http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




49

     தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகவும் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிற வரை சூதாட்டத்தைப் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது.

     இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை 'அரெஸ்ட்' செய்து கொண்டு போக வந்திருப்பதாகக் கூறினார். "என்ன காரணத்துக்காக என்னை அரெஸ்ட் செய்ய வந்திருக்கிறீர்கள்?" என்று சிறிதும் பதறாமல் நிதானமாக அவரை வினவினான் சத்தியமூர்த்தி. இன்ஸ்பெக்டர் காரணத்தைக் கூறிய போது, 'நீ விவரந் தெரியாம நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே! உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வச்சுப்பிடுவேன் தெரியுமா?' என்று முன் தினம் ஜமீந்தார் தன்னைக் கூப்பிட்டு மிரட்டியிருந்ததைச் சத்தியமூர்த்தி நினைவு கூர்ந்தான். தம்முடைய பயமுறுத்தலை ஜமீந்தார் இப்போது இப்படி நிரூபித்து விட்டார் என்று அவனுக்குப் புரிந்தது. 'பணபலமும், அதிகார பலமும் நியாயத்துக்கு எதிராய் எப்படி வலுவாக எதிர்த்துக் கொண்டு வந்து நிற்கின்றன?' என்பதை நினைத்த போது அந்தக் கணத்தில் சத்தியமூர்த்திக்கு இந்த உலகத்தின் மேல் கோபம் வரவில்லை. சிரிப்புத்தான் வந்தது. 'திரைப்படங்களிலும், நாவல்களிலும் தான் கதாநாயகர்களுக்கு எதிராக அளவு மீறிக் கெடுதல் செய்கிற கொடியவர்கள் வருவார்கள்' என்று அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வான் குமரப்பன். வாழ்க்கையில் கண்ணெதிரிலேயே அப்படிப்பட்ட கொடியவர்கள் உண்டு என்பதை மஞ்சள்பட்டியார் இப்போது நிதரிசனமாகக் காண்பித்து விட்டார்.

     குமரப்பன் அங்கு வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை அரஸ்ட் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அவசியமானால் குமரப்பன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் வந்து ஜாமீனில் சத்தியமூர்த்தியைத் திருப்பி அழைத்துக் கொண்டு போகலாமென்று அந்த இன்ஸ்பெக்டர் விரைவாகப் பேச்சை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டார். போலீஸ்காரர்கள் புடைசூழ இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் விலங்கு மாட்டப்படாத கைதியாய் - ஆனால் அதே சமயத்தில் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் - பல்லாயிரம் விலங்குகள் விழுந்து அழுத்தி உறுத்துவதைப் போன்ற கூச்சத்தோடு சத்தியமூர்த்தி படியிறங்கி நடந்து சென்ற போது மல்லிகைப் பந்தலின் அழகிய வீதிகளில் பொழுது நன்றாக விடிந்திருந்தது. மனிதர்கள் நடமாடத் தொடங்கியிருந்தார்கள். செய்யாத குற்றத்திற்காக அநியாயப் பழி சுமத்தப் பெற்றுப் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் தன் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்திவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்க மன விருப்பமில்லாமல் வெறுத்தாற் போல் தலைகுனிந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஜாமீன் கொடுத்துத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்காகப் பின்னால் சென்று கொண்டிருந்த குமரப்பனோடு ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும், அறையில் உடனிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூடச் சென்றார்கள். மல்லிகைப் பந்தலைப் போல் சிறிய நகரம் ஒன்றில் பலருக்கு அறிமுகமான கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைப் போலீஸ்காரர்கள் தெரு வழியே அழைத்துக் கொண்டு போனால் மக்கள் எவ்வாறு பரபரப்பாகக் கூடி நின்று கவனிப்பார்களோ அப்படிக் கவனிப்பதற்குச் சத்தியமூர்த்தியும் அன்று பாத்திரமானான். இவ்வாறு போலீஸ்காரர்களால் அவன் தெரு வழியே அழைத்துக் கொண்டு போகப்படும் காட்சியைக் கண்டவர்களில் சில மாணவர்களும் இருந்தார்கள்; மாணவிகளும் இருந்தார்கள். மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய ஊரில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்திலிருந்து காய்கறிக் கடை வாசலில் நடைபெறுகிற சிறிய பூசல் வரை எதுவுமே இரகசியமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக அந்த ஊரிலிருந்து தினசரிப் பத்திரிகைகள் எதுவும் பிரசுரித்து வெளியிடப்படுவதில்லை. தினப் பத்திரிகை இருந்திருந்தாலோ, 'விடுதிக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகத் தமிழ் விரிவுரையாளர் கைது' என்று சாயங்காலப் பதிப்பிலேயே கொட்டை எழுத்துக்களால் அச்சிட்டு முதற் பக்கத்தில் தலைப்பிலேயே வந்துவிடும். அத்தனை அவசரமாகச் செய்தி எங்கும் பரவிவிட்டது. சத்தியமூர்த்தியும் உடன் வந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷன் இருந்த சாலையை நெருங்கிவிட்ட சமயத்தில் அந்த நிலையில் அங்கே சந்திப்பதற்கு மனம் கூசக்கூடிய ஒருத்தியைச் சத்தியமூர்த்தி எதிர்பாராமல் அங்கே சந்தித்து விடும்படி நேர்ந்தது. மல்லிகைப் பந்தல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதற்காகக் கீழ்நோக்கி இறங்குகிற மலைச் சாலையும், சற்றே மேடான இடத்தில் உள்ள பூபதியின் பங்களாவுக்காக மேல்நோக்கி ஏறுகிற மலைச்சாலையும் 'வி' என்ற ஆங்கில எழுத்தைச் சாய்த்து வைத்தாற் போல் அருகருகே இருந்ததனால் தந்தையை இழந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பின்பு வீட்டிலிருந்து காரில் எங்கோ புறப்பட்ட பாரதி - கீழ்ப்புறத்துச் சாலையில் போலீஸ்காரர்கள் புடைசூழச் சத்தியமூர்த்தி செல்வதைப் பார்த்துவிட்டாள். அவனும் அவளுடைய காரைப் பார்த்தான். உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுத் துடிக்கும் நெஞ்சுடன் பாரதி கீழே இறங்கி நின்று பார்த்தாள்.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu49.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs