http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சுவரில் வழி

ஆர். முரே கில்கிரைஸ் - இங்கிலாந்து

     அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று மலர்ந்து கண்ணுக்கு ரம்மியமாக இருந்தன. தூரத்திலே, எங்கோ, இரண்டு மூன்று 'அக்கா குருவிகள்' சோக கீதத்தை எதிரொலிப்பது போல் குரல் எழுப்பின. கூடு கட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் சிறுகுருவியொன்று கலகலவென்று சப்தித்துப் பறந்து கொண்டிருந்தது.

     அப்பொழுது கெஸயா அன்வின் என்பவள் ஹாதர்டன் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்லுகிறாள். ரூவான்ரகம் வாத்து முட்டைகளை ஸ்ரீமதி புல்குரோவுக்குக் கொடுத்துவிட்டு வரலாம் என்ற நோக்கந்தான். அவளுடைய தகப்பனார் பண்ணை கோழி, வாத்து முதலியவற்றிற்குப் பிரசித்தி பெற்றது. கெஸயா இவற்றை நன்றாக வளர்ப்பதில் கெட்டிக்காரி. பட்சி வளர்ப்பின் சூட்சுமங்களில் உள்ள பெரிய சிக்கலான பிரச்சனைகளிலெல்லாம் அவள் முடிவு தான் வேதவாக்கு. இவ்வளவு சிறிய வயதிலேயே இந்த விஷயங்களையெல்லாம் எப்படி அறிந்துவிட்டாள் என்பதில் ஊராருக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். இந்தத் தொழிலில் சம்பாதித்துத்தான் ஜீவனம் நடத்த வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கில்லை. ஊரிலே நல்ல பணக்காரன் அவள் தகப்பன். இம்மாதிரி பட்சி வளர்ப்பில் கிடைக்கும் பணத்தையெல்லாம் அவள், அழகான நாஸுக்கான உடைகளை வாங்கி அணிந்து, அந்தக் கிராமத்தாருக்குப் பட்டண மோஸ்தரைக் கொண்டு வந்து காண்பிப்பதிலேயே செலவு செய்வாள்.

     அன்று நீலக் கவுன் ஒன்றையணிந்து நாஸுக்காக வெளியே புறப்பட்டாள்.

     அழகான பெண் என்றால் ஊரிலுள்ள வாலிபர்கள் எல்லாரும் அவளைக் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்படமாட்டார்களா? அவர்கள் குலாசாரப்படி எத்தனையோ வாலிபர்கள் அவளைத் தமக்கு மனைவியாகும்படி கேட்பதற்காக வீட்டிற்கு வருவார்கள். கிழட்டுத் தகப்பனாருக்குத் தன் மீதுள்ள அத்யந்த சிநேகத்தால்தான் இவர்கள் வந்து சூழுகிறார்கள் என்ற நினைப்பு; அவர்களிடம் சாரமற்ற கதைகளை நீட்டிக்கொண்டு போவான். பாவம்! அந்த வாலிபர்கள் மெய் வருத்தம் பாரார் - பசி நோக்கார்! - இத்யாதி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலட்சியம் பலிதமாகும் என்று காது கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அவளை விரும்பிக் கேட்டவர் பலரை மறுத்துவிட்டாள் கெஸயா. இந்த மாதிரியான அநுபவத்தில் அவள் ஒன்று கற்றுக் கொண்டாள். மொட்டையாக 'மாட்டேன்' என்று சொல்லுவதை விட, வருகிற ஆசாமியை 'நையாண்டி' செய்து தலையிறங்க வைத்துவிட்டால் மறுப்பதில் ஒரு சிரமமும் இல்லை. இந்த மறுப்பு மான்மியத்தில் முக்கியமாக ஜான் ஹாரைக்கின் முயற்சிதான் பிரமாதமாக ஊரார் ஞாபகத்தில் இருக்கிறது. கெஸயா இதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவனே குடிவெறியில் உளறிக் கொட்டிவிட்டான். அவன் காதல் பித்தேறியவனாகக் காலில் விழுந்த பொழுது, தலையில் ஒரு வாளித் தண்ணீரைக் கொட்டிவிட்டு, பின்பு அவனிடம், "ஐயோ, பாவமே! உனக்கு வலிப்பு வந்துவிட்டது என்றல்லவோ பயந்துவிட்டேன்!" என்றாளாம்.

     ஒரே ஒரு சமயந்தான் அவள் இதயம் சிறிது இளகியது. ராக்பி எட்ஜ் என்ற இடத்தைச் சேர்ந்த ரேவ் பார்மூர் தன்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அவளிடம் கேட்டான். அவள் இறுதியில் மறுத்துவிட்டாலும், மனம் சிறிது இரங்கியது என்பது மட்டிலும் நிச்சயம்.

     காரணம் இருவரும் சிறு பிராயத்திலிருந்தே தோழராக விளையாடி வளர்ந்தார்கள் என்று கூறுகிறார்கள். அவள் மறுத்ததற்குக் காரணம் தன் ஏழ்மை ஸ்திதியே என்று அவன் கூறிக் கொண்டிருந்தான்.

     பாதையில் ஒரு திருப்பம். குத்துச் செடிகள் நன்றாக முளைத்து அடர்ந்த இடம். கெஸயா அங்கு நின்று சிறிது யோசித்தாள். சாலை வழியாகவே நடப்பதென்றால் இன்னும் இரண்டு மைல் தூரம் புழுதியில் செல்லவேண்டும். குறுக்கு வழியாக இடையிலிருக்கும் குட்டிச் சுவர்களை ஏறிக் குதித்துச் சென்றால் கால்மணி நேரத்தில் ஹாதர்டன் வீட்டிற்குச் சென்று விடலாம்.

     "போனால்தான் என்ன? ரேவ் பார்மூர் நிலந்தான். இப்பொழுது அங்கே நிற்கவா போகிறான்! வெயிலோ கொளுத்துகிறது!" என்று நினைத்தாள்.

     இடையில் இருந்த கூடையைச் சிற்றோடையின் கரையில் வைத்துவிட்டு, மரத்து மூடுகளின் இடைவழியில் நுழைந்தாள். முதலில்தான் சிறிது கஷ்டம். பின்பு சிற்றோடையின் கரைமீது சாவதானமாக நடக்கலாம். வயல் வரப்புகளில் புஷ்பங்கள் செறிந்த குத்துச் செடிகள். இவற்றின் இடை வழியாக நடந்து, முதல் சுவர்ப் பக்கம் நெருங்கினாள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/suvarilvazhi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs