http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




39

     தாங்களே தங்களுடைய மனச்சாட்சிக்காக நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை விடத் தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக் கொண்டால் போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது.

     சத்தியமூர்த்தி அந்தக் கூடத்துக்குள் நுழைந்து நின்றவுடனே சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பூபதி அவனைப் பார்த்துவிட்டார். அதே சமயத்தில் அவனால் மனப்பூர்வமாக வெறுக்கப்பட்ட மற்ற இருவரும் கூட அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்து விட்டார்கள். கருகருவென்று மயிரடர்ந்த புருவங்களை மேலே ஏற்றி இறக்கி வளைத்து ஜமீந்தார் தன்னைப் பார்த்த பார்வை நெஞ்சில் வந்து குத்தித் துளைத்தெடுப்பது போலிருந்தது சத்தியமூர்த்திக்கு. 'நாடு சுதந்திரம் பெற்று ஜமீன் ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ முறையைத் தீர்த்துக் கட்டும் நில உச்சவரம்பு ஆகிய சட்டங்களெல்லாம் வந்த பின்பும் இன்றைய நிலையில் கூட மஞ்சள்பட்டியாரைப் போன்றவர்கள் ஊருக்கு ஊர் பங்களாக்களும், ஆடம்பர ஏற்பாடுகளும் செய்து கொண்டு பழைய ஜமீந்தார் வீறாப்புகளைச் சிறிதும் இழக்காமலும் குறைத்துக் கொள்ளாமலும் வாழ முடிகிறதே' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தி மனம் கொதித்தான். ஜமீந்தார் முறையை ஒழித்துவிட்டாலும் பணக்காரர்களில் பலருடைய இரத்தத்தில் ஓர் இயற்கையாக ஊறிப் போயிருக்கும் ஜமீந்தார் மனப்பான்மையை ஒரு போதும் ஒழிக்க முடியாது போல் தோன்றியது. ஜமீன் ஒழிப்புக்கு பின் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் மஞ்சள்பட்டியாரை ஜமீந்தார் என்றுதான் சொல்கிறார்கள். பழைய டாம்பீகங்களையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடாமல் நாட்டியத்தையும் சங்கீதத்தையும் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு ஜமீந்தார் மஞ்சள்பட்டியில் இன்னும் நவராத்திரி விழாக் கொண்டாடுகிறார். மஞ்சள்பட்டி என்கிற சிறிய ஊரில் இருப்பதை விட அதிக வசதிகளும் ஆடம்பரங்களும் நிறைந்த மாளிகைகளும் பங்களாக்களும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் கோடை வாசத்துக்குரிய மலை நகரங்களிலும் ஜமீந்தாருக்குச் சொந்தமாக இருக்கின்றன.

     ஜமீந்தாரின் கொடிய கண்பார்வை தன்மேல் பட்டுத் திரும்பிய சில கணங்களில் இவ்வளவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. இதற்குள் பூபதியே அவன் பக்கம் எழுந்து வந்துவிட்டார். "வாருங்கள்! என் கடிதம் கிடைத்ததா? அப்போதிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று புன்னகையோடு கூறிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து நின்றார் பூபதி. அவருக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக அவரைச் சந்தித்தவுடனே தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்த சத்தியமூர்த்தியைப் பேசவிடாமல் அவரே முந்திக் கொண்டு ஜமீந்தாரைப் பற்றி உற்சாகமாகக் கூற ஆரம்பித்து விட்டார்.

     "உங்களுக்கு நம் ஜமீந்தாரவர்களைத் தெரியும் அல்லவா? பெரிய கலாரசிகர், நல்ல தமிழபிமானி. இவருடைய முன்னோர்களில் சிலரைப் பற்றிப் பழைய புலவர்கள் இரட்டை மணிமாலை என்ன, நான்மணிமாலை என்ன, பிள்ளைத் தமிழென்ன, கோவை உலா மடலென்ன என்று இப்படி கணக்கு வழக்கில்லாமல் பாடிப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்த நிமிஷத்தில் கூட நம்முடைய ஜமீந்தாரைத் தூண்டிவிட்டுக் கூளப்ப நாயக்கன் காதலையும், விறலிவிடு தூதுவையும் பற்றிச் சொல்லச் செய்தால் விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பொழுது போவது தெரியாது மிஸ்டர் சத்தியமூர்த்தி! இதையெல்லாம் விட அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் நம் ஜமீந்தார் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறார் என்பதுதான்!" என்றிவ்வாறாகச் சத்தியமூர்த்தி பதில் சொல்லவோ சிந்திக்கவோ அவகாசம் கொடுக்காமல் மிக ஆர்வமாகச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே போனார் பூபதி. அவற்றைச் செவியில் ஏற்று மனத்தில் சிந்தித்த பொழுது சத்தியமூர்த்தியினால் பொறுத்துக் கொள்ள இயலாத உண்மைகளாயிருந்தன அவை. ஓரளவு கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கூளப்ப நாயக்கன் காதலும், விறலிவிடு தூதுவும் ஜமீந்தாருக்குத் தெரிவதைக் காரணமாகச் சொல்லி அவரை அதற்காகத் தமிழபிமானி என்று குறிப்பிடும் பூபதியை நினைத்து, அவன் உள்ளூரப் பரிதாபப்பட்டான். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் சத்தியமூர்த்தியையே கடுமையாக உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu39.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs