http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



காரையில் கண்ட முகம்

இ.வி. லூக்காஸ் - இங்கிலாந்து

     நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்றித் திரும்பியது. கூட்டத்தில் ஒவ்வொரு ஆசாமியும் தம் நண்பருடைய, நண்பருடைய, நண்பருடைய யாருக்கோ சம்பவித்த பைசாச அநுபவங்களைக் கூறி எங்களைப் பயப்படுத்தி நம்பவைக்க முயன்றார். அவையெல்லாம் உப்புச் சப்பற்று வெறும் முயற்சிகளாக ஒழிந்தன. அந்தக் கூட்டத்தில் எனக்குத் தெரியாத பலர் வந்திருந்தனர். என் நண்பன் ரட்சன் வெயிட் ஒரு மூஞ்சூறு ஆசாமியை அழைத்து வந்திருந்தான். அந்த ஆசாமி ஒவ்வொருவர் சொல்வதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தான். கடைசியாக, அவன் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருப்பதைக் கவனித்த டாப்னி, "இம் மாதிரியான அநுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டது கிடையாதோ?" என்று மரியாதையாகக் கேட்டான்.

     அந்தப் புதிய ஆசாமி சிறிது நேரம் மௌனமாக யோசித்துவிட்டு, "உம்! சாதாரணமாக அதைக் கதை என்று விவரித்து விட முடியாது. உங்கள் அநுபவமெல்லாம் கேள்வி ஞானந்தானே! என்னுடையது அப்படிப்பட்டது அல்ல. உண்மை எப்பொழுதும் கதையைவிட விபரீதமானது என்று நான் நினைப்பவன். அத்துடன் உண்மை கதையை விட எப்பொழுதும் சுவாரஸ்யமானது. எனக்குச் சமீபத்தில் ஏற்பட்ட அநுபவத்தைக் கூறுகிறேன். அதிலும் ஆச்சரியம் என்னவெனில் இன்று மத்தியானம் தான் அக்கதை முடிவடைந்தது."

     அதை எங்களுக்குச் சொல்லுமாறு நாங்கள் அவனை வேண்டிக் கொண்டோம்.      "இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு ஹால்பார்ண் பகுதியில், பெரிய ஆர்மாண்ட் தெருவில் சில அறைகளில் வாடகைக்கு இருந்தேன். அங்கு படுக்கையறையில், முந்திக் குடியிருந்த ஆசாமி வெள்ளையடித்திருந்தான். அதனால் சுவர் முழுவதும் ஈரம் சுவறியதால் பாளம் பாளமாகக் காரை விழ ஆரம்பித்தது. அதில் ஒன்று - இது ஏற்படுவது மிகவும் சாதாரணம் - ஒரு மனிதனுடைய முகம்போலக் கறை படிந்திருந்தது. இதில் அதிசயம் என்னவென்றால் சாதாரணமாக எதிர்பார்ப்பதைவிட அதில் மனித முகஜாடை மிகவும் அதிகமாக இருந்தது.

     "காலையில் கண்விழித்தவுடன் எனக்கு உடனே எழுந்திருப்பதற்கு எப்பொழுதும் சோம்பல். அப்பொழுதெல்லாம் அந்தக் காரையில் காணப்பட்ட மனித முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மற்ற இடங்களில் ஈரம் காய ஆரம்பித்ததும் கறைகள் மறைய ஆரம்பித்தாலும் அந்த முகம் மட்டும் மறையவே இல்லை.

     "அங்கு குடியிருக்கும்பொழுது எனக்கு ஒரு தடவை இன்புளூயன்ஸா ஜுரம் கண்டது. வியாதியாகப் படுக்கையில் கிடக்கும்பொழுது, வேறு வேலையொன்றும் இல்லாததினால், அதைப் பார்த்து, அதைப் பற்றி யோசித்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். அதிலிருந்துதான் அந்த முகம் என் உள்ளத்தில் அதிகமாகப் பதிந்து படிந்து விட்டது. அதன் மீது எனக்கு நிஜமான உயிருள்ள மனிதன் போல ஆச்சரியமான பற்றுதல் எழுந்தது. இரவும் பகலும் அது என் மனத்தை ஒருங்கே கவ்வியது என்று கூறலாம். அந்த உருவத்திற்கு, மூக்கு சிறிது ஒரு பக்கம் வளைந்து, நெற்றி விசாலமாகச் சரிந்து உயர்ந்திருந்தது. அது சாதாரணமாகக் காணப்படுவதாயும், மனத்தில் பதியக் கூடாததாயுமுள்ள முகமில்லை; ஆயிரத்தில் ஒன்று; ஒரு முறை பார்த்தால் மனத்தை விட்டு அகலாது.

     "எனக்கு உடம்பு குணப்பட்டு வந்தது. ஆனால், அந்த முகம் என் மனத்தைக் கட்டுப்படுத்தியது. தெருவில் போகும் பொழுதெல்லாம் அதைப்போன்ற மனிதன் இருக்கின்றானா என்று தேட ஆரம்பித்தேன். 'அந்த முக ஜாடையுள்ள மனிதன் எங்கேயிருக்கிறான், அவனை அவசியம் சந்திக்க வேண்டும்' என்று என் மனத்தில் ஒரு பேய் ஆசை எழுந்தது. காரணம்? காரணம் எனக்கு விளங்கவில்லை; கூற முடியவில்லை. அவனையும் என்னையும் விதி ஒரே சங்கிலியால் பிணித்திருக்கிறது என்று திட்டமாக நம்பினேன். மனிதர்கள் ஏராளமாகக் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று தேட ஆரம்பித்தேன். அரசியல் கூட்டங்கள், பந்து விளையாடும் மைதானங்கள், ரயில்வே ஸ்டேஷன் - இவற்றிலெல்லாம் தேடினேன். காலையிலும் மாலையிலும் சுற்றுப்புறங்களிலிருந்து நகரத்தில் வந்து திரளும் ஆயிரக்கணக்கான மக்களில் அவனும் இருக்கக்கூடாதா என்ற நினைப்பு. எல்லா முயற்சியும் வீணாயின. இந்தத் தோட்டத்திலிருந்துதான் மனித முக ஜாடைகளில் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது, அவற்றை எத்தனை பகுதியாகக் கூடப் பிரித்துத் தொகுத்துவிடலாம் என்று உணர்ந்தேன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/karaiyilkandamugam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs