http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



தையல் மிஷின்

இவான் கூம்ஸ்

     அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

     வீட்டில் அவனைத் தவிர அவனது இரு பெண் பிள்ளைகள்தான். அவர்கள் படுக்கச்சென்று நெடுநேரமாகிவிட்டது. வெளியே ஒரு நாட்டியக் கச்சேரிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி மெதுவாக மெத்தைக்குப் போவது கேட்டது. வீட்டுக்குள் வந்ததும் என்றும் கேட்கக்கூடிய 'குசுகுசு'ப் பேச்சும் 'களுக்' என்ற சிரிப்பும் கேட்கவில்லை. ஒரு பேச்சும் இல்லாது வெளிக் கதவைத் தாளிட்டுச் சென்றனர். பனியுறை மாதிரி நிசப்தம் கவிந்தது.

     உடம்பு 'துருதுரு' வென்றதால் உருண்டு புரண்டு படுத்தான். ஆனால் மனது மட்டிலும் ஒரே விஷயத்தில் கவிந்தது. தனது மனைவியைப் பற்றி அன்று நினைத்துக் கொண்டிராவிட்டால் அதைப் பொறுக்க முடிந்திருக்காது. ஆனால் அவன் மனது லூயிஸாவைக் கண்டிப்பாக அகற்றியது. அவளது உருவத்தையும் நினைவிற்குக் கொண்டு வருவதைத் தடுத்தது. அவள் இறந்ததினால் ஏற்பட்ட வருத்தத்தை மறக்கவே, அவள் உபயோகித்து வந்த தையல் மிஷினை யாரிடம் கொடுப்பது என்று ஆலோசிக்க ஆரம்பித்தான்.

     சின்ன விஷயந்தான். ஆனால் அவன் ஒரு திட்டமான முடிவிற்கு வந்தான். "என் சகோதரியின் தையில் மிஷின். அதை எனக்குத் தரவேண்டும்" என்று மின்னா கேட்டாள். அவன் கொடுக்க மறுத்து விட்டான். தனது முடிவை மாற்றுவதாக அவனுக்கு எண்ணமில்லை. ஆனால் அவன் மனக்கண் முன்பு மின்னா வந்து மிஷினைக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உருவெளித் தோற்றம் நிரந்தரமாக இருந்து வந்தது. அதை அவனால் அகற்ற முடியவில்லை. அன்று பிற்பகல் அவள் தன்னிடம் எதிர்ப்பட்ட மாதிரி தோன்றியது. அழுது அழுது சிவந்த கண்களும், நனைந்த கைக்குட்டையும், சகோதரியின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் குறித்தன. இருந்தாலும் தையல் மிஷின் வேண்டும் என்று அவளால் கேட்க முடிந்தது. இந்த வேண்டுகோள் அவனைத் திடுக்கிட வைத்தது. வெறுப்பை ஊட்டியது. மரணத்திற்கு முன் சாமானைப் பங்கு போட வந்துவிட்டது மட்டுமல்ல, வேறு ஒரு காரணமும் உண்டு.

     அப்பொழுதுதான் ஹாலிற்குள் நுழைந்து சாவியைப் பைக்குள் போட்டான். ஏதோ சப்தம் கேட்டு அது வந்த திசையை நோக்கினான். எப்பொழுதும் மிஷின் சப்தம் கேட்டுப் பழக்கம். அன்றும் கேட்பதுபோல் பிரமை ஏற்பட்டது. கேட்க இயலாத நிசப்தத்தில் வெகு நேரம் ஆழ்ந்திருந்த பின் தான் மின்னா எதிரில் இருப்பதாக உணர்ந்தான். எப்பொழுதும்போல் அவனைக் கண்டதும் விலகிப் போகாமல், சுவரில் சாய்ந்த வண்ணம் ஒதுங்கி நின்றாள். அவள் ஏதோ சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். அவள் உடையை விட அவள் மனத்திலிருப்பது அவ்வளவு கனமா? வார்த்தையும் அவள் தலையணியும் அவளை அழுத்தியது போலப் பேசினாள், அம்மாதிரி மிஷின் வேண்டும் என்று கேட்கும்போது.

     "அதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று நீ நினைப்பாயோ?" என்று அப்பொழுது கேட்டாள்.

     வெடுக்கென்று "ஏன் அதை நாங்கள் கொடுத்துவிட வேண்டும்?" என்று கேட்டமாதிரி மறுபடியும் இப்பொழுது கேட்டுக் கொண்டான்.

     (அச்சமயம் அவள் குறிப்பிட்ட 'அது' என்னவென்று கூட வினவவில்லை.) வெடுக்கென்ற பதிலைக் கேட்டவுடன் குழப்பமடைந்து பின்னடைந்தபொழுது சுவரின் பக்கம் நிற்காவிட்டால் நழுவி விழுந்திருப்பாள்.

     அவள் உபசாரமாக மன்னிப்புக் கேட்பதுபோல். "இந்தக் காலத்துப் பெண்கள் தையல் மிஷினைத் தொட மாட்டார்கள் என்று நினைத்தேன்" என்று சொன்னாள். அந்த நிமிஷத்திலும் தன் மகள் பிளாரன்ஸ் பணமில்லாததால் தான் மிஷின் வாங்காது சும்மா இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியும். அவளை இடைமறித்து "லூயிஸா மிஷின் இருபது வருஷ காலமாக மேலேயே இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான்" என்று பதிலளித்து விட்டான். பெண்கள் உபயோகித்தார்களோ என்னவோ, அவர்களுடைய உடைகள் எல்லாம் அவர்கள் பிறந்தது முதல் அதில்தான் தைக்கப்பட்டன. அவள் மொட்ட மொழுக்கென்று சொன்னமாதிரி அதைத் தொலைத்து விடுவதற்கான நினைப்பே கிடையாது. அதைச் சுற்றி ஒரு பாசம் வளர்ந்திருக்கிறது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/thaiyalmishin.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs