http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



பூச்சாண்டியின் மகள்

லூயி கௌப்ரஸ் - ஹாலந்து

     அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் விளிம்பாகச் சுருண்டு தொங்கிய அளகபாரம், பளபளக்கும் அலை வளைவுகள் நிறைந்த போர்வையாக, அவளது உடல் முழுவதையும் மறைத்தது...

     பொதுவாக, நீலத்தாடிவாலாவுக்கு மகள் ஒருத்தி உண்டென்று யாருக்குமே தெரியாது. அவனது கடைசி மனைவியின் சகோதரர்கள்தான் அவனைக் கொன்றுவிட்டனர். வாரிசில்லாமல் மாண்டு போனான். அவர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டனர் என்று பலர் நினைக்கின்றனர். இந்தக் கதை சம்பந்தமான புராதன சாசனங்கள் எல்லாவற்றையும் என்னைப் போல் பரிசோதனை செய்திருந்தால், நீலத்தாடிவாலா, தனது மண்டை இரு கூறாகப் பிளக்கப்பட்டு, தன் மகள் மடியில் செத்தான், அவளுக்குத் தன் சொத்தெல்லாவற்றையும் விட்டுச் சென்றான் என்பதை இலகுவில் கண்டு கொண்டிருப்பார்கள்.

     பத்தேமா என்ற அந்த அனாதை - அழகிக்குத் தகப்பனார் பேரில் அத்யந்தப் பிரீதி; அவனுக்கும் அப்படித்தான். சொன்னபடி கேட்காத மனைவிமாரை அகற்றுவதற்குத் தகப்பனார் கையாண்ட வழிதான் அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அந்த முறை கௌரவமானதில்லை, சிலாக்கியமான வழியில்லை; மேலும் சிறிதும் கற்பனையற்ற ஒரே மாதிரியான வழி என்று அவள் கருதினாள். ஒவ்வொரு சிறிய தாயாரும், இரகசியத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமல் இருக்க மாட்டாள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் தன் தகப்பனார் வழி சரியானது என்று சிறிதும் ஆதரிக்கவில்லை. மன்னிக்க முடியாத காம வெறியைத் தணித்துக் கொள்ளச் செய்யப்பட்ட கொலை என்பதே அவளது முடிவான அபிப்பிராயம்.

     நீலக்குழலி பத்தேமா, ஏராளமான செல்வம், அடிமைகள் சூழ்ந்திருக்க, அனாதையாக வளர்ந்தாள். வேலைக்காரர்கள், சிப்பந்திகள், அடிமைகள் யாவரும், அவளுக்கு ராஜ மரியாதை செய்தனர். பாக்தாதின் 'பிரபல குடும்பங்கள்' கலிபாவின் மந்திரி பிரதானிகள், எல்லோரும், எங்கும் நீலக்குழல் நங்கையின் செல்வத்தைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவளது அழகோ, செல்வமோ எந்த வாலிபனையும் திருமணப் பாதையில் இறங்கத் துணிவு கொடுக்கவில்லை. ஆகையால் அழகி பத்தேமா தன் பளிங்கு மாடங்களில் தனித்தே வசித்தாள். தூரத்திலே பேரீச்ச மரத்தோட்டங்கள், ரோஜா வனங்கள், பளிங்கு போன்ற தடாகங்கள், தங்கத்தாலும் வெள்ளியாலுமே கட்டப்பட்ட வேனில் மாளிகையின் வைரமிழைத்த தூண்கள் - இவைகளிடையே தனித்து நடமாடினாள்.

     முடிவில் அவளால் தனிமையைச் சுமக்க முடியவில்லை. தோட்டக்காரன் மகன் நல்ல அழகன்; அவன் பட்டிக்காட்டான்; ஆனாலும், போகத்திலும் நாகரிகத்தின் நுனிக் கிளைகளிலுமே நடமாடிய பத்தேமாவை அவனது கிராமியத் தன்மை வசீகரித்தது. கலிபாவின் ஆஸ்தான மண்டபத்திலோ, அல்லது பாக்தாத் பிரபல குடும்பங்களிலோ, என்ன பேசிக் கொள்ளுவார்கள் என்பதைக் கொஞ்சமும் சட்டை செய்யாது அவனைக் கலியாணம் செய்து கொண்டாள் பத்தேமா.

     பத்தேமா குதூகலித்திருப்பது போலத் தோன்றியது. தனது பரிவாரங்கள் புடைசூழ, புருஷனுடன் நாலு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தாள்; ஒய்யாரப் படகுகளையும் தங்கப் பல்லக்குகளையும் அடிக்கடி வெளியே பார்க்க முடிந்தது. அவளும் அவளது காதலன் எமீனும் மந்திர சக்தியால் இணைக்கப்பட்ட தம்பதிகள் போல் தோன்றினர். பலமும் அழகும் மிகுந்த வாலிபன், புதிதாகப் பெற்ற செல்வத்தின் மெருகில் திகழ்ந்தான்... அவளோ எனில், காதலும் அளவற்ற நகைகளும் பிரகாசிக்க, நீலக்குழற் பாரத்துடன் விளங்கினாள். பிரபல குடும்பங்கள், 'மகனை வைத்துக் கொண்டு அசட்டையாக இருந்து விட்டோ மே!' என்று குறைகூறிக் கொள்ளலாயின...

     திடீரென்று ஒரு வதந்தி. எமீன் இறந்து விட்டானாம்... அதற்கு முந்திய தினந்தான் அவனை எல்லாரும் மசூதியில் தொழுகை செய்வதைப் பார்த்தார்கள்... இப்பொழுது அவன் செத்துப் போனதாகச் செய்தி. நகரமே நடுங்கியது என்று சொல்ல வேண்டும். பிரதம விஜியரும், பிரதம நீதிபதியும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியமே இல்லை என்று முடிவு கட்டினர். ஏனென்றால், அதற்கு முந்திய தினத்தில் தர்பூஜ் பழங்களை அளவு மிஞ்சித் தின்றதால், கழிச்சல் எடுத்து எமீன் மாண்டு போனதாகச் சொல்லிக் கொண்டார்கள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/poochandiyinmagal.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs