27

     நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள போலிப் பெரிய மனிதர்கள் நினைக்கிறார்கள்.


அய்யா வைகுண்டர்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

சலூன்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

இந்தியா என்றால் என்ன?
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

மலைகள் சப்தமிடுவ தில்லை
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

இடக்கை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

ஏழு தலை நகரம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

மோனேயின் மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

நீலகண்டம்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

தொழில் தொடங்கலாம் வாங்க!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மக்களைக் கையாளும் திறன்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

நெஞ்சமதில் நீயிருந்தாய்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

கிரிவலம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மருத்துவ ஜோதிடம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

மானுடப் பண்ணை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

அக்னிச் சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்
இருப்பு இல்லை
ரூ.175.00
Buy

மறக்கவே நினைக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

விழுவது எழுவதற்கே!
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy
     இரவோடு இரவாகக் காரில் நாட்டரசன் கோட்டையிலிருந்து மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கலியாண வீட்டில் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து ஆத்திரமாக வெளியேறியிருந்த காரணத்தினால் காரில் திரும்பி வரும்போது கண்ணாயிரமும் அம்மாவும் மோகினியிடம் மிகவும் கடுகடுப்போடு இருந்தார்கள். "மரியாதைக் குறைவாக நாலு பேருக்கு முன்னாலே எடுத்தெறிஞ்சி பேசிப்பிட்டு விறுவிறுவென்று நடந்து போய்க் காரிலே உட்கார்ந்திட்டா மட்டும் போதுமாடீ? கொஞ்சம் புத்தியும் வேணும். நீ இப்படிச் செய்திட்டதாலே அவங்களுக்கு ஒண்ணும் பெருமை கொறைஞ்சிடப் போறதில்லை. உன்னையெத்தான் அடங்காப்பிடாரி, முரண்டு பிடிச்சவ, அப்படி இப்படியின்னு வாயிலே வந்தபடி பேசுவாங்க" என்று காரில் ஏறியதும் ஒரு பாட்டம் வைது தீர்ந்திருந்தாள் முத்தழகம்மாள். அம்மாவும் கண்ணாயிரமும் பின் தங்கியிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்திருப்பார்கள் என்பது மோகினிக்குத் தெரியும். ஆனாலும் தாங்கள் சொல்லியபடி கேட்கவில்லை என்பதே அவர்கள் கோபத்துக்குக் காரணம் என்பது அவளுக்குப் புரிந்தது. அவர்களுடைய கோபத்தை அவள் சிறிதும் பொருட்படுத்தவில்லையாயினும், வேறு பல நினைவுகளால் உள்ளூர மனம் வெந்து கொண்டிருந்தாள் அவள். நாளுக்கு நாள் வாழ்க்கையே சாரமற்றுப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. அமைதியான இந்த இரவு நேரத்தில் நிலா ஒளியின் கீழ்க் காரில் எல்லோரோடும் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த போதே மனத்தின் நினைவுகளால் அந்த எல்லாருடைய வழியிலிருந்தும் பிரிந்து வேறு ஒரு வழியில் போய்க் கொண்டிருந்தாள் அவள். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ கண்ணாயிரமும் அம்மாவும் தன்னைச் சிறிது சிறிதாக வியாபாரப் பொருளாக்கிக் கொண்டு வருவதை அவள் உணர்ந்து மனம் கொதித்தாள். இப்போது காரில் முகத்தையும் மனத்தையும் கடுமையாக வைத்துக் கொண்டு அம்மா மௌனமாக வருகிறாளே இந்த மௌனத்திற்கு விளைவு என்னவாக இருக்கும் என்பதும் மோகினிக்குப் புரிந்தது. வீட்டுக்குத் திரும்பியதும் தன்னை வாயில் வந்தபடி பேசிக் கடுமையாக நடந்து கொள்ளப் போவதற்கு அம்மாவின் இந்த மௌனம் ஒரு முன் குறிப்பு என்பது அவளுக்குப் பழகிய உண்மைதான். அம்மாவின் ஈவு இரக்கமற்ற சிந்தனையில் அவள் முதலில் அடிமை, அப்புறம் தான் மகள். இப்போதுதான் சிறிது காலமாக அம்மா அவளைத் தொட்டு அடிப்பதில்லை. முன்பெல்லாம் கோபம் அளவுக்கு மீறிப் போயிருக்கிற சில சமயங்களில் தலையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி அறைகிற அளவுக்கு அம்மாவின் கொடுமை எல்லை மீறிப் போயிருக்கிறது. இந்தக் கொடுமைகளில் இருந்தெல்லாம் விடுபடுவதற்கு ஒரே வழி சாவு தான் என்று தீர்மானம் செய்து கொண்டு சாக முயன்றும் முடியாமல் பிழைத்திருக்கிறாள் அவள். பட்ட துயரங்களையும் இனிமேல் படவேண்டிய துயரங்களையும் நினைத்த போது அழுகை குமுறிக் கொண்டு வந்தது.

     கார் போய்க் கொண்டிருந்த சாலையின் இருபுறமும் வறண்ட செம்மண் மேடுகளாயிருந்தும் அந்த நிலவொளியில் அவைகளும் கூட அழகாகத்தான் தோன்றின. சாலை மேல் நடுநடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறுக்கிட்ட செழிப்பில்லாத கிராமங்கள் அரவமின்றி உறங்கிப் போயிருந்தன. சாலையும் சாலையின் இருபுறமும் செழிப்பும் பசுமையும் இல்லாமல் ஆனால் நிலவொளியால் வெளிப்பார்வைக்குச் செழிப்பும், பசுமையும் உள்ளது போல் மயக்கிக் கொண்டு அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படி இருந்தது. முன்ஸீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து அவன் தூங்கி விடாமல் இருப்பதற்காகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார் கண்ணாயிரம். அம்மா அரைகுறை தூக்கத்தில் இருந்தாள். மோகினி இரைந்து அழப் பயந்து மௌனமாக அழுது கொண்டிருந்தாள். கார் போய்க் கொண்டிருந்த வேகத்தில் காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. கூந்தல் முன் நெற்றியில் சரிந்து புரண்டது. இருந்தாற் போல் இருந்து காரின் வேகம் குறைந்து சாலையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு நின்றது. "டயரில் லாடம் அடித்துப் பஞ்சர்' ஆகிவிட்டதுங்க" என்று கீழே இறங்கி டயரைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னான் டிரைவர். கண்ணாயிரமும் கீழே இறங்கினார். அம்மா விழித்துக் கொண்டு "என்ன ஆச்சு? ஏன் நிற்கிறாங்க..." என்று விசாரித்தாள். "டயர் பஞ்சராகிப் போச்சாம்" என்று பதில் சொல்லிக் கொண்டே மோகினியும் கீழே இறங்கினாள்.

     அந்த இடத்தில் சாலையின் மேல் கார் நின்று போன பகுதியை ஒட்டி ஒரு சிறிய ஊருணியும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் நடுவாக ஒரு குடிசையும் தெரிந்தன. குடிசை வாயிலில் தென்னை மரக் கீற்றோரம் கதிர் விரிக்கும் அழகிய நிலாவின் கீழ் நார்க் கட்டிலில் ஓர் இளம் பருவத்துக் குடியானப் பெண்ணும் இளைஞனும் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். டயர் பஞ்சராகிக் கார் நின்று போய் விட்டதைப் பார்த்து அந்தப் பெண்ணும் இளைஞனும் எழுந்திருந்து சாலையோரமாக வந்தனர். காரையும் மோகினியையும், அவள் அம்மாவையும் ஏதோ ஒரு பெரிய ஆச்சர்யங்களைப் பார்ப்பது போல் பார்த்தார்கள் அவர்கள்.

     "அத்தான்! யாரோ சினிமாக்காரங்க போலிருக்கு... அந்தப் பெண்ணைப் பாரு... ரதியாட்டமிருக்கு..."

     "சும்மானாச்சும் காது குத்தாதேம்மே! உன்னைக் காட்டியுமா அவ அழகுங்கிறே?"

     அவர்கள் தங்களுக்குள் மிக மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தும் இந்த உரையாடலை மோகினியும் கேட்க நேர்ந்தது. தான் அழகு என்று அந்தப் பெண் தன்னைப் புகழ்ந்ததையும், தன்னை விட அவளே அழகு என்று... அவளுடைய அரும்பு மீசைக் கட்டுக்குடுமி கட்டழகனான அத்தான் அவளைப் புகழ்ந்ததையும் கேட்டுத் தன்னுடைய வேதனைகளையும் மறந்து சிரிக்கத் தோன்றியது மோகினிக்கு. நெடுந்தூரம் ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பொட்டல் காட்டில் வாழ்க்கையின் சுகங்களுக்குப் பிரதிநிதிகளைப் போல் அந்தக் குடிசை வாசலில் அவர்கள் தோன்றினார்கள்.

     குடிசைக்கு முன்னால் இன்னொரு பக்கமாக ஒரு வேப்ப மரத்தடியில் உட்காருவதற்கு வசதியான சதுரக் கல் ஒன்றிருந்தது. மோகினியிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமலும் அவளையும் உடன் வருமாறு கூப்பிடாமலும் வேகமாக நடந்து போய் அந்தக் கல்லில் உட்கார்ந்து கொண்டாள் முத்தழகம்மாள். அம்மா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போன வேகத்திலிருந்தே அவளுடைய கோபம் சிறிது கூடத் தணியவில்லை என்பதை மோகினி புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணாயிரமும், டிரைவரும் ஜாக்கி கொடுத்துப் பஞ்சரான டயரைக் கழட்டி 'ஸ்டெப்னி' மாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கீழே இறங்கி நின்ற இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்த மோகினியை நோக்கி, "நீங்களும் போய் உட்காரும்மா... ஸ்டெப்னி மாட்டியானதும் கூப்பிடறேன்" என்று கார் டிரைவர் கூறினார். அம்மாவுக்கும் கண்ணாயிரத்துக்கும் இல்லாத கருணை காரோட்டும் ஊழியனான அந்த ஏழையிடம் இருந்தது. அந்தச் சின்னஞ்சிறு கருணையைக் கூடக் கண்ணாயிரத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

     "அவங்களுக்கு உட்காரத் தெரியும். நீ உன் வேலையைக் கவனி..." என்று கண்ணாயிரம் அவனிடம் கூறினார். நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால், ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் நினைக்கிறார்கள். தன்னிடம் கருணையோடு இரண்டு வார்த்தை பேசியதற்காகவே கண்ணாயிரம் அந்தக் காரோட்டும் ஊழியனிடம் அவ்வளவு எரிந்து விழுவதைப் பார்த்தபோது அதிலிருந்தே அவருடைய சுய ரூபத்தை மோகினியால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணாயிரத்தின் திருக்கல்யாண குணங்களைப் பற்றி அவள் புதிதாகப் புரிந்து கொள்வதற்கு ஒன்றும் மீதமில்லை என்றாலும் அவ்வப்போது தன்னைப் பற்றி அவள் சிந்தனை செய்வதற்கு நிறைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார் கண்ணாயிரம். ஆனாலும் பொது இடங்களிலும் நாலு பேர் கூடி நின்று பேசும் போதும் அவரைப் போன்ற போலி மனிதர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்வது போல், நல்லவர்களால் கூடக் கவரமுடியாது.

     மோகினிக்கு அவர் மேல் இவ்வளவு வெறுப்பும் கசப்பும் இருப்பதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. மோகினியும் முத்தழகம்மாளும் அவரை வழிகாட்டியாகக் கொண்டு, அவர் சொல்கிற இடத்தில் நாட்டியமாடி, அவர் வேண்டாமென்று மறுக்கிற இடத்தில் ஆட ஒப்புக் கொள்ளாமல் வாழ்வதாக உலகத்தை மயக்கி வைத்திருந்தார் கண்ணாயிரம். அவருடைய வாழ்க்கைத் தத்துவமே தனியானது. தனி வாழ்க்கையில் அவர் கெட்டவராக இருந்தாலும், பொது வாழ்க்கை அவரை நல்லவராகவும், பிரமுகராகவும் ஒப்புக் கொண்டிருந்தது. எதிரே நின்று பேசுகிற மனிதரிடமிருந்து எந்த விதமான குரல் ஒலிக்கிறதோ அந்தக் குரலை அப்படியே எதிரொலித்து அவரோடு ஒட்டிக் கொண்டு பழக முயல்வது கண்ணாயிரத்துக்குக் கைவந்த பழக்கம். ஒவ்வொரு துறையிலும் அவர் பழகுகிற மனிதர்களும் பழக்க வழக்கங்களும் எல்லாம் இப்படித்தான்.

     'நீங்கள் சொல்றாப்பிலே' என்ற வார்த்தைகளை நாலு தரம் எதிரே இருப்பவரிடம் குழைந்து சொல்லி அவர் சொல்கிற ஒவ்வொன்றையும் தாம் கர்மசிரத்தையாகக் கவனித்து மனத்தில் வைத்துக் கொள்வதைப் போல் நடித்து விட்டாரானால் அப்புறம் அந்த மனிதன் கண்ணாயிரத்தின் வலையில் சுருண்டு விழுவதற்குக் கேட்பானேன்? எதிராளி ஒன்றுமே சொல்லாவிட்டாலும் அவர் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பது போல் பாவித்துக் கொண்டு, 'நீங்க சொல்றாப்பலே' என்று நடுநடுவே தழுவிக் கொண்டு பேசுவது ஒருவகை சாமார்த்தியம். அந்தச் சாமார்த்தியம் கண்ணாயிரத்திடம் தாராளமாக இருந்தது. அரசியலைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறவரிடம் கண்ணாயிரமும் அதைப் பற்றியே அளந்து விடுவார். சினிமா, நாடகம், சங்கீதம் போன்ற கலைகளைப் பற்றியே பேசுபவர்களிடம் அவைகளைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவரைப் போல் பேசுவார். கண்ணாயிரம் சாப்பாட்டில் வெஜிடேரியனா, நாண்-வெஜிடேரியனா என்று பலருக்கு நிரந்தரமாக ஒரு சந்தேகம் உண்டு. இந்தப் பெரிய சந்தேகத்தை மிகவும் சுலபமாகத் தீர்த்து வைக்க முடியும். அவர் வெஜிடேரியன்களுக்கு நடுவில் வெஜிடேரியன். நாண்-வெஜிடேரியன்களுக்கு நடுவில் நாண்-வெஜிடேரியன். இன்னும் அந்தரங்கமாகவும் உண்மையாகவும் சொல்லப் புகுந்தால் மனிதர்களையே கடித்துச் சாப்பிட நினைக்கும் அளவுக்குப் பயங்கரமான 'நாண்-வெஜிடேரியன்' அவர்.

     கண்ணாயிரத்தைப் போன்ற மனிதர்களைச் சமூக வாழ்க்கையிலிருந்தே நீக்கிச் சாய்த்து வீழ்த்திவிட வேண்டுமென்று பலர் நினைக்கலாம். ஆனால், கண்ணாயிரம் நிச்சயமாக வீழ்ச்சி அடைய மாட்டார். ஒரு பக்கமாகச் சாய்ந்து விட்டால் இன்னொரு பக்கமாக நிமிர்ந்து கொண்டு வாழக்கூடிய வல்லமை அவருக்கு உண்டு. அவர் தஞ்சாவூர்ப் பொம்மையைப் போன்றவர். எந்தப் பக்கம் சாய்ந்து விட்டாலும் நிமிர்ந்து நின்றுவிடும் வலிமை உள்ளவரை எத்தனை முறை எப்படி வீழ்த்தினாலும் பயனில்லைதான். அந்த வெட்ட வெளியில் நடுச்சாலையில் நடு இரவில் கண்ணாயிரம் நிமிர்ந்து நின்று கொண்டு கார் டிரைவரை வேலை வாங்கிய போது மோகினி இப்படி நினைத்தாள்.

     அந்தக் கிராமத்துப் பெண்ணும் அவளுடைய அத்தானும் மோகினியைக் குடிசை வாசலுக்கு வந்து கட்டிலில் உட்காரும்படி பரிவோடு அழைத்தார்கள். "எவ்வளவு நேரம் தான் இப்பிடி நின்னுகிட்டிருக்கப் போறீங்கம்மா? வந்து உட்காருங்களேன். காலாறக் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் பெறவு போகலாம்..." என்று அருகில் வந்து கையைப் பிடித்து இழுக்காத குறையாய்க் கெஞ்சினாள் அந்தப் பெண். கட்டுக் குலையாத உடம்பும், வெற்றிலைக் காவி ஏறிய இதழ்களும், கோணல் சொருகுக் கொண்டையுமாக அந்தக் கிராமத்துப் பெண் மிகவும் அழகாகத்தான் இருந்தாள். அவளுடைய அத்தானோ கட்டுக் குடுமியும் காதில் சிவப்புக்கல் கடுக்கனும் வாயில் புன்னகையுமாக ஆண் பிள்ளைச் சிங்கம் போல் அருகில் நின்று கொண்டிருந்தான். 'இவளுக்கு நான் காவல், இவள் என்னுடையவள்' என்ற பெருமிதத்தோடும் ஆண்மையோடும் அவளுடைய அத்தான் அவளருகே நிற்பது போல் தோன்றியது. அதே போல் சத்தியமூர்த்தி தன்னருகே வந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் போல அவள் தன் மனத்துள் அந்தரங்கமாகக் கற்பித்துக் கொண்டு மகிழ்ந்தாள். அந்தக் கற்பனையால் மகிழ்ச்சியும் அது கற்பனை தான் என்பதால் ஏக்கமும் அவளைத் தாக்கின. குடிசை வாசல் கட்டிலில் வந்து உட்காரும்படி அந்தப் பெண் இரண்டு மூன்று முறை மோகினியை அழைத்தும் அவள் அதற்குச் செவி சாய்க்கவில்லை.

     "நீ ஏனம்மா வேலை மெனக்கெட்டுத் தொண்டைத் தண்ணீ வத்துறே? இந்தக் குடிசையிலே நார்க்கட்டில்லே வந்து உட்காரச் சொல்லி அவுகளை நாம கூப்பிடலாமா?" என்று தன்னுடைய மௌனத்தை அலட்சியமாகப் புரிந்து கொண்ட அவளுடைய அத்தான் அவளைக் கண்டிப்பது போல் கோபிப்பதையும் மோகினி கவனித்தாள். அதற்கு மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாதவளாய் அந்தப் பெண்ணோடு நடந்து போய் நார்க்கட்டிலில் உட்கார்ந்தாள் மோகினி. மோகினியுடன் அவளுக்கு இணையாகக் கட்டிலில் உட்காருவது மரியாதைக் குறைவு என்று கருதியவளைப் போல் அந்தக் கிராமத்துப் பெண் மோகினிக்கு எதிரே அவள் காலடியில் தரையில் உட்கார்ந்திருந்தாள். மேலே வந்து தன்னோடு கட்டிலில் உட்காரும்படி மோகினி எவ்வளவோ வற்புறுத்தியும் அந்தப் பெண் கேட்கவில்லை. 'மனிதர்களுக்கு விட்டுக் கொடுத்து மரியாதை செய்வதில் தான் இந்த நாட்டுப்புறத்து மக்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை?' என்றெண்ணித் தன் மனத்துக்குள் அவளை வியந்தாள் மோகினி.

     "தாகத்துக்கு எதுனாச்சும் மோர்-தண்ணீர் கொண்டாந்து தரட்டுமா அம்மா?" என்று மோகினியை ஆவலோடு விசாரித்தாள் அந்தப் பெண். மோகினிக்குத் தாகமாக இருக்கவே, "தண்ணீர் இருந்தால் போதும்" என்றாள் அவள். உடனே அந்தப் பெண் உள்ளே எழுந்து போய்த் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பழைய காலத்து வெண்கலச் செம்பு இடியாகக் கனத்தது. அந்தத் தண்ணீர் செம்பைப் போலவே வாழ்க்கையின் பண்புகள் அங்கே இந்த நாட்டுப்புறத்தில் கனமாகவும் அழுத்தமாகவும் இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு. "நீங்க பயாஸ்கோப்பிலே 'ஆக்ட்' பண்ணுறீங்களா அம்மா?" என்று தண்ணீர்ச் செம்பைத் திருப்பி வாங்கிக் கொண்டே மோகினியைக் கேட்டாள் அந்தப் பெண். 'வாழ்க்கையே நடிப்பாகத்தான் இருக்கு. இன்னும் அது ஒன்று தான் குறை' என்று அந்தப் பெண்ணுக்கு மறுமொழி கூற நினைத்து அப்படிக் கூறுவதனால் ஒரு வேளை அந்தப் பெண்ணின் மனம் புண்படலாமோ என்று தயங்கியவளாய் 'இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் மோகினி. அந்தப் பெண் தண்ணீர்ச் செம்போடு குடிசையின் உள்ளே நுழையவும் தொலைவில் தயங்கி நின்று கொண்டிருந்த அவளுடைய அத்தானும் பின் தொடர்ந்து வந்து அவளோடு உள்ளே சென்றான். அடுத்த சில விநாடிகளில் உள்ளேயிருந்து மெல்லிய பேச்சுக் குரல்களும் சிங்காரச் சிரிப்பொலிகளும் மாறி மாறி ஒலித்தன. கால் நாழிகைக்கெல்லாம் அந்தப் பெண் வெளியே வந்த போது அவள் மேல் எதற்காகவோ தான் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது மோகினிக்கு. அந்தப் பொறாமையை அவளால் தவிர்க்கவும் முடியவில்லை.

     "ஊருணிக் கரையிலே அத்தான் வெள்ளரித் தோட்டம் போட்டிருக்காங்க. நல்ல பிஞ்சா ஒரு கூடை பறிச்சுத் தரேங்கிறாங்க. ஊருக்குக் கொண்டு போங்களேன்" என்று மோகினியை உபசாரம் செய்தாள் அந்தப் பெண். 'எதற்கு வீண் சிரமம்? வேண்டாம்' என்று மோகினி மறுத்தும் அவளுடைய அத்தானும் அவளும் கேட்கவில்லை. அந்த நிலாவில் அவளிடம் கொடுத்தனுப்புவதற்கு வெள்ளரிப் பிஞ்சு பறித்துக் கொண்டு வருவதற்காகக் கூடையை எடுத்துக் கொண்டு ஊருணிக் கரையை நோக்கி நடந்தான் அவளுடைய அத்தான். காரில் அம்மாவும் கண்ணாயிரமும் கலியாண வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த ஆப்பிள் பழங்கள் ஒரு கூடையில் நிறைந்து கிடந்தன. மோகினி அவசரம் அவசரமாக எழுந்திருந்து போய் அந்தக் கூடையிலிருந்து நாலைந்து ஆப்பிள் பழங்களை எடுத்துக் கொண்டு வந்து அந்தக் கிராமத்துப் பெண்ணிடம் கொடுத்தாள். இவற்றை வாங்கிக் கொண்டு அவள் மோகினியிடம் கேட்டாள்: "இதென்ன பழம் அம்மா? நாங்க இதைப் பார்த்ததேயில்லை?"

     "இதோ, இதை ஆப்பிள்ம்பாங்க. நல்ல சத்துள்ள பழம், விலை அதிகம்."

     "அப்படிங்களா? கடிச்சித் தின்னா வெள்ளரிப் பிஞ்சைக் காட்டிலும் நல்லாவா இருக்கும்?" என்று அந்தப் பேதைப் பெண் வினவிய போது மோகினிக்குச் சிரிப்பு வந்து விட்டது. வெள்ளரிப் பிஞ்சை விட அதிகமான சுவையுள்ள பண்டமும் உலகில் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தோடு கேட்கப்படுவது போல் இருந்தது அவளுடைய கேள்வி. அந்தக் கேள்வியிலிருந்த பேதமையின் அழகை இரசித்துக் கொண்டே மோகினி அவளுக்கு மறுமொழி கூறினாள்: "உங்கள் வெள்ளரிப் பிஞ்சை ஒரு கூடை எட்டணாவுக்கு வாங்கிவிடலாம். இந்த ஆப்பிள் பழம் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றரை ரூபாய் வரை ஆகுமே...?"

     "அம்மாடீ இதென்ன சீமையிலே இல்லாத விலையாயில்லே இருக்கும் போலேயிருக்கு? ரொம்பப் 'பணக்காரப் பழம்'னு சொல்லுங்க..." என்று அந்தப் பட்டிக்காட்டுப் பெண் பாதி வேடிக்கையாகவும் பாதி பிரமிப்பாகவும் ஆப்பிளுக்குப் பணக்காரப் பழம் என்று பேர் வைத்ததைக் கேட்டுத் தன்னுடைய கவலைகளையெல்லாம் மறந்து மோகினி வாய்விட்டுச் சிரித்தாள். அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணையும் அவளுடைய பட்டிக்காட்டு அத்தானையும் அவர்கள் வசிக்கும் மகிழ்ச்சி நிறைந்த அந்தக் குடிசையையும், அதனருகிலிருந்த ஊருணியையும் தென்னை மரங்களையும், இந்த உலகத்தின் குழப்பமில்லாத எளிய சந்தோஷங்களுக்குச் சின்னங்களாகக் கற்பித்துக் கொண்டு பார்ப்பது போல் பார்த்து ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டாள் மோகினி. மேடைகளில் நாட்டியமாடிப் பணத்தையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு வாழ்க்கையின் நியாயமான உரிமைகளையோ, சுகங்களையோ கூடச் சம்பாதிக்க முடியாமல் வேதனைப்படும் தன்னை விட வெள்ளரித் தோட்டத்து அத்தானுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையைத் தவிர வேறு புகழ், பெருமைகளுக்கு ஆசைப்படாத அந்தப் பட்டிக்காட்டுப் பெண் எவ்வளவோ பாக்கியசாலி என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய அத்தானின் கண்களுக்கு அவளைத் தவிர வேறெந்தப் பெண்களும் அழகாகத் தோன்றவில்லை. அவள் பாக்கியசாலி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? அந்தப் பட்டிக்காட்டுத் தம்பதிகள் தங்களுடைய சின்னஞ்சிறு குடிசைக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசும்போது அந்தக் குடிசையைத் தவிர அதற்கு அப்பாலிருக்கும் பரந்த உலகில் வேறெங்கும், வேறெதிலும், இத்தனை திருப்தியும் இத்தனை நிம்மதியும் இருக்க முடியாது என்பதைப் போல் அத்தனை திருப்தியாகவும் நிம்மதியாகவும் சிரிக்கிறார்கள், மகிழ்கிறார்கள், வாழ்கிறார்கள்.

     சமூக வாழ்க்கையில் கண்ணாயிரத்தை விடச் சிறந்த ஆண்மகன் இந்த வெள்ளரித் தோட்டத்து அத்தானாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் இவன் யாரையும் ஏமாற்றி வாழ விரும்புவதில்லை. எவரையும் சார்ந்து நின்று வாழவும் விரும்புவதில்லை. தன் கையால் தனக்காக உழைத்து வாழுகிறான் இவன். தன்னுடைய புகழுக்கும் பழிக்கும் நானே காரணமாக இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கையும், தன்னம்பிக்கையும், இவனுக்கு இருக்கின்றன. இவனுடைய மனைவி அதிக விலை கொடுத்துப் பெருமையோடு வாங்கித் தின்கிற ஆப்பிள் பழத்தை விட, ஊருணிக்கரை மேட்டில் காய்கிற வெள்ளரிப் பிஞ்சில் சிறப்பாகச் சுவை கண்டிருக்கிறாள். வாழ்க்கையில் இவர்களைப் போல் கொடுத்து வைத்தவர்கள் வேறெவர் இருக்க முடியும் என்றெண்ணிக் கொண்டே எதிரில் நின்ற அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை உற்றுப் பார்த்தாள் மோகினி. அந்தப் பெண் வெட்கத்தோடு தலைசாய்த்துச் சிரித்துக் கொண்டே மோகினியை நோக்கிக் கேட்டாள்.

     "என்னம்மா! என்னையே அப்படிப் பார்க்கிறீங்க...?"

     "ஒன்றுமில்லை! இந்த இடத்தில் உங்களுடைய குடிசை ஒன்று மட்டும் தானா? வேறு வீடுகளே இல்லையா?" என்று சம்பந்தமில்லாமல் அவளிடம் வேறு எதையோ கேட்டுப் பேச்சை மாற்றினாள் மோகினி.

     "நாங்க மட்டும் தான் தனியா இந்தக் குடிசையிலே இருக்கோம். நாங்களும் வெள்ளரித் தோட்டக் காவலுக்காக நாலு மாதம் இங்கே இருப்போம். அப்புறம் ஊருக்குள்ளாரப் போயிடுவோம். தோட்டம்னு போட்டுட்டா பாதை மேலே வரவங்க, போறவங்களுக்கெல்லாம் கூடத் திருடனுமின்னு ஆசை வருது. பகலிலேதான் திருடறாங்கன்னு பார்த்தால், இராத்திரி இரண்டு மைலுக்கு அப்பாலே இருக்கிற டூரிங் பயாஸ்கோப் ரெண்டாவது ஆட்டம் விட்டுத் திரும்பி வர்ர சனங்க வெள்ளரித் தோட்டத்திலே புகுந்து கைவைக்க ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக ராவுலேயும் காவல் இருக்க வேண்டியிருக்கு. தோட்டம் பட்டுப்போய்க் காய்ப்பு நின்னப்புறம் கிராமத்துக்குள்ளே போயிடுவோம். அதுவரை அத்தானும் நானும் இங்கே தான் வாசம்!" என்றாள் அந்தப் பட்டிக்காட்டுப் பெண்.

     'வெள்ளரித் தோட்டத்தில் மட்டுமில்லை! நாடு நகரங்களில் வீதி தெருக்களிலும் திருடர்கள் உண்டு பெண்ணே' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தாள் மோகினி. இதற்குள் அவளுடைய அத்தான் கூடை நிறைய வெள்ளரிப் பிஞ்சோடு திரும்பி வந்திருந்தான். அந்தக் கூடையைக் கையில் வாங்கிக் கொண்டு, "காவல் முடிஞ்சதும் ஊருக்குள்ளே போயிடுவோமென்றாயே! உங்கள் ஊர் எங்கே இருக்கிறது?" என்று அவளைக் கேட்டாள் மோகினி.

     "பக்கத்திலேதாம்மா இருக்குது. இங்கிருந்து தென் கிழக்கா ரெண்டு மைல் போனா 'சொகவாசம்'னு ஒரு கிராமம் இருக்கு. அதுதான் எங்க ஊர்."

     "என்னது? என்னது? அந்த ஊரின் பெயரை இன்னொரு தரம் சொல்லு" என்று அடக்க முடியாத ஆவலோடு மோகினி மீண்டும் வினவினாள்.

     "அதுதான் சொன்னேனே! சொகவாசம்பாங்கம்மா."

     "சுகவாசம் - எத்தனை பொருத்தமான பெயர்!" என்று தனக்குள் மெல்லச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டாள் மோகினி. அப்போது கண்ணாயிரம் வந்து புறப்படுவதற்கு அவசரப்படுத்தவே, அவள் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

     "எப்பவாச்சும் இந்தப் பாதையா வந்தா மறுபடியும் வாங்கம்மா" என்று அந்தப் பட்டிக்காட்டுப் பெண் தன் அத்தானுக்கு அருகில் நின்று சிரித்துக் கொண்டே இரைந்து கூறினாள். அவளுடைய பாக்கியத்தை வியந்தவளாக மோகினி காரில் ஏறினாள். அம்மாவும் கண்ணாயிரமும் ஏறிக்கொண்ட பின், கார் சாலையின் புழுதியை வாரி இறைத்து விரைந்தது.


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி - PDF
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்