http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



பலி

ஜோஸப் நையரு - ஹங்கேரி

     மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல்லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்படவில்லை. மேய்ப்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தீப்பந்தம் வைத்துக் கரடிகளின் பேரில் விட்டெறிந்து பார்த்தார்கள்; குண்டு போட்டுக்கூடச் சுட்டுப் பார்த்துவிட்டார்கள். ஜென்ட்யூர்கி என்ற இடத்தைச் சேர்ந்த டோ னி டீர்ஸ் என்பவனுடைய முதுகைக் கரடிகள் பிறாண்டிக் கிழித்ததுதான் மிச்சம். தன்னுடைய மந்தையில் உள்ள எருது ஒன்றின் மேல் கரடி தாவிப் பாய்ந்தபொழுது கையிலிருந்த கோடரியை டீர்ஸ் விட்டெறிந்தான். அந்த மிருகம் எருதை விட்டுவிட்டு டீர்ஸ் மேல் பாய்ந்தது. இனிமேல் காயம் ஆறினாலும் அவனுக்குப் பழைய தெம்பு எங்கிருக்கப் போகிறது?

     இது நடந்த பிற்பாடுதான் மேய்ச்சல்காரர்கள் எல்லோரும் இனிமேல் என்ன செய்வது என்பதை ஆலோசிக்க மார்ட்டின் உடூவின் குடிசையில் கூடினார்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை, சர்ப்பவிழாக் கொண்டாடி கரடிகளுக்குப் பூசை போடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கிறிஸ்துவ சமயம் இங்கெல்லாம் பரவுவதற்கு முன்னர் மிலேச்ச காலத்திலிருந்தே இருந்துவரும் ஒருவிதமான ரத்த பலி. அந்த கிரியைகளும் மந்திரங்களும் உடூவுக்குத்தான் தெரியும். அந்தக் காலத்தில் இருந்த டால்ட்டாஸ் என்ற மிலேச்ச மந்திரவாதிகள் போல, அவனுக்கு மந்திரவாதம் தெரியும். தீயும் தண்ணீரும் அவன் சொற்படி கேட்கும். அவனுடைய குடிசைக்கு அருகாமையில் வந்துவிட்டால், ஓநாய்கள் கூட வாலைக் காலிடை சொருகிக் கொண்டு 'பவ்வியமாக' நடந்து செல்லும். அவன் ஆயுசு முழுதுமே காடுகளில் கழிந்தது. அந்த மலைச் சாரல்களுக்கு வந்து பொழுது இப்பொழுது பிரம்மாண்டமாக ஓங்கி வளர்ந்து கிளையும் கொப்புமாகப் படர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் சிறு சிறு குத்துச் செடிகளாக நின்றன என அவன் சொல்லுவான். அந்தச் சுற்று வட்டாரத்திலேயே அவனை இந்தக் கிழக்கோலத்தில் தவிர வேறு நிலையில் பார்த்தோர் எவருமே கிடையாது. அன்றிருந்ததுபோலவே மெலிந்து வரண்டு இருந்து வருகிறான். அவனுடைய மனைவி இறந்துபோய் எத்தனையோ வருஷங்களாயின. அவள் செத்ததும் அவன் கையால்தான் என்றும், ஒரு காலத்தில் பேச்சடிபட்டு அதுவும் செத்து மடிந்தது. அந்தக் காலத்தில்தான் காடேறிப் போனான் என்றும் அப்போது சொல்லிக் கொண்டார்கள். ஆனால் மந்தைகளை மேய்த்துக்கட்டி வருவதில் எந்த வட்டாரத்திலுமே அவனுக்கு ஈடு இனிமேல்தான் பிறக்க வேண்டும். சென்ற ஐம்பது வருஷங்களாக, அவனுடைய கவனக்குறைவால் மந்தைக்குச் சேதம் வந்தது என்ற வார்த்தை பிறந்தது கிடையாது.

     ஆனால் இந்த வருஷம் அவனையும் ஒரு கரடி ஆட்டம் காட்டியது. ஒற்றை ஒரு நாள் இராத்திரியில் அவன் மந்தையிலே தளதளவென்றிருந்த நான்கு எருதுகளின் கழுத்தைக் கடித்துத் துண்டாக்கிவிட்டது அந்த மிருகம். இந்த 'அநியாயத்தை'க் கண்டதும் கோபாவேசத்தால் அவன் முகத்தில் ரத்தம் பரவி நின்றது. 'உன் ஆட்டமெல்லாம் அந்தமட்டுக்குந்தான்' என்று சபதம் செய்தான்.

     இது வெள்ளிக்கிழமை நடந்தது. ஆனால் சனிக்கிழமைக்குள் மந்தை அவன் கையைவிட்டு வேறு கை மாறியது. குடிசையிலிருந்து அவனுடைய தட்டுமுட்டுகள் வெளியே எடுத்து எறியப்பட்டு அவன் ஸ்தானத்திற்குக் கருந்தடியனாக ஒருவனை நியமித்து விட்டார்கள்.

     'நீ யாரடா?' என வந்தவனைத் தலைமுதல் கால்வரை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் கேட்டான் கிழவன்.

     அந்த மனிதன் வாய்விட்டு உரக்கச் சிரித்துவிட்டு 'என்னை மார்ட்டின் உடூவின் மகன் என்பார்கள்; என் பேர் ஆண்டி' என்றான்.

     கிழவன் திகைப்பூண்டு மிதித்தவனைப்போல நின்றான்.

     'என் மகனா?'

     'ஆமாம்'

     'என் வயிற்றுக்கு வைரியாக வந்துவிட்டாய் என்று மேய்ச்சல்காரர்கள் சொல்லுகிறார்களே, அது நிசமா?'

     'இந்த ஐம்பது வருஷமாகத்தான் தின்னாயே அது போதாதா? எங்களைப்பத்தி ஒரு தடவை நினைச்சுப் பார்த்திருப்பியா? எனக்கு மூணு பிள்ளைகள் இருக்குது. அதுகள் பட்டினி கிடந்து வாடுவதைப் பார்த்துக் கண்கள் பூத்துப் போச்சு. இப்போ நீ தான் கொஞ்சம் பட்டினி கிடந்து அது எப்படியிருக்குது என்று பாரேன். இல்லாவிட்டா நாசமாகப் போயேன். செத்தொழியத்தான் காலம் ஆச்சே.'




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/bali.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs