54

     அதிகமாக அன்பு செய்கிறவன் அதிகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது.

     "என்னடா, உன் அப்பா திடீரென்று கோபமாக வந்தார். திரும்பிப் போகும் போதும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போகிறாரே? ஏன் இப்படி வந்ததும் வராததுமாக உடனே திரும்பிப் போய் விட்டார்?" என்று வந்து விசாரித்த நண்பன் குமரப்பனுக்குத் தன் தந்தை வந்துவிட்டுப் போனக் காரியத்தையும் நடந்தவற்றையும் விவரித்தான் சத்தியமூர்த்தி. அதைக் கேட்டுவிட்டு குமரப்பன், "நல்ல காரியம் செய்தாய்! எதிலாவது கையெழுத்து வாங்கிக் கொண்டு உன்னை நிரந்தரமாகக் கம்பி எண்ண வைக்க முயலுகிறார்கள். கவனமாக விழித்துக் கொண்டிரு. தூங்கிப் போய்விடாதே. ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தானே உன் தந்தையைக் காரில் இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனார்கள்! நான் கடையிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். திரும்பிப் போகிற போதும் அதே கார் தான் வந்து அவரை ஏற்றிக் கொண்டு போகிறது" என்று குமரப்பன் சத்தியமூர்த்திக்கு விவரத்தைக் கூறி எச்சரித்து விட்டுப் போனான்.


கடல் நிச்சயம் திரும்ப வரும்
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

புத்ர
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

மனதோடு ஒரு சிட்டிங்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

ராட்சசி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

கேள்விக்குறி
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

எங்கு செல்கிறோம்?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

சொல்லெரிந்த வனம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ஆன்லைன் ராஜா
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

இலக்குகள்!
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

வானம் வசப்படும்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

நோ ஆயில் நோ பாயில்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

நளபாகம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

பிறகு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

கிராமத்து தெருக்களின் வழியே...
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy
     முதன் முதலாகத் தான் வேலை பார்க்கிற ஊருக்குத் தந்தை தன்னைத் தேடி வர நேர்ந்து அதுவும் இப்படி அரைகுறைச் சந்திப்பாய் ஆகி முறிந்து போய்விட்டதே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி வேண்டாதவர்கள் தனக்கு விரித்த வஞ்சக வலையைத் தான் அறுத்தெறிந்துவிட்ட பெருமையையும் அவன் இப்போது தன்னுள் உணர்ந்திருந்தான். சில நாட்களாக அவன் மனம் ஓய்வு ஒழிவில்லாமல் எண்ணப் போராட்டங்களில் மூழ்கியிருந்தது. 'நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரிதான்' என்ற மனப்பான்மையோடு தன்னை மட்டும் தப்பித்துக் கொள்ள விரும்பாமல், எல்லாருடைய நியாயத்துக்காகவும் பொறுமையோடு காத்திருந்தான் அவன். பொறுமையிழந்து மனம் கொதித்துக் குமுறும் படியான சோதனைகள் எல்லாம் வந்தன. அளவற்றுத் துன்பப்பட நேர்ந்த சமயங்களில் எல்லாம் அவற்றிலிருந்து விடுபட்டு ஓடிவிட மட்டும் தவிக்கிற சமுதாயக் கோழையாக இருந்து விடாமல் அவன் மிக நிதானமாகச் சிந்தித்திருக்கிறான். இன்றும் அதே நிதானத்தோடுதான் இருந்தான் அவன். தன்னிடம் தந்தை கையெழுத்துப் போடச் சொல்லி நீட்டிய தாளைக் கிழித்தெறிந்த மறுகணமே தான் சற்றே நிதானம் தவறி ஆத்திரப்பட்டு விட்டோமோ என்று உணர்ந்து அவனால் வருந்தாமல் இருக்க முடியவில்லை. தந்தை வந்ததும், இரைந்ததும் முடிவில் கோபத்தோடு திரும்பிப் போனதும் - குமரப்பன் விசாரித்துவிட்டுச் சென்றதற்கு அப்புறம் கூட நெடுநேரம் அவன் நினைவைக் கலக்கிக் கொண்டிருந்தன. பொழுது சாய்கிற நேரத்துக்கு குமரப்பன் கடையை அடைத்துக் கொண்டு மேலே வந்த பின் நண்பர்கள் இருவரும் லேக் அவின்யூ கடைவீதி வழியாக உலாவப் புறப்பட்டார்கள். அப்போது தன் மனம் மேலும் அதிர்ந்து கலங்கும்படியான ஒரு நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தி அங்கு எதிர்கொள்ள நேர்ந்தது.

     கடைவீதியிலிருந்த பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் ஜமீந்தாரைப் பின் தொடர்ந்து மோகினி காரிலிருந்து கீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியின் தந்தையும் கண்ணாயிரமும் கூட அவர்களோடு உடன் வந்திருந்தார்கள். ஜமீந்தார் ஜவுளிக் கடையில் படியேறி உள்ளே நுழைந்து விட்ட பின்பும் கூட மோகினி கார் அருகிலிருந்து நகராமல் கண்கலங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அப்படிப் பின் தங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவளைத் தன் தந்தை அருகிலிருந்து பயபக்தியோடு கடைக்குள் வருமாறு அழைப்பதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'ஜமீந்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரைக் காரிலே மதுரையிலேருந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு! வந்தேன்?' என்று தந்தை பகலில் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் போது மதுரையிலிருந்து அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டது மோகினியைத்தான் என்பது இப்போது சத்தியமூர்த்திக்குப் புரிந்து விட்டது. 'அவங்க பரம்பரை பரம்பரையா ஜமீந்தார் குடும்பத்துக்குப் பழக்கம். நீ அந்தப் பெண்ணைப் பார்க்கிறதோ பேசறதோ கொஞ்சம் கூட நல்லாயில்லே. வீணா ஜமீந்தாரோட கோபத்துக்கு ஆளாகாதே' என்று மதுரையிலே தன்னை கண்டித்திருந்த தந்தை அதே மோகினியை ஜமீந்தாருடைய கட்டளையின்படி இப்போது மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்திருப்பதைத் தெரிவிக்கத் தயங்கி, யாரையோ அழைத்து வந்திருப்பதாகக் கூறியதை நினைத்து அவன் சிறிதும் வியப்படையவில்லை. ஜமீந்தார் சொல்லித் தன் தந்தை மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்து வந்திருப்பதாக இப்போது அவனால் தெளிவாகவும், பிரத்தியட்சமாகவும் புரிந்து கொள்ள முடிந்தது.

     குமரப்பனோடு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி பட்டு ஜவுளிக்கடை வாசலில் இந்தக் காட்சியைக் கண்ட போது நடையில் வேகம் குறைந்து தளர்ந்து நின்று விட்டான். குமரப்பனுக்கு இந்த எதிர்பாராத சந்திப்பு ஆச்சரியத்தை அளித்தது. அவனும் அப்படியே திகைத்துப் போய் நண்பனுக்கு அருகில் நின்று விட்டான். இந்த நிலையில் மோகினி மிகவும் பரிதாபத்துக்குரியவளாகத் தென்பட்டாள். காரிலிருந்து இறங்கித் தயங்கி நின்ற அவளுடைய கண்களில் அழுகையும் கண்ணீரும் முந்திக் கொண்டு வந்தன. 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் தெரியாதபடி மூடி மறைத்துக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அழுகை துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு அந்தக் கடைக்கு வருவதற்குப் பிரியமில்லாமல் வற்புறுத்தப்பட்டு பலவந்தமாகத் தான் அழைத்துக் கொண்டு வரப்பட்டிருப்பதைப் புலப்படுத்திக் கொண்டு நடைப்பிணமாய் நின்றாள் அவள்.

     ஜமீந்தாரும், கண்ணாயிரமும் காரிலிருந்து இறங்கி... அப்படி அவர்களைப் போன்ற வசதியும் செல்வாக்கும் உள்ள புள்ளிகளுக்குக் கடைக்காரர்கள் வழக்கமாக அளிக்கும் மிக ஆடம்பரமான 'ஸிவிக் ரிஸப்ஷனை'யும் ஏற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டார்கள். மோகினி மட்டும் பிரமை பிடித்தாற் போல் அழுது கொண்டு நின்றாள். "வாங்கம்மா! ஐயா உள்ளாரக் காத்திருக்காரு" என்று கடைக்காரர்களும் காரருகே வந்து அவளை வியாபார விசுவாசத்தோடு மிகப் பணிவாக அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசியில் ஜமீந்தாரே உள்ளேயிருந்து எழுந்திருந்து வந்து கூப்பாடு போடவே, மோகினி தயங்கித் தயங்கிப் படியேறி கடைக்குள் சென்றாள். அந்த நிலையில் அவள் தன்னை அங்கே பார்த்துவிடாதபடி அவசரமாகக் கடைவீதியைக் கடந்து மேலே சென்று விட வேண்டும் என்று சத்தியமூர்த்தி எண்ணியிருந்தான். ஆனால் அவனுடைய எண்ணம் கடைசி விநாடியில் வீணாகிவிட்டது. படியேறிக் கடைக்குள் நுழைவதற்காகத் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த மோகினி கடைசிப் படியில் ஏறிவிட்டுத் தற்செயலாக வீதிப்பக்கம் திரும்பியவள் - அவளுடைய பார்வையில் படக்கூடாது என்பதற்காகவே - அப்போது அவசர அவசரமாக வீதியைக் கடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியையும் குமரப்பனையும் பார்த்து விட்டாள். அந்தக் கணத்தில் அவளுடைய நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தன்னையறியாமலே கால்கள் விரைந்து முந்தியதன் காரணமாகத் திரும்பி ஒரு படி கீழே இறங்கவும் செய்துவிட்டாள் அவள். அப்படியே கீழே இறங்கி வீதியில் ஓடிப்போய் விரைந்து நடந்து கொண்டிருக்கும் சத்தியமூர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து, 'தெய்வமே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கதற வேண்டும் போலத் தவித்தது அவள் உள்ளம். ஆசைப்பட வைக்கும் அந்தப் பாதங்களில் ஓடிப் போய் வீழ்ந்து கதற வேண்டுமென்று அவள் நினைத்த அதே சமயத்தில் முன்புறம் நின்ற ஜமீந்தார் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டார்.

     பட்டு ஜவுளிக்கடை வாசலை ஒட்டி நடந்த போது அவள் தன்னைப் பார்த்து விட்டாள் என்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். ஆனாலும் அவன் வேகமாக நடந்து கடையைக் கடந்து விட்டான். அவன் மனத்தின் ஒரு பகுதி அவளுடைய துயரங்களை நினைத்து மௌனமாகக் கலங்கி அழுது கொண்டிருந்தது. இன்னொரு பகுதி அவள் இப்படியெல்லாம் ஜமீந்தாருடைய கைப்பாவையாக - அவருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இயங்குவதைப் பற்றி நினைத்து நினைத்து உள் நெருப்பாய்க் குமுறிக் கொண்டிருந்தது. அவள் மேல் அளவு கடந்த பிரியமும் நம்பிக்கையும் வைத்துவிட்ட காரணத்தினால் அவள் இன்னொருவனுக்கு அடிமைப்படுகிறாள் என்று தெரிகிற போதெல்லாம் மனம் குமுறினான் சத்தியமூர்த்தி. யார் மேலும் மனம் வைத்து அன்பு செய்யாதவரை நாம் இன்னொருவருக்காகக் கவலைப்பட்டுக் கலங்கி அழ வேண்டியதில்லை. மனம் வைத்து அன்பு செய்ய ஆரம்பித்து விட்டால் அந்த அன்புக்கு ஆளாகிறவரைப் பற்றிய கவலைகளையும் நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. அதிக அன்பு செய்கிறவன் அதிகமாகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது. மோகினியைச் சந்தித்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் உடன் சென்ற குமரப்பன் மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

     "மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்திருப்பது உனக்கே இப்போதுதான் தெரியுமா சத்தியம்?"

     பதில் பேச முடியாமல் மனம் கலங்கிப் போயிருந்த சத்தியமூர்த்தி 'ஆமாம்' என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். குமரப்பனே மேலும் பேசினான்.

     "பாவம்! அந்தப் பெண் அழுதுகொண்டே படியேறிக் கடைக்குள் போகிறாள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மிகவும் மலிவாக விலைக்கு வாங்கிவிட முயல்கிற இந்த ஜமீந்தாரை நினைத்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது; ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை விலைக்கு வாங்கி விடுவதற்குப் பட்டு, தங்கம், வைரம், கார், பங்களா - இவையெல்லாம் மிகவும் சாதாரண விலைகள். சாதாரணமான விலைகளைக் கொண்டு அசாதாரணமான அன்பைப் பேரம் பேசி வாங்கிவிட முடியும் என்று நினைப்பதே பேதமை..."

     "அப்படிச் சொல்வதற்கில்லை, குமரப்பன்! இந்த மோசக்கார உலகத்தில் சில சமயங்களில் அசாதாரணமான பொருள்களும் கூடச் சந்தர்ப்ப வசத்தினால் சாதாரண விலைக்குப் போய்விடுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் அநுதாபப்பட்டுத் தவிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?" என்று உள்ளங்கிய ஆத்திரத்தோடு சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு நடப்பதை நிறுத்திவிட்டு நண்பனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் குமரப்பன். மோகினியின் அன்பு சாதாரணமான விலைக்குப் போய்விடும் என்று தான் ஒரு கருத்தைக் கூற நேர்ந்து சத்தியமூர்த்தி, அதைக் கடுமையாக மறுத்திருந்தால் குமரப்பன் அப்போது சிறிதும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான். சத்தியமூர்த்தியே அப்படிக் கூறியதைக் கேட்டுத்தான் அவனுக்குத் திகைப்பாயிருந்தது. மோகினி ஜமீந்தாரோடு ஜவுளிக் கடைக்கு வந்ததை விரும்பாமல் சத்தியமூர்த்தியின் மனத்தில் கோபமோ - ஆத்திரமோ மூண்டிருக்க வேண்டும் என்று குமரப்பனுக்குப் புரிந்தது. அவன் நண்பனைச் சமாதானப்படுத்த விரும்பினான்.

     "உன் கோபம் காரணமற்றது சத்தியம்! அவள் என்ன செய்வாள் அபலைப் பெண்! பாவம்! அவளுடைய நிலையை எண்ணி அநுதாபப்பட வேண்டிய நீயே இப்படிப் பேசுவதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..."

     சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நண்பனுக்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. பேசாமல் நடந்தான். ஜமீந்தாருடைய உத்தரவுக்குப் பயந்து மனப்பூர்வமாக ஆசைப்பட்டு மல்லிகைப் பந்தலுக்கு அவள் வந்திருப்பாள் என்றோ, விருப்பத்தோடு பட்டுப்புடவைக் கடைக்குப் புறப்பட்டிருப்பாள் என்றோ சத்தியமூர்த்தியும் கூடத் தன் அந்தரங்கத்தில் நம்பவில்லை. அவளுடைய இதயம் தன்னிடம் தான் இருக்கிறதென்று அங்கீகரித்துக் கொண்டிருந்தும் இத்தகைய வேளைகளில் மனம் தடுமாறிக் குமுறாமல் இருக்க முடியாதபடி தானும் உணர்ச்சிகளால் உந்தப்படுவதைத் தவிர்க்க இயலாது தவித்தான் சத்தியமூர்த்தி. அநுதாபமும், கோபமும் கலந்த இந்த விநோத உணர்ச்சிக்கு அவன் பலமுறை ஆளாகியிருக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த உணர்ச்சி மோகினியின் காரணமாகவே தான் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அநுதாபத்தை மறுபுறமாகக் கொண்ட ஆத்திரம் அன்புடையவர் மேல் தான் ஏற்பட முடியும். சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்த வேளையில் பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் அத்தகையதுதான். மனம் குழம்பியிருந்த இந்த விநாடியிலும் கூட மதுரையிலிருந்து நவராத்திரி விடுமுறை முடிந்து தான் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் கோச்சடையிலுள்ள மஞ்சள்பட்டி அரண்மனையில் மோகினிக்கும் தனக்குமிடையே நிகழ்ந்த ஓர் உருக்கமான உரையாடல் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. அவளைப் பற்றிய அந்தப் பழைய நினைவு இப்போதும் அவனுக்கு ஆறுதலாயிருந்தது.

     'உன் மேல் கோபப்பட்டு என்ன பயன் மோகினி! நீ ஒரு பேதை! உன்னைச் சந்திக்காமல் இருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஓர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கணகலங்க நேர்ந்திருக்காது' என்று தான் கூறியவுடன், 'அப்படிச் சொல்லாதீர்கள்! உங்களைச் சந்திக்காமலிருந்திருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது' என்பதாக அவள் மறுமொழி கூறிவிட்டு அழுத உருக்கமான நிகழ்ச்சி இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை சாருதத்தன் கதையை மோகினிக்குக் கூறிய சம்பவமும் நினைவு வந்து அவன் மனத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. நண்பன் குமரப்பனோடு நடந்து சென்றவாறே சத்தியமூர்த்தி இப்படி மனம் வருந்தி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இதே வேளையில் பட்டுப்புடவைக் கடைக்குள் நுழைந்த மோகினி தூண்டிற் புழுவைப் போல் அங்கு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். ஜமீந்தாரோ அவள் மனத்தைக் கவர வேண்டுமென்பதற்காகக் கடைக்காரனிடம் சொல்லி விதம் விதமான பட்டுப்புடவைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தார். அவளுடைய மனமோ கடைக்குள் நுழைவதற்கு முன் சத்தியமூர்த்தியை அந்த வீதியில் சந்தித்த ஞாபகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. அப்போது ஒரு கணம் சத்தியமூர்த்தியின் பார்வையும் தன் பக்கம் திரும்பிக் கவனித்ததும் அவளுக்குத் தெரியும்.

     'தான் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் உடன் வர ஜவுளிக்கடைக்குள் நுழைவதைப் பார்த்து அவர் என்ன நினைத்துக் கொண்டு போகிறாரோ?' என்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை. 'ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அவருக்குப் பிடிக்காது! நான் இவர்களோடு எதற்காக மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்தேன்? எப்போது வந்தேன்? எப்படி வந்தேன்? என்றெல்லாம் சந்தேகப்பட்டு அவராகவே தம் மனத்தில் ஏதாவது கற்பனை செய்து கொண்டு என் மேல் ஆத்திரப்படப் போகிறாரே?' என்று எண்ணிப் பயந்த போது, மோகினியின் அந்தப் பயத்தில், 'சத்தியமூர்த்தி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதே' என்ற சுயநல நோக்கமே இல்லை. ஓர் இந்துக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவி அடங்கி அஞ்ச வேண்டிய நியாயமான அடக்கம் - பரம்பரைப் பரம்பரையாகப் பெண்குலத்திலேயே 'இது தன் எல்லை' என்று புரிந்து அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட அடக்கம் தான் அப்போது மோகினியின் பயமாகவும் இருந்தது. மாலையில் திடீரென்று இருந்தாற் போலிருந்து புடவைக் கடைக்குப் புறப்பட வேண்டும் என்று கண்ணாயிரம் கூறிய போதே அவளுக்கு வெறுப்பாயிருந்தது. "அப்பா காலமாகி அதிக நாளாகவில்லை. நான் உங்களோடு புடவைக் கடைக்கு வந்தால் நன்றாயிருக்காது அக்கா! நீங்கள் மட்டும் போய்விட்டு வாருங்கள்" என்று சொல்லிப் பாரதி உடன் வர மறுத்து விட்டாள். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் 'போர்டிகோவில்' காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு அவளையும் அழைத்து வருமாறு அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரை உள்ளே துரத்தியிருந்தார்கள். ஜமீந்தாருக்குப் பயந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்த போதே உணர்ச்சி செத்துப் போய்க் கொலைக் களத்துக்குப் புறப்பட்டு வருவது போல் வந்து சேர்ந்திருந்தாள் அவள். அவளைப் புடவைக் கடைக்கு அழைத்துப் போய் ஊரார் மெச்சும்படி வாங்கிக் கொடுத்து மகிழச் செய்ய வேண்டுமென்று ஜமீந்தாருக்கு ஆசையாயிருந்தது. அந்த ஆசையை அவள் வெறுத்தாலும் வெளிப்படையாகத் துணிந்து மறுக்க முடியவில்லை. அநியாயமாக ஜமீந்தாருக்குக் கோபம் வந்து பிறர் முன்னிலையில் ஒரு பெரிய கலகமும் கூப்பாடும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவாவது அவள் அவரோடு கடைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

     கடைவீதியில் சத்தியமூர்த்தியை ஒரு கணம் பார்க்க நேர்ந்த போது அவளுடைய வேதனை இன்னும் அதிகமாகி விட்டது. பார்த்த புடவைகளும் பிடிக்கவில்லை. மனத்துக்குப் பிடித்தவர் ஒரு கந்தல் துணியை வாங்கிக் கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னாலும் அது சிறப்பாயிருக்கும். மனத்துக்குப் பிடிக்காதவர் வைரத்தால் இழைத்துப் பொன்னால் நெய்த பட்டுப்புடவைகளை மலையாக வாங்கிக் கொடுத்தாலும் எடுத்துக் கட்டிக் கொள்கிற போது ஒவ்வொரு பட்டும் உடம்பிலே பாம்பாக நெளிவது போல் அருவருப்பாயிருக்கும். அவள் அங்கே பார்த்த பட்டுப் புடவைகளில் எதுவுமே தனக்குப் பிடித்ததாகச் சொல்லவில்லை. ஜமீந்தாரும் கண்ணாயிரமும் அவர்களுடைய இரசனைக்கெட்டிய வரையில் எந்தெந்த நிறத்திலோ பளீர் பளீரென்று மின்னும்படியான பட்டுப்புடவைகளைத் தேர்ந்தெடுத்து முடித்தார்கள். பில் வந்தது.

     இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேல் ஜமீந்தாரிடமிருந்து பணம் 'செக்'காகக் கடைக்காரர்கள் கைக்கு மாறியது. கடைக்காரர்கள், மூட்டை கட்டிக் கொடுத்த ஜவுளியைக் கணக்குப் பிள்ளைக் கிழவர் வாங்கிக் கொண்டு போய்க் காரில் வைத்தார். உயிரற்ற பொம்மையாய் இறங்கி நடந்து போய் மோகினியும் காரில் உட்கார்ந்தாள். பக்கத்தில் ஜமீந்தாரும் உட்கார்ந்து கொண்டார். மோகினி ஜமீந்தார் மேல் பட்டுவிடாமல் விலகிக் கதவோரமாக ஒட்டினாற் போலக் காரின் மறுகோடியில் உட்கார்ந்து கொண்டாள். அவள் விலகி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து உள்ளூரக் கோபம் குமுறினாலும் வெளிப்படையாக அருகில் உட்காரச் சொல்லி மிரட்டுவதோ, கோபிப்பதோ சாத்தியமில்லையாதலால் ஜமீந்தார் சிரமப்பட்டுப் பொறுமையாயிருக்கும்படி ஆயிற்று. கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் முன் ஸீட்டில் ஏறிக் கொண்ட பின் கார் புறப்பட்டது. பூக்கடை வாசலில், "ஒரு நிமிஷம் காரை நிறுத்து" என்று சொல்லித் தாமே கீழே இறங்கிய ஜமீந்தார் ஒரு பெரிய பொட்டலம் பூவை வாங்கிக் கொண்டு வந்து மோகினியிடம் நீட்டினார். மோகினி இரண்டு விநாடிகள் தயங்கிவிட்டு அதை வேண்டா வெறுப்பாய் இடது கையால் வாங்கிக் காரில் வைத்தாள். முன் கோபக்காரரான ஜமீந்தார் தம்முடைய ஆத்திரத்தின் போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளேயே எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தார். 'அவளுடைய பிரியத்தின் விலை என்னவாக இருக்க முடியும்?' என்று புரிந்து கொள்ள இயலாமல் தவித்தது அந்த ஜமீந்தாரின் முரட்டு இதயம்.


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்