http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆட்டுக் குட்டிதான்

ஜேம்ஸ்ஹானலி - இங்கிலாந்து

     செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உறுத்தியது. வண்டியில் இருந்தவர்களுடைய குஷிக்குக் குறைவில்லை. சென்ற இரண்டு மணி நேரமாகத் தொண்டை கம்மும்படி வழி நெடுகத் தங்களது இசைத் திறமையைப் 'பரத்திக்'கொண்டு வந்தார்கள். வண்டியில் உள்ளவர்கள் எல்லாம் அதை 'ஏகமேனியாக' வாடகைக்கு அமர்த்தி இன்று முழுவதும், ஊர்சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

     திடீரென்று வண்டி கிரீச்சிட்டுக் கொண்டு நின்றது. பாட்டு 'கப்' என்று ஓய்ந்தது. ஒரே பீதி, குழப்பம். என்ன நடந்தது? பின்பக்கத்துக் கடைசி ஸீட்டில் இரண்டு சுரங்கத் தொழிலாளிகளுக்கு இடையில், இப்படியும் அப்படியும் திரும்ப முடியாமல் உட்கார்ந்திருந்த பூதாகரமான ஸ்திரீ கிரீச்சிட்டுக் கத்தினாள். டிரைவர் பின்புறமாகத் திரும்பி 'அது ஒரு ஆட்டுக்குட்டிதான்' என்று அறிவிக்க எல்லோரும் ஏகோபித்துச் சிரித்தார்கள்.

     'ஐயோ, ஆஹா' என்ற குரல்கள் கிளம்பின. முகம் சிவந்துபோன டிரைவர் ஸீட்டை விட்டு இறங்கித் தரையில் குதித்தான். அந்தச் சிகப்புக் கோரத்தில் உட்கார்ந்திருந்தவர்கள், ஆட்டு மந்தைகள் மாதிரி அவனைத் தொடர்ந்து கீழே இறங்கினார்கள். ரோடில் அங்கும் இங்குமாக நடமாடி என்ன செய்வது என்று புரியாமல் வழியை அடைத்தார்கள். எல்லோரும் பேசினார்கள். அவர்களுடைய கூச்சல் ஆட்டுக் குட்டியின் ஹீனமான கதறலை அமுக்கிவிட்டது. அதனுடைய பின்னங்கால் வண்டியின் பின் சக்கரத்தில் அகப்பட்டு அசைந்து நொறுங்கிவிட்டது. வண்டியின் கீழ் சிறைப்பட்டு நிராதரவாகப் பரிதாபகரமாகக் கிடந்தது. அந்த ஆட்டுக் குட்டியின் கண்கள் அகன்று விரியத் திறந்தபடி, மனம் சற்றும் இளகாமல் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் குனிந்து மாடு மாதிரி விழிக்கும் டிரைவரின் கண்களைக் கவர்ந்தது. இது இப்படியிருக்க அங்கு கூடிய மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சூரியவொளி மனிதர்களின் வெர்ஜு ஸுட்கள் மேலும், பெண்களின் ட்வீட், சீட்டி உடைகள் மேலும் பளபளத்தது. அதில் இரண்டு பெண்கள் மட்டும் எல்லோரையும் கடித்துத் தின்று விடுவது போன்ற பார்வை கொண்ட முரட்டாத்மாக்களாக இருந்தார்கள். ஏதோ தப்பு நடந்துவிட்டது என்பது அவர்கள் மூளையில் உதயமாக ஆரம்பித்தது. எல்லோரும் ஒரே கும்பலாக வண்டியின் பின்புறம் திரண்டு நின்றார்கள். எல்லோரும் அந்த ஆட்டுக் குட்டியைப் பார்த்தார்கள். கால் நொறுங்கிக் கிடக்கும் மிருகமாக அதை அவர்கள் பாவிக்கவில்லை. எங்கிருந்தோ திடீரென்று தங்கள் பாட்டுக்குக் குந்தகமாகக் குறுக்கே வந்து விழுந்த விவகாரமாகக் கருதினார்கள் அவர்கள். டிரைவர் அங்கிருக்கும் மனிதர்கள் யாவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

     '11 - 10 ஏ. எம். எல்லாம் நான் கான்வேக்கு வண்டியைக் கொண்டு போயிருக்கவேண்டும்' என்றான். பிறகு சிரித்தான். வேறு என்ன செய்ய, சிரித்துத்தான் தொலைக்க வேண்டும். 'உம். ஏதாவது செய்துதானே ஆகணும்' என்று சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறினான். 'விலகிக் கொள்ளுங்கள்; ரிவர்ஸ் எடுக்கப் போகிறேன் என எச்சரித்தான்.

     கூட்டம் விலகி, புல் முளைத்த ஓரத்திற்கு ஓடிச் சென்று நின்றது. வண்டி 'ஓட' ஆரம்பித்து, பின்பக்கமாக நகர்ந்தது. இதைக் கண்ட ஒரு ஸ்திரீ 'ஐயோ பாவம்' என்றாள். ஜனக்கூட்டம் 'ஹா, ஹோ' என இரைந்தது. வண்டி மெதுவாக விலகியது. ஆட்டுக்குட்டி உடனே மறுபக்கமாகப் பொத்தென்று விழுந்தது. அது கதறியது. ஜனக்கும்பலைப் பார்த்தது. 'ஐயோடியம்மா, பாக்கப் பயமா இருக்கே' என்றாள் ஒரு பெண். ரத்தம் புழுதியை நனைப்பதைப் பார்த்துவிட்டாள் அவள். 'சனியன், ஒரே ரத்தக் களறி. ஏதாவது செய்யணும்' என்றான் டிரைவர்.

     மோட்டார் சுரங்கத் தொழிலாளிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். 'ஏதாவது செய்துதான் ஆகணும். ஆமாம், அதுதானே சனியன்' என்கிற மாதிரி இருந்தது அவர்கள் முகம். ஐந்து நிமிஷத்திற்கு முன்வரை எல்லோரும் குடிக்கக் கூடக் கற்றுக் கொள்ளாமல் கூட வரும் அந்தச் சாக்குருவி தவிர மற்றெல்லோரும் குஷியாகப் பாடிக்கொண்டு 11 - 10. ஏ.எம். ரெட் லயன் மது ஹோட்டலுக்குப் போய்விடலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய மனநிலையும் ஒரே ஸ்தாயியில் நின்றது. 'இது என்னடா தொந்திரவாக இருக்கிறது' என்று நினைத்தார்கள். எல்லோரும் ஆட்டுக்குட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று யாவருக்கும் ஒரு எண்ணம் தோன்றியது.

     'வயலில் மெதுவாக அதைத் தூக்கிக் கிடத்தி வைத்துவிட்டு, நாம் போவோம்.'

     'ஆமாம், வயலில் அதை எடுத்து வைத்துவிட்டு வாருங்கள் போவோம்' என்றன பல குரல்கள்.

     'அதைக் கொன்றுவிட்டால் நல்லதல்லவா?' என்றான் டிரைவர்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/aattukkuttithaan.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs