இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Suriyakumari Palani (15-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 292
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!7. குமரன் நம்பியின் திட்டம்

     அன்று நள்ளிரவில் உடன் வந்த வீரர்களை நடுக்கடல் தீவில் காத்திருக்கச் செய்துவிட்டுக் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் புகுந்து உளவறியச் சென்ற குமரன் நம்பி திரும்பி வரத் தாமதமான ஒவ்வொரு விநாடியும் காத்திருந்த கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்து வீரர்கள் கணக்கற்ற சந்தேக நினைவுகளால் குழப்பமடையலானார்கள். ஒரு வேளை குமரன் நம்பி கடம்பர்களின் கையிற் சிக்கிச் சிறைப்பட்டு விட்டானோ என்ற சந்தேகமும் இடையிடையே மனத்தில் தோன்றி அவர்களைப் பயமுறுத்தியது. நல்ல வேளையாக மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்காமல் குமரன் நம்பி திரும்பி வந்து சேர்ந்தான்.

     வந்ததும் வராததுமாக, "உடனே வந்தது போலவே கரைக்குத் திரும்பி விடுவோம்! கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்திற்குச் சென்று மற்றவற்றைச் சிந்திப்போம் என்று அவர்களை விரைவுபடுத்தினான் குமரன் நம்பி. அவன் அவ்வாறு விரைவுபடுத்துவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமென்று உணர்ந்தவளாக அவர்களும் உடனே அவனோடு படகேறிப் புறப்பட்டனர். படகு கடலில் அலைகள் நிறைந்த பகுதியை எல்லாம் கடந்து பொன்வானி முகத்துவராத்தை அடைகின்றவரை அவர்கள் ஒருவரோடொருவர் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

     கரை சேர்ந்த பின் விடிவதற்குச் சிறிது நேரமே இருந்தது. குமரன் நம்பி உட்பட யாவருமே களைத்திருந்தார்கள். பேசி முடிவு செய்ய வேண்டியவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு அப்போது தோன்றியது. உறங்குகின்ற மனநிலை யாருக்குமே இல்லையென்றாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்ததும் படைக்கோட்டத்து வீரர்கள் கலந்து பேசினார்கள். குமரன் நம்பியின் மனம் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அமுதவல்லியின் நிலை என்னவோ, ஏதோ, என்பதைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தாலும் வீரர்களிடையே அவன் சில திட்டங்களைக் கூறலானான்.

     "பலமுறை நம்முடைய பெருமன்னர் செங்குட்டுவரால் ஓட ஓட விரட்டபட்டிருக்கும் இந்தக் கொடிய கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர்கள் மறுபடி சமயம் பார்த்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் மன்னரும் சேர நாட்டுப் பெரும் படைகளும் வடக்கே படையெடுத்துச் சென்றிருப்பதை அறிந்தே கொள்ளைக்காரக் கடம்பர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்திலோ நாம் சிலர் தான் இருக்கிறோம். தலைநகரில் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து தம்மை வந்து சந்திக்கும்படி அமைச்சர் அழும்பில்வேள் எனக்கு கட்டளையிட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்த்து வந்தேன். கடற்கரையிலும், பொன்வானி முகத்துவாரத்திலும், கொடுங்கோளூர் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு என்னை அமைச்சர் பெருமான் வேண்டிக் கொண்டிருக்கிறார். மேலும்..." என்று சொல்லிக் கொண்டே வந்த குமரன் நம்பி தயங்கிப் பேச்சை நிறுத்தினான்.

     "மேலும் என்ன?... ஏன் சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்?" என்று வினாவினான் படைக்கோட்டத்தைச் சேர்ந்த வீரனொருவன். ஆனால் குமரன் நம்பியோ தன் தயக்கத்தைத் தொடர விட்டவனாக மேலும் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் சொல்வதற்கிருந்து செய்தியோ கொடுங்கோளூர் இரத்தின வணிகன் மகள் அமுதவல்லி காணாமற் போனதைப் பற்றியது. அதைத் தானே படை வீரர்களிடம் தன் வாய்மொழியினால் சொல்லி விவரிப்பதற்கு அவன் மனம் வேதனைப் பட்டது. என்ன காரணத்தினாலே இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறிக் கொடுங்கோளூரில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கும் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது.

