http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



வீடு திரும்பல்

பீட்டர் எக் - நார்வே

     மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது.

     குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுது பிற்பகல்; மேலும் ஜூன் மாதத்து மனோகரமான வெய்யிலடித்துக் கொண்டிருந்தது. விறைத்துப் போகும்படி குளிராட்டும் அந்தப் பகுதிகளில் சூரிய உஷ்ணம் லேசில் கிடைக்காத சுகம். தெருபக்கமாக முதுகைத் திருப்பிக் கொண்டு, மடியிலிருந்த துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தாள். தைத்த துணி சுத்தமாகப் பெருக்கப்பட்ட தரையில் விழுந்து கிடந்தது. சிறிது தூரத்தில் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த தையல் மிஷின்மீது குனிந்த வண்ணம் அவளது சிறிய மகள் உட்கார்ந்திருந்தாள். அவள் நேராகத் தாயாரைப் பார்த்தாள். அதற்கப்புறம் ஜன்னல் வழியாகத் தெரியும் தெருவையும் பார்த்தாள். குடிசையுள் எவ்வளவு அமைதியோ அவ்வளவு தெருவிலும்.

     மிஷின் பக்கத்தில் ஒரு கடிதம். அதை அப்பொழுதுதான் தாயாருக்கு வாசித்துக் காட்டி முடித்தாள். இப்பொழுது இருவரும் பேசவில்லை. எல்லாம் அமைதி. அடிக்கடி கடிதத்தை எடுத்துப் பார்த்துவிட்டு மேஜையின்மீது வைத்துக் கொண்டிருந்தாள் மகள். அப்புறம் தாயைப் பார்த்தாள்; தெருவைப் பார்த்தாள்.

     "இந்தத் தடவை சந்தேகமே இருக்க முடியாது" என்றாள் தாயார், தரையில் விழுந்த துணிகளைக் குனிந்து எடுத்துக்கொண்டு.

     "இல்லை! இந்தத் தடவை அப்பா நிச்சயமாக வந்து சேருவார்!" என்றாள் மகள்.

     அவள் பெயர் குணேலி. நேற்று முந்திய தினம்தான் வேலைக் காலம் முடிந்து திரும்பி வந்தாள். (அங்கெல்லாம் வேலைக்காரர்கள் 'இத்தனை மாதம் உழைக்கிறோம்' என்று ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.) நாளை மறுநாள்தான் மறுபடியும் புது ஒப்பந்தப்படி வேலைக்குப் போக வேண்டும். அவளுக்குப் பதினெட்டு வயது கூடச் சரியாய் நிரம்பவில்லை. நன்றாக அகன்று பலம் பொருந்திய தோள்கள்; துன்பத்தில் கூட அமுக்க முடியாதவை போன்றிருந்தன. அதற்கேற்றாற் போல் மார்பும், எடுப்பாக முன் ஓங்கி, பிடிவாதக்காரக் குழந்தை மாதிரி நிமிர்ந்து நின்றது.

     "அடுத்த மாசம் ஆனால் போய் ஐந்து வருஷமாகும்."

     "ஆமா...ம்" என்றாள் குணேலி, மிஷினை ஓட்டிக் கொண்டு.

     தாயாரும் தைக்க ஆரம்பித்தாள். குணேலி, தங்கியிருக்கும் இரண்டு தினங்களையும் பயன்படுத்திக்கொள்ள அவள் நினைத்ததால் இருவரும் தகப்பனார் வரவு பற்றி மறுபடியும் ஒரு வார்த்தை கூடப் பேசாது, வேலை செய்ய ஆரம்பித்தார்கள். அன்று மாலை படுத்துக் கொள்ள உடைகளை அகற்றும்பொழுது, "நீ போகும்முன் அவர் வந்துவிட்டால், உனக்கு அங்கே படுக்கை போட்டுக்கொள்வது" என்று ஜன்னலுக்குக் கீழுள்ள மூலையைக் காண்பித்தாள் தாயார்.

     "ஆமாம். அதை லேசாகச் செய்யலாம்" என்றாள் குணேலி.

     அதற்கப்புறம் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

     இரண்டாவது நாள் காலை புது எஜமான் வீட்டில் வேலை பார்க்கக் குணேலி புறப்பட்டுப் போனாள். காலில் மிதியடி போடாத பையன் அவளுடைய பெட்டியைக் கை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்றான்.

     பெடர் ஸோல்பர்க் வேலை செய்யும் படகு பிற்பகலில்தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இங்கிலாந்திலிருந்து வருகிறது. லண்டனில் புறப்பட்டுவிட்டது என்பது நிச்சயம். எந்த நேரம் இங்கு வந்து சேரும் என்பது யாருக்கும் நிச்சயமில்லை. ஜல்தியாக வந்தாலும் வரலாம். நேரம் கழித்து வந்தாலும் வரலாம். அது வந்து சேருவது எத்தனையோ காரியங்களைப் பொறுத்தது. ஒன்று கப்பல் சாமான்; இன்னொன்று காற்று. அதனால் அவள் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டுத் தைக்க உட்கார்ந்தாள். மிஷின் இடைவிடாது வீரிட்டுக் கொண்டிருந்தது. அவசரப்படுகிறவள் போல் ரொம்ப ஜரூராக வேலை செய்தாள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/veeduthirumbal.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs