http://www.chennailibrary.com
செய்திகள்
-14 ஆண்டுகளுக்கு பின் திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம்
-உயர்நீதிமன்ற நீதிபதியை நான் மிரட்டவில்லை - ராஜா மறுப்பு
-அரசு பஸ்களில் விரைவில் மூட்டைப் பூச்சிக்கு முடிவு: நேரு
-ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையை பேசி தீர்ப்போம்-எடியூரப்பா
-பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து? - ஜெ. கண்டனம்
-சென்னை: ரயிலில் வெடிகுண்டு-புரளி கிளப்பிய என்ஜினியர் கைது
-எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களில் சரக்குபெட்டகமுனையம்:வாசன்
-கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்கள் மோதல்:5 பேர் பலி, 16 பேர் காயம்
-அம்பேத்கார் பல்கலைக்கு சென்னை அருகே 15 ஏக்கம் நிலம்
-உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக்
-மாநிலம் தோறும் கமாண்டோ படை அமைக்க முடிவு: சிதம்பரம்
-நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
-ஓரினச் சேர்ககையாளர்களின் உறவு தவறில்லை - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
-குறைந்த விலையில் மருந்து-ராஜிவ்காந்தி மருந்து திட்டம்:அழகிரி
-இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் - சிரஞ்சீவி
-கத்தார் நாட்டில் படகு கவிழ்ந்து 16 இந்தியர் பலி




7. வஞ்சப் புகழ்ச்சி வலை

     இரகுநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக் கொண்டு ரங்ககிருஷ்ணன் இராமநாதபுரத்துக்கு தூது அனுப்பியும் பயனில்ல்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல் மேல் விவரம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாமல் திரும்பியிருக்கிறான். அவன் போனதாலும் பயனில்லை. திரும்பி வந்தும் பயனில்லை.

     ஒரு படையெடுப்பைப் பொருட்படுத்தி எதிர்ப்பதற்கு முன் வராத எதிரியின் நாட்டையோ, ஊர்களையோ, பொது மக்களையோ வலிந்து தாக்கினால் வீணாகத் தன் பெயரும் தாயின் பெயரும் தான் கெடும் என்பது ரங்ககிருஷ்ணனுக்குப் புரிந்தது. மறவர் சீமையையே தாய்நிலமாகக் கொண்ட தன் படை வீரர்களிலே எவ்வளவு பேர் அந்தத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதையும் அவனால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. 'மதில் மேல் பூனை' நிலையிலிருந்தான் அவன்.

     தங்கியிருந்த மானாமதுரையிலிருந்து அப்படியே படைகளைத் திருப்பிக் கொண்டு திரிசிரபுரம் போகவும் அவனால் முடியாது. பொழுது விடிகிற வரை ஒரே மனக்குழப்பமாயிருந்தது அவனுக்கு. விடிந்ததும் ஒரு முடிவு கிடைத்தது அவனுக்கு. எப்படியும் இராமநாதபுரம் சென்று சேதுபதியை நேருக்கு நேர் சந்திக்காமல் எதையும் முடிவு செய்வதற்கில்லை என்ற எண்ணத்துடன் படைகளோடு இராமநாதபுரம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தாய்க்கும் ஒரு தூதுவன் மூலம் நிலைமையைச் சொல்லி அனுப்பினான்.

     கோடையின் பகல் நேரம். பயணத்தில் வெப்பம் அதிகமாயிருந்தது. இந்தப் படைகள் மறவர் சீமைக்குள் நுழைந்து தலைநகரை நோக்கி விரைந்தது அந்தச் சீமையின் சிற்றூர்களையும், பேரூர்களையும், மக்களையும், எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிந்தது. அந்த அலட்சியமும் தற்செருக்கும் ரங்ககிருஷ்ணனின் மனதில் அந்தரங்கமாக உறுத்தின. கண்மூடித் தனமாகத் தன்னை ஏற்று வழிபடும் மக்களை நம்பித்தான் சேதுபதி இத்தனை இறுமாப்போடு இருக்கிறார் என்பது புரிந்தது. பொது மக்களோ படை வீரர்களின் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும், ஒழுக்கத்தோடும் இருக்கிற தேசத்தில், அந்நியர்கள் புகுந்து தொல்லைப்படுத்தவே முடியாது தான். மறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தை நெருங்க நெருங்க இந்தக் கட்டுப்பாடு வெளிப்படையாகவே புரிந்தது. சேதுபதியின் வலிமையே இந்தக் கட்டுப்பாடுதான் என்று விளங்கியது.

     அப்போது தானும் தன் படைவீரர்களும் மறவர் சீமை மேல் படையெடுத்து வந்திருப்பதும், தனக்கும் தன் தாய்க்கும் குமாரப்ப பிள்ளையைக் கொன்ற விஷயமாகவும், மறவர் நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்ததன் மூலமாகவும் ஏற்பட்டிருக்கும் மனத்தாங்கல்கள், இவை எல்லாம் சேதுபதிக்குப் புரியாமல் இருக்கும் என்று ரங்ககிருஷ்ணன் நினைக்கவில்லை. திரிசிரபுரத்துக்குச் சுயாதீனப் பிரகடனம் செய்து மறவர் சீமையிலிருந்து தூதன் அனுப்பப்பட்ட விதம், இப்போது இந்தப் படையெடுப்பை எதிர்கொள்ளும் பாணி எல்லாவற்றிலுமே சேதுபதியின் அலட்சியப்போக்கு தெரிவதை ரங்ககிருஷ்ணனால் உய்த்துணர முடிந்தது.

     'தன் தாய் கையாலாகாதவள். தான் சிறுபிள்ளை' என்ற எண்ணத்தில் தான் சேதுபதி இவ்வளவும் செய்கிறார் என்று அவனுக்குப் பட்டது.

     தனது படைத்தலைவர்களில் ஒருவனாகிய முத்து ராமலிங்க பூபதியைக் கூப்பிட்டு ரங்ககிருஷ்ணன் மறுபடியும் பேசிப்பார்த்தான்.

     "சேதுபதியின் படைகள் நம்மை எதிர்க்க வரவில்லை. மறவர் சீமைக்குள் வெகுதூரம் ஊடுருவி நாம் முன்னேறி விட்டோம். நாம் கடந்து வந்துவிட்ட பகுதிகளை நாமே வென்று கைப்பற்றி விட்டதாக் கருதலாமா?"

     "தர்ம சங்கடமான நிலை அரசே! இப்போது நாம் வென்றதாகவும் சொல்ல முடியாது. தோற்றதாகவும் சொல்லி விடமுடியாது! சிங்கம் அயர்ந்து உறங்கும் போது அதன் குகைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நுழைந்து விட்ட புள்ளிமான் அதைத் தன் வெற்றியாகச் சொல்லி கொண்டு விட முடியுமா? நம் நிலையும் அதுதான்..."

     "சேதுபதி சிங்கம்... நாம் மான்... இல்லையா?"

     "நம்மைக் குறைத்துச் சொல்லவில்லை அரசே! போரில் நாம் எதிரியை மதிப்பது தவறாகாது."

     "வெற்றியும் தோல்வியும் தெரியாமலே எவ்வளவு தூரம்தான் படைகளோடு முன்னேறுவது?"



ராணி மங்கம்மாள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  முடிவுரை


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm7.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க


ஆன்மீகம் தினசரி தியானம்

இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்


தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.