http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



டைமன் கண்ட உண்மை

ஷேக்ஸ்பியர் (1564-1616)

     ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும் உண்டு; சாணக்கியர்கள், வீரர்கள், கொலைகாரர்கள், முட்டாள்கள், தேவதைகள், வெறியர்கள் யாவரும் உண்டு. அவர் உலகத்தில், முடிவில் அறத்துக்கே வெற்றி.

     ஷேக்ஸ்பியர் 1564-ல் வார்விஷயரில் உள்ள ஸ்டாபோர்ட் - ஆன் - அவான் - (அவான் நதிக்கரையில் உள்ள ஸ்டாபோர்ட்) என்ற ஊரில் செயலுள்ள குடும்பத்தில் பிறந்தார். 1616-ஆம் வருஷம் அந்த ஸ்டோ போர்ட் - ஆன் - அவானிலேயே செயலுள்ள பிரபலஸ்தராக உயிர் துறந்தார். சிறுபோதில் அவரது குடும்பம் நொடிந்து விட்டது. அவர் மணவினை சொத்தைக் கொண்டு வந்தாலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. அத்துமீறி ஒரு காட்டில் மான் வேட்டையாடியதாலோ மற்றெந்தக் காரணத்தினாலோ ஊரைவிட்டு வெளியேறும்படி நேர்ந்தது.

     லண்டனில் முதலில் பழைய நாடகங்களைத் திருத்திக் கொடுப்பவனாகவும், நடிகனாகவும், நாடகாசிரியனாகவும், பிறகு நாடக இலக்கியத்தின் சாம்ராட்டாகவும் பேரும் புகழும் பணமும் சம்பாதித்தார். பிறகு அந்திம காலத்தைச் சுகவாசியாகக் கழிக்க, பிறந்தவூர் திரும்பினார்.

     கைப்பழக்கம் முதிர்ந்து உலகின் ஆழ்ந்த புதிர்களை எடுத்து நாடகங்களாக அமைத்த காலத்தில் பிறந்த நாடகங்கள் கீழே தந்திருக்கும் மூன்றும். 'டெம்பஸ்ட்' என்ற நாடகத்தில் அவர் பிராஸ்ரோவாக வந்து உலக நாடகமேடையில் பிரியா விடை பெற்றுக் கொள்ளுகிறார் என்று சொல்லுவார்கள். மூன்று நாடகங்கள்: டைமன் கண்ட உண்மை(Timon of Athens), மணிமந்திரத் தீவு(The Tempest), தருமதேவதையின் துரும்பு(Hamlet).

*****

     டைமன், குபேர சம்பத்துடையவன். கிரேக்க நாகரிகத்தின் நாற்றங்கால் என்று சொல்லவேண்டிய ஏதென்ஸ் நகரத்தின் பிரதான பிரஜை. உலகத்தின் சௌபாக்கியங்கள் யாவும் அவன் காலடியில் கிடந்தன. பணம் இருந்தால் மட்டும் போதுமா? மாரிபோல இரு கைகளாலும் வாரி வழங்கும் மனமும் இருந்தது.

     அவன் மாளிகையிலே நண்பர்களுக்கு ஓயாத விருந்து. எடுத்த வார்த்தைக்கெல்லாம் பரிசு. அவனுடைய வாழ்க்கையே பெருங் களியாட்டமாக இருந்தது.

     ஏதென்ஸ் நகரத்தின் குடியாட்சியில் அவனுக்கு சொல் சக்தி உந்து; ஏனென்றால் நகரத்துச் சேனையில் தலைமை வகித்துப் போர் புரிந்து, பவித்திரமான வடுக்கள் பெற்றவன்.

     டைமனை ஏதென்ஸ் நகரின் அதிர்ஷ்ட தேவதை என்றே சொல்ல வேண்டும். அவன் வீட்டில் "ஐயோ" என்று வருகிறவன் மனம் ஒடிந்து திரும்பமாட்டான். பாட்டுக்கட்டி வரும் கவிராயரும், பலநிறப் படம் தீட்டி வரும் ஓவியக்காரரும் பட்டினியோடு திரும்பியதில்லை. நகை வியாபாரிகளுக்கு அவன் முற்றத்தில் கொள்ளை லாபம்.

     டைமன் அவ்வூரில் மூன்று பேரைத் தன் உயிருக்குயிரான நண்பர்களாக மதித்திருந்தான். அவன் வீட்டுக்கு அவர்கள் விருந்தாடி வந்து பரிசில் பெற்றுப் போகாத நாள் கிடையது. ஆனால், அவர்கள் அவனைப் பணம் காய்ச்சி மரம் என்று நினைத்திருந்தார்கள். அவன் புன்சிரிப்பின் தண்மையிலே தளிர்த்தார்கள்.

     டைமன், வாரி வழங்கும் துருதுருப்புக் கொண்டவனாதலால், இரண்டு கைகளாலும் கடன் வாங்கி வந்தான். வென்டிட்டஸ் என்ற நண்பன் ஒருவன் கடன்காரன் கையில் சிக்கிக் கொண்டான்; உடனே அவனை மீட்க டைமனின் பணம் விரைகிறது. ஒரு ஏழைக் கிழவன்; அவனுக்கு ஒரு மகள். அவளை டைமனுடைய வேலைக்காரன் காதலிக்கிறான். கிழவனுக்கோ, தட்டுத் தூக்குகிறவன் தன் மகளைக் கலியாணம் செய்து கொள்வதா என்ற எண்ணம். இந்தச் செய்தி காதில் விழுந்ததும் அந்த இரண்டு இளம் ஜோடிகளும் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய பணத்தை வேலைக்காரனுக்குக் கொடுத்து, அவனை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, கலியாணமும் செய்து வைக்கிறான்.

     டைமனுக்கு வாழ்விலே கஷ்டம் தெரியவில்லை. பணத்தின் சிக்கல்கள், மனிதகுணத்தின் ஆழம் - இவற்றைத் அறிந்து கொள்ள அவகாசம் இல்லை; அப்படிப் பெரியதொரு கேளிக்கையாக இருந்தது அவன் வாழ்வு. ஆனால் அவனுடைய கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், அவனது ஆசைகள் ஓடும் திசையின் போக்கு அறிந்து அவற்றை நடத்தி வைப்பது போன்றவை அவனுடைய மாளிகைக் கணக்குப் பிள்ளையான பிளாவியஸ். அவன் யோக்கியன். டைமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டின் விபரீதம் எங்கு வந்து விடியும் என்பதை உணர்ந்தவன்; எஜமானிடத்தில் மாறாத பாசம் வைத்த பணியாளன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/dymankandaunmai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs