http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



எமனை ஏமாற்ற...

     மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள் என்ற முத்திறங்களையும் மதித்து வழிபடுவோர் இந்தத் துர்தேவதைகளை வணங்கமாட்டார்கள். இந்தத் தேவதைகளிடமிருந்து இஷ்டசித்தி பெறுகிறவர்கள் முடிவில் தாம் பெற்ற வரத்தினாலேயே துன்பப்படுவார்கள்." நிபான் - ரீயி - இக்கி என்ற கிரந்தத்தில் உள்ள கதை இதற்குத் தகுந்த சான்று.

     ஷோசி மகாராஜா ஆட்சியின் போது ஸானூகி பிராந்தியத்தில் யமாத கோரி என்ற ஊரில் புக்ஷுகி நோஷின் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒத்தைக்கொரு குழந்தைதான் உண்டு. அது பெண்; அதன் பெயர் கினூமி. கினூமி நல்ல அழகி; வனப்பும் உருவும் ஒருங்கே அமைந்திருந்தன. அவளுக்கு வயது பதினெட்டான போது தேசத்தில் ஒரு கொடிய தொற்று நோய் கண்டது. அவளும் அந்த நோய்க்கு ஆளானாள். அவளுடைய பெற்றோரும் உறவினரும் ஒரு துர்தேவதையை வணங்கி அவள் உயிரைக் காப்பாற்றும்படி வரங் கிடந்தார்கள்.

     பல நாட்கள் மயங்கிக் கிடந்த பெண் தெளிந்து ஒரு நாள் மாலை தான் கண்ட கனவைச் சொன்னாள். அந்த துர்தேவதை தன் முன் தோன்றி பின் வருமாறு சொல்லியதாம்: "உன்னுடைய பெற்றோர்கள் உருக்கமாக என்னை வழிபட்டதினால் உன்னைக் காப்பாற்ற விரும்புகிறேன். வேறு ஒருவருடைய உயிரை உனக்குக் கொடுக்காமல் உன்னை என்னால் காப்பாற்ற முடியாது. உன் பெயருள்ள பெண் யாரும் உனக்கு ஞாபகம் வருகிறதா?" என்று அந்த தெய்வம் கேட்டது. "உத்தரிகோரியில் என் பெயர் கொண்ட ஒரு பெண் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும்" என்று கினூமி சொன்னாள். "அவளை எனக்குக் காட்டு" என தேவதை என்னைத் தொட்டது. அதன் ஸ்பரிசம் பட்டதும் நானும் உடன் எழுந்தேன். மறு க்ஷணத்தில் உத்தரிகோரி கினூமி வீட்டில் நின்றோம். "அதோ அந்தப் பெண்தான்" என்று யமாதகோரி கினூமி சொன்னாள். தேவதை சிகப்புப் பையிலிருந்து உறி மாதிரி ஏதோ ஒரு இரும்பு ஆயுதத்தை எடுத்தது. உத்தரிகோரி கினூமியின் வீட்டுக்குள் புகுந்து அவள் நெற்றியில் அதைச் சொருகியது. அலறிக்கொண்டு உத்தரிகோரி கினூமி தரையில் சாய்ந்தாள். யமாதகோரி கினூமி விழித்து இந்தக் கனவைத் தனது பெற்றோரிடம் சொன்னாள்.

     இதைச் சொன்ன பிற்பாடு அவள் மறுபடியும் மயங்கி விட்டாள். மூன்று தினங்கள் உலகப் பிரக்ஞையே இல்லாமல் கிடந்தாள். உயிர் போய்விடுமோ என்று பெற்றோர் தவித்தனர். ஆனால் மறுபடியும் அவள் கண்ணை விழித்தாள். உடனே பாயிலிருந்து எழுந்தாள். சுற்றுமுற்றும் வெறித்துப் பார்த்துவிட்டு, இது என் வீடில்லையே, இது என் பெற்றோரில்லையே" என்று கத்திக்கொண்டு வெளியே ஓடினாள்...

     விபரீதமாக ஏதோ நிகழ்ந்துவிட்டது.

     உத்தரிகோரி கினூமி துர்தேவதையிடம் குத்துப்பட்டு மாண்டு போனாள். அவளுடைய பெற்றோர்கள் ரொம்பவும் வருந்தினார்கள். பௌத்த மடாலய பிஷுக்கள் அவளுக்கு பிரார்த்தனை நடத்தினார்கள். கிராமத்துக்கு வெளியே அவளது சடலத்தை எடுத்துச் சென்று எரித்து விட்டார்கள். பிறகு அவளது ஆவி மீய்டோ வுக்குச் சென்றது. அதை எம்மாதாவோ என்ற எமதர்மராஜன் சன்னதியில் கொண்டு போய் நிறுத்தினார்கள். எமன் அவளை ஏறிட்டுப் பார்த்தவுடன் "இது உத்தரிகோரி கினூமி அல்லவா. அவளை ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் அழைத்து வந்தீர்கள். ஷாபாலோகத்துக்கு (மானுட உலகத்துக்கு) அவளை உடனே அனுப்பிவிட்டு, யமாதகோரி கினூமியின் உயிரைக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டான். உத்தரிகோரி கினூமி எமதர்மன் காலில் விழுந்து "தர்மராஜா நான் மாண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டதே; என்னுடைய உடம்பை எரித்து விட்டிருப்பார்களே. என்னை ஷாபா உலகத்துக்கு அனுப்பினால் நான் என்ன செய்வேன். என் உடம்பு சாம்பலாகி விட்டதே. எனக்கு இனி உடம்பேது?" என்று அழுதாள்.

     எமதர்மன் சொன்னான்: "பெண்ணே கவலைப்படாதே, யமாதகோரி கினூமியின் உடம்பை உனக்குக் கொடுக்கிறேன். அவள் உயிரைத்தான் இங்கு கொண்டு வரவேண்டும். உடம்பு எரிந்து போய்விட்டதே என்று கவலைப்படாதே. யமாதகோரியின் உடம்பும் உனக்குப் பிடித்திருக்கும்" என்றான். அவன் பேசி முடியுமுன் யமாதகோரி கினூமியின் உடம்பில் உத்தரியின் ஆவி புகுந்தது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/yemanaiyematra.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs