http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




1

... தொடர்ச்சி ...

     ஆனால் முத்துக்குமரனுக்கோ மழையில் நனைந்த பட்டினம் மிகமிக அழகாகத் தெரிந்தது. நீராடி நனைந்த புடவையோடு நாணிக் கோணித் தயங்கி நிற்கும் ஒரு சுந்தரியைப் போல் அன்று சென்னை அழகாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. புகை போன்ற மேக மூட்டத்தில் கட்டிடங்களும், சாலைகளும், மரங்களும் மங்கலாகத் தெரிந்தன.

     அதிகம் நனைந்து விடாமல் போய்ச் சேர வசதியாக எழும்பூர் நிலையத்துக்கு நேர் எதிரே இருந்த ஒரு லாட்ஜில் போய் இடம் பிடித்துத் தங்கினான் முத்துக்குமரன்.

     முன்பு அவனோடு நாடக சபாவில் ஸ்திரீ பார்ட் போட்ட பையன் ஒருவன் அப்போது சென்னையில் பெரிய நடிகனாக இருந்தான். கோபாலசாமி என்ற பெயருடைய அவனுக்கு இப்போது 'கோபால்' என்று பெயர் சுருங்கியிருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு காபி குடித்த பின் கோபாலுக்கு ஃபோன் செய்ய எண்ணியிருந்தான் அவன்.

     அந்த லாட்ஜில் எல்லா அறைகளிலும் டெலிபோன் கிடையாது. லாட்ஜ் ரிஸப்ஷனில் மட்டுமே ஃபோன் உண்டு. தன்னுடைய காரியங்களை எல்லாம் முடித்துக் கொண்டு அவன் ஃபோனுக்காக ரிஸப்ஷனுக்கு வந்த போது மணி காலை பதினொன்றாகியிருந்தது.

     டெலிபோன் டைரக்டரியில் எவ்வளவோ தேடியும் நடிகன் கோபாலின் நம்பர் கிடைக்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் போகவே ரிஸப்ஷனில் உட்கார்ந்திருந்த ஆளிடம் கோபாலின் நம்பரைப் பற்றிக் கேட்டான் முத்துக்குமரன்.

     அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு அவர் இங்கிலீஷில் பதில் கூறினார். சென்னையில் அவன் இந்தப் புதுமையைக் கண்டான். தமிழில் கேட்பவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்பவர்களும், ஆங்கிலத்தில் கேட்பவர்களுக்குத் தமிழில் மட்டுமே பதில் சொல்லத் தெரிந்தவர்களுமாகக் கிடைத்தார்கள். நடிகன் கோபாலின் நம்பர் டெலிபோன் டைரக்டரியில் 'லிஸ்ட்' செய்யப்பட்டிராது என்பது அவர் கூறிய பதிலிலிருந்து அவனுக்குத் தெரிந்தது. சில விநாடிகளுக்குப் பின் டெலிபோன் மூலமே விசாரித்து அந்த நம்பரை அவனுக்குத் தெரிவித்தார் ரிஸப்ஷனில் இருந்தவர். சென்னைக்கு வந்தவுடன் ஒவ்வொரு விநாடியும் அந்த விநாடியின் நிலைமைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பதை அவன் உடனடியாக உணர்ந்தான். விநாடிகளைத் தனக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிற பழக்கமான வாழ்விலிருந்து விநாடிகளுக்குத் தகுந்தாற்போலத் தானே மாறவேண்டிய வாழ்வுக்கு இறங்குவது சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அவன் யாருடைய ஃபோன் நம்பரை விசாரித்தானோ அந்தப் பெயரிலிருந்து பிறந்த மரியாதையும் பிரமிப்பும் உந்த, அவன் மேலும் சிறிது மரியாதையைச் செலுத்தினார் அந்த ரிஸப்ஷனிஸ்ட்.

     ஃபோனில் நடிகன் கோபால் கிடைக்கவில்லை. அவன் ஏதோ ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருக்கிறானென்றும் பிற்பகல் மூன்று மணிக்கு விமானத்தில் திரும்புகிறான் என்றும் தெரிந்தது. இவன் பால்ய சிநேகிதத்தை எல்லாம் எதிர்ப்புறம் கேட்டவர் காது புளிக்க விவரித்த பின், "நாலரை மணிக்கு மேல் நேரில் வாருங்கள்! சந்திக்கலாம்" என்று வேண்டா வெறுப்பாகப் பதில் தெரிவிக்கப்பட்டது. அந்த வினாடியில் உடனே அந்தப் பதிலுக்குத் தகுந்த மாதிரி அவன் மாற வேண்டியிருந்தது. பதிலை மாற்ற அவனால் முடியாது; எங்கும் போகவும் வழியில்லை; மழை நிற்கும் என்றும் தோன்றவில்லை. பகல் சாப்பாட்டுக்குப் பின் நன்றாகத் தூங்க வேண்டுமென்று தோன்றியது. இரவு இரயில் பயணத்தில் இழந்த தூக்கத்தைப் பெற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. புதிய ஊரில், புதிய கட்டிடத்தில், புதிய அறையில் உடனே தூக்கம் வருமா என்று தயக்கமாகவும் இருந்தது. பெட்டியைத் திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தான்.



சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sva.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs