http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




2

     "மழையினாலே பெங்களூர் ப்ளேன் அரைமணி லேட்னு சொல்றாங்க... ஐயா வர அரைமணி தாமதமாகும்."

     எல்லோருடைய முகமும் அந்தத் தாமரை அங்கீகரிப்பது போல் மலர்ந்தன.

     அடுத்து முன்பு வந்தவனைப் போலவே - கைலி, பனியன், மேலே சமையல் அழுக்குப் படிந்த துண்டுடன் - கையிலிருந்த பெரிய டிரேயில் பத்துப் பன்னிரண்டு 'கப்'களில் ஆவி பறக்கும் காப்பியுடன் சமையற்காரன் ஹாலில் நுழைந்தான். எல்லோருக்கும் காபி கிடைத்தது.

     காபி முடிந்ததும் ஒரு பெண் துணிந்து எழுந்து வந்து முத்துக்குமரனின் சோபாவில் அருகே உட்கார்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்ததும் சந்தன அத்தர் வாசனை கமகமத்தது. "நீங்களும் 'ட்ரூப்'லே சேர அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா சார்...?" என்று அவள் கேட்ட கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடைய குரலினிமையை மட்டும் காதில் ஏற்றுக் கொண்டு அயர்ந்து விட்ட முத்துக்குமரன்,

     "என்ன சொன்னீங்க...?" என்று மறுபடியும் அவளைக் கேட்டான்.

     அவள் சிரித்துக் கொண்டே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டாள்.

     "கோபாலை நல்லாத் தெரியும்! என்னோட அந்த நாளிலே பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரீ பார்ட் போட்டவன். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்."

     ஹாலில் இருந்த மற்ற எல்லோருடைய கவனமும் தங்கள் இருவர்மேல் மட்டுமே குவிந்திருப்பதை அவன் கவனித்தான். பெண்கள் அனைவரும் தன்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பவளைப் பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.

     பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள், "உங்கள் பெயரை எனக்குச் சொல்லலாமா?" என்று கேட்டாள்.

     "முத்துக்குமரன்..."

     "பேர் ரொம்ப பிடிச்சிருக்கு..."

     "யாருக்கு...?"

     அவள் முகம் சிவந்தது. உதடுகளில் புன்னகை தோன்றவும், மறையவும் முயன்று ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தது.

     "இல்லே... நாடகத்துக்குப் பேர் பொருத்தமா இருக்கும்னேன்."

     "அப்படியா? ரொம்ப சந்தோஷம். உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா...?"

     "மாதவி..."

     "உங்க பேர் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு."

     மறுபடியும் அவள் உதடுகளில் புன்னகை தோன்றவும் மறையவும் முயன்றது.

     முன்புறம் போர்டிகோவில் கார் சீறிப் பாய்ந்து வந்து நிற்கும் ஓசை கேட்டது. காரின் கதவு ஒன்று திறந்து மூடப்பட்டது.

     அவள் அவனிடம் சொல்லிக் கைகூப்பிவிட்டுத் தன் பழைய இடத்துக்குப் போனாள். ஹாலில் அசாதாரண அமைதி நிலவியது. 'கோபால் வந்துவிட்டான் போலிருக்கிறது' என்று முத்துக்குமரனால் ஊகிக்க முடிந்தது.

*****


சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs