http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




     பல்கலைக் கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும்போல் இருந்தது. விளக்கடியில் தேங்கி நிற்கும் இருட்டைப் போல ஒவ்வொரு பேராசிரியரிடமும் தேங்கியிருந்த விருப்பு வெறுப்புக்களும் பழிவாங்கும் மனப்பான்மையும், சுயசாதி அபிமானமும் பயங்கரமாயிருந்தன; அநாகரிகமாகவும் இருந்தன.

     இப்போதைய இந்த வெள்ளத்தில் எதிர் நீச்சலிட்டுக் கரை சேர முடியுமா என்று பல போராட்டங்களை நடத்தியிருந்த அவளுக்கே மலைப்பாயிருந்தது. இத்தனை விருப்பு வெறுப்புக்களுக்கும், சூதுவாதுகளுக்கும், கள்ளம் கபடுகளுக்கும், குரோத விரோத மனப்பான்மைகளுக்கும் நடுவே கல்வி எப்படி வளர முடியும் என்று அவளுக்கே சந்தேகமாகக் கூட இருந்தது. அரசாங்கமே அங்கீகரித்திருந்த வகுப்புவாதப் பிரதிநிதித்துவ முறைகளைத் தவிர, ஒவ்வொரு பேராசிரியரும் தனியே தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப ஒரு பிரதிநிதித்துவ முறையை வைத்துக் கொண்டிருந்தார்.

     "அந்தப் புரொபஸரா? அவருக்கு இன்ன இன்ன ஆட்களுக்குக் 'கெய்டாக' இருக்கப் பிடிக்காது. ஏதாவது சாக்கு போக்குச் சொல்லித் தட்டிக் கழித்து விடுவார்" என்று ஒருவரைப் பற்றிச் சொன்னார்கள்.

     "இவரா? ஒவ்வொரு ஸ்டேஜிலும் ரிஸர்ச் ஸ்டூடண்டைப் பணம் கேட்பார். கொடுத்து மீறுவது கடினம்."

     "அவரா? ஆபத்தான பேர்வழி. பெண்கள் அவரிடம் போவது நல்லதில்லை. ஒரு மாதிரி சபலபுத்திக்காரர்."

     அவள் ஆராய்ச்சி செய்ய இருந்த துறையில் 'கெய்டு' ஆகப் பல்கலைக் கழகம் அங்கீகரித்திருந்த பேராசிரியர்களின் எண்ணிக்கையே நாலு ஐந்து தான் இருந்தது. அவள் முழுநேர மாணவியாக கற்க விரும்பியதால் பல்கலைக்கழகம் 'ரிஸர்ச் சென்ட்ட'ராக அங்கீகரித்திருக்கக் கூடிய ஒரு கல்வி நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டியாகக் கூடிய ஒரு பேராசிரியரைக் 'கெய்டா'கக் கொண்டுதான் அந்த ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

     இந்த நிபந்தனைகளாலும், படிக்கிற நாளில் பல்வேறு மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டு போதுமான அளவு கெட்ட பெயர் எடுத்திருந்ததாலும் அவளுக்கு இடமும், 'கெய்டும்' கிடைப்பது சிரமமாக இருந்தது. சில இடங்களில் உள்ள சிரமங்களைச் சொல்லி மற்றவர்கள் அவளைப் பயமுறுத்தினார்கள். ஆக உயர் கல்வியும் ஆராய்ச்சித் துறைகளும் எல்லாம் பயத்துக்கும் பயமுறுத்தல்களுக்கும் நடுவே இருந்தன.

     அவளைப் போல் புதுமைப் பெண்ணாக வளர்ந்து விட்ட ஓர் இளம்பெண்ணுக்கு மற்றெல்லாத் தகுதிகளும் இருந்தும் கூட ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட ஓர் வழிகாட்டி கிடைக்கவில்லை. இடமும் அகப்படவில்லை.

     "சுகுணா, நீ கல்லூரி நாட்களில் மறியல், போராட்டம் என்று நிறையச் செய்துவிட்டாய். சில பேராசிரியர்களைக் கூட விரோதித்துக் கொண்டுவிட்டாய். அதனால் தான் இப்போது இந்தச் சிரமம் எல்லாம். அடங்கிய பெண்ணாகக் கல்லூரி நாட்களைக் கழித்திருந்தால் இந்தச் சிரமமெல்லாம் இப்போது உனக்கு ஏற்படாது" என்றாள் சுகுணாவின் தோழி ரத்னா.

     "தெரியாமல் சொல்கிறாய் ரத்னா! அடங்கிய பெண்ணாக இருந்திருந்தால் நான் படித்து மேலே வந்திருக்கவே முடியாது. போராடுகிறவர்களுக்கு மட்டுமே, இந்த உலகம். பயப்படுகிற உலகத்தில் தான் இன்று நாமும் வாழ்கிறோம்."

     இதற்கு ரத்னாவால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை. தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும், உதவுகிற குணமும் இல்லாதவர்கள் தாம் கல்வித்துறையில் பெரிய பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். நிறையப் பேர் நன்றாகப் படிக்க வேண்டும், பட்டங்கள் பெற வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, நிறையப் பேர் படிக்க வேண்டாம், பட்டங்கள் பெற வேண்டாம் என்று நினைக்கிற மனப்பான்மையே பல ஆசிரியர்களிடம் இருந்தது.

     புரொபஸர் ரத்னவேல்ராஜ் என்பவரிடம் ஒதுக்கப்பட்டிருந்த 'கோட்டா'வில் ஓர் இடம் மீதமிருக்கிறது என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போனாள் சுகுணா.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/story/kadaisiyakaoru.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs