பத்துப் பாட்டுக்களில் எட்டாவது
ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர்
பாடிய குறிஞ்சிப் பாட்டு ... தொடர்ச்சி ... சுனையில் நீராடல்
விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர, நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு, அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின், முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு, நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, 50 இன் இசை முரசின், சுடர்ப் பூண், சேஎய் ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின், மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென, அண்ணல் நெடுங் கோட்டு இழிதரு தெள் நீர், அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி, 55 தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி, பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி, நளி படு சிலம்பில், பாயும் பாடி, பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம் பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி, 60 உள்ளகம் சிவந்த கண்ணேம் பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்
வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65 எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70 விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75 கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80 ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85 ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90 நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95 அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன், மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி, வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |