|
News | |
-TN:CPI(M) demands CB-CID probe over party functionary murder-Rajya Sabha revokes suspension of four Samajwadi Party MPs -India's ballistic missile defence shield test fails -SC rejects Satyam founder's bail plea -Lapanag to meet Chidambaram to discuss border firing -BJP picks Bimla Kashyap as Rajya Sabha nominee from Himachal -Thai PM rejects protesters' call for new elections -Rebel group bombs Nigerian government building -SBI to open 1000 semi urban, rural area branches -SC to consider recall of SIT probe against Modi |
-Mayawati presented garland made of hundreds of Rs. 1000 notes-RCom touches 100 mn subscriber base -Pradip Overseas IPO subscribed 14 times -Inflation rises to 9.89% in February -Hussey narrows gap with Dhoni in top ODI rankings -Special trains for IPL matches at Eden Gardens -Government to rake in Rs200 crore tax from IPL -Action against CAB for ignoring fire safety norms |
![]() |
பத்துப் பாட்டுக்களில் இரண்டாவது
சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார்
பாடிய பொருநர் ஆற்றுப்படை இது கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இந் நூல் பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப் படுத்தியதாக அமைந்துள்ளது. பொருநனை விளித்தல்
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர், சாறு கழி வழி நாள். சோறு நசை உறாது, வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! பாலையாழின் அமைப்பு
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்; விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை, 5 எய்யா இளஞ் சூல் செய்யோள் அவ் வயிற்று ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல, பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை; அளை வாழ் அலவன் கண் கண்டன்ன, துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி; 10 எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி, அண் நா இல்லா அமை வரு வறு வாய்; பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்; மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்; கண்கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்; 15 ஆய் தினையரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள் விசித் தொடையல்; மணம் கமழ் மாதரை மண்ணியன்ன, அணங்கு மெய்ந் நின்ற அமை வரு, காட்சி; 20 ஆறு அலை கள்வர் படை விட அருளின் மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை யாழை மீட்டிப் பாடுதல்
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும், சீருடை நன் மொழி நீரொடு சிதறி பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், 25 கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண், இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய், பல உறு முத்தின் பழி தீர் வெண் பல், மயிர் குறை கருவி மாண் கடை அன்ன பூங் குழை ஊசற் பொறை சால் காதின், 30 நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின், ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை, நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல், கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர், அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து, 35 ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை, நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ், உண்டு என உணரா உயவும் நடுவின், வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல், இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், 40 பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி, அரக்கு உருக்கு அன்ன செந் நிலன் ஒதுங்கலின், பரல் பகை உழந்த நோயொடு சிவணி, மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் 45 நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின், பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி |
|
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |