http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



தாயில்லாக் குழந்தைகள்

பிரான்ஸிஸ் பெல்லர்பி - இங்கிலாந்து

     வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் மறு ஓரத்தில் பின் தங்கித் தொடர்ந்து கொண்டிருந்தாள். 'ஏன் உலாத்தப் போயிருக்க வேணும்' என அவள் எண்ணினாள். 'யாராவது எப்பவாவது அண்ணன்கூட உலாத்தப் போவாளா?...' மனசில் வருத்தமும் வெறுப்பும் குமிழியிட்டது. பையன் வீட்டில் உட்கார்ந்து வழக்கம்போல காப்பியாவது எழுதிக் கொண்டிருந்தோமில்லியே என நினைத்தான்.

     விலாக் கொடி அவன் சென்ற பாதை ஓரத்துச் சுவர்மேல் கவிந்து தொங்கியது. சிறுமி கொஞ்சம் நின்றாள். பச்சைப் பசேல் என்று பட்டுப்போல இலை, கிண்ணம் மாதிரி பூ... மழையில் நன்றாக நனைந்து பிரகாசித்தால் நன்றாக இருக்காதா என்று நினைத்தாள்.

     சுவர்மேல் உடைந்த கண்ணாடித் துண்டுகள் நெடுகக் குத்தி வைக்கப்பட்டிருந்தது. வெயில் வெளிச்சம் அதில்பட்டு வைர நகை மாதிரி பளிச்சிட்டது. அவர்களுடைய அப்பா ஒரு பாதிரியார். அவருடைய சர்ச்சுக்கு வார்டனான (டிரஸ்டி மாதிரி) ஸ்ரீ ஹார்ப்பர் அந்த ஊரிலேயே ரொம்பப் பெரிய பணக்காரர். நிஜமான நகை என்றால் அப்படி ஒரு நிமிஷத்திற்கு அதை விட்டு வைத்திருக்க மாட்டாரே. வச்சிருந்தாலும் ஜனங்கள் உடைந்த கண்ணாடித் துண்டுன்னுதான் நினைச்சிருப்பார்கள்.

     'பிலுக்குக்காரி' என்றான் பையன். 'என்ன ரொம்ப பிலுக்கிக்கிட்டு நடக்கிறியே. பையிலே கையை வச்சிக்கிட்டு நடந்தா ஆம்பிளை ஆயிருவியோ. ஒன்னைப் பார்த்தா அசட்டுப் பொட்டச்சி மாதிரிதான் இருக்கு' என்று சொல்லிவிட்டுக் காலால் தரையில் உதைத்துப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு காலில் கிடந்த ஜோடுகளை நிசாரமாகப் பார்ப்பதுபோலப் பார்த்துப் பெருமையடித்துக் கொண்டான் பையன்.

     அவன் நிஜத்தைச் சொல்லலேன்னு அவளுக்குத் தெரியும். சட்டைப் பையிலே கையிருக்குதுன்னா அது அவளுக்கு வழக்கம். பிலுக்குகிறதுக்கே தைரியம் தனக்குக் கிடையாது என்பது அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவன் அப்படிச் சொல்லிவிட்டால், இயற்கையாக நடக்கவோ பேசவோ அவளுக்கு முடியாது. அழுகை அழுகையாக வந்தது. ஒண்ணும் செய்ய முடியலெ. பைக்குள் கிடந்த வேர்த்துப் புழுங்கும் அழுக்கு விரல்களை இறுக்கி மடக்கி நெரித்துக் கொண்டாள்.

     அப்பொழுதுதான் கிழவி கார்லண்ட் வீட்டுக் கிழட்டு நாயைப் பார்த்தான் அவன். 'அதோ கிடக்கே சோம்பேறி நாயி. அதெ எழுப்பி 'சூ' விடறேன் பாரு. ஏ, நாயி...' நிழலில் படுத்துக் கிடந்த சுகத்தில் அது திரும்பவில்லை. அது கிழவி வைத்திருந்த கடையின் ஜன்னலுக்குக் கீழே படுத்துக் கிடந்தது. பையன் குனிந்து ஒரு கல்லை எடுத்தான்.

     'கொடுமெ பண்ணாதியேன், போடாதே - போடக்கூடாது...' பையன் கல்லை விட்டெறியும் சமயத்தில் அவள் அவனுடைய கையைத் தட்டிவிட்டாள். கல் நாயின் மேல் விழாமல், மேலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது.

     குழந்தைகள் இரண்டும் பயத்தில் விரைத்துப் போய், சில்லு சில்லாகச் சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக்கொண்டு நின்றன. அச்சமயம் ஒரு கிழவியின் கீச்சுக் குரல் பீதி கொப்பளித்துக் கொண்டு பிறப்பது கேட்டது. பையனுக்கும் பயம் சற்றுத் தெளிந்துவிட தப்புவதற்காகச் சிறுமியின் கையை எட்டிப் பிடித்துக்கொண்டு 'வாடி ஓடிருவோம்' என்றான். அவர்கள் ஓடியே போயிருப்பார்கள். ஆனால் அந்த ஒரு நிமிஷத்திலேயே கிழவி கதவைத் திறந்துகொண்டு லொங்கு லொங்கு என ஓடி வந்து குழந்தைகளைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்து ஜன்னலையும் காட்டிக் கத்த ஆரம்பித்தாள். கிழட்டு நாயும் துணைக்கு நின்று குலைத்தது.

     'மாஸ்டர் டிக், மிஸ் ஸாரி - என்னா பண்ணிப்புட்டிங்க பாத்தியா - அந்தப் பெரிய பாறாங்கல்லை விட்டெறிஞ்சு என்னைக் கொன்னே போட்டிருப்பிகளே. மயிரிழெல்ல தப்பிச்சேன். உங்கப்பா நல்ல பக்திமான். இப்படி இந்தத் தாயில்லாப் புள்ளைங்க கொலெகாரரா அலைஞ்சு திரியுதுன்னு அவருக்குத் தெரிஞ்சா எப்பிடி இருக்கும்? உங்கம்மா செத்துப்போயி ரெண்டு வாரங்கூட ஆவுலியே. கர்த்தர் கழிச்ச ஞாயிற்றுக்கிழமையிலியா நீங்க இப்படிச் செய்யணும்? நான் வெயிலா இருக்கேன்னு உள்ளே இருந்து கணக்குப் பார்த்துகிட்டிருந்தேன்...' என அடுக்கிக் கொண்டே போனாள். மடை உடைத்துக் கொண்டு பாய்ந்த மாதிரி வார்த்தை கங்கு கரையில்லாமல் புரண்டு பிரவகித்தது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/thaayillaakkulanthaigal.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs