http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஒருவனும் ஒருத்தியும்

லூயிகய்ல்லூ - பிரான்ஸ்

     மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை நாடி; முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயது இருக்கும். நீண்டு தொங்கும் குதிரை மூஞ்சி; அவள் தேகமே கோளாறு பிடித்த உடம்பாகத் தென்பட்டது. அவள் வாய்விட்டுத் தேம்பித் தேம்பி அழுதாள்; மனத்துக்குள்ளாகவே முனகினாள். சுற்றிலுமுள்ளவர்களை வைகிற மாதிரி. அண்டை வீட்டுக்காரர்கள் பல தடவை அவள் பக்கம் போய்ப் புத்தி சொல்லிப் பார்த்தார்கள். "வீட்டுக்குள்ளே போ; இப்படி அமக்களம் பண்ணாதே; இல்லாட்டா... இப்படி அழுது கொண்டிருந்தால், உனக்குத் தலைவலி வரும்; அதனாலே என்ன ஆகப்போகிறது?" இந்த வார்த்தைகள் எல்லாம் அவள் காதில் பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கிழட்டு பிணங்களுக்கு வேறு வேலை இல்லை? என் இஷ்டப்படி செய்வேன்; இவர்களுக்கென்ன; எல்லாத்தையும் ஒரேயடியாகத் தொலைச்சு முழுகினாத் தேவலை என்று நினைத்தாள்.

     சில சமயங்களில் தலையைக் கிராதியில் சாய்த்துக் கொண்டாள்; தூக்கம் பிடிக்காத பிரயாணி தூங்க முயலுவது மாதிரி. சில சமயம் முகத்தைக் கை வைத்து மூடிக்கொண்டு மனங்குமுறி அழுதாள்; ஓடைத் தண்ணீர் மாதிரி விரல் வழியாகக் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது. சில சமயம் வாய்விட்டு ஏங்கினாள். சமயா சமயங்களில் மௌனப் பேய் பிடித்த மாதிரி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு கன்னத்தை உள்ளங்கையில் ஏந்தி முழங்கையை முழங்காலின் மேல் ஊன்றிப் பிடித்து வைத்த சிலை மாதிரி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். அவர் ஆபீசிலிருந்து வரும்போது அவரைத் திக்பிரமையடிக்க வைக்க இந்த மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவள் தன் மனதிற்குள் நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்ட வஞ்சத்தின் ஒரு அம்சமே இது. சண்டை இந்த மாதிரி திரும்பிய நிமிஷத்திலேயே இந்த நினைப்பு அவளுக்கு உதித்தது. எப்படியானாலும், ஞாபக சக்தியைக் கொஞ்சம் அவள் உபயோகித்தால் போதும். மாடிப்படிக் கட்டில் வந்து உட்கார்ந்து கொள்வதும் இதுதான் முதல் தடவை என்பதல்ல . இது அவளுக்கு வெறியூட்டியது; அதுதான் அவள் விரும்பியதும். எப்படி இருந்தாலும் வேறு மாதிரியாக நடந்துகொள்ள அவளுக்கு வழியில்லை ஆமாம். விட்டுவிட்டு ஓடிப்போய்விடுவதாகப் பயமுறுத்துவார்; நன்றாகப் பிய்த்து வாங்கிவிடுவதாக பயமுறுத்தவும் கூடும். கோபாவேசத்தில் வெளி வரும் பயமுறுத்தல்களின்படியெல்லாம் செய்யமாட்டார் என்பது நிச்சயமாகத் தெரியும். அவர் என்ன செய்தாலும் விட்டுவிட்டு ஓடிப்போகமாட்டார்; அடிக்கவே மாட்டார்; நித்தியம், நித்தியம் இவர்கள் இப்படித்தான்; இதே வழியில்தான் போய்க் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அதுதான் அவளை இப்படித் தறிகெட்டுக் கொதிக்கும்படி செய்திருக்கலாம்.

     மாடிப்படி வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் அவள் அருகாமையில் நெருங்குகிறபோது ஆச்சரியத்துடனோ அனுதாபத்துடனோ தோளைக் குலுக்கிக்கொண்டு சென்றார்கள். அவள் அவர்களைப் பார்த்ததாகக்கூடக் காட்டிக் கொள்ளவில்லை. வழிவிட்டு விலகுவது போலப் பாவனை கூடச் செய்யவில்லை. யாராவது அவள் பக்கம் விரைவாக மடமடவென்று சென்றால், போகும்போது கைகளை மிதித்துவிட்டால்; - அப்படியேதான், பிடித்து வைத்த சிலை மாதிரிதான் உட்காந்திருப்பாள். ஒருவேளை, அவர்கள் அப்படி மிதிக்கக் கூடாதா என்று கூட அவள் விரும்பியிருக்கக்கூடும். மீண்டும் யாரோ ஒருவர் 'எத்தினி நேரமாச்சு; மத்தியானமாச்சே; உள்ளே போகக்கூடாதா?' என்றார். அவள் பதில் சொல்லவில்லை. ஏன் பதில் சொல்லவேண்டும்? பதில் சொல்லிக் கொண்டிருக்கவா அவள் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தன் நிலை பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாளா? அப்படி அல்ல. அவர்களுடைய இரக்கத்தில் அவளுக்குப் பொருளே இல்லை. அவள் அங்கே வந்து உட்கார்ந்த காரணம், எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதுதான்; அவளை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார் என்று அவர்கள் தெரிந்து கொள்ள; அவளை எவ்வளவு படுத்துகிறார் என்று எல்லோரும் பார்க்க. எல்லோரும் பார்த்துவிட்டார்கள், அவர்களுக்கும் தெரியும் என்பதை அவர் தெரிந்து கொள்ள. அதுதான் அவள் விரும்பியதெல்லாம்; அதாவது அந்த நிமிஷத்தில் விரும்பியதெல்லாம்; அதுதான் அவளுடைய யோசனையில் முதல் அம்சம். அவர்கள் என்ன வார்த்தை சொன்னாலும் - அனுதாபப்பட்டோ இரக்கப்பட்டோ எந்த வார்த்தை சொன்னாலும் அவள் தேம்பித் தேம்பி அழுவாள்; அந்தத் தலையைச் சாய்க்க இன்னும் ஒரு நல்ல இடம் பார்த்தாள்; தலைக்கு என்ன சீவல் வேண்டிக் கிடக்கிறது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/oruvanumoruthiyum.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs