பத்துப் பாட்டுக்களில் ஆறாவது
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார்
பாடிய மதுரைக் காஞ்சி ... தொடர்ச்சி ... நெடியோனின் போர்த் திறமை
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் 55 பொருது, அவரைச் செரு வென்றும், இலங்கு அருவிய வரை நீந்தி, சுரம் போழ்ந்த இகல் ஆற்றல், உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின், நிலம் தந்த பேர் உதவி, 60 பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்! மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை அருங் குழு மிளை, குண்டு கிடங்கின், உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின், 65 நெடு மதில், நிரை ஞாயில், அம்பு உமிழ், அயில், அருப்பம் தண்டாது தலைச் சென்று, கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் தென் குமரி வட பெருங்கல் 70 குண குட கடலா எல்லைத் தொன்று மொழிந்து தொழில் கேட்ப, வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர்தம் கோன் ஆகுவை கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி
வான் இயைந்த இரு முந்நீர்ப் 75 பேஎம் நிலைஇய இரும் பெளவத்து, கொடும் புணரி விலங்கு போழ, கடுங் காலொடு, கரை சேர, நெடுங் கொடி மிசை, இதை எடுத்து, இன் இசைய முரசம் முழங்க, 80 பொன் மலிந்த விழுப் பண்டம் நாடு ஆர நன்கு இழிதரும், ஆடு இயல் பெரு நாவாய், மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கு இருக்கை, 85 தெண் கடல் குண்டு அகழி, சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர்
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் பாடு சிலம்பும் இசை, ஏற்றத் 90 தோடு வழங்கும் அகல் ஆம்பியின், கயன், அகைய வயல் நிறைக்கும், மென் தொடை வன் கிழாஅர், அதரி கொள்பவர் பகடு பூண் தெள் மணி, இரும் புள் ஓப்பும் இசையே என்றும், 95 மணிப்பூ முண்டகத்து மணல் மலி கானல் பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |