http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

ஹென்றி டிரெக்னியர் - பிரான்ஸ்

     அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில்லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் தோற்கடிக்கும் மஸ்லின் உடையைக்கூட அவளால் தாங்க முடியவில்லை. ஷெஹர்ஜாதி அவ்வளவையும் கழற்றி எறிந்தாள். கழுத்தணிகள், கைவளை, ஏன் - எல்லா ஆபரணங்களையும் கழற்றிப் பக்கத்திலிருந்த தாம்பாளத்தில் வைத்தாள்.

     கதை சொல்லி முடிந்த ஆயிரத்து ஓராவது நாள் சுல்தான் பரிசளித்த முத்திரை மோதிரத்தை - அவளை எந்தக் கஷ்டங்களும் அணுகாமல் காக்கும் அந்த மந்திர மோதிரத்தை - அதையும் கழற்றி வைத்தாள். சிறிதாவது சுகத்தையளிக்கும் என்று நினைத்து, அவள் நந்தவனத்துப் பளிங்கு மண்டபத்தையடைந்தாள். நிர்மலமான பளிங்கின் மீது செயற்கையூற்றின் பனித்துளிகள் தடவிக்கொடுத்தன. நாள் முழுவதையும் அங்கு கழித்தும் பயன் என்ன? சோர்வும் களைப்பும் தீர்ந்தபாடில்லை. தன்னுடைய உயிருக்குயிராகக் கருதி வளர்த்த மாடப்புறாக்களும் அவளுக்குக் குதூகலத்தையளிக்கவில்லை. இவ்வளவு களைத்த ஷெஹர்ஜாதி அன்று சாயங்காலம் என்ன கதை சொல்லுவது என்று ஆலோசியாது இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

     பகலைப்போல் இரவும் அவ்வளவு புழுக்கமாக இருந்தது. ஷெஹர்ஜாதி, அன்று உறங்கப் போனபொழுது, குதூகலமாகவோ அல்லது நிம்மதியாகவோ மஞ்சத்திற்குச் செல்லவில்லை. கொஞ்சக் காலமாக சுல்தான் அவளது தினசரிக் கதைகளைச் சிறிது அசட்டையாகவே கேட்டு வந்தான். கதை ஆரம்பித்த உடனேயே சுல்தானுடைய சுவாரஸ்யம் குறைந்தது, துன்பம் கவிந்த சிந்தனையில் ஆழ்ந்தான். நெரித்த புருவமும், ஒவ்வோரிடத்தில் நரையோடிய தாடியில் தேங்கித் தேங்கி உலாவும் விரல்களும், சிற்சில சமயங்களில் இரத்தினமிழைத்த வாளையோ, இடையில் சொருகிய கட்டாரியையோ தன்னையறியாமல் தடவும் கைகளும், சுல்தானின் துன்பச் சாயைகளைத்தான் அவளுக்குத் தோற்றுவித்தன. கதையை எவ்வளவு அற்புதமாகப் பின்னினாலும், கதையின் யக்ஷணியை என்ன நயமாகக் கொண்டு வந்தாலும், சுல்தானின் முகக்குறி மாறுவதேயில்லை. எப்பொழுதும் கதை முடிந்ததும், அவளைக் கதைக்காகப் புகழ்வான். அவளது களைப்பைப் போக்குவதற்காக மலைச் சிகரங்களிலிருந்து தருவித்த உறைபனியைத் தருவான். இவையும் நின்றுவிட்டன.

     சுல்தான் வேறு விஷயங்களில் தனது கவனங்களைச் செலுத்தி விட்டான் என்பதற்கு இவ்வளவு போதாதா?

     தன்னைப்போல் கதை சொல்லுகிறவர்கள் இந்தப் பூவுலகத்திலேயே கிடையாது என்று நினைத்திருந்தவளுக்கு, சுல்தானின் நடத்தை சிறிது மனத்தில் உறுத்தியது; அவளது தற்பெருமையின் ஜீவநாடியில் குத்தியது. ஸ்திரீகள் எல்லோரும் ஒருமுகமாக அவளைப் பெண் குலத்தின் வெற்றி என்று புகழவில்லையா? அவள்தான் சுல்தானின் குரூர மனவோட்டங்களைத் தடுத்தவள். தன் உயிருக்கே உலைவைத்த வலையிலிருந்து அவளுடைய தந்திரம் அவளைத் தப்புவித்தது. இதற்குமேல் பெண்ணின் பெருமைக்கு வேறு என்ன வேண்டும்? அவள் தன் பெருமைகளைப் பற்றி உணர்ந்தவள். அன்று சாயங்காலம் சுல்தான் ஷாரியார் நடந்துகொண்ட விதம் அவளது தற்பெருமையைச் சிறிது புண்படுத்தியது. அவன் பிரயோஜனமில்லை. ஷெஹர்ஜாதியின் கதை கேட்கும் பேறு பெற்றவர்கள் ஒரு வார்த்தையைக்கூட விடாது கேட்க வேண்டும். அவன் கதை கேட்கும்பொழுது சிடுசிடுவென்று முசுறுபோல் உட்கார்ந்திருக்கலாமா? சுல்தானின் ஞாபக மறதி அவள் மனத்தில் கோபத்தை எழுப்பியது. கற்பனைத் தேவியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் லேசில் பொறுமையை இழந்துவிடுவார்கள். இவ்வளவிற்கும் மேலாக, அந்தந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி அடிக்கடி ஆவலுடன் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் ஷாரியார், அன்று பேசாது வாயடைத்துக் கிடந்தான்.

     சுல்தான் அன்று கதையைக் கேட்கப் பிரியமில்லாமல்தான் கேட்டுக்கொண்டு இருந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. கதை முடிந்தவுடன், ஷெஹர்ஜாதியைக் கவனிக்காது, ஹுக்காவின் புகைமண்டலத்தில் மறைந்தான். பளிங்குத் தடாகத்தில் பிரதிபலிக்கும் தனது சிரித்த முகத்தில் தோன்றி மறையும் புன்சிரிப்பை லயமின்றி நோக்கினான்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/sheharjaathikathaisolli.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs