இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!41

     தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை விட பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான்.

     பூபதி எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தும் விமான நிலையத்திலிருந்து திரும்பும் போது சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தோடு அவர் கொண்டு வந்திருந்த ஜமீந்தாரின் 'காடிலாக்' காரில் திரும்பவில்லை. சற்று முன் அதே விமான நிலையத்தின் கூட்டத்தில் வழியனுப்ப வந்திருந்தவர்களோடு நின்று கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் பலர் நடுவே அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போல், யாரிடமோ பேசுகிற பாவனையில் அவனைத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார் கண்ணாயிரம்.

     "அதுலே பாருங்க... எவ்வளவுதான் சலுகை கொடுத்துப் பெருந்தன்மையா நடத்தினாலும் இந்தத் தமிழ் வாத்தியார் பசங்க கெட்ட அயோக்கியனுகளாயிருக்காங்க... ஒருத்தனுக்காவது தெய்வ பக்தி இருக்கிறதில்லை... நல்லெண்ணமும் கிடையாது. படிக்கிற பயல்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுகிறார்கள்" என்று சத்தியமூர்த்தியின் காதில் கேட்கிறாற் போலவே இரைந்து சொல்லியிருந்தார் கண்ணாயிரம். பூபதி அப்போது வேறு யாரோ தம்மை வழியனுப்ப வந்திருந்த நாலைந்து பேரோடு பேசிக் கொண்டிருந்தார். பூபதியை வழி அனுப்ப வந்திருந்த சத்தியமூர்த்திக்குக் கண்ணாயிரத்தின் இந்த உளறலைக் கேட்டு மனம் குமுறியது. குமரப்பன் அப்போது அங்கே இருந்திருந்தால் "ஷட் அப் மிஸ்டர் கண்ணாயிரம்! யூ டோண்ட் டிஸர்வ் டூ ஸ்பீக் எபௌட் ஸச் ஸேக்ரேட் திங்ஸ்..." என்று கண்ணாயிரத்தின் மேல் புலியாய்ப் பாய்ந்து அவரைக் குதறியிருப்பான். எதிர்த்து வாதாடுவதற்குக் கூடத் தகுதியில்லாதவரிடம் விவாதித்துப் பயனில்லை என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.

     கண்ணாயிரமும் அவனிடம் நேருக்கு நேர் எதிர்த்துப் பேசத் தைரியமில்லாத கோழையாக யாரிடமோ பேசுகிறாற் போலத்தான் பேசித் தாக்கியிருந்தார். இந்த உலகத்தில் தெய்வ பக்தியையும் நல்லெண்ணத்தையும் கட்டிக் காப்பாற்றுவதற்குத் தாம் ஒருவரே பொறுப்பேற்றுக் கொண்டு விட்டிருப்பது போல் கண்ணாயிரம் பேசியது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களைவிடப் பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். மனிதப் பண்பையும் சகலவிதமான ஒழுக்க நேர்மைகளையும் நம்பாமல் தெய்வத்தை மட்டும் நம்புவதாகச் சொல்லித் தற்காப்புச் செய்து கொள்கிற போலிப் பக்தியால் உலகத்துக்கு நியாயமான பயன் ஒன்றுமில்லை. ஆனால் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்படிப்பட்ட போலிப் பக்தியினாலேயே இந்த உலகில் தங்களைப் பெரிய மனிதர்களாக நிரூபித்துக் கொள்ள முடிந்தது.

     கண்ணாயிரத்தின் கார் புறப்பட்டுச் சென்ற பின் விமான நிலைய எல்லையை விட்டு வெளியே நடந்தபோது இவ்வளவு சிந்தனைகளும் மனத்தில் அலைபாயச் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. விமான நிலையத்துக்கு வரும்போது பூபதியும் அவர் மகள் பாரதியும் உடன் வரக் கண்ணாயிரம் ஓட்டிக் கொண்டு வந்த அதே காரை விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்லும் போது கண்ணாயிரம் உடன் வரப் பாரதி ஓட்டிக் கொண்டு சென்றதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'பெரிய மனிதர்களில்' பெரும்பாலோர் தங்களோடு ஒத்த அளவு அல்லது அதிக அளவு 'ஸ்டேட்ஸ்' உள்ளவர்களிடம் என்னென்ன குணக்குறைவுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதது போல் மன்னித்துவிட்டுப் பழகுவதும், அதே சமயத்தில் தங்களோடு ஒத்த அளவு 'ஸ்டேட்ஸ்' இல்லாதவர்களிடம் மிக மிகச் சிறந்த குணநலன்கள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமலே அலட்சியமாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அவன் பலமுறை மனம் கொதித்துச் சிந்தித்திருக்கிறான்.

     அவன் சந்தித்த பெரிய மனிதர்களில் பூபதி ஒரு விதிவிலக்காக இருந்தார். குணநலன்கள் யாரிடமிருந்தாலும் பாராட்டுகிற அவரது பெருந்தன்மையை அவன் விரும்பினான். 'ஷி வாக்ஸ் இன் ப்யூட்டி' என்ற ஆங்கில கவிதையை அவன் வகுப்பில் நடத்திய தினத்தன்று அவனுக்கே தெரியாமல் வகுப்புக்கு வெளியே நின்று கடைசி வரை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, வகுப்பு முடிந்து அவன் வெளியே வந்ததும் மனப்பூர்வமாகப் பாராட்டினார் அவர். ஆனால் அவரிடமும் ஜமீந்தார், கண்ணாயிரம் போன்றவர்களை மன்னித்துப் புகழ்ந்து மதிக்கிற குணம் இருக்கிறது என்பதை நேற்றும் இன்றும் நடந்திருந்த நிகழ்ச்சிகளால் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டிருந்தான். நல்லவர்களைப் புகழாவிட்டாலும் பரவாயில்லை. அப்படிப் புகழாதவர்களை மன்னிக்கலாம். கெட்டவர்களை அநாவசியமாகத் தூக்கி வைத்து மதித்துப் புகழ்கிறவர்களை மன்னிக்கவே முடியாதென்று தோன்றியது.

     மதுரையிலிருந்து விமான நிலையத்தை ஒட்டிச் செல்லும் பிரதான சாலை அருப்புக்கோட்டைக்குப் போவது. சத்தியமூர்த்தி விமான நிலைய எல்லைக்குள்ளிருந்து இந்தப் பிரதான சாலைக்கு வந்ததும் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரைக்கு திரும்புகிற வெளியூர் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கையை நீட்டி அந்தப் பஸ்ஸில் இடம் பிடித்து நகருக்குள் வந்து சேர்ந்தான் அவன். எதற்கும் கலங்காத அவன் மனம் காரணமின்றியோ அல்லது இன்னதென்று நிர்ணயித்துச் சொல்ல முடியாத பல காரணங்களாலோ குழம்பியிருந்தது. நகருக்குள் நுழைந்து பஸ் நிலையத்துக்குப் போவதற்கு முன்பாகத் தெற்கு வெளி வீதியிலேயே இறங்கிப் பாண்டிய வேளாளர் தெரு வழியே நடந்தான் அவன். பாண்டிய வேளாளர் தெருவும் பெருமாள் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் கூடலழகப் பெருமாள் கோவில் தேர் தகரக் கூடாரமிட்டு மூடப்பட்டு நின்று கொண்டிருந்தது. தேர் ஓடாத காலங்களில் நிலையில் நிற்கும் போது மூன்று புறமும் தகர அடைப்புக்களின் மேல் சினிமா விளம்பரச் சுவரொட்டிகளும், மல்யுத்த விளம்பரங்களும் ஒட்டப்பட்டிருப்பது அந்த இடத்து மரபு. நடந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி தற்செயலாக நிமிர்ந்து பார்த்தபோது தேர் அடைப்பின் மேல் தன்னுடைய கவனத்தைக் கவரக் கூடிய விளம்பரம் ஒன்றைக் கண்டான். மதுரை நகரப் பெருமக்கள் மேன்மை தங்கிய மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு ஐம்பதாண்டுகள் நிறைந்து விட்டதற்காகப் பொன்விழாக் கொண்டாடிக் கௌரவிக்க விரும்புவதை அறிவிக்கும் விளம்பரம் அங்கே ஒட்டப்பட்டிருந்தது. கையில் பசையுள்ள பெரும் புள்ளிகள் சிலர் தாங்களே பணத்தைக் கொடுத்து இப்படிப்பட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொள்வதாகச் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். குடிப் பழக்கத்தைப் போலவோ சூதாட்டத்தைப் போலவோ புகழும் சிலருக்குத் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறதென்பது பொது வாழ்வைக் கூர்ந்து கவனித்ததிலிருந்து அவன் தெரிந்து கொண்ட உண்மை. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பூபதி டில்லியிலிருந்து மதுரைக்குத் திரும்புகிற தினத்தன்று அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கையில் பசையுள்ளவர்கள் புகழையும், பெருமையையும் கூட மிகவும் மலிவான விலைக்கு வாங்க முடிகிறதென்று நினைத்தான் அவன். மனம் ஒரு நிலை கொள்ளாமல் ஒரு நோக்கமில்லாமல் எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போல் தவித்தது. சத்தியமூர்த்தி மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனான். கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வடக்குக் கோபுர வாசல் வரிசையாக அவன் வெளியேறிய போது இரவு ஏழு மணிக்கு மேலிருக்கும். அப்புறம் உடனே வீட்டுக்குப் போக வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. வடக்குக் கோபுர வாசலில் வெற்றிலை பாக்குக் கடையை முற்றுகையிட்டிருந்த வித்வான் பொன்னுசாமி பிள்ளைத் தெருப் பாட்டு வாத்தியார் சத்தியமூர்த்தியைப் பார்த்து விட்டார்.

     "அடடே! ஐயாவைப் பார்த்து மாதக் கணக்காகி விட்டதே! மல்லிகைப் பந்தலிலே காலேஜ் வாத்தியாராயிருப்பதாகச் சொன்னாங்க... ரொம்ப சந்தோஷம்... எங்கேயாவது நல்லாயிருக்க வேண்டியதுதானே?" என்று பேசிக் கொண்டே அவனோடு கூட நடந்து விட்டார் பாட்டு வாத்தியார். நல்ல இசை வேளாளர் பரம்பரையில் வந்தவராகிய இந்தப் பாட்டு வாத்தியார் எப்போது சந்தித்தாலும் அதிகமாக வழவழவென்று பேசுவார் என்ற ஒன்றைத் தவிர சத்தியமூர்த்திக்கு இவரை மிகவும் பிடிக்கும். அரை மணி நேரம் சந்தித்துப் பேசினால் கூடத் தஞ்சாவூர்க் கோவிந்த தீட்சிதர் எழுதிய 'சங்கீத சுதாநிதி' யிலிருந்து வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை இயற்றிய 'பூர்வீக சங்கீத உண்மை' என்ற அபூர்வ நூல் வரை எல்லாவற்றைப் பற்றியும் சொல்லிவிட வேண்டுமென்று சுறுசுறுப்பாகத் தொடங்கிவிடுவார். ஒவ்வொரு கலையிலும் அதிர்ஷ்டம் எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்டம் பிடித்த மேதைகள் இப்படிப் பலர் இருப்பார்கள். இந்தப் பாட்டு வாத்தியாரும் அத்தகைய பலரில் ஒருவராகத்தான் இருந்தார். இவரைப் போல் அவ்வளவு ஞானமில்லாதவர்கள் இவரிடமே அரைகுறையாகப் படித்துவிட்டுப் போனவர்கள் எல்லாம் 'சீனியர்' வித்வான்களாகிக் காரை விட்டுக் கீழிறங்காமல் சுற்றிக் கொண்டிருக்கிற இதே மோசக்கார உலகத்தில் கடந்த இருபது வருடங்களாக முன்னேற முடியாமல் இந்தத் தெரு முனையில் உள்ள வெற்றிலை பாக்குக் கடையிலே இவர் தயங்கி நின்று விட்டார். அதிர்ஷ்டத்துக்கும் இவருக்கு இடையேயுள்ள தூரம் அல்லது இவருக்கும் அதிர்ஷ்டத்துக்கும் இடையே உள்ள பகைமை அதிகமாகிவிட்டது. கோயிலிலிருந்து வெளியேறி வந்திருந்த சத்தியமூர்த்தியும் இரண்டு நாட்களாகத் தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை இந்தப் பாட்டு வாத்தியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிவு செய்தான். பாட்டு வாத்தியாருடன் பேசிக் கொண்டே நடந்த சத்தியமூர்த்தி மேற்காவணி மூல வீதி வழியாக டவுன் ஹால் ரோடுக்கு வந்து அங்கு ஒரு ஹோட்டலில் நுழைந்து வாத்தியாரும் தானுமாகக் காப்பி குடித்த பின் காற்றாட உலாவிக் கொண்டே பேசுவதற்காக இரயில்வே மேற்பாலத்துக்குச் சென்றான். வாத்தியாரும் 'தோடியை' இராஜரத்தினம் பிள்ளை கையாண்ட லாவகத்தை வியந்தபடிக் கூறிக் கொண்டே உடன் வந்தார்.

     ஒரு பக்கம் இரயில் நிலையமும் மற்றொரு பக்கம் பஸ் நிலையமுமாக நடுவே அமைந்த இந்தப் பாலத்தில் நின்று இருளும் ஒளியும் கலக்கிற சாயங்கால வேளையில் நகரத்தையும் சுற்றுப்புறங்களையும் பார்ப்பது சுவை மிகுந்ததோர் அனுபவமாயிருப்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை உணர்ந்திருக்கிறான்.

     இந்த இரயில்வே மேற்பாலத்தில் நின்று மதுரையையும் நகரின் சுற்றுப்புறங்களையும், பார்க்கும் பல சமயங்களில் கல்லூரி நாட்களில் 'மைனர் போயம்'ஸில் படித்திருந்த 'வில்லியம் வேட்ஸ் வொர்த்'தின் கவிதை ஒன்று அவனுக்கு ஞாபகம் வருவதுண்டு. அந்தக் கவிதையில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திலிருந்து இலண்டன் நகரம் தெரிகிற கோலத்தை உள்ளமுருக சொல்லியிருக்கிறான் 'வேட்ஸ் வொர்த்'. 'அபான் வெஸ்ட் மின்ஸ்டர் பிர்ட்ஜ்' என்ற அந்தக் கவிதை, 'எர்த் ஹேஸ் நாட் எனிதிங் டு ஷோ மோர் ஃபேர்' என்று கம்பீரமாகத் தொடங்கும். 'உலகத்தில் இதை விட அழகான காட்சி வேறொன்று இருக்க முடியாது. இந்த இடத்தில் நின்று இங்கிருந்து தெரியும் காட்சிகளை ஆர அமர இரசிக்கத் தெரியாமல் வேகமாக நடந்து போகிறவர்கள் எவ்வளவு மந்தமானவர்களாயிருக்க வேண்டும்?' என்று வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்திலிருந்து வில்லியம் வேட்ஸ் வொர்த் என்னும் ஆங்கிலச் சொல்லழகன் மனம் நிறைந்த மகிழ்ச்சியினால் ஆச்சரியப்பட்டுக் கூவினாற் போல் மதுரையின் இந்த இரயில்வே மேற்பாலத்தில் நின்று கொண்டு கோபுரங்களும், கட்டிடங்களும், மரங்களின் பசுமையுமாகத் தெரிகிற நகரின் மொத்தமான தோற்றத்தைப் பார்த்து, மகிழ்ந்து வியந்து கூற வேண்டுமென்று பலமுறை எண்ணியிருக்கிறான் சத்தியமூர்த்தி. இன்றோ அவனும் பாட்டு வாத்தியாரும் இந்தப் பாலத்தின் மேல் வந்து நிற்கும் போது இதன் சாயங்கால அழகையும் காட்சிகளையும் பார்க்க முடியாமல் நன்றாக இருட்டிப் போய்விட்டது. கம்பம், தேனீ என்று வெளியூர்களிலிருந்து நகருக்குத் திரும்புகிற பஸ்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்துப் பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்தன. கீழே இரயில்வே லயனில் 'ஷண்டிங்' என்ஜின் ஒன்று இங்கும் அங்குமாகப் புகை கக்கியபடி 'விஸில்' ஓசையோடு போய் வந்து கொண்டிருந்தது.

     பாட்டு வாத்தியாரும் சத்தியமூர்த்தியும் பாலத்தின் இரும்புக் கிராதியில் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

     காலையிலிருந்து - இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் முந்திய தினம் குமரப்பன் இரயிலேறிப் போனதிலிருந்து தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை - மோகினியின் தெருவுக்குப் பக்கத்து தெருக்காரராகிய அந்தப் பாட்டு வாத்தியாரிடம் அந்தரங்கமாக விசாரித்தான் அவன்.

     'குடியிருக்கிற வீடு வாசல் எல்லாம் ஜமீந்தார் செலவிலே அனுபவிக்கிறவங்க வேறே எப்படி இருக்க முடியும்? அவங்க பரம்பரையா ஜமீன் குடும்பத்துக்குப் பழக்கம்' என்று முதல் நாள் தன் தந்தை மோகினியைப் பற்றித் தன்னிடம் கூறியிருந்ததையும், குமரப்பன் இரயில் நிலையத்தில் எச்சரித்ததையும் அதற்குத் தொடர்பாக இன்று காலை ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை - சாருதத்தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது ஜமீந்தாரின் கார் வந்து விட்ட ஓசையைக் கேட்டுத் தன் எதிரிலேயே மோகினி பயந்து மிரண்டதையும் நினைத்துச் சத்தியமூர்த்தியே மனம் குழம்பிப் போயிருந்தான். ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அவள் வெறுக்கிறாள் என்பதற்காக அவளைப் பாராட்டிய அதே சத்தியமூர்த்தியால் அவர்களுக்காக அவள் பயப்படவும் செய்கிறாள் என்பதைச் சிறிது கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஜமீந்தாருக்கு அவள் பயப்படுகிற பயத்துக்கு என்ன அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் மனக் குழப்பம் அடைந்திருந்தான் அவன். பழைய தலைமுறை மனிதராகிய இந்தப் பாட்டு வாத்தியாரை விசாரித்தால் ஏதாவது சில விவரங்கள் தெரியலாமென்றுதான் இப்போது அதைப் பற்றி அவன் அவரை விசாரித்தான். சங்கீத விநாயகர் கோயில் தெருவில் மோகினி குடியிருக்கிற வீடு ஜமீன் வீடுதான் என்ற உண்மையைப் பாட்டு வாத்தியார் அழுத்தமாக வற்புறுத்திச் சொன்னார். மோகினியின் தாயான முத்தழகம்மாளைப் பற்றியும் அவர் அவ்வளவாகப் பெருமைப்படுத்திச் சொல்லவில்லை. அதே சமயத்தில் மோகினியைப் பற்றி மட்டும் மிக உயர்வாகச் சொன்னார். கவிஞர் ஒருவரைக் காதலித்து அந்தக் காதல் நிறைவேறாததனால் சிறிய வயதிலேயே நிராசையோடு இறந்து போன மோகினியின் பெரிய பாட்டி 'மதுரவல்லி'யைப் பற்றியும் பெருமையாகச் சொன்னார். இந்தப் பெரிய பாட்டியைப் பற்றி மோகினியே தன்னிடம் ஒருநாள் சிறப்பித்துச் சொல்லியிருந்தது இப்போது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது.

     "இந்தப் பெண் மோகினி சின்ன வயதிலிருந்தே நெருப்பாய் வளர்ந்தவள் ஐயா! யாரையும் பக்கத்திலே நெருங்க விட்டதில்லை. அவள் முகத்தைப் பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கிறதிலிருந்தே இதை நீங்கள் தெரிஞ்சுக்கலாமே! இந்த விநாடி வரை நடத்தையிலே அப்பழுக்குச் சொல்ல முடியாது. இந்தப் பெண்ணை எவனாவது தாறுமாறாகப் பேசினால் அவன் நாக்கு அழுகிப் போய்விடும்... ஆனால் குழந்தைப் பொண்ணு... கள்ளங்கபடு தெரியாத மனசு... அம்மா இருக்கிறப்பவே இந்தப் பெண் அவளை எதிர்த்துச் சண்டை போடும்... இப்போ அந்த அம்மாவும் கண்ணை மூடிப்பிட்டா. இனிமேல் இந்த ஜமீந்தாரும், கண்ணாயிரமும் என்ன பாடுபடுத்தி வைக்கப் போறாங்களோ?... இவ ரொம்ப அழகாயிருக்கிறதினாலேயும், நாட்டியத்திலே பேர் வாங்கியிருக்கிறதினாலேயும், ஜமீந்தார் விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறானென்று கேள்வி...! பாவம் மோகினி! இந்த மாதிரி வீட்டிலே பொறக்கற பொண்ணே இல்லை. எங்காவது நல்ல குடும்பத்திலே வீட்டுக்கு இலட்சுமியாய்ப் பிறந்திருக்க வேண்டிய பெண். இங்கே பிறந்து கஷ்டப்படணுமின்னு தலையிலே எழுதியிருக்கிறான்..." என்று மோகினியைப் பற்றிச் சொல்லி அலுத்துக் கொண்டார் பாட்டு வாத்தியார். இதைக் கேட்டுச் சத்தியமூர்த்தி நெட்டுயிர்த்தான். தனக்கும், மோகினிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பொதுவாக விசாரிப்பது போல்தான் இந்த விவரங்களைப் பாட்டு வாத்தியாரிடம் விசாரித்திருந்தான் அவன். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின் பாட்டு வாத்தியாரும் எதற்காகவோ பயந்து நடுங்கியதைக் கண்டுதான் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான்.

     "நமக்கேன் ஐயா இந்த வம்பு? பகலில் பக்கம் பார்த்துப் பேசு... இராத்திரி அதுவும் பேசாதே என்று சொல்லியிருக்கிறாற் போல இந்த இடத்திலே இருட்டுக்குக் கூடக் காது கேட்கும். எவனாவது ஜமீந்தாருக்கோ கண்ணாயிரத்துக்கோ வேண்டிய ஆட்கள் கேட்டுக் கொண்டிருந்து போய்ச் சொல்லி விட்டால் தலைக்கே ஆபத்து."

     "வாத்தியாரே, உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பயந்து பயந்து தான் இந்த உலகத்தைப் பாழாக்கி விட்டீர்கள்" என்றான் சத்தியமூர்த்தி.

     "நான் இருக்கிற இருப்புக்குப் பயப்படாமல் வேறென்ன செய்ய முடியும் ஐயா?" என்று கேட்டுவிட்டு வறட்சியாகச் சிரித்தார் பாட்டு வாத்தியார். இந்த வாத்தியாரின் பயத்தைப் போலவே மோகினியின் பயமும் காரணமற்றதாகத்தான் தோன்றியது அவனுக்கு. 'அவர்களெல்லாம் இப்படிப் பயந்து கொண்டேயிருந்தால், மஞ்சள்பட்டி ஜமீந்தார் இன்னும் எட்டுக் கலரில் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் பண்ணித் தமக்கு ஏன் பொன்விழாக் கொண்டாடிக் கொள்ள மாட்டார்?' என்று எண்ணி மனம் கொதித்து வருந்தினான் அவன். பாட்டு வாத்தியாரும் அவனும் பாலத்தை விட்டு இறங்கி வீடு திரும்பும் போது இரவு ஒன்பதரை மணிக்கு மேலே ஆகியிருந்தது. மறுநாள் சரசுவதி பூசை. அதற்கு அடுத்த நாள் விஜயதசமி. 'இன்னும் சிறிது நேரத்தில் சென்னையிலிருந்து இன்றிரவு விமானத்தில் பூபதி டில்லிக்குப் புறப்பட்டு விடுவார்' என்பது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. அவர் மதுரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு தன்னிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தபடி விடுமுறை முடிவதற்கு ஓரிரு தினங்கள் முன்பாகவே மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிப் போய் ஸ்தாபகர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். நாளைக்கும் நாளன்றைக்கும் மதுரையில் இருந்துவிட்டு அடுத்த நாள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டியதுதான் என்றும் தனக்குள் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அன்றிரவு அவன் நெடுநேரம் கண்விழித்துக் கல்லூரிப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த வேண்டியிருந்தது.

     "நாள் தவறாமல் இப்படிக் கண் விழிக்கிறாயே! உடம்பு என்னத்துக்கு ஆகும்? பொழுதோடு படுத்துக் கொண்டு காலையில் எழுந்து திருத்தக் கூடாதோ?" என்று பன்னிரண்டு மணிக்கு அம்மா வந்து அவனைக் கோபித்துக் கடிந்து கொண்டிருந்தாள். மறுநாள் காலையிலும், அவனால் மோகினியைத் தேடி ஆஸ்பத்திரிக்குப் போகாமல் இருக்க முடியவில்லை. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியாத அத்தனை பெரிய ஆவலை அவள் அவனிடம் உண்டாக்கியிருந்தாள். முதல் நாள் தான் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தபோது கூந்தலுக்குப் பூவில்லாமல் அவள் வெறுங் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருந்த நிகழ்ச்சி நினைவு வரவே ஞாபகமாக இன்று கீழமாசி வீதிப் பூக்கடைக்குப் போய் நல்ல மல்லிகைப் பூவாக நாலு முழம் வாங்கிக் கொண்ட பின் புறப்பட்டிருந்தான் சத்தியமூர்த்தி. நேற்றுப் போல் மோகினியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணாயிரம், பாரதி - இவர்களெல்லாம் 'இன்றைக்கும் ஆஸ்பத்திரிக்குத் தேடிக் கொண்டு வந்தால் என்ன செய்வது?' என்று சிந்தித்து அப்படி அவர்கள் வந்தாலும் தான் பாதியிலேயே அங்கிருந்து புறப்படுவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டிருந்தான் அவன். தான் கொண்டு போகிற பூவை மோகினியின் கூந்தலில் தானே சூட்டிவிட்டு அவளிடம் என்னென்ன பேச வேண்டும், எப்படி நயமாகப் பேச வேண்டும் என்றெல்லாம் நினைத்தபடியே போய்க் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

     "தன் கணவன் சகல சௌபாக்கியங்களோடும் நன்றாயிருக்கிறான் என்பதை அவனுடைய கிருகலட்சுமியான மனைவி பூவும், மஞ்சளும், குங்குமமுமாகப் பொலிந்து தோன்றுவதன் மூலமாக உலகுக்கு நிரூபிக்கிறாள்! தன்னுடைய வாழ்வில் மங்கலங்கள் நிரம்பியிருக்கின்றன என்பதை உலகத்துக்கு மிக நாகரிகமாகச் சொல்லும் சின்னங்களாக ஒரு குடும்பப் பெண்ணுக்குப் பூவும் மஞ்சளும், குங்குமமும் இந்த நாட்டில் வாய்த்திருக்கின்றன..." என்று பூவைச் சூட்டிவிட்டு அவளிடம் சொல்ல வேண்டும் என்பதாகத் தோன்றியது. அதற்கு அவன் தன்னிடம் என்ன பதில் சொல்வாள் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். "அப்படியானால் உங்களை நினைத்து நீங்கள் எனக்குக் கணவராகக் கிடைத்திருக்கிற சௌபாக்கியத்தை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக நான் இனிமேல் நாள் தவறாமல் பூச்சூடி மையிட்டுத் திலகமணிந்து மங்கலமாக விளங்குவேன்" என்று அவள் புன்னகையோடு மறுமொழி கூறுவாள் என்றும் கற்பனை செய்ய தோன்றியது அவனுக்கு. ஆனால் ஆஸ்பத்திரி எல்லையை அடைகிறவரை தான் இந்தக் கற்பனையெல்லாம் அவன் மனத்தில் நிகழ்ந்தது. ஆஸ்பத்திரிக்குள் போய் ஸ்பெஷல் வார்டில் நுழைந்த போதோ அங்கு மோகினியே இல்லையென்ற உண்மை மிகப் பெரிய ஏமாற்றமாக அவனை எதிர்கொண்டது.


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


உப்பு நாய்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

பெரு வாழ்வு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சுனிதா வில்லியம்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மொபைல் ஜர்னலிசம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

அகம், புறம், அந்தப்புரம்
இருப்பு உள்ளது
ரூ.1200.00
Buy

தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

துளசிதாசர் முதல் மீராபாய் வரை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மாயான் : ஹூலியோ கொர்த்தஸார்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ஒரு நாள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

அசடன்
இருப்பு உள்ளது
ரூ.1225.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-5
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

படுகைத் தழல்
இருப்பு இல்லை
ரூ.145.00
Buy

தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சுவை மணம் நிறம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சங்கமம்
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)