http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




9

     ஸ்ரீ மடத்தின் சங்கரமங்கலத்து முத்திராதிகாரியான விசுவேசுவர சர்மாவின் பொறுப்பில் இருந்த முக்கியப் பணிகளில் ஒன்று மடத்துக்குச் சொந்தமான நிலங்களையும் தோப்புத் துரவுகளையும் அவ்வப்போது குத்தகைக்கு ஒப்படைப்பது. அன்று மாலை மடத்து நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பவர்களின் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்திலோ - இயலாவிட்டால் அடுத்த கூட்டத்திலோ அவ்வருடக் குத்தகைகள் முடிவாக வேண்டும். பெரும்பாலும் ஒவ்வோராண்டும் மேற்கே மலையில் சாரல் பிடிக்கத் தொடங்கும் போது அவ்வூரில் குத்தகைகள் எல்லாம் தொகை பேசி முடிவாகி விடுவது வழக்கம்.

     தன் பிள்ளை ரவி ஊரிலிருந்து வந்ததில் அன்று மாலை குத்தகைதாரர்களின் கூட்டம் இருப்பது அவருக்கு மறந்து போயிருந்தது.

     ரவியும் கமலியும் அவர்களோடு பார்வதியும் குமாரும் வேணு மாமா வீட்டு விருந்துக்குப் புறப்பட்டுப் போவதற்கு முன் ஸ்ரீ மடம் ஆபீஸ் கிளார்க் வந்து நல்ல வேளையாக அதை ஞாபகப்படுத்தி விட்டுப் போனான். மடத்திலிருந்து அவர் பெயருக்கு அன்று தபாலில் வந்திருந்த நாலைந்து கடிதங்களையும் அப்போது கிளார்க் அவரிடம் கொடுத்திருந்தான்.

     அன்று நிலங்களைக் குத்தகைக்கு எடுப்போர் கூட்டம் இருப்பது ஞாபகம் வந்த பின்பே நாலைந்து விவசாயிகள் பின் தொடரச் சீமாவையர் தெருவில் மிடுக்காக நடந்து போன காட்சி மீண்டும் சர்மாவுக்கு நினைவு வந்தது.

     இந்தக் கூட்டத்துக்கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பது போல் சீமாவையர் காரியமில்லாமல் தெருவில் ஆள சேர்த்துக் கொண்டு போகமாட்டார் என்றும் புரிந்தது.

     கிராமங்களில் பெரும்பாலும் இம்மாதிரிக் கூட்டங்கள் இரவு எட்டு மணிக்கு மேல் தொடங்கிப் பத்து மணி பதினொரு மணி வரையில் நடப்பதுண்டு. எல்லா விவசாயிகளும் வந்து கலந்து கொள்ள அந்த நேரம் தான் வசதியாயிருக்கும். சங்கரமங்கலமோ நூற்றுக்கு நூறு சதவீதம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட கிராமம். வான் பொய்த்தாலும் தான் பொய்யாத வளத்தை உடைய ஜீவநதியாகிய அகஸ்திய நதியின் தலைக்கால் பாசனத்தில் அமைந்திருந்ததால் மண்ணில் பொன் கொழித்தது. அதிலும் மடத்து நிலங்கள் எல்லாம் விளைச்சலுக்குப் புகழ் பெற்ற அகஸ்திய நதியின் நல்ல கரைப் பகுதிகளில் இருந்தன. மடத்தின் பிரமாதமான சொத்துக்களாகிய நல்ல நிலங்கள், தோப்புத் துரவுகள், இரண்டு மூன்று பசு மடங்கள், விவாக மண்டபம், வீடுகள், காலி மனைகள் எல்லாம் அந்த ஊரில் தான் இருந்தன.

     இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் வரை ஸ்ரீ மடத்தின் வைதிக விஷயங்களுக்கு மட்டுமே சர்மா பொறுப்பேற்றிருந்தார். நிலம் குத்தகை வருமானம் வீடு விவாக மண்டப வாடகைகள், வரவு செலவு போன்ற லௌகீக ஏற்பாடுகளைச் சீமாவையர்தான் கவனித்து வந்தார். குத்தகைப் பணவரவு செலவுகளில் ஊழலும், கையாடலும் பெருகிய பின், நிறையப் புகார்கள் வரவே பின்னால் அந்தப் பொறுப்பும் சர்மாவுக்கே வந்து சேர்ந்தது.

     சீமாவையரை விரோதித்துக் கொள்ளச் சர்மா பயந்தார். ஆனாலும் வேறு வழி இல்லை. சுவாமிகளே சர்மாவை அழைத்து, ஊர் நன்மைக்காகவும், ஸ்ரீ மடத்தின் நன்மைக்காகவும் அந்தப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றார். சர்மாவால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை.

     அதற்குப் பின்னால் சர்மாவும் சீமாவையரும் பேசிக் கொள்வது, ஒருவருக்கொருவர் ஷேமலாபம் விசாரித்துக் கொள்வது எல்லாம் பழையபடி தொடர்ந்தாலும் சர்மாவின் மேல் சீமாவையர் உள்ளூற ஒரு வன்மம் வைத்துக் கொண்டு காத்திருந்தார். உள்ளே பகையொடுங்கிய புற மலர்ச்சிகளாலும் புறச் சிரிப்புக்களாலும் அவர் சர்மாவிடம் ஏமாற்றிப் போலியாகப் பழகி வந்தார்.



துளசி மாடம் :முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11   12  13  14  15  16
17  18  19  20  21  22  23  24  25  26   27   28   29   30   31  32  முடிவுரை  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/thulasimaadam/tm9.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs