http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



கனவு

ஐவான் டர்ஜனீப் - ருஷியா

     அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலேயே அவளுக்குக் கலியாணமாகியிருந்தது. எனது தகப்பனார் இறந்தது எனக்கு நன்றாக ஞாபகத்திலிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஏழு வயதிருக்கும். என் தாயார் நல்ல அழகிதான்; ஆனால், முகத்தில் எப்பொழுதும் சோகக்களை தட்டியிருக்கும். அவளைச் சிறு வயதிலேயே எல்லாரும் ரொம்ப அழகி என்று சொல்லிக் கொள்வார்களாம். ஆனால் அவளது கண்களில் மிதக்கும் சோக விலாசத்தைப் போல் நான் வேறு எங்குமே கண்டதில்லை. எனக்கு அவள் மீது அத்யந்தப் பற்றுதல்... அவளும் என்னைப் பிரியமாக நடத்தினாள்... ஆனால் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இல்லை. ஏதோ அந்தரங்கமான பெருவியாதி போன்ற துயரம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அது எனது தந்தையின் மரணத்தால் மட்டிலும் ஏற்பட்டது என்று கூறிவிடமுடியாது. என் தந்தையின் நினைவும் அவள் மனத்தில் வெகு ஆழமாகப் பதிந்திருந்தது. அது மட்டிலும் இல்லை, அதைவிட வேறு ஏதோ ஒன்று அவளை வாட்டிக் கொண்டிருந்தது என்று எனக்குப் பட்டது.

     என் தாய் என் மீது பாசமாக இருந்தாள் என்று கூறினேன். ஆனால், சில சமயம் என்னை வெறுத்தாற்போல் நடந்துகொண்டாள். என்னை ஒரு சுமையாகப் பாவித்து உதறித் தள்ளினாள். சில சமயங்களில் அவளாலேயே தடுக்க முடியாத வெறுப்பு அவளைக் கவ்வியது. பிறகு அதற்காக மிகவும் வருந்துவாள். கண்ணீருடன் என்னைக் கட்டித் தழுவிப் பொறுமுவாள். இதற்கெல்லாம் அவளது உடைந்து போன தேக ஸ்திதியும், எனது நடத்தைகளுமே காரணம் என்று எண்ணினேன்.

     ஆனால், அவளுடைய வெறுப்புக்கள், நான் மோசமாக - போக்கிரித்தனமாக - நடந்துகொண்ட சமயத்தில் எழவில்லை. எனது தாய் எப்பொழுதும் துஷ்டிக்கு அறிகுறியாகிய கறுப்பு உடையே அணிந்து வந்தாள். நாங்கள் தாராளமாகச் செலவு செய்து சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் ஒருவருடனும் பழகாது தனியாகவே வசித்து வந்தோம்.

2

     எனது தாயின் நினைவுகள், கவலைகள் - எல்லாம் எனது வளர்ப்பில் கவிந்தன. அவள் எனக்காகவே வாழ்ந்தாள் என்று சொல்லிவிடலாம். அப்படியிருந்தது அவள் பராமரிப்பு. இம்மாதிரியாகப் பெற்றோரின் கவலையெல்லாம் கவிழ்வது குழந்தைகளுக்கு நல்லதன்று; கெடுதலை விளைவிப்பதும் சகஜம். ஒற்றைக்கொரு பிள்ளை என்றால், கண்டபடி வளரும். தங்களைப் போல் பிள்ளைகளும் இருக்க வேண்டுமே என்று பெற்றோர்கள் நினைப்பதில்லை. ஆனால் நான் சீர்கெட்டுப் போகவில்லை. எனக்குப் பிடிவாதமும் கிடையாது. ஆனால் எனது நரம்புகள் மிகவும் தளர்ச்சியடைந்துவிட்டன. அதிலும் நான் மிகவும் பலவீனப்பட்ட பிள்ளை. என்னைப் பார்த்தால் என் தாயைப் பார்க்க வேண்டாம். அவ்வளவு முக ஜாடை ஒத்திருக்கும். என் வயதிற்கேற்ற சிநேகிதர்கள் கிடையாது. யாருடனும் பேசுவதற்குச் சங்கோஜம். என் தாயாருடன் கூட அதிகமாகப் பேசமாட்டேன். எனக்குப் புஸ்தகம் என்றால் பெரிய பைத்தியம். வெறுங்கனவு கண்டுகொண்டு, தனியாகத் திரிவதில் எனக்கு இச்சை. என்ன கனவுகள் என்று சொல்லுவது கஷ்டம். ஏதோ ஒரு கனவு. கதவு பாதி திறந்திருக்கிறது. அதற்குப் பின்புறம் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆசை சொக்கும்படி அதன் முன்பு நான் நின்று காத்துக்கொண்டே இருப்பேன். வாசற்படியைத் தாண்டுவதில்லை. அதற்கப்பால் என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே, ஆசை உந்தித்தள்ள வாசற்படியில் நின்றுகொண்டே சில சமயம் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. கவிதையுள்ளம் படைத்திருந்தால் பாட்டெழுதத் தொடங்கியிருப்பேன்; மதப்பற்று இருந்தால் சன்னியாசம் பெற்றிருப்பேன்; இரண்டும் என்னிடம் கிடையாததினால் கனவு கண்டுகொண்டே காத்திருந்தேன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/kanavu.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs