chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Kalappu Manam
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பத்தாண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2016

twitter
facebook
9176888688
நன்கொடை அளிக்க
இந்த பட்டனை சொடுக்கவும்

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.100
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.500
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1000
15 வருடம்
மொத்த உறுப்பினர்கள் - 599
புதிய உறுப்பினர்:
Purusothaman Siva, Sandanasamy, Hari Baskaran
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
மும்பை: உறியடி விழா: 2 பேர் பலி
நீட்: 3 அமைச்சகங்கள் ஒப்புதல்
பெங்களூர்:இந்திரா உணவகம் துவக்கம்
தமிழகம், புதுவை: கனமழை வாய்ப்பு
கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை
1. பொன்னியின் செல்வன் | 2. பார்த்திபன் கனவு | 3. சிவகாமியின் சபதம் | 4. அலை ஓசை | 5. தியாக பூமி | 6. கள்வனின் காதலி | 7. பொய்மான்கரடு | 8. மோகினித் தீவு | 9. சோலைமலை இளவரசி | 10. மகுடபதி | 11. பொன் விலங்கு | 12. குறிஞ்சி மலர் | 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) | 14. சமுதாய வீதி | 15. சாயங்கால மேகங்கள் | 16. ஆத்மாவின் ராகங்கள் | 17. நெஞ்சக்கனல் | 18. துளசி மாடம் | 19. ராணி மங்கம்மாள் | 20. பிறந்த மண் | 21. கபாடபுரம் | 22. வஞ்சிமா நகரம் | 23. நெற்றிக் கண் | 24. பாண்டிமாதேவி | 25. சத்திய வெள்ளம் | 26. ரங்கோன் ராதா | 27. ஊருக்குள் ஒரு புரட்சி | 28. ஒரு கோட்டுக்கு வெளியே | 29. வேருக்கு நீர் | 30. ஆப்பிள் பசி | 31. வனதேவியின் மைந்தர்கள் | 32. கரிப்பு மணிகள் | 33. வாஷிங்டனில் திருமணம் | 34. நாகம்மாள் | 35.பூவும் பிஞ்சும் | 36. பாதையில் பதிந்த அடிகள் | 37. மாலவல்லியின் தியாகம் | 38. வளர்ப்பு மகள் | 39. அபிதா | 40. அநுக்கிரகா | 41. பெண் குரல் | 42. குறிஞ்சித் தேன் | 43. நிசப்த சங்கீதம் | 44. உத்தர காண்டம் | 45. மூலக் கனல் | 46. கோடுகளும் கோலங்களும் | 47. நித்திலவல்லி | 48. அனிச்ச மலர் | 49. கற்சுவர்கள் | 50. சுலபா | 51. பார்கவி லாபம் தருகிறாள் | 52. மணிபல்லவம் | 53. பொய்ம் முகங்கள் | 54. சுழலில் மிதக்கும் தீபங்கள் | 55. சேற்றில் மனிதர்கள் | 56. வாடா மல்லி | 57. வேரில் பழுத்த பலா | 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே | 59. புவன மோகினி | 60. பொன்னகர்ச் செல்வி | 61. மூட்டம்புதிது
புதிய வெளியீடு


கலப்பு மணம்

கிரேஸியா டெலாடா - இத்தாலி

     அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்டிப் போர்வையிட்டு மூடிப் படுத்திருந்த பூமி, மலர்ச்சியின் அறிகுறியுடன் போர்வையை அகற்றிவிட்டது. அமைதியான அந்த இரவில் தளிர்ச் சுருணைகள் இரகசியமாக நிமிர்ந்தன. வயல் புறங்களில் பூக்கள் நட்சத்திர ரகசியத்தை ஏறிட்டு நோக்கின. வான வளையத்திலே மங்கலான வெளிச்சம்; ஆனால் காட்டுக்கப்புறம் தீ எரிவது மாதிரி, அதாவது காட்டுக்கு மணமும் வெதுவெதுப்பும் கொடுக்கிறது மாதிரி, சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது.


     மந்தை அருகில் படுத்திருந்த நாயும் தூங்கிக் கொண்டிருந்தது. குடிசையிலிருந்த மந்தைக்காரனும் தூங்கிக் கொண்டிருந்தான். ஏனென்றால், எஜமான் மாப்பிள்ளைக் கோலத்தில் பெண்டாட்டி 'சம்பாதிக்க'ப் பக்கத்தூருக்குச் சென்றிருந்தான். மேய்ப்பவனுக்குத் தன்னைவிடத் தன் நாயின் மீது அபார நம்பிக்கை. அது நல்ல குட்டி; சூட்டிகையும் வேகமும் அதிகம்; அதன் காவலில் ஒரு சின்ன ஆட்டுக்குட்டிக்குக் கூட ஆபத்து நேர்ந்ததில்லை. மேய்ப்பவனுக்குக் கடுந்தூக்கம்; கும்பகர்ண உபாசனை. நாய்க்கு அறிதுயில். 'இந்த மிருகங்களின் காவலாளி நான் மட்டுந்தான்' என்று நாய் தன் முழுப் பொறுப்பையும் உணர்ந்திருந்தது போலும். ஆனால், வசந்த இரவின் வெதுவெதுப்பு அதன் நரம்புகளையும் பாதித்தது. அதன் முதுகு அடிக்கடி குலுங்கியது; அதன் மயிர் காற்றில் அசைவது போல் தூக்கத்தில் மெதுவாக முனகிக் கொண்டது. புரியாத ஆசைகளும் உணர்ச்சிகளும் அதன் கனவுகளைத் தேக்கின - பருவத்தின் துடிதுடிப்பு. அது இன்னும் குட்டிதான். குலவிருத்தியில் ஈடுபடாத குட்டி.

     ஆனால் அந்த நரிகள் - பாறை ஓரத்தில் வளர்ந்து கிடந்த குத்துச் செடிகளில் பதுங்கிக் கிடந்த நரிகள், ஆணும் பெண்ணும், தூங்கவில்லை. அவைகளால் தூங்க முடியவில்லை. அவைகளுக்குப் பசி, நீண்ட பனிக்காலத்தின் பஞ்சம், வயிற்றை ஒட்டவைத்ததோடு புத்தியையும் கூர்மையாக்கியது.

     பருவத்தின் மாறுதலை உணர்ந்த நரிகள் சந்தர்ப்பம் வந்தது என்று நினைத்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஆணுக்குப் புத்தியும் திறமையும் இருந்ததினால் வெளியேறி வந்தது. அது கறுப்பு நிறம், குள்ளம்; வால் நீளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. கண்கள் நட்சத்திரங்கள் போலச் சுடர்விட்டன. பெண் நரி பெரிது. கொஞ்சம் மங்கின சாம்பல் நிறம்; மழுமழுப்பாகவும் நீண்டும் இருந்தாலும், உடம்பைச் சுருக்கிக்கொண்டு, சின்னக் குருவிக் குஞ்சு மாதிரி, தரையோடு தரையாக ஒண்டிக் கிடக்கவும் அதற்குத் திறமையுண்டு.

     அது ஆண் நரியைப் பின் தொடர்ந்தது. 'ஏன் தொடர்கிறோம்' என்ற யோசனை கூட இல்லாமல் அது நடக்கிற மாதிரியே உடம்பை ஆட்டிக்கொண்டு நடந்தது. முன்னங்காலடித்தடத்தில் பின்னங்காலடித் தடத்தைப் பதியவைத்து நடந்தது. வால் அடிச்சுவட்டை அழிக்காவிட்டால், ஏதோ இரண்டு கால் பட்சி நடந்தது மாதிரித் தோன்றும். சரிவில் இருந்த ஓடைப்பக்கமாக இரண்டும் வந்து சேர்ந்தன. இராத்திரி குரல் ஏதும் கேட்கிறதா என்று இரண்டும் கவனித்தன. சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் வெள்ளம், கரையோரத்துச் செடிகளின் முறுமுறுப்புக்களைக் கவனியாது, பாய்ந்து சலசலத்தது.

     ஆண் நரி தண்ணீர் குடித்தது; தாகத்தால் அல்ல, மூக்கின் நுனியைக் குளிர வைத்துக்கொள்ள. பிறகு பின்புறமாகத் திரும்பி வாலைத் தண்ணீரில் தோய்த்து அலசியது, பெண்கள் தலையைக் கழுவுவது மாதிரி. பெண் நரியும் அதன் போக்கைத் தெரிந்து கொண்டு, அதைத் தொடர்ந்து மேட்டில் ஏறி, புல்வெளி வழியாக அதைப் பின்பற்றியது; ஆனால் அது தன் வாலால் தரையில் சுவடுகளை அழித்துக்கொண்டே சென்றது. எல்லாம் அவை விரும்பியபடியே இருந்தன. ஆண் நரி ஆட்டுக்கிடையிருந்த புல்வெளி ஓரத்தில் நின்றது. பெண் நரியும் நின்றது. இரண்டும் மோப்பம் பிடித்துக்கொண்டு நின்றன. துளிகூடச் சத்தம் இல்லை. பூமியில் பச்சிலை வாசனை; வைக்கோல், புல், காட்டுப் புஷ்பங்கள் இவற்றின் கதம்ப வாசனை. பெண் நரியும் இதை முகர்ந்தது.

     அதுதான் சொந்தமாக வேறு ஒரு பிளான் நினைத்திருந்தது. ஆண் நரியைக் குத்துச் செடியருகில் நிற்க வைத்து விட்டு, கன வேகமாகத் துள்ளி ஓடியது. வாலிபத் துடிப்பின் வெறி போதையாக மலர்ந்து, வேகத்தில், பலத்தில் இயங்கியது. அவளது ஒரே ஆசை துள்ளிக்குதித்து விளையாடுவதே. அவள் பசியை மறந்தாள். ஒரே குதூகலம். திருட்டை நினைக்காததினால், பசியற்ற, திருட்டு நினைப்பற்ற சகபாடியை எதிர்பார்த்தாள். பழைய குடும்ப சிநேகிதம் மாதிரி ஆட்டுமந்தையை அணுகினாள்.

     நாய் அவளையும் அவள் நோக்கத்தையும் அறிந்துகொண்டது; அதனால் தான் குரைக்கவில்லை. சடக்கென்று எழுந்து நின்றது. அவளைச் சந்திக்க ஓடியது. கழுத்தைப் பிடித்தது; வலிக்காமல் பிடித்தது. அவள் சடக்கென்று திரும்பிக் காதைக் கடித்தாள். அவள் கடிதத்தைவிட சற்று அதிகமாகப் பல் படும்படியாக (தேள் கொட்டியது மாதிரி) நாய் நடுங்கியது. அதன் முதுகு நரம்புகளில் இன்பம் நடுங்கிக் கொண்டு மிதந்து உடலில் பரவியது. நாய்க்கும் விளையாட வேண்டும் என்று வெறி கிளம்பி விட்டது. மனிதன் பூட்டிய அடிமை விலங்கையும், மிருங்கங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் உதறித் தள்ளிவிட்டு, தன் வாழ்க்கைச் சூனியத்திலிருந்து தப்பி ஓடத் தவித்தது. அவன் பெண் நரி மீதிருந்த பிடியை விட்டான். மறுபடியும் எட்டிப் பிடிப்பதில் உள்ள இன்பத்தை அநுபவிக்கத்தான். பெண் நரியைக் கீழே தள்ளி இரத்தம் வரும்படி உற்சாகத்தில் கடித்தான். திடீரென்று அவன் பிடியிலிருந்து தப்பி ஓட ஆரம்பித்தாள். இருட்டில் ஓடி மறைந்து கொண்டாள். நாயும், அவளைப் பார்த்து, தொடர்ந்து, வேகமாகப் புல் தரைமீது ஓடினான். சந்திரன் வயலில் வெள்ளிக்கோடு போட்ட இடத்தில் பெண் நரி நின்றாள். அதன் அருகில் நீலப்பாதாளம்; அங்கு எப்பொழுதோ ஒரு காலத்தில் ஒரு நதி ஓடியிருக்கலாம். அங்கு நின்று அவன் வந்ததும் அவனைப் பார்த்துத் திரும்பினாள். நாயும் அவள் மீது பாய்ந்தது. அவளும் அவன்மீது பாய்ந்தாள். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொள்ளுவது போல இருந்தது. இருவரும் தரைமீது கட்டிப்பிடித்துக்கொண்டு விழுந்து சரிவில் புரண்டனர். விளையாட்டு, கடுமையாகவும் பயங்கரமாகவும், ஆனால் பரிவுகலந்த மென்மையுடனும் இருந்தது.


     இதற்குள் ஆண் நரி நேராகக் கிடைக்குள் சென்றது. அடர்ந்த ரோமத்துடன் கொழுத்துத் தூங்கும் ஆடுகளை அது ஒன்றும் செய்யவில்லை. அதன் நோக்கம் புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளே. பெண் பன்றியுடன் அவை ஒரு மூலையில் கிடந்தன. தாய் அவைகளைக் காப்பாற்ற முயன்றது. ஆனால், ஆண் நரி, மண் ஒட்டின தன் ஈர வாலை அதன் கண்களில் அடித்து அதைக் குருடாக்கியது. பிறகு அந்தக் கொடுமையான பகையாளி, தன் கூர்மையான எஃகுப் பல் நுனிகளால் பன்றிக் குட்டிகள் கழுத்தில் இறுக்கி, ஒவ்வொன்றாக ஐந்து குட்டிகளைத் தூக்கிச் சென்றது. முதலில் மைதானத்தின் ஓரத்திற்கும், அப்புறம் தன் இருப்பிடத்திற்கும் இரண்டு நடையாகத் தூக்கிச் சென்றது. அங்கு வந்தபின், உடனே 'விருந்து பண்ண' ஆரம்பித்தது. வெகு நேரம் கழித்துப் பெண் நரி வியர்க்க இளைக்கத் திரும்பி ஓடி வந்த பொழுது பசி அதிகம்; ஒரு முழுக் குட்டியையும் தோலைக்கூட விடாமல் தின்றுவிட்டது.

     விடியற்காலையில் மேய்ப்பன் பன்றிக்குட்டிகள் பறி போயின என்று கண்டான்; ஆனால் அதற்காக அவன் கவலைப்படவில்லை. கவலையீனத்திற்காக மனசாட்சி அவனைப் பாதிக்கவில்லை. நாயும் குரைக்காமல் தூங்கியது; இரவு முழுவதும் தன் கடமையைச் செய்ததால் களைத்தது போல இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. "பாவம்! திருட்டுப் பசங்கள் மந்திரம் போட்டு உன் வாயைக் கட்டிப் போட்டான்கள். அது உன் குற்றம் அல்ல; என் குற்றமும் அல்ல. எஜமானுக்கும் பேச வாயில்லை. ஒரு பெண்பிள்ளை மந்திரம் போட்டு அவர் வாயையும் கட்டிவிட்டாள். அவரையும் சரியாகக் கட்டிப் போட்டாச்சு."

     விபரீத வேடிக்கையான அந்த நிலைமையின் முழு அர்த்தத்தையும் உணராமலே அதற்குத் தலை குனிந்தான்.

     சில நாள் கழித்து காட்டில் சுற்றிக்கொண்டு வரும்பொழுது நரிப்பொந்தை அணுகினான். இரண்டு நாய்க் குட்டிகள் சுற்றிச் சுற்றி ஓடி ஒன்றையொன்று கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவன் நெருங்கியபோதும் தப்பித்து ஓட முயலவில்லை. அவனை ரொம்பக் காலமாகத் தெரிந்தது மாதிரி பார்த்துக் கொண்டு நின்றன. நரியும் ஏமாற்றித் தப்பி ஓடிவிட முடியாத கலப்பு ஜாதி என்பதை அவன் கண்டான்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்

பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம் :  அபிதா

சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை

ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்

ரமணிசந்திரன்

சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்


சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்

க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு

கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்

மகாத்மா காந்தி :  சத்திய சோதனை

ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி

பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி

என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி

விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்

கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)

ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்

வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்

சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை

மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா

கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்


ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை

திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்

ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை

முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்

நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம்

இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை

உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா

பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை

கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்

பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா

ஆன்மீகம் :  தினசரி தியானம்அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.100
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.500
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1000
15 வருடம்
மொத்த உறுப்பினர்கள் - 599
புதிய உறுப்பினர்:
Purusothaman Siva, Sandanasamy, Hari Baskaran
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக

1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017

1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)
உங்கள் கருத்துக்கள்


நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)