http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




59

     ஒரு வேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்கள் தேவர்களாயிருப்பார்களோ என்னவோ?

     கண்ட காட்சியினால் மனத்தின் அமைதியும் நிதானமும் குலைந்து போய்ப் புயல் வேகத்தில் மின்னல் நுழைந்தாற் போல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த ஜமீந்தாரையும் அவருக்கு அருகிலே நின்ற மோகினியையும் கடந்து வீட்டிற்குள்ளே சென்றான் சத்தியமூர்த்தி. பாரதி உடல் நலமின்றிப் படுத்திருந்த அறையை அடைவதற்கு முன் உள்கூடத்தில் நேர் எதிர்புறத்துச் சுவரில் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் ஒரு கணம் தயங்கி நின்றான் அவன். முதலில் கவனிக்காமலிருந்து அவன் உள்ளே நுழைந்த போது மட்டுமே நிமிர்ந்து நோக்கி முறைத்துப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்த ஜமீந்தார் முகத்தை வேறு பக்கமாக வெறுப்போடு திருப்பிக் கொண்டார். 'வருவார் வருவார்' என்று ஆசையோடு காத்திருந்தவர் வந்து படியேறி உள்ளே நுழைந்ததும், பின்னால் ஓடிப்போய் உபசரிக்க முடியாமல் ஜமீந்தார் பக்கத்திலிருந்து தன் ஆவலை அடியோடு கட்டுப்படுத்திக் கொள்ளும்படி செய்துவிட்ட வேதனையோடு தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்த மோகினியின் பார்வை - உள் கூடத்தில் அவனுடைய கண்கள் மேலே மாட்டியிருந்த படங்களில் எந்தப் படத்தைப் பார்த்துத் தயங்கினவோ அந்தப் படத்தைப் பார்த்து அவள் தீயை மிதித்தவள் போலானாள். 'எப்போது அந்தப் படத்தை எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? யார் அதை அங்கே கொண்டு வந்து மாட்டினார்கள்?' என்பதொன்றுமே புரியாமல் அவளுக்குத் தலைசுற்றியது. 'என்ன அக்கிரமம் இது?' என்று கொதித்துக் குமுறும் மனநிலையோடு உள்ளே விரைந்தாள் அவள். நிலைக்கண்ணாடி அளவுக்குப் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த அந்த வண்ணப் புகைப்படத்தில் அவளும் ஜமீந்தாரும் கழுத்தில் ரோஜாப்பூ மாலையணிந்து மணமக்களைப் போல் அருகருகே நிற்பதாகத் தெரியக் கண்டு பாதாதி கேச பரியந்தம் நடுங்கினாள் அவள். 'கழுத்தில் ரோஜாப்பூ மாலையோடும் வாயிதழ்களில் நாணப் புன்முறுவலோடும் இப்படி ஒரு புகைப்படத்தை நான் எடுத்துக் கொண்டதே இல்லையே' என்று கொதிக்கும் மனத்தோடு அந்தப் படத்துக்குக் கீழே தயங்கி எரிமலையாய் நிற்கும் சத்தியமூர்த்தியை நெருங்கிய போது அவன் அவள் தன்னருகில் வந்து நிற்பதையே அருவருத்து வெறுக்கிறவனாகப் பாரதியின் அறையை நோக்கி விரைந்தான்.

     'என்ன சூழ்ச்சி இது? இந்த அநியாயத்தை யார் செய்தார்கள்? இதை இப்படியே இழுத்துக் கீழே தள்ளிச் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தால் என்ன?' என்பது போல் ஆத்திரம் பொங்கிட, அது உடைத்தெறிய முடியாத உயரத்தில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆற்றாமையும், அழுகையுமாகப் பாரதியின் அறைக்குள் மோகினி தயங்கித் தயங்கி நுழைந்தாள். மோகினி உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும், பாரதி தன் அருகே அமர்ந்து தன்னை விசாரித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம், "சார்! இதோ வாசல்பக்கமாக யார் வந்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்! உங்கள் மோகினி உங்களைப் பார்க்க வந்து நிற்கிறாள்..." என்று தன்னுடைய சொந்த ஆசாபாசங்களைத் தீர்மானமாகத் தியாகம் செய்துவிட்டு நிர்ச்சலனமான குரலில் சிரித்துக் கொண்டே கூறிய போது மோகினியின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காமல் வெறுப்போடு தலைகுனிந்து கொண்ட சத்தியமூர்த்தி, "தயவு செய்து மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் மோகினி என்று சொல்லுங்கள்!" என்று கோபத்தோடு மோகினிக்கும் கேட்கும்படியான குரலில் பாரதிக்குப் பதில் கூறினான். இந்தக் குத்தலான வார்த்தைகளைக் கேட்டு மோகினியின் தலையில் பேரிடி விழுந்தது போலாயிற்று. "யாரோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்! அந்தப் படத்தைப் பற்றி எனக்கு ஒரு பாவமும் தெரியாது!" என்று அப்போதே அவர் காலில் விழுந்து கதற நினைத்தாள் மோகினி. அந்த நிலையில் மிக அருகிலிருந்த அவளுடைய தெய்வத்துக்கோ அவள் அழுகை ஒரு சிறிதும் காதில் கேட்கவில்லை. பதற்றத்தோடு பதற்றமாக உள்ளே ஓடிப்போய் நடுங்கும் கைகளால் காப்பி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள் மோகினி. அப்போதுதான் பாரதியிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு திரும்பிப் புறப்பட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் எதிரே போய் பேச வார்த்தை எழாமல் தளர்ந்து போய்விட்ட நாவுடன் காப்பியை அவள் நீட்டிய போது, "இந்த உபசாரம் எல்லாம் நீங்கள் ஜமீந்தாருக்குச் செய்தால் போதும். நான் இங்கு என்னுடைய மாணவியைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் வந்தேன். உங்கள் கையால் காப்பி குடிக்க இங்கே வரவில்லை..." என்று ஆத்திரத்தோடு வெட்டினாற் போலப் பதில் சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தான் அவன். இதைக் கேட்டதும் மோகினியின் கையிலிருந்த காப்பி டவரா கீழே நழுவியது. பாரதிக்கோ ஒன்றுமே புரியவில்லை. சத்தியமூர்த்தி சாருக்கு இவ்வளவு கோபம் வந்து அவள் பார்த்ததே இல்லை. 'புயலைப் போல் வந்தேன். மின்னலைப் போல் மறைந்துவிட்டேன்' என்று 'ஷோரப் அண்ட் ரஸ்டம்' காவியத்தில் படித்திருப்பதையொப்பச் சத்தியமூர்த்தி வேகமாக வந்தார்; ஆத்திரமாகத் திரும்பிப் போய்விட்டார் என்று எண்ணியபோது அவளுக்கும் அழுகைதான் வந்தது.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu59.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs