31

     ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன.

     அன்று பகல் மூன்று மணி சுமாருக்குத் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கல்லூரி ஊழியன் சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்திருந்தான். அப்போதிருந்த பரபரப்பில் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளத்தான் முடிந்ததே தவிர, அதைப் பிரித்துப் படிப்பதற்கு நேரம் இல்லை. மாணவர் யூனியன் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்களை எண்ணி முடிவையும் அறிவித்து விட்டுச் சத்தியமூர்த்தி அறைக்குத் திரும்பும் போது சிறிது தொலைவு வரை கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜும் பேசிக் கொண்டே கூட நடந்து வந்தார். ஜார்ஜ் விடைபெற்றுக் கொண்டு சென்ற பின் அறைக்குப் போய்ச் சட்டையைக் கழற்றிய போது தந்தையின் கடிதம் நினைவு வந்தது சத்தியமூர்த்திக்கு. உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படிக்கலானான். அப்பாவின் வழக்கப்படி பிள்ளையார் சுழி 'முருகன் துணை'க்குக் கீழே கடிதம் ஆரம்பமாயிற்று. சங்கிலி பின்னியது போல் எழுத்துக்களைச் சேர்த்து நீட்டி இழுத்து எழுதப்பட்ட கூட்டெழுத்துக்களால் நான்கு பக்கத்துக்கு ஏதேதோ வளர்த்து எழுதியிருந்தார் அப்பா.


ரிமிந்தகம்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

காதல் தேனீ
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

கதாவிலாசம்
இருப்பு உள்ளது
ரூ.345.00
Buy

பெண் இயந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மனதோடு ஒரு சிட்டிங்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

வருங்காலம் இவர்கள் கையில்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

விழுவது எழுவதற்கே!
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

மதுர விசாரம்?
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நிலவறைக் குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

ஸ்ரீமத் பாகவதம்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

பொய்த்தேவு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கடவுச்சீட்டு
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

சிறிது வெளிச்சம்
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சர்மாவின் உயில்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy
     'சிரஞ்சீவி சத்தியத்துக்கு அநேக ஆசிகளுடன்' கடிதம் தொடங்கியிருந்தது. 'கண்ணாயிரம் பரம உபகாரியாயிருக்கிறார். வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்கு நகரசபை அனுமதி விரைவில் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கண்ணாயிரம் யாரோ அவருக்குத் தெரிந்த மனிதர் மூலம் நகரசபையில் உள்ள ஒருவருக்குக் கடிதம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தினால் காரியம் சுலபமாக முடிந்துவிட்டது. கொத்தனார்கள் இரண்டு நாட்களாக மாடியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிட வேலைகளுக்காக நிறைய 'சிமிண்ட்' தேவையாயிருக்கிறது. 'சிமிண்ட்' கண்ட்ரோல் விலைக்குக் கிடைப்பதற்குச் சிரமப்படும் போல் இருக்கிறது. அதற்கும் கண்ணாயிரத்தைத்தான் நம்பியிருக்கிறேன். இவரிடம் சொல்லித்தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். நீ சென்ற மாதம் நூற்று இருபது ரூபாய் மணியார்டர் இங்கே அனுப்பியிருந்தாய். வருகிற மாதத்திலிருந்தாவது கட்டாயம் நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கனுப்புவதற்கு முயற்சி செய். கண்ணாயிரத்தினிடம் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன் கட்டிட வேலைகளுக்குப் போதாதென்று தோன்றுகிறது. மூத்தவள் ஆண்டாளுக்குக் கலியாணம் முடித்துவிட வேண்டும் என்று வேறு உன் அம்மா அவசரப்படுகிறாள். எதைச் செய்வதற்குத்தான் அவசரப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கை நிறையப் பணத்தை வைத்துக் கொண்டு அலைந்தாலொழிய ஒரு காரியமும் ஆகாது. வீட்டை இப்போது இடித்துக் கட்டுகிற வேலையை நான் தொடங்கியது நல்லதாயிற்று. இல்லாவிட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மாடி இடிந்து தலையில் விழுந்து விடும். மாடிச் சுவரை இடித்த மேஸ்திரியே இதைச் சொன்னான். 'நல்ல சமயத்தில் மராமத்து செய்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் விழுந்துவிடும்' என்று அவன் சொன்னதை நீ நேரில் பார்த்தாலும் அப்படியே ஒப்புக் கொண்டாக வேண்டியிருக்கும்.

     நாற்பது வருடங்கள் பள்ளிக்கூட வாத்தியாராக வாழ்நாளைக் கழித்தவனின் குடும்பமும் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும் எவ்வளவுக்குச் செழிப்பின்றி வறண்டு போயிருக்கும் என்பதற்கு நானே ஓர் உதாரணமாகி விட்டேனடா சத்தியம்! என் கண் காண நீயும் அதே வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய்; காலேஜில் வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய் என்று வேண்டுமானால் கொஞ்சம் பெருமைப்படலாம். மாதம் முதல் தேதி பிறந்ததும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டால் மீதமிருக்கிற சம்பளப் பணத்தில் நீ வாயைக் கட்டிக் காலம் தள்ள வேண்டியிருக்கும். அதை நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. கண்ணாயிரத்திடம் இன்னும் ஐயாயிரம் ரூபாய் கடனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டின் மேலேயே அடமானமாகப் புதிய கடனையும் தர முயல்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் அவ்வப்போது இங்கே வந்து மதுரையில் தங்குகிற காலங்களில் சந்திப்பதற்குச் சென்றால் என்னிடம் பிரியமாகவே நடந்து கொள்கிறார்.

     பணமும், செல்வாக்கும் உள்ள நாலு பெரிய மனிதர்களைப் பழக்கிக் கொண்டால் தான் இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தையும் தடையில்லாமல் சாதிக்க முடிகிறது. 'டியூசன்'களையும் ஒவ்வொன்றாக விட்டுவிட்டேன். நேரமில்லாததுதான் காரணம். விடிந்து எழுந்திருந்தால் கொத்து வேலைகளை மேற்பார்க்கவும், சிமெண்ட்டுக்கும், செங்கல்லுக்கும் அலையவும் தான் சரியாயிருக்கிறது. மாடியிலும், முன் பக்கத்துப் 'போர்ஷனி'லும் மராமத்து வேலை நடப்பதால் ஒண்டுக் குடித்தனம் இருந்த இரண்டு பேரையும் காலி செய்து அனுப்பியாயிற்று. அதனால் வாடகை வருமானமும் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குக் கிடையாது. கட்டிடம் முடிந்து நிறைவேறிய பின் மறுபடி குடித்தனக்காரர்களை வாடகைக்கு வைக்கலாமா அல்லது வாசல் பக்கமாக - வீட்டுக்குள் வராமலே ஏறி இறங்க வசதியாக மாடிப்படி கட்டிக் கொடுத்து ஏதாவது ஆபீசுக்கு விட்டு விடலாமா என்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன். 'நீர் மட்டும் நான் கொடுக்கிற 'பிளானை' அநுசரித்துக் கட்டுவதாயிருந்தால் நம் 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' காரியாலயத்தையே உம்முடைய மாடிக்கு மாற்றிவிடலாம்' என்று கண்ணாயிரம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரால் நல்ல வாடகை கொடுக்கவும் முடியும். தாராளமாகச் செலவழிக்கிற கைராசிக்காரர். நமக்கும் படிப்படியாகக் கடன் கழிந்தே போகும்...'

     கடிதத்தில் இந்த இடத்தைப் படித்த போது 'அப்பா கண்ணாயிரத்தை நம்பி மோசம் போய்விடப் போகிறாரே' என்று வருத்தமாக இருந்தது. அதே சமயத்தில் அப்பாவுக்கும் தனக்குமிடையில் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலும் ஒரு தலைமுறைக் கால அளவு வித்தியாசம் இருப்பதையும் அவனால் உணர முடிந்தது. இன்று இந்த நாட்டில் மேலெழுந்து நிற்கும் பல சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமே ஒரு தலைமுறைக்கு முந்திய மனிதர்களுக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நடுவேயுள்ள சிந்தனைப் போராட்டம் தான். ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாயிருக்கின்றன. 'மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அப்பாவின் கண்களுக்கும், சிந்தனைக்கும் பெரிய மனிதர்களாகத் தோன்றுகிறார்கள். நானும் குமரப்பனுமோ இதே ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் எல்லா விதத்திலும் குறைபாடுடைய சமுதாயக் கள்ளர்களாக நினைக்கிறோம்' என்று எண்ணியபடியே தந்தையின் கடிதத்தின் மீதமுள்ள பகுதியைப் படிக்கலானான் அவன்.

     '... வரவர உன் அம்மாவுக்கு உடம்பு தள்ளவில்லை. பல நாட்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து படுத்து விடுகிறாள். வீட்டுக் காரியங்களை உன் தங்கைகள் தான் ஓடியாடிச் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கும் முன்பு மாதிரி உடல்நிலை திடமாயில்லை. இரண்டு தரம் மாடிக்கு ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குகிறது. இவ்வளவு தளர்ச்சி இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. ஏதோ காலம் போய்க் கொண்டிருக்கிறது. வந்து திரும்புவதற்குப் பிரயாணச் செலவு வீணாகும். இல்லாவிட்டால் இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற் போல் விடுமுறை வருகிற சமயமாகப் பார்த்து நீ ஒரு தரம் மதுரைக்கு வந்து போகலாம். உன் அம்மாவுக்கும் உன்னைப் பார்க்கவேணும் போலிருக்கிறதாம். முடியுமானால் வந்து போக முயற்சி செய். கல்லூரியில் கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துக் கொண்டு பழகு. யாரிடமாவது ஏதாவது கடுமையாகப் பேசிப் பகைத்துக் கொள்ளாதே. உன் குணம் தெரிந்துதான் இதை எழுதுகிறேன்...' இந்த உபதேசத்துடன் கடிதத்தை முடித்திருக்கிறார் அப்பா. யாரோ மாடிப்படி ஏறி மேலே அறைக்கு வருகிற ஓசை கேட்டது. சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான். தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். பத்து நிமிஷங்கள் அவரை நலம் விசாரிப்பதிலும் அவரோடு பேசுவதிலும் கழிந்தன. சத்தியமூர்த்தி முகம் கைகால் கழுவிக்கொண்டு இரவு உணவுக்காகப் புறப்பட்ட போது "நானும் வருகிறேன் சார்!" என்று சுந்தரேசனும் புறப்பட்டார்.

     சாப்பாடு முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, "ஒரு நல்ல ஆங்கிலப் படம் நடக்கிறது. போய்விட்டு வரலாமே" என்று சுந்தரேசன் வற்புறுத்தினார். "ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள், பிரயாணக் களைப்பு வேறு இருக்கும். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காகப் படத்துக்குப் போக வேண்டும் என்கிறீர்கள்?" என்று சத்தியமூர்த்தி மறுத்தும் அவர் பிடிவாதமாகப் படத்துக்குப் போக வேண்டும் என்றார். "அந்தப் படம் இன்றைக்குத்தான் கடைசி நாள். நாளைக்கு வேறு படம் வந்து விடுகிறது சார். 'இம்பீரியல் ரோம் பீரியடில்' அடிமைகள் கொடுமைப் படுத்தப் பெற்றதையும் அந்த அடிமைகளின் கூட்டத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வீரன் ஒருவன் அரச வம்சத்துப் பெண்ணைக் காதலிப்பதைப் பற்றியும் வருகிற கதை. பிரமாதமாக எடுத்திருக்கிறானாம். ஆங்கில வரலாற்றுப் படங்களிலேயே இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லையாம். ஒன்றரை நாள் இரயிலிலும் பஸ்ஸிலுமாகப் பயணம் செய்து வந்த அலுப்பு இருந்தாலும் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்க்காமல் தவற விட்டு விட்டேனானால் அப்படித் தவற விட்டுவிட்டேன் என்ற ஏக்கத்தினாலேயே நாளைக்கு இதைவிட அதிக அலுப்பாக இருக்கும் எனக்கு" என்று பக்குவமடையாத சிறுபிள்ளை மனத்தோடு வற்புறுத்தினார் சுந்தரேசன். சத்தியமூர்த்திக்கு முரண்டு பிடித்து பழக்கமில்லை. 'பிறரைத் தனக்காக அளவு கடந்து வற்புறுத்துவதும் சத்தியமூர்த்திக்குப் பிடிக்காது. பிறர் தன்னிடம் வேண்டுகோளோடு நிற்கும்போது, வேண்டுகோளுடன் போய் நிற்பதே அருமையாகவும் வாய்க்கும்படி பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன். இப்போது சுந்தரேசன் வற்புறுத்தித் திரைப்படத்துக்கு அழைத்த வேளையிலும் அவன் அப்படியே நடந்து கொள்ள நேர்ந்தது. "உங்கள் விருப்பத்தைக் கெடுப்பானேன்? போகலாம், வாருங்கள்" என்று அவரோடு திரைப்படத்துக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி.

     மல்லிகைப் பந்தல் நகரில் இருந்த இரண்டு மூன்று முக்கியமான திரைப்படக் கொட்டகைகளும் அந்த 'லேக் சர்க்கில்' பகுதியிலே இருந்தன. அங்குள்ள தியேட்டர்களில் சிறந்ததும் வழக்கமாக ஆங்கிலப் படங்கள் மட்டுமே நடைபெறக் கூடியதுமாகிய 'புளுஹில் பாரடைஸில்' நுழைந்தனர் இருவரும். சுந்தரேசனுடன் இடையிடையே பேசிக் கொண்டே பல வண்ணப் படமாகவும் பல்சுவைக் காவியமாகவும் எடுக்கப் பட்டிருந்த அந்தத் திரை ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதும் கூடத் தந்தையின் கடிதமும் அந்தக் கடிதத்தில் நிரம்பியிருந்த வீட்டுக் கஷ்டங்களைப் பற்றிய சிந்தனைகளும் தாயின் உடல்நலக் குறைவுமே சத்தியமூர்த்தியின் மனத்தில் அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தன. இரும்பு இதயம் படைத்த பிரபுக்களின் கொடுங்கோன்மையில் சிக்கிக் கண்களும் உடம்பும் இரத்தமும் சிந்திடத் தவிக்கும் அடிமைகளின் அவல வாழ்க்கையைத் திரையில் மிக நன்றாகச் சித்தரித்திருந்தார்கள். "ஒரு தலைமுறையின் சரித்திரம் பின்னால் வருகிற மற்றொரு தலைமுறைக்குக் காவியமாகி விடுகிறது பார்த்தீர்களா? எதையும் கலையழகுபடச் சித்தரிக்க முடியுமானால் மனிதர்கள் கொடுமையில் வாடித் துன்பப்படுவதைக் கூட கலையழகுபடச் சித்தரிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்து விட்டார்கள்" என்று திரைக்காட்சி முடிந்து வெளியே வந்தபோது சுந்தரேசன் உற்சாக மிகுதியில் ஆர்வம் பொங்கச் சொல்லிக் கொண்டே வந்தார். பூபதியும் அவர் மகளும் கூட அன்று அந்தத் திரைப்படத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. காட்சி முடிந்ததும் சத்தியமூர்த்தியும் சுந்தரேசனும் தியேட்டருக்கு வெளியே கார்களைப் 'பார்க்' செய்திருந்த பகுதியைக் கடந்து நடந்து கொண்டிருந்த போது பூபதியும் அவர் மகளும் காரில் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். போகிற போக்கில் பாரதியின் பார்வை ஒருகணம் சத்தியமூர்த்தியின் மேல் தயங்கிவிட்டு விலகியது. அப்படி விலகும்போது கடுமையோடும், அலட்சியமாகவும் விலகுவது போல் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற திசையை ஒட்டிச் சுந்தரேசனின் கண்களும் திரும்பின. "நம்முடைய காலேஜ் கரஸ்பாண்டண்டும் அவர் பெண்ணும் கூட இந்தப் படத்துக்கு வந்துவிட்டுப் போகிறாங்க போலிருக்கே..." என்று வியந்தாற் போல் சத்தியமூர்த்தியின் காதருகே கூறினார் சுந்தரேசன். "ஆமாம், நானும் பார்த்தேன்" என்று சுவாரஸ்யம் இல்லாமல் அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. அறைக்குத் திரும்பும் போது குளிர் கடுமையாக இருந்தது. மூச்சு விடும்போது மூக்குத் துவாரங்களின் வழியே புகை வருவது போல் தெரிய, அங்கும் இங்குமாக இழுத்துப் போர்த்தியபடி விரைந்து கொண்டிருந்தார்கள் மனிதர்கள்.

     "அடுத்த மாதச் சம்பளத்திலாவது நீங்களும் நானும் ஆளுக்கொரு 'எலக்ட்ரிக் ஹீட்டர்' வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஊரில் குளிரில் காலம் தள்ளுவது சிரமமாக இருக்கும் போலிருக்கு சார்" என்று சுந்தரேசன் பேச்சுப் போக்கில் ஞாபகப்படுத்தினார். 'அடுத்த மாதத்திலிருந்துதான் அப்பா நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கு அனுப்ப வேண்டுமென்று எழுதியிருக்கிறார். ஹீட்டர் வாங்குவதற்குப் பணத்துக்கு எங்கே போவது?' என்று மனம் நினைத்து வருந்தத் தொடங்கிய அதே வேளையில், "நீங்கள் விரைவில் உங்களுடைய உபயோகத்துக்காக ஒரு ஹீட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் சுந்தரேசன்! எனக்கு இப்போது அவசரமில்லை" என்று வாயினால் நாகரிகமாகப் பதில் சொல்லித் தன் வறுமையை மறைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி.

     அறைக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த போது சத்தியமூர்த்திக்காக அவனே முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியம் அங்கே காத்திருந்தது. மாடிப்படி ஏறுகிற வழியில் ராயல்பேக்கரி வாசல் வராந்தாவில் பெட்டி-பை-ஹோல்டால் சகிதம் குமரப்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். பிரயாணத்தினால் தலை முன் நெற்றியில் வந்து கத்தி நுனியாகச் சரிந்திருந்த 'கிராப்' அந்த முகத்தின் குறும்புத்தனத்தை அதிகமாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தது.

     "என்னப்பா இது! சொல்லாமல் கொள்ளாமல் நடு இரவில் திடுதிப்பென்று வந்து சேர்ந்திருக்கிறாய்? குத்து விளக்கில் வெளியாகும் கார்ட்டூன்களும் நகைச்சுவைப் படங்களும் தான் வியப்பும் அதிர்ச்சியும் தரக்கூடியவைகளாயிருக்குமென்றால் அவைகளை வரைகிறவருடைய காரியங்கள் அவற்றை விட அதிர்ச்சி தரக்கூடியவைகளாயிருக்கிறதே?" என்று சத்தியமூர்த்தி வினாவவும், "மல்லிகைப் பந்தலையும் உன்னையும் தேடிக் கொண்டு வருகிறவர்கள் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு வரக்கூடாது என்று யாராவது நிபந்தனை விதித்திருக்கிறார்களா சத்தியம்? ஏதோ தோன்றியது மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன். இப்படித் திடீரென்று வரக் கூடாதென்று நீ கருதுவதாக இருந்தால் காலையில் முதல் பஸ்ஸுக்குத் திரும்பிப் போய் விடட்டுமா?"

     'அந்த அர்த்த ராத்திரி வேளையிலும் தன்னுடைய இயற்கை குணமான குறும்பும் கேலியும் சிறிது கூடக் குறையாமல் நான் தான் குமரப்பன் வந்திருக்கிறேன்' என்று தான் வந்திருப்பதைத் தன் பேச்சினாலும், சிரிப்பினாலுமே நிரூபித்துக் கொண்டு நின்றான் குமரப்பன். சுந்தரேசனுக்கும் குமரப்பனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சத்தியமூர்த்தி. "பாடனி படித்தவரா? ரொம்பப் பொருத்தமான ஊருக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒன்றும் பொழுது போகவில்லையானால் ஏதாவது இலையைக் கிள்ளியோ, செடியை முறித்தோ ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கலாம். இலைகளுக்கும் செடிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராச்சே இது" என்ற சந்தித்த முதல் விநாடியிலேயே உரிமையோடு சுந்தரேசனிடம் கேலியில் இறங்கி விட்டான் குமரப்பன். 'மனிதர்களுக்குள்ளே நான் கேலியும் கிண்டலும் செய்யமுடியாத அதிக உயரத்தில் இருப்பவர்கள் யாரும் கிடையாது' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டாற் போன்ற அசகாய சூரத்தனத்தோடு பழகுவான் குமரப்பன். இந்தச் சூரத்தனத்தைக் கண்டு பலமுறை தனக்குள் மலைத்துப் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. சில துறுதுறுப்பான குழந்தைகளுக்கு வேற்று முகமே தெரியாது. எவரிடமும் கலகலப்பாக நெருங்கிப் பழகும் துணிவை அந்தக் குழந்தைகளின் சுறுசுறுப்பிலும் குறுகுறுப்பான பழக்கவழக்கங்களிலும் காணலாம். குமரப்பனும் அத்தகைய சுபாவமுள்ளவன் தான். அவனுடைய குறும்புத் தனத்தில் வஞ்சகம் கிடையாது. குமரப்பனுடைய மூட்டை முடிச்சுக்களை அவனும் சத்தியமூர்த்தியுமாக ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சுமந்து கொண்டு மாடிப்படி ஏறியபோது, "என்னடா பழி! இரண்டு இரண்டரை மணி நேரம் ஓர் உண்மை நண்பனை இப்படி இந்தக் குளிரில் காத்துக் கிடக்கும்படி செய்து விட்டாயே! இது நியாயமா உனக்கு? பாடனி சார்! நீங்களே சொல்லுங்கள்; நான் வருகிற இன்றைக்கென்றா இவன் சினிமாவுக்குப் போவது?" என்று சத்தியமூர்த்தியைக் கேட்டு விட்டுச் சுந்தரேசன் பக்கமாகத் திரும்பி அவரையும் வம்புக்கு இழுத்தான் குமரப்பன்.

     "என்ன கார்ட்டூனிஸ்ட் அவர்களே! இப்படித் திடீரென்று இங்கே புறப்பட்டு வந்துவிட்டீர்களே; வருகிற வாரம் குத்து விளக்கில் தங்கள் கார்ட்டூன்களைக் காண முடியுமோ, இல்லையோ?" - சத்தியமூர்த்தியின் இந்தக் கேள்விக்கும் குமரப்பன் கூறிய பதில் விநோதமாக இருந்தது.

     "கார்ட்டூன் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் வந்திருக்கிறேனடா சத்தியம்! அது ரொம்பவும் சுவாரஸ்யமான கார்ட்டூனாக இருக்கும். ஆனால் அந்தக் கார்ட்டூனைக் குத்து விளக்கில் பிரசுரிப்பார்களா என்பதுதான் சந்தேகமாயிருக்கிறது!"

     "ஏன் அப்படி...?"

     "இத்தனை சுலபமாக உன் கேள்விக்குப் பதில் சொல்ல்விட முடியாது, அப்பனே! இன்றைக்கு 'ஸ்கெட்ச்' மட்டும் தான் கொடுக்க முடியும். எல்லாம் நாளைக் காலையில் விவரமாகச் சொல்கிறேன்..." என்று கூறிக்கொண்டே ஹோல்டாலை விரித்துப் படுக்கையைப் போடத் தொடங்கியிருந்தான் குமரப்பன்.


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்