http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




63

... தொடர்ச்சி ...

     அன்று அப்போது அந்த விநாடியில் தான் மிக மிக அழகாயிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. சரீரமே மணக்கும் மல்லிகைப் பூ மாலையாக மாறிக் கனமில்லாமற் போய்விட்டது போலிருந்தது. ஒரு கையில் வீணையும் மற்றொரு கையில் ஏடுமாக வெள்ளைத் தாமரைப் பூவில் வெள்ளைத் திருவுடை தரித்துச் சரஸ்வதி தேவி போல் யாரோ தெய்வம் நெஞ்சில் பிரசன்னமாகி, 'இன்னும் தாமதமேன் குழந்தாய்! புறப்பட்டு வந்துவிடு!' என்று அவசரமாகக் கூப்பிடுவது போல ஒரு பிரமை உண்டாகி, அந்தக் கணத்தில் அவளைப் புல்லரிக்க வைத்தது.

     இந்த உலகை மறந்து கொஞ்சம் நிம்மதியாகத் தூங்க வேண்டும் போலவும் அவளுக்கு ஆசையாயிருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. எங்கேயோ போக வேண்டும் போல் ஓர் அவசரத்தை உணர்ந்தாள். ஆனால் எங்கே போக வேண்டுமென்பதும் தெரியவில்லை. யாரையோ பார்க்க வேண்டும் போலப் பரபரப்பாகத் தவித்தாள். ஆனால் யாரைப் பார்க்க வேண்டுமென்றும் தெரியவில்லை. மீனாட்சியம்மன் கோயில் கோபுரம், பொற்றாமரைக் குளத்தருகே உள்ள கிளிக்கூண்டு மண்டபம், சங்கீத விநாயகர் கோவில் தெரு, தான் பிறந்து வளர்ந்து ஆளான வீடு, அந்த வீட்டுக் கூடத்தில்தான் தொழுவதற்கென்று ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து மாலைசூட்டி மோதிரம் அணிவித்தது, நாட்டரசன் கோட்டையிலிருந்து கலியாணம் கச்சேரி முடிந்து திரும்பும் போது நிலா இரவில் சாலையோரம் குடிசையில் சந்தித்த 'சுகவாசத்துத்' தம்பதிகள் எல்லாரும் தொடர்பாகவும், தொடர்பின்றியும், நனவு போலவும் கனவு போலவும் மாறி மாறித் தோன்றினார்கள். கடிகாரம் மூன்று மணியடித்து ஓய்ந்தது. காற்றும் குளிரும் அதிகமாயின. வெளியே மழை வரும் போல மேகங்கள் கறுத்துக் கூடியிருந்தன. மறுபடியும் எங்கோ சேவல் கூவியது. பாரதி தூக்கத்தில் ஏதோ புலம்பித் தணிந்தாள். தோட்டத்து மல்லிகைப் புதரில் மங்கிய நட்சத்திரங்களைப் போல் பூக்கள் தெரியத் தொடங்கின. ஒவ்வொரு பூவாகக் கீழே உதிர்ந்து பவழ மல்லிகை மரத்தடியில் பாய் விரித்தாற் போல வெண்மை பரவித் தெரிந்தது. மேஜை விளக்கை அணைத்து விட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள் மோகினி. தூக்கம் வரவில்லை. உடல் சோர்வாகவும் இலேசாகவும் இருந்தது. இருட்டிலேயே எழுந்து போய் அலமாரியிலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு - பின்பு தண்ணீர்க் கூஜாவைத் திறந்த ஓசையில் பாரதி விழித்துக் கொண்டு "யாரது?" என்று கேட்டாள். "நான் தான் மோகினி. தண்ணீர்த் தாகம் நாக்கை வறட்டுகிறது" என்று பதில் கூறிவிட்டுத் தண்ணீரும் குடித்த பின் பழையபடி சாய்வு நாற்காலியில் போய் உட்கார்ந்தவாறே மீண்டும் தூங்க முயன்றாள் மோகினி. மறுபடியும் பேய்த்தாகம். மோகினி இரண்டாவது முறையாகவும் இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்து போய் தண்ணீர் கூஜாவைத் திறந்து அதிலிருந்த தண்ணீரையெல்லாம் பருகினாள். தீராத தாகம் மூண்டுவிட்டது போல் அடிவயிற்றில் வெப்பம் எழுந்தது. உலகையே மறந்து நிம்மதியாக உறங்கிவிட வேண்டும் போல ஒரே சோர்வு. தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் மறுபடியும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஏதோ நினைப்புடன் பக்கத்து மேஜையில் இருந்த கடித உறைகளை எடுக்கக் கை நீட்டிய போது - அந்த உறைகள் கைக்கு எட்டாமல் மேஜை விளிம்பில் கைக்கெட்டுகிற மாதிரி இருந்த மாத்திரைப் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. நீட்டி எடுக்க முடியாமல் கைகள் அறவே சோர்ந்து கண்கள் இருண்டு வரவே நாற்காலியில் அப்படியே சாய்ந்து தூங்கினாள் அவள். மறுபடியும் ஒரு தெய்வீகமான பிரமை! வீணையும் கையுமாகக் கலைமகளே நேரில் வந்து, 'இன்னும் தாமதமேன் குழந்தாய்! புறப்பட்டு வந்துவிடு!' என்று அவசரமாக அழைப்பது போல் ஒரு தெய்வீகமான அழைப்பு அவள் காதில் கேட்டது. ஈரக்கூந்தலில் சொருகிய குடை மல்லிகை நன்றாக மணந்து அவள் நினைவில் இன்னும் பல்லாயிரம் மணங்களை நினைக்க வைத்தது. அந்த மணங்களின் நினைவில் மூழ்கி நித்தியமாகவும் சாசுவதமாகவும் அப்படியே விழியாமல் உறங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது மோகினிக்கு. அவள் உறங்கினாள். நிம்மதியாக இந்த உலகை மறந்து உறங்கினாள். இதன் சகலவிதமான ஆசாபாசங்களையும் நன்மை தீமைகளையும் சுகங்களையும் துக்கங்களையும் மறந்து உறங்கினாள். இந்த உலகில் பொழுது விடிந்து கொண்டிருந்த போது அவள் தன்னைச் சுற்றி இருள் சூழ நன்றாக அனுபவித்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

     அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டுச் சத்தியமூர்த்தி சாரைப் போய்ப் பார்த்துப் பேசி வர எண்ணியிருந்த பாரதி கடிகாரத்தில் காலை ஐந்தே முக்கால் மணிக்கு அலாரம் வைத்திருந்தாள். அலாரம் மணி அடித்ததைக் கேட்டதும் பாரதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தாள். நேரங் கழித்து எழுந்திருந்து விட்டது போன்ற பரபரப்போடு அவள் மின் விளக்கைப் போட்ட போது, சுழித்துச் சுழித்து வீசும் குளிர்ந்த காற்று ஜன்னல் கதவுகளில் மோதியடித்துக் கொண்டிருந்தது. மழை வரும் போல் மலைகளிலும் சுற்றுப்புறத்திலும் இருண்டு மேகங்கள் கப்பியிருந்தன. விடிகிற நேரமாகியும் இருட்டு மூட்டம் போட்டிருந்தது. விளக்கைப் போட்டுத் திரும்பியவள் எதிரே பார்த்ததும் திகைத்தாள். மோகினி மேஜையருகே சோபாவில் உட்கார்ந்து சாய்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தாள்.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu63a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs