http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



நட்சத்திர இளவரசி

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்

     "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி.

     அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான்.

     "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவிடும்; நம்மை எதிர்க்க ஒருவருக்கும் தைரியம் வராது; அல்லது அப்படித் தைரியமாக நம்மை எதிர்த்தாலும், அவர்களைத் தோற்கடித்துப் புகழும், ஏராளமான செல்வமும் பெறலாம்" என்றான் டபூதி.

     "அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மை எதிர்த்தால் நமது கதி என்ன?" என்றான் அய்ட்டோ.

     "நம்மிடம் அதற்கேற்ற தைரியம் இருந்தால் அவர்களை வெல்வோம், வா! நாமிருவரும் இத்தீவு முழுவதையும் சுற்றி இருக்கும் தலைவர்களையும் தைரியசாலிகளையும் வென்று, மங்கரேவா முழுவதிலுமே மிகுந்த வீரர்கள் நாம்தான் என்று புகழ் சூடிக் கொள்வோம்" என்றான்.

     அய்ட்டோ அரைமனத்துடன் சம்மதித்தான்.

     பின்பு இருவரும் தம் தீவிலிருந்த தேங்காய்களையும், வேறு கனிகளையும் சேகரித்தனர்.

     இரண்டு பன்றிகளைக் கொன்று அவற்றை அப்படியே முழுசாகச் சுடுகற்கள் மீது வைத்து வாட்டினார்கள்.

     மாலையில் தங்கள் குடிசை முன்பு இருந்த புல்தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

     அய்ட்டோ விற்கு வரவரப் பசி குறைய ஆரம்பித்தது. மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கடைசியில் உண்ண மறுத்து விட்டான்.

     "இதென்ன? நீ இப்படிச் சாப்பிடாவிட்டால் நாம் சண்டையில் வெற்றி பெறுவது எப்படி?" என்றான் டபூதி. முதலில் கெஞ்சினான், பின் பயமுறுத்தினான். ஒன்றிலும் பயனில்லை. அய்ட்டோ வேண்டாமெனத் தலையை அசைத்தான்.

     "அவசியமானால், நீ தனியாகவே வேண்டுமானாலும் புறப்பட்டுப் போ; ஆனால் இனி என்னால் சாப்பிட முடியாது" என்றுவிட்டான் அய்ட்டோ.

     மனத் திருப்தியில்லாது டபூதி தன் பங்கைச் சாப்பிட்டான்; பின்பு அய்ட்டோ மீதி வைத்ததையும் உண்டான்.

     அன்றிரவு உறங்கிவிட்டு, விடியற்காலம், உதயசூரியன் முதுகில் எரிக்க, கடற்கரை மார்க்கமாக நடந்தார்கள்.

     சிறிது நேரம் கழித்து ஒரு கிராமத்தையடைந்தார்கள். அதன் நடுவில் பிரவேசித்து, டபூதி ஊரிலுள்ள தைரியசாலிகளைப் போருக்கு அழைத்தான்.

     அவ்வூர்த் தலைவன் அதற்குப் பதில் சவால் கூறினான். ஊரில் தைரியசாலிகள் என்று கருதப்படும் மூவர் தங்கள் ஈட்டிகளை எடுத்து வந்தனர். தலைவனும் அம்மூவரும், ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீதும் பாய்ந்து வந்தார்கள். டபூதி கோஷித்துக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தான். அய்ட்டோ வும் பின்னால் பாய்ந்தான். சிறிது நேரத்தில் நான்கு வீரர்கள் பிணமாகச் சரிந்தனர்.

     அய்ட்டோ , கிராமத்திலுள்ள மிகவும் வயோதிகப் பருவமடைந்த கிழவனிடம் சென்று, "நாங்கள் திரும்பி வரும்பொழுது அந்தத் தலைவனின் சொத்துக்களையும் மனைவி மக்களையும் கப்பமாக எடுத்துக் கொண்டு போவோம்" என்று சொன்னான்.

*****




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/natchathirailavarasi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs