமாப் பெருமையடிச்சுக்கிட்டீங்க. இவங்க பேட்டையிலே பட்டிமன்றத்திலே போயி ஒரு கட்சியிலே நின்று பேசியிருக்கீங்களே?” என்று ரகுராஜன் கேட்டார். “இல்லியே? யார் சொன்னது? அதிலேயும் நான் பேசின கட்சிக்குத் தலைவரா இருந்து தானே பேசினேன்?” என்று கஜராஜனிடமிருந்து பதில் வந்தது. காபி குடித்துவிட்டு எல்லோரும் புறப்பட்டார்கள். “நான் வேணா வீட்டுக்குத் திரும்பிடறேனே? நீங்க போயிட்டு வாங்க போதும். நான் எதுக்கு?” என்று மீண்டும் கத்தரித்துக் கொண்டு திரும்பி விட முயன்றான் சுதர்சனன். பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பிசினஸ் டிப்ஸ் வகைப்பாடு : வர்த்தகம் இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00தள்ளுபடி விலை: ரூ. 125.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |