இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
15 வருடம்
ரூ.1180/-
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது

  புதிய வெளியீடு!48

     சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக உண்ணி என்ற பூச்சி அவற்றின் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல் சமூகத்தில் நல்லவர்களின் பொதுநலனை உறிஞ்சிக் கெடுக்கும் சில கெட்டவர்களும் மிக அருகிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

     பூபதி உயிரோடிருந்த வரையில் தன் மேல் வெறும் பொறாமையோடிருந்தவர்கள் எல்லாரும் இப்போது அதை ஓர் எதிர்ப்பாக வெளிப்படையாக மாற்றிக் கொண்டு செயல்படுவது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. முதல்வர், துணை முதல்வர், ஹெட்கிளார்க் எல்லோரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு காரணத்தால் அவனுக்குக் கெடுதல் செய்யக் காத்திருப்பவர்கள்தான். புதிய நிர்வாகியாகிய மஞ்சள்பட்டியாரோ அவனை அறவே வெறுத்து மனம் கொதித்துக் கொண்டிருப்பவர்.

     கெடுதல் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருப்பவர்களுக்குப் பயந்தும், நயந்தும் அமைவதனால் சமூகத்துக்குப் பொதுவான நன்மை எதுவும் கிடையாது. சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக 'உண்ணி' என்ற பூச்சிகள் அந்த மாடுகளின் உடலிலேயே அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும். அதைப் போல் சமூகத்தில் உள்ள நல்லவர்களின் பொதுவான நலத்தை உறிஞ்சிக் கொழுப்பதற்குச் சுயநல உண்ணிகளாகிய சில கெட்டவர்களும் மிக அருகில் இருப்பார்கள். அப்படிக் கெட்டவர்கள் மல்லிகைப் பந்தலிலும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி வியப்படைந்து விடவில்லை. அவன் கல்லூரி முதல்வரை அவருடைய அறையில் போய்ச் சந்தித்துவிட்டு வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் மறுபடி ஊழியன் தேடி வந்து அவனிடம் கொடுத்து விட்டுப் போன உறையில் இரண்டு பெரிய கடிதங்கள் இருந்தன. ஒரு கடிதத்தில் கல்லூரி நிர்வாகக் குழுவும் அதன் தலைவரும் முதல்வரும், சத்தியமூர்த்தி 'உதவி வார்டனாக' இருந்து இதுவரை தன் கடமைகளைச் சரிவரப் புரியவில்லை என்று கருதுவதாகவும், அவனை அந்தப் பதவியிலிருந்து உடனே நீக்குவதாகவும், அவனிடம் உள்ள விடுதி சம்பந்தமான காரியங்களை வார்டனிடம் 'சார்ஜ்' ஒப்படைத்து விட்டு விலகிவிட வேண்டும் என்பதாகவும் கண்டிருந்தது. இன்னொரு கடிதத்தில் ஏற்கெனவே முதல்வர் அவனிடம் கேட்டிருந்த 'எக்ஸ்பிளநேஷனுக்கு'ச் சரியான மறுமொழி கொடுக்கப்படவில்லை என்றும் அடுத்த நாள் காலைக்குள் இன்ன இன்ன குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்திய மறுமொழி கொடுத்தாக வேண்டுமென்றும் கண்டிருந்தது. சூழ்நிலை மிகவும் மனம் வெறுக்கத் தகுந்த முறையில் உருவாகிவிட்டதைப் பார்த்து அவன் கவலைப்படவில்லை. மறுநாள் அவன் கல்லூரி முதல்வருக்கு எழுதிய மறுமொழிக் கடிதம் இப்படி ஆரம்பமாகியிருந்தது.

     "என்னுடைய நினைவு, சொல், செயல் ஆகியவற்றின் நன்மை தீமைகளை உற்று ஆராய்ந்து கடுமையாகத் தாக்குவதற்கும், பாராட்டுவதற்கும், குத்திக் காட்டுவதற்கும் எனக்குள்ளேயே பாரபட்சமற்ற விமரிசகன் ஒருவன் இருக்கிறான். அந்த விமரிசகனுக்குத்தான் மனச்சாட்சி என்று பெயர். மற்றவர்களுடைய பொறாமையும் காழ்ப்பும் நிறைந்த விமரிசனத்தை விட என்னுள்ளேயே இருக்கும் இந்த உண்மையான விமரிசகனுடைய கருத்துக்குத்தான் நான் அதிகமான மதிப்பளிக்க முடியும். அப்படி மனச்சாட்சிக்கு மதிப்பளிக்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததில்லை; செய்ய நினைத்ததுமில்லை. விரிவுரையாளனாகவும், விடுதி உதவி வார்டனாகவும் இருந்து, நான் இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு விநாடியும் என்னுடைய காரியங்களை மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் நன்றாகத்தான் ஆற்றியிருக்கிறேன். என்னை உதவி வார்டன் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக நிர்வாகக் குழுவின் சார்பில் எழுதியிருக்கிறீர்கள். விலக்கவும், நீக்கவும் உங்களுக்குத் தாராளமாக அதிகாரம் உண்டு. எல்லாவற்றையும் செய்து முடிக்கும் அதிகாரமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டுதான் இதைச் செய்திருக்கிறீர்கள்..." என்று தொடங்கி அவன் எழுதியிருந்த பன்னிரண்டு பக்கக் கடிதம் மறுநாள் காலை முதல்வருடைய மேஜைக்குப் போய்ச் சேர்ந்தது. தற்செயலாக அன்று காலை அவன் கல்லூரிக்குள் நுழைந்த போது - காலையில் சர்க்கரை போடாத கசப்புக் காப்பியை விடுதியில் வழங்கியதாகவும் - சர்க்கரையைக் குறைத்துச் செலவழிக்க வேண்டுமென்று வார்டன் கூறியிருப்பதால் விடுதியின் ஊழியர்களை வற்புறுத்தி வினாவிய போதும் அவர்கள் சர்க்கரை தர மறுத்ததாகவும் சில மாணவர்கள் குறை தெரிவித்தார்கள். மாணவர்கள் கல்லூரி உணவு விடுதி சம்பந்தமான எந்தக் குறையை வந்து தெரிவித்தாலும் அதை சத்தியமூர்த்தி பொறுப்பாக உடனே நிவர்த்திச் செய்து மாணவர்களின் மனக்கசப்பைப் போக்கி விடுவான். அதனால் மாணவர்கள் சத்தியமூர்த்தியைத் தேடிக் கொண்டு வந்து எதை வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறிவிடும் என்கிற முழு நம்பிக்கையோடு வேண்டிக் கொள்வது வழக்கமாயிருந்தது. ஆனால் இன்றோ தேடி வந்திருந்த மாணவர்களே கேட்டுத் திகைக்கும்படியான ஓர் உண்மையை அவர்களிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி.

     "இளம் நண்பர்களே! கல்லூரி விடுதியில் வழங்கும் காப்பி சம்பந்தமாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற கசப்பை நான் இன்று மாற்ற முடியாமல் இருப்பதற்காகத் தயவு செய்து நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நேற்றுப் பகலிலிருந்து நான் இந்தக் கல்லூரியில் வெறும் தமிழ் விரிவுரையாளராகத்தான் இருக்கிறேன். விடுதி உதவி வார்டனாக இல்லை..."

     இதைக் கேட்டு மாணவர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது.

     "ஏன் சார்? நீங்களே வேண்டாமென்று விட்டு வீட்டீர்களா?"

     "இல்லை! அவர்களே வேண்டாமென்று விட்டு விட்டார்கள். என்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாகவும் நன்றாகவும் உங்களுக்கு உதவி செய்ய முடிந்த யாராவது ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கப் போவதாகக் கல்லூரி முதல்வர் கூறியிருக்கிறார். அதனால் நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்."

     "அப்படிச் சொல்லாதீர்கள் சார்! இந்தச் செய்தியைக் கேட்டு எங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது" என்று ஆத்திரப்பட்டுக் குமுறினான் ஒரு மாணவன். சத்தியமூர்த்தி ஒரு புன்முறுவலோடு அந்த மாணவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு மேலே நடந்தான். மாணவர்களின் நடுவே சத்தியமூர்த்திக்கு எவ்வளவு செல்வாக்கும், புகழும் உண்டு என்பது கல்லூரி முதல்வருக்குத் தெரியும். அதனால் தான் அவனை உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்கிய செய்தி எந்த விதமான பரபரப்புணர்ச்சியுடனும் மாணவர்களிடையே பரவிவிடாமல் அவர் கவனமாயிருந்தார். ஆனால் செய்தி எப்படியோ பரவிவிட்டது. லேடி டைப்பிஸ்ட், சத்தியமூர்த்திக்காக என்ன கடிதம் டைப் செய்யப்பட்டது என்ற இரகசியத்தைக் கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜிடம் சொல்லி எப்படியோ மாணவர்களிடையே முதல்வரும், நிர்வாகியும் சத்தியமூர்த்திக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பரவிவிட்டது. அதன் விளைவு இருந்தாற் போலிருந்து பெரிதாக விசுவரூபம் எடுத்தது. விடுதி மாணவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். திடீரென்று கல்லூரி முதல்வரே எதிர்பாராதபடி நண்பகல் உணவின்போது ஹாஸ்டல் உணவு விடுதிக்குள் ஒரு மாணவனும் நுழையவில்லை.

     உணவு மேஜைகளில் விரித்த இலைகளும் தண்ணீர் நிரம்பிய டம்ளர்களும் அப்படியே கிடந்தன. பரிமாறுகிறவர்களும், சமையற்காரர்களும் சாயங்காலம் வரை காத்திருந்து பார்த்தார்கள். மெஸ்ஸிற்குள் ஒரு மாணவன் கூட எட்டிப் பார்க்கவில்லை. சத்தியமூர்த்தியே மறுபடியும் உதவி வார்டனாக வேண்டுமென்பது விடுதி மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. நாளுக்கு நாள் இதே ஸ்டிரைக் இன்னும் தீவிரமாகியது. முதல் நாள் உணவு விடுதி சாப்பாட்டை மட்டும் பகிஷ்காரம் செய்த மாணவர்கள் மறுநாள் சத்தியமூர்த்தியின் வகுப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா ஆசிரியர்களின் வகுப்புக்களையும் கூடப் பகிஷ்காரம் செய்தார்கள். 'முதல்வரின் அநீதி ஒழிக' 'முதல்வர், சத்தியமூர்த்தி அவர்களிடம் நியாயமாக நடக்க வேண்டும்' 'உதவி வார்டனை மாற்றாதே' என்றெல்லாம் அங்கங்கே தட்டிகளிலும், சாலைகளிலும் சுண்ணாம்பினாலும் கொட்டை கொட்டையாக எழுதியிருந்தார்கள் மாணவர்கள். நான்கு நாட்களாக இதே நிலைமை நீடித்தது. கல்லூரி விடுதியில் சிற்றுண்டியும், பகல், இரவு உணவுகளும் நாடுவாரின்றி வீணாகச் சீரழிந்தன. "ஸ்டிரைக்கில் சேர்ந்திருக்கிற முதலாண்டு மாணவர்களை எல்லாம் 'செலக்ஷனில்' தொலைத்து விடுவேன், தொலைத்து! மரியாதையாக விடுதிக்குச் சாப்பிடச் செல்லுங்கள். ஒழுங்காக வகுப்புகளுக்கு வந்து சேருங்கள்" என்று பிரின்ஸிபல் மிரட்டியது பயன்படவில்லை. சத்தியமூர்த்தி மாணவர்களின் இந்த விதமான குமுறலையும் கொதிப்பையும் தடுக்க நினைத்தாலும் முடியவில்லை.

     'அவர்கள் நியாயத்துக்காகப் போராடுகிறார்கள். எனக்காக மட்டும் போராடவில்லை. அவர்களை நான் தடுத்தால் நானே கல்லூரி முதல்வர் செய்தது நியாயம் என்று ஒப்புக் கொள்வது போலாகும்!' என்பதாக எண்ணி அவன் அமைதியாக இருந்தான். நான்காவது நாள் மாலை முதல்வரும், நிர்வாகியும் இரகசியமாகச் சந்தித்து 'ஸ்டிரைக்கை எப்படி ஒடுக்குவது' என்று பேசி ஆலோசனை செய்து சத்தியமூர்த்திக்கு இன்னொரு குற்றச்சாட்டுக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். அதில் மாணவர்களை அவன் தான் 'ஸ்டிரைக்' செய்யத் தூண்டினான் என்றும், ஸ்டிரைக்கை வாபஸ் வாங்குவதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபடாவிட்டால் உடனே அவனை விரிவுரையாளர் பதவியிலிருந்தும் 'சஸ்பெண்ட்' செய்ய நேரும் என்றும் பயமுறுத்தியிருந்தார்கள்.

     'நான் யாரையும் எதற்கும் தூண்டவில்லை. நீங்கள் தான் உங்கள் செய்கைகளின் மூலம் அருமையான மாணவர்களை இப்படியெல்லாம் ஆவேசம் கொள்ளும்படித் தூண்டியிருக்கிறீர்கள். அவர்கள் கோருகிற நியாயத்தைத் தடுக்க எனக்கே உரிமை இல்லை. அவர்கள் உங்களிடம் நியாயம் கேட்கிறார்கள். நீங்கள் அதை அளிக்க முயற்சி செய்வது தான் அவர்களை ஸ்டிரைக்கிலிருந்து மீளச் செய்வதற்கு வழி' என்று கல்லூரி முதல்வருக்குச் சுருக்கமாகப் பதில் அனுப்பி விட்டான் அவன். ஆசிரியர்கள் சத்தியமூர்த்தியை அணுகி நின்றாலே கேடு வருமோ என்று அஞ்சினார்கள். மிகச் சில நாட்களில் அங்கே அவன் தனியானான். அவன் வந்து போகிற வழியும் யாரும் துணையற்ற தனி வழியாகியது.

     "இந்த பையனை வேலைக்காக 'இண்டர்வ்யூ' செய்யும் போதே பழைய நிர்வாகியிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொன்னேன். 'இவன் அரசியல் சம்பந்தம் உள்ளவனாக இருப்பானோ என்று சந்தேகமாக இருக்கிறது சார்! இந்த மாதிரி ஆட்களை உள்ளே விட்டுவிட்டால் 'ஸ்டிரைக்' எல்லாம் வந்து காலேஜ் குட்டிச் சுவராகி விடும். மாணவர்கள் பாழாகி விடுவார்கள்' என்று முட்டிக் கொண்டேன். அவர் கேட்கவில்லை. இப்போது நான் கிடந்து அவஸ்தைப் பட வேண்டியிருக்கிறது" என்று முதல்வர் வாய்க்கு வாய் பேசுகிறவர்களிடம் எல்லாம் சத்தியமூர்த்தியை அதி பயங்கரவாதியாக உருவாக்கிக் காட்ட முயன்று கொண்டிருந்தார். மற்ற மாணவர்கள் கல்லூரி வாயிலில் நின்று மறியல் செய்ததன் காரணமாகப் பெற்றோர்களுக்கும், முதல்வருக்கும், ஆசிரியர்களுக்கும் பயந்து வகுப்புக்களுக்குப் போக நினைத்த சில மாணவர்கள் கூட வாயிற் பக்கத்திலேயே தடுக்கப்பட்டார்கள். மஞ்சள்பட்டியாரும், கல்லூரி முதல்வரும் நிலைமை மிகவும் கடுமையாவதை உணர்ந்து ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு மேல் கல்லூரி அலுவலக அறையில் நீண்ட நேரம் கலந்து பேசி ஆலோசனை செய்தார்கள். கடைசியில் ஏழு ஏழரை மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தியின் அறைக்குச் சொல்லியனுப்பி அவனை வரவழைத்தார்கள். சத்தியமூர்த்தியைப் பயமுறுத்திப் பார்த்தார் மஞ்சள்பட்டியார்! ஏதோ ஆளடிமையாக வந்த வேலைக்காரர்களை மிரட்டுவது போல் அவனை மிரட்டினார்.

     "என்னைக்கிருந்தாலும் உன்னை இந்தக் காலேஜிலிருந்து சீட்டுக் கிழித்தால்தான் எங்களுக்கு நிம்மதி. நீ விவரம் தெரியாமே நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே. உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வைச்சுப்பிடுவேன்... தெரியுமா?"

     "முடிந்தால் செய்ய வேண்டியது தானே? அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று பாரதியார் பாடியிருக்கிறார்."

     "இதெல்லாம் மேடையிலே பேசு, அப்ளாஸ் கொடுப்பாங்க... பட்டம் வாங்கிட்டாப்பிலே ஆச்சா? மரியாதை, மண்ணாங்கட்டி ஒரு யழவும் தெரியறதில்லை..."

     "உங்களைப் போல யார் வேண்டுமானாலும் நிர்வாகியாக வந்துவிட முடியும்! ஆனால் என்னைப் போல் பதினைந்து ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்றவன் தான் ஓர் ஆசிரியராக வரலாம். இந்தத் தேசத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் புத்திசாலிகளான ஏழைகள் - முட்டாள்களாயிருக்கிற பசை உள்ளவர்களுக்குத் தலைவணங்க நேரிடுகிறது! நாங்கள் மிகவும் மலிவான விலைக்கு உங்களுக்கு கிடைத்து விடுகிறோம். என்ன செய்யலாம்?"

     "உனக்கு எத்தனை திமிர் இருந்தால் முதன் முதலா நான் நிர்வாகியா வந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பையன்களை நீ இப்படிக் கலகம் பண்ணத் தூண்டி விட்டிருக்க முடியும்? இரு! இரு! முதலில் உன்னைத் தொலைச்சிப்பிட்டு மறுவேலை பார்க்கிறேன்..." என்று கறுவினார் மஞ்சள்பட்டியார்.

     சத்தியமூர்த்தி மரியாதை தெரியாத அந்த மனிதனிடம் அதற்கு மேலும் நின்று பேசிக் கொண்டிருக்க விரும்பாமல் அங்கிருந்து தானாக வெளியேறிவிட்டான். அன்றிரவே ஹாஸ்டலின் ஒரு மூலையிலிருந்த பழைய கூரை 'ஷெட்' ஒன்றுக்குத் தீ வைக்கத் தாமே ஏற்பாடு செய்து அதை நன்றாக எரியவிட்ட பின் - இரவு பதினொரு மணிக்கு மேல் மாணவர்களில் சிலரை உடன் அழைத்துக் கொண்டு சத்தியமூர்த்தியே அங்கு வந்து அந்த கூரை ஷெட்டுக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகவும் - அவர்கள் 'சத்தியமூர்த்திக்கு ஜே!' என்று கூவிக் கொண்டு நெருப்பு வைத்ததாகவும் - மல்லிகைப் பந்தல் போலீசுக்குத் தந்திரமாக ரிப்போர்ட் செய்தார் மஞ்சள்பட்டியார். இரண்டு சமையற்காரர்களும், ஓர் இரவுக் காவற்காரனும்... 'சத்தியமூர்த்திக்கு ஜே!' என்று கூவியபடியே மாணவர்கள் இரவில் வந்து நெருப்பு வைத்ததைப் பார்த்ததாகவும் அப்போது சத்தியமூர்த்தியும் அவர்களோடு உடன் இருந்ததாகவும் சாட்சியங்கள் எழுதிக் கொடுத்திருந்தார்கள்.

     தீ விபத்து என்ற வஞ்சக நாடகம் நடந்த தினத்தன்று விபத்து முடிந்த இரவுக்குப் பின் மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிளும் லேக் அவின்யூவில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடிக் கொண்டு வந்த போது குமரப்பன் தான் அவர்களை முதலில் பார்த்து வரவேற்க நேர்ந்தது. சத்தியமூர்த்தி அப்போது குளியலறைக்குள் பல் விளக்கிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர்களையும், இன்ஸ்பெக்டரையும் வரவேற்ற குமரப்பனிடம் அவர்கள் தாங்கள் அங்கே வந்திருக்கும் காரியத்தைச் சொன்ன போது, "இது என்ன ஐயா அநியாயப் பழியாயிருக்கிறது? நேற்றிரவு ஒன்பது மணியிலிருந்து என் நண்பன் சத்தியத்தோடு நான் இதே அறையில் தான் விடிய விடிய இருக்கிறேன். அவன் எப்படி இங்கிருந்து ஹாஸ்டலுக்கு வந்து மாணவர்களைக் கூரை ஷெட்டிற்கு நெருப்பு வைக்கும்படி தூண்டியிருக்க முடியும்? அவன் தான் என்னோடு இங்கேயே இருந்தானே?" என்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் குமரப்பன் வாதாடினான். இன்ஸ்பெக்டரோ சத்தியமூர்த்தி மாணவர்களைத் தூண்டி நெருப்பு வைக்கச் சொல்லியதற்குச் சாட்சிகள் இருப்பதாகக் கூறினார். குமரப்பனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் வாதாடிக் கொண்டிருக்கும் போது சத்தியமூர்த்தியே பல் விளக்கி மிகம் கழுவிக் கொண்டு குளியல் அறையிலிருந்து வெளியே வந்து விட்டான்.


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்


பிறகு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

தமிழகத்தில் ஆசீவகர்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

இலக்குகள்!
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மர்லின் மன்றோ
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

கேள்விகளே பதிலாகும்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மாபெரும் தமிழ்க் கனவு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

பட்டத்து யானை
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

தமிழ்நாட்டு வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நிஜமாகா நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

பிறந்த நாள் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

சிங்களன் முதல் சங்கரன் வரை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

படுகைத் தழல்
இருப்பு இல்லை
ரூ.145.00
Buy

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)