     ஆனால் கொடுங்கோளூர் நகரெங்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததையும், அதை அதே இரவில் நகர் பரிசோதனைக்காக வந்திருந்த அமைச்சர் அழும்பில்வேள் அறிந்து சென்றதையும் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இரத்தின வணிகர் வீட்டில் தானே நேரிற் சென்று இச்செய்தி பற்றி அறியக் குமரன் நம்பி கூசினான். ஆனால் இரத்தின வணிகர் வீட்டிலும் அதற்குரிய சோகம் பரவியிருப்பதாகவே மற்றவர்கள் மூலம் அவன் கேள்விப்பட்டறிய முடிந்தது. இப்போது வீரர்கள் திரும்பத் திரும்ப அவனைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்கினர். எனவே அவன் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் கூற வேண்டியதாயிற்று. கப்பலில் கடம்பர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதிலிருந்து அமுதவல்லி காணாமற் போன இரவில் அவர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழி வந்து திரும்பியிருக்கிறார்கள் என்றே தெரிந்தது. தான் கொள்ளைக் கப்பலில் ஒட்டுக் கேட்டறிந்த செய்தியைக் கூறாமலே "அமுதவல்லி கொள்ளைக்காரர்களான கடம்பர்களிடம் சிறைப்பட்டிருப்பது சாத்தியமென்று உங்களுக்குத் தோன்றுகிறதா?" என்று தன் நண்பர்களான படைக்கோட்டத்து வீரர்களிடம் கேட்டான் குமரன் நம்பி.

     "சாத்தியமென்று தோன்றவில்லைதான் படைத்தலைவரே! ஆனால் சாத்தியமில்லை என்று எப்படி மறுப்பது?" என்றே அவர்களிடமிருந்து மறுமொழி கிடைத்தது.

     அதன் பின் அந்த வினாவுக்கு விடை காண்பதை விடுத்து முற்றுகையிட்டிருக்கும் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை விரட்டியடிப்பது எவ்வாறு என்பதையும் அவர்களிடமிருந்து இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லியை மீட்பது எவ்வாறு என்பதைப் பற்றியுமே படைக்கோட்டத்து வீரர்களோடு அவன் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது. பல கொள்ளை மரக்கலங்களில் எண்ணிக்கை நிறைந்த முரட்டுக் கொள்ளைக்காரர்களோடு முற்றுகையிட்டிருக்கும் கடம்பர்களைக் கொடுங்கோளூர்ப் படைத்தளத்திலிருக்கும் சில வீரர்களைக் கொண்டு மட்டுமே நேருக்கு நேர் எதிர்ப்பதென்பது சாத்தியமில்லை. ஆகவே சாதுர்யத்தால் எதிரிகளை மடக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதை குமரன் நம்பி நன்கு உணர்ந்திருந்தான்.

     திடீரென்று இருந்தாற் போலிருந்து நண்பர்களிடம் விநோதமான வேண்டுகோளை விடுத்தான்:

     "சேர நாட்டு அரச முத்திரையாகிய விற்கொடி இலச்சினையோடு கூடிய புத்தம் புதுக் கொடித் திரைச்சீலைகள் சில நூறு இப்போது உடனே வேண்டும். நமது சூழ்ச்சியை அவை மூலமே தொடங்க முடியுமென்று தோன்றுகிறது."

     "படைத் தலைவரே! உங்கள் வேண்டுகோள் விநோதமாக இருக்கிறது. வலிமையான ஆட்கள் இருந்தாலே கொடியவர்களான கடம்பர்களை வெற்றி கொள்வது அருமை. நீங்களோ சேர நாட்டுக் கொடிச் சீலைகளைக் கொண்டே அவர்களை வென்றுவிட நினைக்கிறீர்கள்" என்று சந்தேகமும் தயக்கமுமாக ஒரு வீரனிடமிருந்து படைத் தலைவன் குமரன் நம்பிக்கு மறுமொழி கிடைத்தது.

     குமரன் நம்பி அதைக் கேட்டு மனந்தளரவோ தயங்கவோ செய்யாமல் சிரித்த முகத்துடனேயே அந்த வீரனுக்கு மறுமொழி கூறலானான்: "மரத்தை நோக்கிக் கற்களை எறிவோம். கற்களால் மாங்காய்கள் உதிருமானால் நமக்குப் பயன் தானே? காய்கள் விழாவிட்டால் நமக்கென்ன? மறுபடி வேறு கற்களை எறிவோம். அரச தந்திர சூழ்ச்சிகள் யாவுமே இப்படித்தான். நாம் நினைக்கிறபடியே தான் முடிய வேண்டும் என்று திட்டமிட இயலாது. ஆனால் நாம் நினைக்கிற படியே தான் முடியவேண்டுமென்ற திட நம்பிக்கையுடனேயே செயலைத் தொடங்க வேண்டும். அதில் எள்ளளவும் தளர்ச்சியிருக்கக்கூடாது."

     "மாங்காய்கள் விழுவதற்குப் பதிலாக நாம் எறிந்த கற்களே நம்மேல் திரும்பி விழுவதுபோல் நேர்ந்து விட்டால் என் செய்வது?" என்று ஒரு வீரன் கேட்டான்.

     "தீவினை வசத்தால் சிலருக்கு அப்படியும் சில சமயங்களில் கேடுகள் நேரலாம். ஆனால் அப்படி நேருமென்பதே நம் எண்ணமாக் முன் நிற்குமானால் நாம் எதையுமே துணிந்து செய்வதற்கு உரியவர்களாக முடியா."

     குமரன் நம்பியின் இந்த மறுமொழிக்குப் பின் வீரர்கள் யாரும் அவனை எதுவும் வினாவத் துணியவில்லை. சேர நாட்டு விற்கொடிச் சீலைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு வீரர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குமரன் நம்பி தன் மனத்தினுள் திட்டம் வகுக்கத் தலைப்பட்டான். கடம்பர்களை ஒடுக்கி ஒழிக்க அவன் மனதில் இரண்டு காரணங்களால் இப்போது அவன் சபதம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டுக் கடமையைத் தவிர அன்புக் கடமையும் இதில் இருந்தது. அவனுடைய ஆருயிர்க் காதலியைத் தேடும் கடமையும் இதில் கலந்திருந்ததனால் சபதத்துக்கு உறுதி அதிகமாகி இருந்தது. அவனுடைய திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேற அந்த நாள் முழுவதும் ஆயிற்று. அன்றிரவு மீண்டும் அவர்கள் கலந்து பேசித் திட்டமிடுவதில் கழிந்தது. அடுத்த நாள் இரவு மீண்டும் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கடலிற் சென்று கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை அடைய வேண்டும் என்றும் தங்கள் சூழ்ச்சிகளைச் செயலாக்கிக் கடம்பர்களை முறியடிக்க வேண்டுமென்றும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். புத்தம் புதிய திரைச்சீலைகளில் எழுதப்பட்ட சேரர்களின் விற்கொடிகள் சில நூறு ஆயத்தமாகி இருந்தன. அடுத்த நாள் பகற்பொழுது முழுதும் ஓய்வாக இருந்தார்கள் அவர்கள். இரவில் உறக்கமின்றிக் கழிக்க வேண்டியிருந்ததால் குமரன் நம்பியும் படைக் கோட்டத்து வீரர்களும், அன்று பகற்பொழுதில் களைப்பாற வேண்டியிருந்தது.


வஞ்சிமா நகரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.50.00ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00ஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.360.00உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.215.00வெற்றிக்கொடி கட்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00உணவு சரித்திரம் பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.250.00தெற்கிலிருந்து ஒரு சூரியன்
இருப்பு உள்ளது
ரூ.200.00சிக்கனம் சேமிப்பு முதலீடு
இருப்பு உள்ளது
ரூ.115.00சாயி
இருப்பு உள்ளது
ரூ.200.00மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.195.00மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.200.00மன்மதக்கலை
இருப்பு உள்ளது
ரூ.90.00நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.330.00மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.105.00வாஸ்து : இந்தியக் கட்டடக் கலை
இருப்பு உள்ளது
ரூ.110.0045 நொடி பிரசன்டேஷன்
இருப்பு உள்ளது
ரூ.180.00ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
இருப்பு உள்ளது
ரூ.180.00அகிலம் வென்ற அட்டிலா
இருப்பு உள்ளது
ரூ.100.00செங்கிஸ் கான்
இருப்பு உள்ளது
ரூ.180.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)